நிழல் உருவத்தை சிலூட் (silhoutte) என்பார்கள்.இது ஒரு கொடியவனின் பெயர்.பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டின் நிதி அமைச்சராய் இருந்த இவர் கடும் வரிகளைப் போட்டு மக்களின் வெறுப்புக்கு ஆளானவர்.''எங்கள் நிழலைத் தவிர வேறு எதையும் விட்டு வைக்காமல் இப்படி வரி போடுகிறாரே''என்று மக்கள் நொந்து கொண்டிருந்தனர்.அதிலிருந்து நிழலை இகழ்ச்சியாகக் குறிப்பிடும் சொல்லாக சிலூட் நிலை பெற்று விட்டது.
**********
ரிகஷாஎன்ற வார்த்தை ஜின்-ரிக்கி-ஷா என்ற ஜப்பான் வார்த்தையிலிருந்து வந்தது.இதன் பொருள் 'மனித சக்தியில் ஓடுவது'
**********
கோஹினூர் என்பதற்கு 'ஒளிவெள்ளம்'என்று பொருள்.
**********
'தமுக்கம்'என்றால் யானைகள் போர் செய்யும் இடம் என்று பொருள்.
**********
ஸ்டாலின் என்ற சொல்லுக்கு எக்கு (steel) மனிதர் என்று பொருள்.
**********
பிளாஸ்டிக் என்னும் வார்த்தை பிலாஸ்டிகோ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது.இச்சொல்லுக்கு வார்ப்பது என்பது பொருள்.
**********
ஜூடோ என்ற ஜப்பானிய சொல்லுக்கு சுலபமான வழி என்று பொருள்.
குங்க்பு என்ற சொல்லுக்கு உடைத்தல் என்று பொருள்.
**********
பிரமிட் என்ற சொல்லுக்கு கோதுமை கேக் என்று பொருள்.
**********
|
|
Post a Comment