ஒருவருக்கு நீங்கள் அறிவுரை கூற நினைத்தால் அதற்குமுன் அவரது நம்பிக்கையை அல்லது அவர் அனுமதியைப் பெற வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்குள் மோதல்தான் பிறக்கும்.நீங்கள் ஒருவர் மீது அன்பு செலுத்துவதற்குக் கூட அவரின் அனுமதி தேவைப்படுகிறது.எனவே யாருக்காவது அறிவுரை கூற விரும்பினால் முதலில் அவர் அதற்கு விருப்பத்துடன் இருக்கிறாரா என்று கவனியுங்கள். நீங்கள் அவர் மீது உண்மையாகவே பொறுப்புணர்வுடன் இருப்பதாக அவர் அறிந்தால் இயல்பாகவே உங்கள் பேச்சைக் கேட்கத் தயாராக இருப்பார். ஆனால் அந்தப் பொறுப்புணர்ச்சியை இதுவரை நீங்கள் எந்த விதத்திலும் காட்டாமல் அறிவுரை சொல்ல மட்டும் ஆர்வம் காட்டுவீர்கள் என்றால் அவர் உங்களிடமிருந்து வரும் எதையும் கேட்க மாட்டார்.எனவே ஒருவர் உங்களுக்கு எதிர்ப்பு காட்டுகிறார் என்றால் நீங்கள் இன்னும் அவர் நம்பிக்கையை சம்பாதிக்கவில்லை என்று புரிந்து கொள்ளுங்கள்.
--சத்குரு ஜாக்கி வாசுதேவ்.
|
|
Post a Comment