ஆங்கிலத்தில் நீர் யானையை 'ஹிப்போபொட்டமஸ்என்கிறோம்.'ஹிப்போஸ்'என்றால் குதிரை; 'பொடேமஸ்'' என்றால் நதி என்று பொருள்.
காண்டாமிருகத்தை,'ரினோசெராஸ்'என்கிறோம்.'ரினோஸ்'என்றால் மூக்கு. 'கெராஸ்'என்றால் கொம்பு.
சிறுத்தைப் புலியை ,''லெபர்ட்'என்கிறோம்.இலத்தீன் மொழியில் லெப்பார்ட்ஸ் என்றால் 'புள்ளியுள்ள சிங்கம்'என்று பொருள்
அரேபியாவில் ஒட்டகத்தை GAMEL'என்று சொல்கிறார்கள்.அதுவே 'CAMEL'ஆகிவிட்டது.
ஒட்டகச்சிவிங்கியை 'ஜிராபி'என்கிறோம்.அரேபிய மொழியில் 'ஜிராபோ' என்றால் 'நீண்ட கழுத்து'என்று பொருள். '
ஐஸ் லேண்டில் பசுவை KU என்கிறார்கள்.இதுவே COW ஆகிவிட்டது.
பூனையை 'CAT'என்கிறோம்.அது பிரெஞ்ச் வார்த்தையான CHAT'லிருந்து வந்தது.அந்த வார்த்தையும் GATA'என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.
'DUCK'என்பதற்கு,'தலையை நீரில் முக்கிஎடு'என்றுபொருள்.வாத்து அதைத்தானே செய்கிறது!
|
|
Post a Comment