பேரரசர் அக்பரின் அவையிலே தான்சேன் என்ற சிறந்த இசைக்கலைஞர் இருந்தார்.அவருடைய இசையிலே அக்பர் மயங்கி விடுவார்.''இந்த உலகத்தில் உங்களை விட சிறந்த இசைக் கலைஞர் யாரும் கிடையாது என்பது என் அபிப்பிராயம்,''என்று ஒரு நாள் அக்பர் தான்சேனிடம் சொன்னார்.தான்சேன் அதற்கு தன்னைவிட தனது குரு சிறந்த இசைக் கலைஞர் என்று பணிவுடன் தெரிவித்தார்.அக்பர்,''அப்படியானால் அவருடைய இசையைக் கேட்க வேண்டுமே,அவரை உடனே அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்,''என்று சொன்னார்.அதற்கு தான்சேன்,''அவர் இங்கு வரமாட்டார்.நாம்தான் அவருடைய இருப்பிடம் செல்ல வேண்டும்,''என்றார்.இசையின் மீது இருந்த ஆவலால் அதற்கு ஒப்புக்கொண்ட அரசர் தான்சேன் உடன் அவருடைய குரு இருந்த இடத்திற்கு சென்றார்.அவருடைய இசையைக் கேட்டார்.என்னதெய்வீகமான இசை!
அந்தப் பாட்டைக் கேட்டு அக்பர் மெய்மறந்தார்அரண்மனை திரும்பியவுடன் அக்பர் தான்சேனி டம் கேட்டார்,''நீங்கள் ஏன் உங்கள் குரு மாதிரி பாடுவதில்லை?''தான்சேன் சொன்னார்,''நான் உங்கள் திருப்திக்காகப் பாடுகிறேன்.அவர் ஆண்டவன் திருப்திக்காக,தன ஆன்ம திருப்திக்காகப் பாடுகிறார்.அதுதான் வித்தியாசம்.''
|
|
Post a Comment