உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

முன் கூட்டியே...

0

Posted on : Friday, December 31, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு மகான் ஒரு சீடனை தண்ணீருக்குள் அழுத்தினார்.அவனைஉள்ளே திண்டாடவிட்டு கடைசியில் வெளியே எடுத்தார்.
''உள்ளே இருந்தபோது மண்,பொன்,பெண் இவைகளை நினைத்தாயா?''என்று கேட்டார்.
''ஐயோ,நினைக்கவே இல்லை.மூச்சுக்கு வழி கிடைக்காதா என்றுதான் ஏங்கினேன்.துடித்தேன்,''என்றான்.
மண்ணும் பொன்னும் சிகிச்சைக்குப் பணம் கொடுக்குமே தவிர சிகிச்சை செய்யாது.
அந்தக் கடைசி நேரத்தில்,நாம் உலகை விட்டுப் பிரியும் நேரத்தில் மண்,பொன் எல்லாமே நமக்கு அற்பமாகத் தோன்றப் போகிறது.
அந்த நினைப்பை சற்று முன் கூட்டியே கொண்டு வந்தால் என்ன?
நாம் அறிவாளியாகவும்,முன் எச்சரிக்கைஉடையவராகவும் இருந்தால் அதைத்தான் செய்வோம்.
                                    ---அழகிக்கு ஆயிரம் நாமம் என்ற நூலில் ஸ்ரீ வேணுகோபாலன்.

தொண்டை நாட்டினர்.

0

Posted on : Thursday, December 30, 2010 | By : ஜெயராஜன் | In :

தமிழறிஞர்உ.வே.சு.அவர்கள் ஒரு விழாவில் கலந்துகொண்டார்.அவருக்கு முன் மூன்றுஅறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள் .விழா அமைப்பாளர் மூவரின் பேச்சுத் திறம் பற்றி உ.வே.சு.ஐயர் அவர்களிடம் கருத்து கேட்டார்.அவரும்,''தொண்டை  நாட்டினர்,தொண்டை நாட்டினர்,தொண்டை நாட்டினர்,''எனக் கூற அவருக்கு ஒன்றும் விளங்காமல், விளக்கமாகக் கூற வேண்டினார்.ஐயர் சொன்னார்,''முதலில் பேசியவரின் பேச்சில் சாரம்ஏதும் இல்லை வெறும் வரட்டுக் கூச்சல் தான் இருந்தது.அவர் தன தொண்டையை மட்டும் நிலை நாட்டினார்.இரண்டாமவர் பேச வேண்டிய தன கடமையை ஒழுங்காகச் செய்தார்.எனவே அவர் தம் தொண்டை செய்து முடித்தார்.மூன்றாமவர் தொண்டை நாட்டை சேர்ந்தவர்.அவர் தன தொண்டை நாட்டின் பெயரை நிலை நாட்டினார்.எனவே மூவருமே தொண்டை நாட்டினர் தானே?''அமைப்பாளர், ஐயர் அவர்களின் மொழி ஆற்றலை எண்ணி வியந்தார்.

ஒத்துப்போ

0

Posted on : Wednesday, December 29, 2010 | By : ஜெயராஜன் | In :

இங்கிலாந்தில் ஒரு மாநகர மேயர் தனது நகரத்தில் ஒரு மாபெரும் கூடம்(town hall) கட்ட விரும்பினார்.இப்பணி ஒரு கட்டட நிபுணரிடம் ஒப்படைக்கப்பட்டது.அவரும் ஒரு டிசைன் போட்டு மேயரிடம் காண்பித்தார். அமைப்பு மிக அழகாக இருந்தது.ஆனாலும் மேயருக்கு ஒரு சந்தேகம். அதாவது அவ்வளவு பெரிய கூடத்தில் நடுவே தூண்களே அமைக்கப் படவில்லை.அதனால் கட்டடம் நீண்ட நாள் தாங்காது என்று மேயர் கருதி தூண்களை சேர்க்குமாறு வலியுறுத்தினார்.நிபுணரோ அதற்கான தேவையில்லை என்றும் இது புது மாதிரியான டிசைன் என்றும் கூறினார்.ஆனால் மேயர் ஒத்துக் கொள்ளத் தயாராயில்லை.எனவே மேயரின் விருப்பப்படி நிபுணர் மூன்று தூண்களைக் கட்டினார்.மேயருக்கு இப்போது பூரண திருப்தி.சில ஆண்டுகள் கழித்து சிறு பழுதுகள் பார்க்க பெரிய ஏணி கொண்டுவந்து ஒவ்வொரு தூணின் உச்சிக்கும் சென்று பழுது பார்த்தார்கள்.அப்போதுதான் ஒரு விஷயம் தெரிய வந்தது.அதாவது எந்தத் தூணும் மேற்கூரையுடன் இனைக்கப்படாமல்  சிறு இடை வெளியுடன் இருந்தது.அதாவது அந்தக் கட்டடக் கலை நிபுணர்,தன்னுடைய தூணில்லா டிசைன் சரிதான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டார்.அதே சமயத்தில் மேயரும் திருப்தியடையும் வகையில் வழிசெய்து விட்டார்.பிறர் மனம் நோகாமல் தன காரியத்தை முடிப்பவனே கெட்டிக்காரன்.

அங்குலிமால்

0

Posted on : Friday, December 24, 2010 | By : ஜெயராஜன் | In :

புத்தபிரான் ஒரு முறை ஒரு கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார்.ஊர் மக்கள் அவரிடம் வந்து அடுத்து உள்ள காட்டுப் பாதையில் அவர் போக வேண்டாமென வலியுறுத்தினர்.காரணம் கேட்க, அங்கு அங்குலிமால் என்ற பெயருடைய ஒரு பெரிய கொள்ளையன் இருப்பதாகக் கூறினார். அங்குலிமால் என்பது ஒரு காரணப்பெயர்.அங்குலி என்றால் விரல் மால் என்றால் மாலை.அவன் அக்காட்டுப் பக்கம் வருபவர்களைக் கொன்று  அவர்களது விரல்களை வெட்டி மாலையாகக் கோர்த்து கழுத்தில் அணிந்திருப்பானாம்.புத்த பிரான் அப்படிப்பட்ட ஆளைப் பார்த்தே ஆக வேண்டும் என்று கூறி அம்மக்களின் அன்பு வேண்டு கோளை மீறி சென்றார்.காட்டினுள் அவர் வருகையை அங்குலிமால் பார்த்தான். அவனுக்கு அளவு கடந்த கோபம் உண்டாயிற்று.யாரும் வர அஞ்சும் இக்காட்டுக்குள் ஒரு துறவி பயமின்றி வருவதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அவன் புத்தரைப் பார்த்து,''அங்கேயே நில் அதற்கு மேல் வந்தால் உன் உயிர் உனக்கில்லை.ஏதோ ,துறவியாய் இருக்கிறாயேஎன்று பார்க்கிறேன்.இப்போதே ஓடிப் போய்விடு.''என்று கத்தினான்.புத்தரோ அஞ்சவில்லை.அவனுடைய அச்சுறுத்தல்களைக் கண்டு கொள்ளாமல் அவர் அவன் அருகே வந்தார்.அவன் கடுஞ்சினத்துடன்,''உன்னுடைய கடைசிப் பிரார்த்தனைகளை முடித்துக்கொள்,''என்றான்.சாக்கிய முனி சாந்தமாகச் சொன்னார்,''அப்பனே,என் உயிரைப் பற்றி எனக்குக் கவலையில்லை.என் உயிரைப் பறிப்பதற்கு முன் ஒரு காரியம் செய்ய வேண்டும்,''என்றார்.அவன் என்னவென்று கேட்க,அவரும் அருகிலிருந்த மரத்தின் ஒரு கிளையை வெட்ட சொன்னார்.இது ஒரு வேலையா என்று  ஏளனமாகக் கூறிக் கொண்டே மரத்தின் கிளையை அவன் வெட்டினான்.அப்போது புத்தர் சொன்னார்,''இப்போது அதே கிளையை மீண்டும் அந்த மரத்தில் ஒட்டவை,''என்றார்.கொள்ளையன் மலைத்துப் போய் ''அது எவ்வாறு முடியும்?''என்று கேட்டான்.புத்தபிரான் சொன்னார்,''இதோ பார்த்தாயா,அழிக்க முடிந்த உன்னால் ஆக்க  முடியவில்லை.எந்த முட்டாளாலும் அழிக்க  முடியும் ஆனால் எந்த ஞானியாலும்  கூட எதையும் ஆக்க முடியாது.ஆக்க முடியாத உனக்கு அழிக்க எந்த உரிமையுமில்லை.''அந்தக் கணமே அந்த அங்குலிமால் அவர் காலில் விழுந்து சரணடைந்து அவருடைய சீடனாகிவிட்டான்.

ஹி!ஹி!

0

Posted on : Thursday, December 16, 2010 | By : ஜெயராஜன் | In :

காதலி: என் தந்தை எனக்காக நிறைய சொத்து சேர்த்து வைத்திருப்பதால் தான் என்னை விரும்புகிறீர்களா?
காதலன்:சே!சே!உனக்காக யார் சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் உன்னைக் காதலித்திருப்பேன்.இது சத்தியம்.
**********
ஒரு சிலர் தனியாக இருந்து அதிசயங்களை நிகழ்த்துகிறார்கள்.
ஒரு சிலர் நண்பர்களுடன் சேர்ந்து அதிசயங்களை நிகழ்த்துகிறார்கள்.
ஒரு சிலர் திருமணம் செய்து கொண்டு,நிகழ்வதை அதிசயமாகப் பார்க்கிறார்கள்.
**********
ஒரு அழகான பெண் ஜவுளிக் கடைக்கு வந்தாள்.ஒரு துணியைத் தேர்வு செய்து அதன் விலையைக் கேட்டாள்.கடையின் உரிமையாளர் சொன்னான்,''ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம் விலை.''அந்தப் பெண்ணும் உடனே பத்து மீட்டர் துணி தரச் சொன்னாள்.அவனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வேகமாக பத்து மீட்டர் துணியை அளந்து கொடுத்தான்.அதை வாங்கிக் கொண்டு அந்தப் பெண் சொன்னாள்,''இந்தத் துணிக்கான விலையை அதோ  என்னுடன் வந்திருக்கும் என் தாத்தா தருவார்.''
**********
ஆசிரியர்:1947 ல் என்ன நடந்தது?
மாணவன்:இந்தியா சுதந்திரம் அடைந்தது.
ஆசிரியர்:நன்று.1950 ல் என்ன நடந்தது?
மாணவன்:சுதந்திரம் அடைந்து மூன்று  ஆண்டு ஆகி இருந்தது.
**********

பாகப்பிரிவினை

0

Posted on : Thursday, December 16, 2010 | By : ஜெயராஜன் | In :

விவசாயி ஒருவன் இறக்கும் தறுவாயில் தன மூன்று மகன்களையும் கூப்பிட்டு, தான் இறந்த பிறகு,தான் எழுதியுள்ள உயிலில் கண்டவாறு அவனுடைய உடைமைகளைப் பிரித்து எடுத்துக் கொள்ளச் சொன்னான்.சிறிது நேரத்தில் அவன் உயிர் பிரிந்தது.கடமைகளை முடித்தபின்,மூன்று மகன்களும் உயிலில் கண்டபடி சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு வந்தனர்.இறுதியாக பதினேழு பசு மாடுகள் இருந்தன.உயிலில்,பசுமாடுகளில் இரண்டில் ஒரு பங்கு மூத்த மகனுக்கும் மூன்றில் ஒரு பங்கு இரண்டாவது மகனுக்கும்,ஒன்பதில் ஒரு பங்கு கடைசி மகனுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.பதினேழு பசு மாடுகளை இந்த விகிதத்தில் எப்படிப் பிரிப்பது?ஒரே குழப்பம்.இது சம்பந்தமாக அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு,அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடலானர்கள்.அப்போது ஒரு பெரியவர் அந்தப் பக்கம் வந்தார்.பிரச்சினை என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அவர் அதைத் தான் தீர்த்து வைப்பதாகக் கூறினார்.அவர்கள் சம்மதம் தரவே அவர் சொன்னார்,''உங்களிடம் பதினேழு பசுக்கள்உள்ளன.என்னிடம் உள்ள பசு ஒன்றையும் இவற்றோடு சேர்த்துக் கொள்கிறேன்.ஆகப் பதினெட்டு பசுக்கள் இருக்கின்றன.உயிலின் படி இரண்டில் ஒரு பங்கு,அதாவது ஒன்பது பசுக்கள் மூத்தவனுக்கு சொந்தம்.மூன்றில் ஒரு பங்கு,அதாவது,ஆறு பசுக்கள் இரண்டாமவனுக்கு சொந்தம்.ஒன்பதில் ஒரு பங்கு,அதாவது இரண்டு பசுக்கள் மூன்றாமவனுக்கு சொந்தம்.மூவருக்கும் பதினேழு பசுக்கள் கொடுத்தபின் ஒரு பசு மீதமிருக்கிறது.அது நான் கொண்டு வந்த பசு.அதை நான் எடுத்துக் கொள்கிறேன்.இப்போது உங்கள் பிரச்சினை தீர்ந்ததா?''மூவருக்கும் மிக்க மகிழ்ச்சி.ஆனால் கடைசி வரை இது எப்படி சாத்தியமாயிற்று  என்று அவர்களுக்குப் புரியவில்லை.உங்களுக்குப் புரிகிறதா?

சிரிக்கத்தானே

0

Posted on : Wednesday, December 15, 2010 | By : ஜெயராஜன் | In :

''ஏன் சார்,நீங்க சாப்பிடும் முன் பிரார்த்தனை செய்வீங்களா?''
'அதெல்லாம் இல்லேங்க,என் மனைவி பரவாயில்லாமல் சமைப்பாள்.'
**********
''என் மனைவி தேவதைங்க!''
'நீங்க கொடுத்து வைத்தவர்.என் மனைவி உயிருடன் இருக்கிறாள்.'
**********
''என்னங்க,நேத்து இரவு  நீங்க முத்து மாலை வாங்கித் தருவதாகக்  கனவு கண்டேன்.அதற்கு என்ன அர்த்தம்?''
'இன்று இரவு வரை பொறுத்திரு.இரவில் உனக்கு விளக்கம் தருகிறேன்.'
இரவில் கணவன்ஒரு பார்சலுடன் வந்தார்.மனைவி அதை வாங்கி பரபரப்புடன் பிரித்துப் பார்த்தாள்.உள்ளே ஒரு புத்தகம் இருந்தது.அந்தப் புத்தகத்தின் தலைப்பு,'கனவுகளின் பலன்கள்'.
**********
கப்பல் கவிழ்ந்து கொண்டிருந்தது.கேப்டன் பயணிகளிடம் கேட்டார்,''உங்களில் யாருக்காவது பிரார்த்தனை செய்யத் தெரியுமா?''ஒருவர் உடனே சொன்னார்,'நான் நன்றாகப் பிரார்த்தனை செய்வேன்.'இப்போது கேப்டன் சொன்னார்,''இவர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கட்டும்.மற்றவர்கள் எல்லோரும் மூழ்காமல் தப்பிப்பதற்கான லைப் ஜாக்கெட்டை அணிந்து கொள்ளுங்கள்.மொத்தத்தில் ஒரு ஜாக்கெட் குறைவாக உள்ளது.''
**********

ஏலம்

0

Posted on : Saturday, December 11, 2010 | By : ஜெயராஜன் | In :

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தவர் மதன் மோகன் மாளவியா.பல்கலைக் கழகத்தை ஆரம்பிக்க அவர் பொருளாதார ரீதியில்  மிகவும் சிரமப்பட்டார். அவர் மனம் தளராது ஊர் ஊராகச் சென்று,செல்வந்தர்களையும்,பெரிய வணிகர்களையும் நேரில் சந்தித்துநிதி உதவி கோரினார்.இதற்காக அவர் ஹைதராபாத் நவாபையும் பார்த்து நிதி உதவி கோரினார்.நவாப் கோபத்துடன்,''என்ன தைரியம் இருந்தால்,என்னிடம் வந்து,ஒரு இந்துப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்க நிதி கேட்பாய்?''என்று கேட்டவாறே அவர் காலிலிருந்த செருப்பைக் கழட்டி மாளவியாவின் மீது எறிந்தார்.மாளவியா ஏதும் பேசாமல் அந்த செருப்பை எடுத்துக் கொண்டு கடை வீதிக்கு வந்து,''இது நவாப் அவர்களின் செருப்பு.இப்போது இதை நான் ஏலம் விடப் போகிறேன்,''என்று கூவி அழைத்தார்.தகவல் நவாபுக்கு எட்டியது தன செருப்பு குறைந்த விலையில் ஏலத்தில் சென்றால் தனது கௌரவத்திற்கு இழுக்கு  என்று எண்ணிய நவாப் உடனே தன ஆட்களிடம் ஒரு பெரிய தொகையைக் கொடுத்துவிட்டு செருப்பை ஏலத்தில் எடுக்கச் சொன்னார்.மாளவியாவும் தன காரியம் பலித்தது என அந்தத் தொகையை பல்கலைக் கழக நிதியில் சேர்த்துக் கொண்டார்.
ஒருவனை முன்னேற விடாமல் தடுப்பது,அவனது திறமையின்மையோ,தகுதிக் குறைவோ கூட அல்ல.இனி தனக்கு வாய்ப்பே இல்லை,விடிவு காலமே இல்லை என்று ஒரு முடிவுக்கு வருவதுதான்.

மாக்சிம் கார்க்கி--2

0

Posted on : Saturday, December 11, 2010 | By : ஜெயராஜன் | In :

நீ தான் உலகிலேயேஉயர்ந்த ரகச் சரக்கு என்றும்,எனவே ஒவ்வொருவரும் உன்னைக் கடித்துத் தின்னவே பார்க்கிறார்கள் என்றும் உனக்குத் தோன்றும்.ஆனால் கொஞ்ச காலம் போனால் ,எல்லோருடைய இதயங்களும் உன் இதயத்தைப்போலத்தான் இருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்து கொள்வாய்.உணர்ந்த பின் உன் மனம் ஓரளவு சமாதானம் அடையும்.கூப்பிடு தூரத்துக்குக்கூட ஒலிக்காத உனது சின்னஞ்சிறு மணியைக் கோபுரத்தின் உச்சியில்கொண்டு கட்டி ஊரெல்லாம் ஒலிக்கச் செய்ய விரும்பிய உனது அறியாமையைக் கண்டு நீயே நாணம் அடைவாய்.உனது மணியைப் போன்ற பல்வேறு சிறு மணிகளின் கூட்டுறவோடுதான் உனது மணியிசையும் ஒன்று பட்டு ஒலிக்க முடியும் என்பதை நீ  உணர்வாய்.
**********
ஒரு மனிதன் நாற்பது வயதைத் தாண்டிய பிறகு,அத்தனை காலமும் தன இதயத்துக்குள்ளே வேண்டாத விஷயங்களோடு முண்டி முண்டிப் போராடிக் கொண்டிருந்த பிறகு,அவனை சீர்திருத்தி வழிக்குக் கொண்டு வருவது என்ன,லேசுப்பட்ட காரியமா?
**********
நாம் உணவுக்காகக் கால் நடைகளைக் கொல்கிறோம்.அதுவே மோசம்.காட்டு மிருகங்களால் ஆபத்து வருமென்று தெரிந்தால் அவற்றையும் நாம் கொன்று தீர்க்கிறோம்.அது சரிதான்.ஒரு மனிதன் சக மனிதர்கள் மீது காட்டு மிருகத்தைப்போல பாய்ந்து கடித்துத் தின்ன முனைந்தால்,அவனை நான் மிருகத்தைக் கொல்வதுபோல கொன்று தீர்க்கத்தான் செய்வேன்.
**********
வாழ்க்கை அமைப்பிலுள்ள குறைபாட்டினால்தான் மக்கள் குற்றவாளி ஆகிறார்கள்.
**********
நல்ல காலத்தை எதிர் பார்த்துத்தான் மக்கள் வாழ்கிறார்கள்.எந்த வித நம்பிக்கையும் இல்லாவிட்டால்,அது எந்த வாழ்வோடு சேர்த்தி?நல்லவர்கள் என்றும் அதிக நாட்கள் தனியாக வாழ்வதில்லை..நல்லவர்களோடு மற்றவர்கள் வந்து எப்போதும் ஒட்டிக் கொள்வார்கள்.
**********
இங்கு கைதிகளும் இல்லை, நீதிபதிகளும் இல்லை.பிடிபட்டவர்களும்,பிடித்தவர்களும்தான் இருக்கிறார்கள்.
**********
                          --'தாய்'என்ற  நூலிலிருந்து .

மாக்சீம் கார்க்கி

0

Posted on : Wednesday, December 08, 2010 | By : ஜெயராஜன் | In :

நீ மற்ற மனிதர்களோடு பேசும்போது தீவிரமாகப் பேசாதே.மனிதர்களைப் பற்றிய பயம் உனக்கு எப்போதும் இருக்க வேண்டும்.அவர்கள் ஒருவரை ஒருவரே வெறுக்கிறார்கள்.பொறாமையாலும்,பகைமையாலுமே  வாழ்கிறார்கள்.அடுத்தவனைத் துன்புறுத்துவதில் ஆனந்தம் கொள்கிறார்கள்.நீ அதை எடுத்துக்காட்டி அவர்களைக்  குறை கூறத் தொடங்கினால் உடனே அவர்கள் உன்னைப் பகைப்பார்கள்.உன்னை அழித்தே விடுவார்கள்.
**********
பயம்தான் நம்மையெல்லாம் அழித்துவிடுகிறது.நம்மை அதிகாரம் பண்ணி ஆளுகிறார்களே,அவர்கள் நமது பயத்தை வைத்துத்தான் காரியத்தைச் சாதிக்கிறார்கள்.மேலும் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
**********
ஒவ்வொருவனும் அடுத்தவன் நம்மை அறையப் போகிறான்  என்று எண்ணித்தான்  பயப்படுகிறான்.எனவே முதல் அடியை இவனே கொடுக்க முற்படுகிறான்.இப்படித்தான் வாழ்க்கை இருக்கிறது.
**********
என் கடவுளை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போய் விட்டால் என் துயரத்தை சொல்லி அழக்கூட ஒரு துணையிராது.
**********
 நமது காசும் மற்ற காசுகளைப்போல வட்டக்காசுதான்.ஆனால்,மற்றவற்றைவிட இதன் கனம் அதிகம்.அவ்வளவுதான்.ஆனால் மனேஜரின்காசில் இருப்பதைவிட நமது காசில் மனித இரத்தம் அதிகம்.நாம் வெறும் காசை மதிக்கவில்லை.அந்தக் காசிலுள்ள இரத்தத்தை,நியாயத்தைத்தான் மதிக்கிறோம்.
**********
எல்லாப் பழமொழிகளும் வயிற்றிலிருந்துதான்பிறக்கின்றன.இவற்றைக் கொண்டு மனதிற்குக் கடிவாளம் பின்னுகிறது வயிறு.மனித இதயம் வாழ்க்கைப் பாதையில் சுலபமாகச் செல்வதற்காக,அதைப் பக்குவப்  படுத்துவதற்காகவே பழமொழிகள் பயன்படுகின்றன.
**********
எந்தத் தவறானாலும் சரி,அது என்னை பாதித்தாலும்,பாதிக்காவிட்டாலும் அதை மன்னித்து விட்டுக் கொடுக்க எனக்கு உரிமை கிடையாது.இந்த உலகில் நான் ஒருவன் மட்டுமே உயிர் வாழவில்லை.இன்றைக்கு எனக்கு ஒருவன் தீங்கு இழைப்பதை  நான் விட்டுக் கொடுத்து விடலாம்:அவனது தீங்கு அவ்வளவு ஒன்றும் பிரமாதமில்லை என்ற நினைப்பால் அதைக் கண்டு நான் சிரிக்கலாம்;அது என்னை சீண்டுவதில்லை.ஆனால் நாளைக்கோ என் மீது பலப் பரீட்சை செய்து பழகிய காரணத்தால் வேறொருவனின் முதுகுத் தோலை உரிக்க அவன் முனையலாம்.ஒவ்வொருவரையும் ஒரே மாதிரிக் கருதிவிட முடியாது.
**********
ஒவ்வொருவனும் அவனவன் வயிற்ரை நிரப்பவே வழி பார்க்கிறான்.அந்தப் பிரச்சினையை நாளை வரை ஒத்தி வைப்பதற்குக் கூட எவனும் விரும்புவதில்லை.
**********
                                       --  தாய் எனும் நாவலிலிருந்து.

கணித ஆச்சர்யங்கள்

0

Posted on : Friday, December 03, 2010 | By : ஜெயராஜன் | In :

62 - 52 = 11
562 - 452 = 11 11
5562 - 4452 = 11 11 11
55562 - 44452 = 11 11 11 11
.......and so on

======

4 + 9 + 1 +3  = 17
4913  = 173


=======

13 + 53 + 33 = 153