உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சொல்ல மாட்டேன்.

0

Posted on : Monday, April 30, 2012 | By : ஜெயராஜன் | In :

முல்லாவும் அவர் மனைவியும் பூங்கா ஒன்றில் ஒரு பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.கொஞ்சம் கொஞ்சமாக இருட்ட ஆரம்பித்தது.இருட்டிய சமயத்தில் இளம் காதலர் இருவர் பெஞ்சின் மறு முனையில் அமர்ந்தார்கள்.காதலன் ,காதலியிடம் லேசான குரலில் அன்புடன் பேசிக் கொண்டிருந்தான்.முல்லாவின் மனைவி முல்லாவிடம் சொன்னார்,''இதோ பாருங்கள்,நாம் இங்கு அமர்ந்திருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை .அந்தப் பையன் அந்தப் பெண்ணிடம் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டிருக்கிறான்.நீங்கள் நாம் இருப்பதை அவர்கள் கவனத்திற்குக் கொண்டுவர சிறிது இருமி எச்சரிக்கை செய்யுங்கள்.''முல்லா சொன்னார்,''நான் ஏன் எச்சரிக்க வேண்டும்.நாம் காதலித்தபோது இதே மாதிரி சூழ் நிலையில் என்னை யாரும் அன்று எச்சரிக்கவில்லையே?''
**********
முல்லா ஒரு கார் வாங்கினார்.வாங்கின நாளிலிருந்து தினமும் ஏதாவது பிரச்சினை.நேரே அக்காரை அவரிடம் விற்றவரிடம் சென்றார்.''அய்யா,அன்று நீங்கள் இந்தக் காரை விற்கும்போது இந்தக் காரைப் பற்றி என்னவெல்லாம்  சொன்னீர்களோ அதைத் திரும்பச் சொல்லுங்கள்.''என்றார் .அவரும் காரை விற்பதற்காக மிகைப்படுத்திச் சொன்னவற்றை மீண்டும் சொன்னார்.முல்லா  சொன்னார்,''அந்தக் கார் வாங்கியதிகிருந்து நொந்து போய் இருந்தேன்.நல்ல வேளை! எங்கே நான் எமாந்துவிட்டேனோ என்று நினைத்தேன்.''
**********

சிரிப்பூ

0

Posted on : Saturday, April 28, 2012 | By : ஜெயராஜன் | In :

''டாக்டர்,என் பையன் கை சூப்புகிறான்.அந்தப் பழக்கத்திலிருந்து அவனை மீட்க முடியுமா?''
'பையனுக்கு என்ன நாலு வயதுதானே ஆகிறது.இன்னும் கொஞ்சம் வயதானால்   அவனே அவன் கையை சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுவான்,'
''டாக்டர் அவன் சூப்புவது என் கையை.''
**********
''பழம் நழுவி பாலில் விழுந்து கண்ணாடி டம்ளர் உதிந்து விட்டது.''
'ஏன்?'
''விழுந்தது பலாப்பழம் ஆயிற்றே!''
**********
''டாக்டர்,நான் எதைப் பார்த்தாலும் இரண்டு இரண்டாகத் தெரிகிறது.''
'சரி,கொஞ்ச நேரம் அந்த சோபாவில் உட்காருங்கள்.அடுத்து உங்களைப் பார்க்கிறேன்.'
''டாக்டர்,எனக்கு இரண்டு சோபா தெரிகிறதே ,நான் எதில் உட்கார?''
**********
மாணவன்: சார்,நான் யூரின் பாஸ் பண்ணிவிட்டு வர அனுமதி கொடுங்கள்.
ஆசிரியர்:சரி,சரி,அதையாவது பாஸ் பண்ணித்தொலை.
**********
''என் பையன் செய்த காரியத்தால் என்னால் வெளியே தலை காட்ட முடியவில்லை.''
'உன் பையன் அப்படி என்ன செய்துவிட்டான்?'
''என் விக்கை எங்கோ தொலைத்துவிட்டான்.''
**********
''உன் மாமியார் கிணற்றில் விழும்போது நீ பக்கத்தில்தான் நின்று
 கொண்டிருந்தாயாமே?''
'ஆமாம்,அதுக்கு என்ன?'
''அவளைக் காப்பற்ற நீ ஏன் எதுவும் செய்யவில்லை?''
'டாக்டர்தான் என்னை எதுக்கும் உணர்ச்சி வசப்படக் கூடாது என்று
சொல்லியிருக்கிறார்.'
**********
''குடி குடியைக் கெடுக்குமா?''
'நீ வாங்கிக் கொடுத்தால் உன் குடி கெடும்.நான் வாங்கிக் கொடுத்தால் என் குடி கெடும்.'
***********
''நீ என்ன சோப் உபயோகிக்கிறே?''
'பாபூஸ் சோப்.'
''என்ன பேஸ்ட் உபயோகிக்கிறே?''
''பாபூஸ் பேஸ்ட்.''
''இது என்ன புதுக் கம்பெனியா?கேள்விப்பட்டதில்லையே?''
'அட,பாபுங்கிறது என் அரை நண்பனோட பேருங்க!'
**********
''ஏன்டி,பாக்கெட்டில் நூறு ரூபாய் வைத்திருந்தேன்,இப்போது பத்து ரூபாய்தான் இருக்கு,நீ எடுத்தாயா?''
''நீங்க தானே பையனிடம் நூறுக்கு தொண்ணூறு எடுக்கச் சொன்னீங்க?அவன்தான் எடுத்திருப்பான்.''
**********
''காலம் பொன் போன்றது என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறாயே,ஏன்?''
'அதை அடகு வைக்க முடியுமா?'
**********


அறிஞரின் கதி

0

Posted on : Friday, April 13, 2012 | By : ஜெயராஜன் | In :

பெர்னாட்சா தன் வீட்டில்,அவரைக் காண வந்தவர்களிடம் பல நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.வந்தவர்கள் முகத்தில் மிக்க மகிழ்ச்சி.இவ்வளவு நல்ல அறிவுரைகளை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து அவர்களுக்கு ஒரு பெருமிதம்.மிகக் கவனமுடன் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது ஷாவின் மனைவி தையல் மெஷினில் ஒரு துணியைத் தைத்துக் கொண்டிருந்தார்.அவருடைய முழு கவனமும் தையல் மெஷினில் தான் இருந்தது.அவர் ஷாவின் பேச்சைக் கொஞ்சம் கூடக் கவனிக்கவில்லை.வந்தவர்களில் ஒருவருக்கு இது மிக வித்தியாசமாகப் பட்டது.பொறுக்க முடியாமல் அவர் ஷாவின் மனைவியைப் பார்த்து,''அம்மா,அய்யா எவ்வளவு நல்ல கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்!நாங்கள் எல்லாம் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருக்கும்போது நீங்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லையே,ஏன்?''என்று கேட்க ஷாவின் மனைவி சொன்னார்,''ஏற்கனவே அவர் சொல்லி ஆயிரம் முறை நான் கேட்ட விஷயங்களைத்தான் சொல்லிக் கொண்டிருப்பார் என்பது எனக்குத் தெரியாதா?நல்ல வேளை  என் கைகள் தையல் மெஷின் வேலையில் ஈடுபட்டுள்ளன..இல்லாமல் போனால் அவர் பேசுவதைக் கேட்க வேண்டி வரும்,அப்போது என் கைகள் அவர் கழுத்தை நெறுக்கிக் கொன்றிருக்கும்.''ஷா உலகத்துக்குத்தான் பெரிய அறிஞர்.ஆனால் அவர் வீட்டிலோ................

கதறுவது ஏன்?

0

Posted on : Thursday, April 12, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு தந்தை முதன்முறையாக ஒரு மேற்கத்திய இசை நிகழ்ச்சிக்கு தன் மகனை அழைத்துச் சென்றார்.இசை அமைப்பாளர் இசை நிகழ்ச்சி துவங்குவதற்காக தமது கையிலிருந்த குச்சியை மேலும் கீழும் அசைக்க ஆரம்பித்தார்.உடனே உச்சமான குரலில் ஒரு பெண் பாடகி பாட ஆரம்பித்தார்.அந்தப் பையன் எல்லாவற்றையும்  பார்த்துவிட்டுத் தன் தந்தையிடம் கேட்டான்,''ஏன் அப்பா,அவர் தன் குச்சியால் அந்தப் பெண்ணை அடிக்கிறார்?''தந்தை கேட்டார்,''அவர் அவளைக் குச்சியால் அடிக்கவில்லையே?''உடனே மகன் திரும்பக் கேட்டான்,''பின் ஏன் அந்தப்பெண் இப்படி கதறுகிறாள்?''

விடுதலை

0

Posted on : Thursday, April 12, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் முல்லா சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.எதிரே வந்த நண்பர்,முல்லாவின் முகத்தைப் பார்த்து அவர் எதோ வலியினால் அவதிப்படுவதுபோல உணர்ந்தார்.''என்ன முல்லா,தலை வலியா,வயிற்று வலியா?ஏன் என்னவோபோல இருக்கிறீர்கள்?''என்று கேட்டார்.முல்லா சொன்னார்,''வேறொன்றுமில்லை,நான் அணிந்திருக்கும் செருப்புக்கள் என் காலுக்கு மிகச் சிறியவையாக இருப்பதால் பாதத்தில் வலி எடுக்கிறது.''''பின் ஏன் அவற்றை அணிந்திருக்கிறீர்கள்?என்று நண்பர் கேட்க,முல்லா சொன்னார்,''இந்த செருப்பினால் தான் ஒவ்வொரு நாளும் நிம்மதி அடைகிறேன்.நாள் முழுவதும் இந்த சிறிய செருப்புக்களை அணிந்து நடந்துவிட்டு பாதங்களில் வலியுடன்  வீட்டிற்குச் சென்று அவற்றைக் கழட்டியவுடன் கிடைக்கும் ஒரு விடுதலை உணர்வு இருக்கிறதே,அதற்கு இணை எது?இது ஒன்றுதான் நான் அடையும் மகிழ்ச்சி.எனவே இந்த செருப்புக்களை நான் விட மாட்டேன்.''

இசை செத்து விட்டதா?

0

Posted on : Wednesday, April 11, 2012 | By : ஜெயராஜன் | In :

இசையை ரசிக்காதவர்களை 'சரியான அவுரங்கசீப்' என்று
சொல்வார்கள்.அவுரங்கசீப்புக்கு இசை பிடிக்காதது மட்டுமல்ல,அதன் மீது பகை உணர்வே உண்டு.அவர் கொண்ட வெறியினால் நாட்டில் யாரும் பாடுவதில்லை.இசை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வந்தது.பாதிக்கப்பட்ட இசைக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து அவுரங்கசீப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஒரு சவ ஊர்வலம் ஏற்பாடு செய்தார்கள்.இசை தான் பிணம்.மிகப் பிரமாண்டமான அந்த ஊர்வலத்தில் பொது மக்களும் திரளாக வந்து கலந்து கொண்டனர்.ஊர்வலம் அரண்மனையைக் கடந்தது.எல்லோரும் பெரிய ஆரவாரம் செய்தார்கள்.அதைக் கேட்ட அவுரங்கசீப் என்ன என்று விசாரித்தார்.''இறந்தது யார்'' என்று கேட்டார்.ஒரு அமைச்சர் தயங்கியபடியே வந்து ,''இசை செத்துவிட்டது என்று இசைக் கலைஞர்கள் இந்த ஊர்வலம் நடத்துகிறார்கள்,''என்று சொன்னார்.அவுரங்கசீப் கொஞ்சமும் பதட்டமோ,அதிர்ச்சியோ காட்டாது அமைதியாகச் சொன்னார்,''அப்படியா சரி,அவர்களிடம் அதை ஆழமாகப் புதைத்துவிட்டு வரச் சொல்லுங்கள்.இல்லாவிடில் அது பாட்டுக்கு மறுபடியும் எழுந்து வந்து விடப் போகிறது..!''

எது நல்லது?

0

Posted on : Wednesday, April 11, 2012 | By : ஜெயராஜன் | In :

முல்லாவுக்கு ஒருவர் ஒரு பாட்டில் பிராந்தி கொடுத்தார்.முல்லாவும் அதை வாங்கிக் கொண்டார்.கொடுத்தவர் அதன்பின் தினமும் முல்லாவை வழியில் பார்த்தார்.அவர் அந்த பிராந்தியைப் பற்றி ஏதாவது சொல்வார் என்று எதிர் பார்த்தார்.ஆனால் முல்லா அதைப் பற்றி வாயைத் திறக்கவில்லை.ஒரு நன்றி கூடச் சொல்லவில்லை.அவரும் பொறுக்க முடியாமல் ஒருநாள் முல்லாவிடம்,''நான் கொடுத்த பிராந்தி எப்படி இருந்தது?''என்று கேட்டார்.முல்லாவும்,''நல்லாத்தான் இருந்தது,''என்று முகத்தில்  எந்தஉணர்ச்சியும் இல்லாமல்  கூறினார்.''நல்லாத்தான் இருந்தது என்று மொட்டையாகக் கூறினால் என்ன அர்த்தம்?''என்று கொடுத்தவர் கேட்க,முல்லா சொன்னார்,''எனக்கு நீங்கள் கொடுத்ததை விட சிறந்த பிராந்தியாக இருந்தால் அதை நீங்கள் எனக்குக் கொடுத்திருக்க மாட்டீர்கள்.இன்னும் கொஞ்சம் மோசமாக இருந்திருந்தால் நான் அதைக் குடிக்காமல் வேறு யாருக்காவது கொடுத்து இருப்பேன்.இரண்டும் இல்லாததால் நல்லாத்தான் இருந்தது என்று பொதுவாகச் சொன்னேன்.''

மனதை வெல்ல வேண்டும்.

0

Posted on : Tuesday, April 10, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு சிறந்த வில் வித்தை அறிந்த குருவிடம் பயிற்சி பெற்ற ஒருவன் தான் சிறப்பாகக் கற்றுக் கொண்டதாகக் கர்வம் கொண்டான்.குரு அவனை அழைத்துக் கொண்டு மலைப் பகுதிக்கு சென்றார்,இரண்டு மலை உச்சிக்கு இடையே ஒரு பலகை மட்டும் வைக்கப் பட்டிருந்தது.கீழே அதலபாதாளம்.குரு அநதப் பலகையில் விறுவிறுவென நடந்து நடுவில் நின்று கொண்டு தன் வில்லை எடுத்து வானத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு பறவையைக் குறி வைத்து அடித்து வீழ்த்தினார்.பின் சீடனை அவ்வாறே செய்யச்சொன்னார்.முதலில் ஆர்வமுடன் சென்ற அவன் நடுப் பகுதிக்கு சென்றவுடன் பயத்துக்கு உள்ளானான்.கால்கள் நடுங்க ஆரம்பித்தன.அவன் வில்லை எடுத்து ஒரு பறவையைக் குறி வைத்தான்.ஆனால் அவன் எங்கே கீழே விழுந்து விடுவோமா என்ற அச்சத்துடன் இருந்ததால் அவனால் சரியாகக் குறி பார்க்க முடியவில்லை.பதட்டத்துடன் குருவிடம்,''ஐயோ,என்னைக் காப்பாற்றுங்கள்.நான் கீழே விழுந்து இறந்து விடுவேன்.''என்று அலறினான்.குருவும் சாதாரணமாக  பலகையில் நடந்துசென்று அவனைக் கையைப் பிடித்து அழைத்து வந்தார்.திரும்ப அவர்கள் இருப்பிடத்திற்கு வந்து கொண்டிருந்தபோது இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.ஆனால் கர்வம் அழிந்த அந்த சீடன் நினைத்துக் கொண்டான்,''வில் அம்பை முழுமையாக வென்றால்  மட்டும் போதாது,நம் மனதையும் வெல்ல வேண்டும்.அதுதான் முக்கியம்.''

உடல் மெலிவு

0

Posted on : Tuesday, April 10, 2012 | By : ஜெயராஜன் | In :

''என் உடல் மெலிந்து கொண்டே போகிறது,டாக்டர்,''என்று ஒருவன் டாக்டரிடம் கூறினான்.டாக்டர் கேட்டார்,''உனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டா?
நோயாளி சொன்னான்,''நான் ஒரு செயின் ஸ்மோகர், டாக்டர்.''
டாக்டர்:அந்தப் பழக்கத்தை உடனே நிறுத்த வேண்டும்.சரி,குடிப்பழக்கம் உனக்கு உண்டா?
நோயாளி:தினசரி குடிப்பேன்,டாக்டர்.அது இல்லாவிட்டால் எனக்கு ஒன்றுமே ஓடாது.
டாக்டர்:குடி குடியைக் கெடுக்கும் என்று உனக்குத் தெரியாதா?உடனே குடிப்பதை நிறுத்து.அப்புறம் பெண்கள் பழக்கம் உண்டா?'
நோயாளி:நினைத்தபோதெல்லாம் போவதுண்டு டாக்டர்.
டாக்டர்:இந்த மூன்றையும் நீ முதலில் நிறுத்தினால்தான் உடம்பு நன்றாக இருக்கும்.
நோயாளி:பரவாயில்லை டாக்டர்,என் உடல் மெலிவது பற்றி எனக்கு இப்போது கவலையில்லை.
**********
கடுமையான நோயினால் பாதிக்கப்பட ஒருவன் குணமடைந்ததும், டாக்டர் சிகிச்சைக்கான பில்லைக் கொடுத்தார்.பில் தொகை மிக அதிகமாக இருப்பதாக நோயாளி சொன்னான்.டாக்டர் சொன்னார்,''நான் சிகிச்சைக்காக பத்து முறை உன் வீட்டிற்கு வந்துள்ளேன்.ஊசி போட்டிருக்கிறேன்.மாத்திரைகள் கொடுத்திருக்கிறேன்.நான் குறைவாகவே கேட்கிறேன்,''நோயாளி சொன்னான்,''நான் உடல் நலமில்லாதிருந்தபோது என்னைப் பார்க்க வந்த பத்துப் பேருக்கு என் நோயைப் பரப்பி அவர்கள் தற்போது உங்களிடம் சிகிச்சை எடுத்து வருகிறார்களே,அதையும் கொஞ்சம் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்,டாக்டர்.''
**********

அங்கீகாரம்

0

Posted on : Monday, April 09, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு அரசியல் கட்சியை தேர்தல் கமிசன் எப்படி மாநிலக் கட்சியாகவும் தேசீயக் கட்சியாகவும் அங்கீகரிக்கிறது?
*ஒரு மாநிலத்தின் சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சி,பதிவாகும் ஓட்டுக்களில் ஆறு %பெற்றிருக்க வேண்டும்.(ஒரு சட்டசபை உறுப்பினர் கூடத் தேர்ந்தெடுக்கப்படாவினும் மாநிலக் கட்சியாகும்.)
*ஆறு % வாக்குகள் பெறாவிடினும் முப்பது சட்டசபை உறுப்பினர்களுக்கு ஒருவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டாலும் மாநில அங்கீகாரம் உண்டு.
*மூன்று மாநிலத்தில் ஒரு கட்சி அங்கீகாரம் பெற்றால் அது தேசீயக் கட்சியாக அங்கீகரிக்கப்படும்.
*25 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தேசீய அங்கீகாரம் உண்டு.(ஆறு %வாக்குகள் பெறாவிட்டாலும்,ஒரு சட்ட மன்ற உறுப்பினர் கூட இல்லாவிடினும்)
இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட கட்சி நமது நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் அதற்கென ஒதுக்கப்படும் சின்னத்தில் போட்டியிட இயலும்.


பொன்மொழிகள் -28

0

Posted on : Monday, April 09, 2012 | By : ஜெயராஜன் | In :

புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி.
**********
கருமியின் நெஞ்சம்  சாத்தானின்  இருப்பிடம் .
**********
நோய் வரும்வரை உண்பவன் உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டிவரும்.
**********
அறிவற்ற அச்சம் இடையூறுகளை இரட்டிப்பாக்குகிறது.
**********
நன்றி மறத்தலில் எல்லா கெட்ட குணங்களும் அடங்கும்.
**********
முட்டாள் தனக்கே முகஸ்துதி செய்துகொள்வான்.
**********
நெருக்கமான பழக்கம் முதலில் அன்பை உண்டாக்கும்.முடிவில் வெறுப்பை வளர்க்கும்.
**********
நம்மிடம் எதுவும் இல்லை என்று நினைப்பது ஞானம்.
நம்மைத்தவிர எதுவும் இல்லை என்று நினைப்பது ஆணவம்.
**********
முதல் குற்றத்தை சரி என்று சாதிப்பவன்
இரண்டாவது குற்றத்தையும் செய்தவனாகிறான்.
**********
அன்பில்லாத இடத்தில் முகங்கள் வெறும் படங்கள்;பேச்சுக்கள் வெறும் கிண்கிணி ஓசைகள்.
**********
முட்டையைக் கொடுத்து காசு வாங்குபவன் வியாபாரி.
காசைக் கொடுத்து முட்டையை வாங்குபவன் சம்சாரி.
எதையும் கொடுக்காமல் எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி.
**********
எப்படியும் செய்ய வேண்டிய ஒரு செயலை புன்முறுவலுடன் செய்வதற்குப் பெயர்தான் ஒத்துழைப்பு.
**********


பொய்யும் உண்மையும்

0

Posted on : Saturday, April 07, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு பொய்யை ஒருவர் சொன்னால்,அது பத்தாயிரம் உண்மைகளாக மாறி வெளி வரும் என்கிறார் கோக்கி என்ற ஜென் ஞானி .பொதுவாகப் பொய்க்குக் கவர்ச்சி அதிகம்.நீங்கள் காலையில் ஒரு பொய் சொன்னால் மாலைக்குள் அது பல விதங்களில் பரவி திரும்ப உங்களிடமே வந்துவிடும்.அப்போது அது  உண்மையா,பொய்யா என்று நீங்களே சந்தேகப்பட ஆரம்பித்து விடுவீர்கள்.நீங்கள் அதை உண்மை என்று நம்ப அனேக சாத்தியக் கூறுகள் உள்ளன.அதே சமயம் நீங்கள் ஒரு உண்மையைச் சொன்னால் அதை யாரும் எளிதில் நம்பமாட்டார்கள்.உனக்கு அது எப்படித் தெரியும் என்று சந்தேகத்தோடு கேட்பார்கள்.இதற்கு வாயை மூடிக் கொண்டிருப்பதே நலம்.'இந்த உலகம் பொய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.பொய் மிகவும் மேம்போக்கானது.அது உங்களிடம் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.அதைப்பற்றிப் பேசுவது ஒரு பொழுதுபோக்கு.ஆனால் உண்மை அப்படி அல்ல.பல அபாயங்களைச் சந்திக்க நேரிடும்.பொய்மை வெகுமதியைக் கொடுக்கிறது.
**********
தன்னோடு வளரும் தனித்தன்மை உடையவரை இந்த உலகம் எளிதில் புகழாது.அங்கீகரிக்காது.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களை வேண்டுமானால் பல கட்டுக் கதைகளைக் கட்டி,அற்புதங்களைக் கூட்டிப் புகழலாம்.அந்த மனிதன் ஒரு அவதாரப் புருசனாகக் கருதப்படலாம்.
**********
மக்களுக்கு ஆறுதல் தேவைப்படுகிறது.தன்னை யாரோ ஒரு கடவுளின் தூதன் வந்து காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் ஆறுதல் அடைகிறார்கள்.இது ஒரு நாகரீகமற்ற அடிமைத்தனம்.
**********

நோயும் பாதிப்பும்

0

Posted on : Saturday, April 07, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒவ்வொரு நோய்க்கு நம் உடலில் வெவ்வேறு உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
காச நோய் ----------நுரையீரல் மற்றும் எல்லா உறுப்புகளும்
போலியோ----------நரம்பு மண்டலம்
ரேபிஸ்---------------மூளை,நரம்பு மண்டலம்
ரிக்கெட்ஸ்----------எலும்புகள்
ஸ்கர்வி--------------பல் ஈறுகள்
மஞ்சள் காமாலை-கல்லீரல்
சர்க்கரை நோய்----சிறு நீரகம்,ரத்த நாளங்கள் மற்றும் அனைத்து உறுப்புகளும்
வாதம் ---------------கை கால்கள்
யானைக்கால் -----கால்கள்
கலுத்துக்கழலை -தைராயிட் சுரப்பிகள்
எய்ட்ஸ் -------------உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு முறை
லுகேமியா----------இரத்த அணுக்கள்
பயோரியா---------பல் ஈறுகள்
புரைநோய் --------கண்கள்

ஏன் கூச்சம்?

0

Posted on : Saturday, April 07, 2012 | By : ஜெயராஜன் | In :

நம் தோலில் பாதம்,உள்ளங்கை முதலிய இடங்களில் தொடு உணர்வு செல்கள் அதிகம் உள்ளன.இவை தம் மேற்போர்வையை இழந்து காணப்படுவதால் குறைந்த பட்ச உணர்வுத் தூண்டுதல்களையும் துல்லியமாகக் கடத்தும் திறன் பெற்றிருக்கின்றன.எனவே இந்தத் தொடு செல்கள் மிகுந்த பாதம் முதலிய பாகங்களை லேசாக வருடினால்கூடக் கூச்சம் ஏற்படுகிறது.
**********
நமக்கு சளி பிடிக்கும்போது மூக்கிலுள்ள mucus membrane வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்படும்.அந்த வைரஸ் கிருமிகளை அழிக்க mucus membrane நிறையத் தண்ணீரை நமது இரத்தம் மற்றும் வெள்ளை அனுக்களிடம் இருந்து  உற்பத்தி  செய்யும்.இந்தத் தண்ணீர் வைரஸ் கிருமிகளைத் தாக்கும்.இதனால்தான் நமக்கு சளி பிடித்தால் மூக்கில் தண்ணீராய் வடிகிறது.
**********
புரோட்டின் என்பது கார்பன்,ஹைட்ரஜன் ,நைட்ரஜன்,ஆக்சிஜன்,சல்பர் ஆகியவற்றின் கலவையாகும்.இந்த வார்த்தை கிரேக்கத்திலிருந்து வந்தது.அதன் பொருள் அடிப்படை .
**********

சிங்கம்

0

Posted on : Saturday, April 07, 2012 | By : ஜெயராஜன் | In :

சிங்கம்
*பிற விலங்குகளைப் பதுங்கி இருந்து கொல்லாது
*எதற்கும் நடுங்கி வாழ்வது இல்லை.
*எப்போதும் கம்பீரமாக அஞ்சாது நடக்கும்.
*இரையை களவாடியோ வஞ்சகமாகவோ அடையாது.
*பசி வரும்போது தன் வரவை கர்ஜனை மூலம் அறிவித்துவிட்டே இரை தேட வரும்.
*பசி இல்லாதபோது சிறு உயிரைக்கூட கொல்லாது.
*நாளைக்கு வேண்டும் என்று இரையை பதுக்கி வைக்காது.
பின் ஏன் நமது அரசியல் வாதிகளை சிங்கத்துடன் ஒப்பிடுகிறார்கள்?

பலம்

0

Posted on : Friday, April 06, 2012 | By : ஜெயராஜன் | In :

புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் ஒரு அரண்மனைக்கு சென்று உபதேசங்கள் புரியலானார்.அரண்மனையில் வேலை செய்தவர்கள் அவருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தனர்,''அய்யா,நீங்கள் முற்றும் துறந்த
முனிவர்.தவசீலர்களான உங்களுடைய சீடர்களுக்கு உங்கள் உபதேசங்களைப் பின்பற்றுவது எளிது.இல்லறத்தில் முழுமையாக ஈடுபட்டு வரும் எங்களுக்கு  அது எளிதாக இல்லை.எங்கள் தகுதிக்கேற்ப எளிதான உபதேசங்களைக் காட்டுங்கள்.''புத்தர் அதை ஏற்றுக் கொண்டு உபதேசித்தார்,''நாம் நம் செயல்களுக்கு மனதையும் உடலையும் பயன்படுத்துகிறோம்.இரண்டும் ஒருவருக்கு ஆரோக்கியமாக இருந்தால்தான் அவர் நலமுடன் இருக்கிறார் என்று பொருள்.நாம் நமது உடலை அசைத்துப் பயன்படுத்தும்போது உடல் பலம் பெறுகிறது.ஆரோக்கியம் பெறுகிறது.ஆனால்  அசைவற்றிருக்கும்போதுதான்  நமது மனம் பலம் பெறுகிறது.எனவே உடலை அசைத்தும்,மனதை அசைவற்றும் வைத்திருந்தால் உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.''

என்ன தெரியும்?

0

Posted on : Thursday, April 05, 2012 | By : ஜெயராஜன் | In :

சுபி ஞானிகளைப் பற்றி ஒருவன் தரக் குறைவாக விமரிசித்து வந்தான்.இதைக் கேள்விப்பட்ட ஞானி ஒருவர் அவனை அழைத்து தன் கையிலிருந்த மோதிரத்தை அவனிடம் கொடுத்து ,''இதைக் கடைத்தெருவுக்கு எடுத்துச் சென்று ஆயிரம் ரூபாய்க்கு விற்று வா,''என்றார்.அவனும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடை வீதிக்கு எடுத்து சென்று அதை விற்க முயற்சி செய்தான்.ஒருவரும் ஆயிரம் ரூபாய் கொடுத்து அதை வாங்கத் தயாராக இல்லை.நொந்து போய் அவன் ஞானியிடம் சென்று ,''இந்த மோதிரத்தை நூறு ரூபாய்க்குக் கூட யாரும் வாங்கத் தயாராயில்லை,''என்றான்.உடனே ஞானி,''பரவாயில்லை,இதை தங்க நகைக் கடைத் தெருவுக்கு எடுத்துச் சென்று என்ன விலை கேட்கிறார்கள் என்பதை அறிந்து வா,''என்றார்.அவனும் அவ்வாறே சென்று ஒரு கடையில் அம்மோதிரத்தைக் கொடுத்து எவ்வளவு தர முடியும் என்று கேட்டான்.கடைக்காரன் ஒரு லட்ச ரூபாய் தர முடியும் என்று கூற மகிழ்ச்சியுடன் அவன் வந்து ஞானியிடம் சொன்னான்.ஞானி இப்போது அவனிடம் அமைதியாக சொன்னார்,''இந்த மோதிரத்தின் மதிப்பை எந்த அளவுக்குக் கடை வீதியில் இருப்பவர்கள் அறிந்திருந்தார்களோ அந்த அளவே நீயும் சுபி ஞானிகளைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறாய்.நீ என்று நகை வியாபாரியின் தரத்துக்கு வரப்போகிறாய்?''