உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இசை செத்து விட்டதா?

0

Posted on : Wednesday, April 11, 2012 | By : ஜெயராஜன் | In :

இசையை ரசிக்காதவர்களை 'சரியான அவுரங்கசீப்' என்று
சொல்வார்கள்.அவுரங்கசீப்புக்கு இசை பிடிக்காதது மட்டுமல்ல,அதன் மீது பகை உணர்வே உண்டு.அவர் கொண்ட வெறியினால் நாட்டில் யாரும் பாடுவதில்லை.இசை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வந்தது.பாதிக்கப்பட்ட இசைக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து அவுரங்கசீப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஒரு சவ ஊர்வலம் ஏற்பாடு செய்தார்கள்.இசை தான் பிணம்.மிகப் பிரமாண்டமான அந்த ஊர்வலத்தில் பொது மக்களும் திரளாக வந்து கலந்து கொண்டனர்.ஊர்வலம் அரண்மனையைக் கடந்தது.எல்லோரும் பெரிய ஆரவாரம் செய்தார்கள்.அதைக் கேட்ட அவுரங்கசீப் என்ன என்று விசாரித்தார்.''இறந்தது யார்'' என்று கேட்டார்.ஒரு அமைச்சர் தயங்கியபடியே வந்து ,''இசை செத்துவிட்டது என்று இசைக் கலைஞர்கள் இந்த ஊர்வலம் நடத்துகிறார்கள்,''என்று சொன்னார்.அவுரங்கசீப் கொஞ்சமும் பதட்டமோ,அதிர்ச்சியோ காட்டாது அமைதியாகச் சொன்னார்,''அப்படியா சரி,அவர்களிடம் அதை ஆழமாகப் புதைத்துவிட்டு வரச் சொல்லுங்கள்.இல்லாவிடில் அது பாட்டுக்கு மறுபடியும் எழுந்து வந்து விடப் போகிறது..!''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment