உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிந்தியுங்கள்

2

Posted on : Friday, August 31, 2012 | By : ஜெயராஜன் | In :

மனிதன் கடவுளிடம் கேட்டான்,''எனக்கு அமைதி தேவை,''கடவுள் சொன்னார்''உனது வேண்டுதலில் உள்ள 'எனது'என்ற வார்த்தையை எடுத்துவிடு.ஏனெனில் அது தன் முனைப்பு.அடுத்து,'தேவை'என்ற வார்த்தையையும் எடுத்துவிடு.ஏனெனில் அது ஆசை.இப்போது உனக்கு அமைதி தானாகக் கிட்டும்.''
**********
இருபது வயது வரை,உலகம் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.நாற்பது வயது வரை,உலகத்தை நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அறுபது வயதில் உலகம் நம்மைக் கவனிக்கவே இல்லை என்பதனைப் புரிந்து கொள்கிறோம்.
**********
மனதில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் பழைய பதிவேடுகளில் ஒவ்வொரு முறை நடக்கும் சின்னச் சின்ன வருத்தங்களையும்,தவறுகளையும் மனதுக்குள் அடுக்கி வைத்துக் கொண்டே போகும்போது தான் அது ஒருவரின் மீது அளவு கடந்த எரிச்சலையும் வெறுப்பையும் உருவாக்குகிறது.இந்த எரிச்சல் மற்றவர்களை எரிப்பதற்கு முன் உங்களைத்தான் எரிக்கும்.இதைப் புரிந்து கொண்டாலே வாழ்வு சுமுகமாகிவிடும்.
**********
அடுத்த மனிதனை அடக்கி,ஒடுக்கித் தன கட்டளைகளை ஏற்க வைப்பதில் மனிதர்களுக்கு எப்போதும் ஒரு ஆனந்தம் இருக்கிறது.அந்த மனப்பாங்கு குடும்பம்,சமூகம் என்ற வித்தியாசம் இல்லாமல் நடைமுறையில் இருக்கிறது.இந்த மனப்பான்மையிலிருந்து விடுபடுவது அனைவருக்கும் ஒரு பெரிய சவால்.
**********

மனநிலை

0

Posted on : Friday, August 31, 2012 | By : ஜெயராஜன் | In :

எட்வர்ட் ஹப்பர்ட் என்பவர் ஒரு கலை கண்காட்சியில் ஒரு அழகான ஓவியத்தைப் பார்த்து ரசித்து மிகவும் பரவசப் பட்டுக் கொண்டிருந்தார் .அருகிலிருந்த அவருடைய நண்பர்,''இந்த மாதிரி ஓவியங்கள் மிகவும் விலை உயர்ந்தவை.இவற்றை வாங்க உனக்குத் தகுதி இல்லைஎன்று எனக்குத் தெரியும்.இந்த நிலையில் பெரிதாக இந்த ஓவியத்தைப் பார்த்துப் பரவசப் படுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?''என்று கேட்டதற்கு  ஹப்பர்ட் சொன்னார்''பொருட்களுக்கு சொந்தக்காரனாக இருந்தும் அவற்றை அனுபவிக்க,ரசிக்கத் தெரியாத மனநிலையை விட, தன்னிடம் இல்லாத பொருட்களையும் அனுபவிக்கத் தெரியும் மனநிலை கொண்டிருப்பது சாலச் சிறந்தது,''