உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

முருகா!

0

Posted on : Sunday, February 28, 2010 | By : ஜெயராஜன் | In :

தின்றே வாழ்க்கையைக் கழித்த ஒரு பெரியவர் சாகும் தருவாயில் இருந்தார்.அவர் எந்த கோவிலுக்கும் போனதில்லை.சாகும் நிலையில் மெதுவாக உதட்டை அசைத்து,''மு.........''என்றார்.உறவினர்களுக்கு மகிழ்ச்சி.'அப்படித்தான், முருகன் பெயரைச் சொல்லுங்கள்.'என்றனர்.பெரியவர் கொஞ்சம் சத்தமாக ,''முருக .....''என்றார்.''சபாஷ்,மூன்று எழுத்து வந்து விட்டது.இன்னும் ஒரே எழுத்து தான்,சொல்லுங்கள்.''என்றனர் உறவினர்கள்.பரபரப்புடன் பெரியவர் தன பலம் முழுவதையும் திரட்டி,''முருகமுருக ஒரு தோசை வேண்டும்,''என்றார்.உறவினர்கள் முகத்தில் அசடு வழிந்தது.

முறையீடு

0

Posted on : Sunday, February 28, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு புலவர் வறுமையில் வாடியதால் பல இடங்களுக்கும் அலைந்து ஒன்றும் கிடைக்காமல் இல்லம் திரும்புகையில் வழியில் ஒரு சிவன் கோவிலைக் கண்டு ஆண்டவனிடம் முறையிடலாம் என்று உள்ளே சென்றார்.அங்கு கோவிலின் சுவற்றில் திருவிளையாடல் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.ஒரு சித்திரம் சிவலிங்கத்தை ஒரு வேடன் காலால் உதைக்கும் ஓவியம்.அடுத்து வேடன் உருவிலிருந்த சிவனை அர்ச்சுனன் அம்பினால் எரியும் காட்சி.அடுத்து பிட்டுக்கு மண் சுமந்த சிவன் பாண்டியனிடம் பிரம்படி வாங்கும் காட்சி.புலவர் சிரித்துக்கொண்டே தனக்குத்தானே பாடினார்,
''வஞ்சகர்பால் நடந்தலைந்த காலால் புண்ணும் 
வாசல்தொறும் முட்டுண்ட தலையில் புண்ணும்
செஞ்சொல்லை நினைந்துருகும் நெஞ்சில் புண்ணும்
தீருமென்று சங்கரன் பால் வந்தேனப்பா!
கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும்,வேடன்
கொடுங்காலால் உதைத்த புண்ணும்,கோபமாகப்
பஞ்சவரில் ஒருவன் வில்லால் அடித்த புண்ணும்
பாரென்று காட்டி நின்றான் பரமன் தானே!''

ராசி

0

Posted on : Sunday, February 28, 2010 | By : ஜெயராஜன் | In :

இந்திய மகாராஜா ஒருவருக்கு ஒரு பெரிய வைரக் கம்பெனி ஒரு பெரிய வைரக்கல்லை விற்க முன் வந்தது.மகாராஜாவுக்கு அது பிடித்து விட்டதால் எவ்வளவு விலையானாலும் வாங்க சம்மதித்து விட்டார்.மகாராஜா மேலும் மகிழ்ச்சி அடைவார் என்று எண்ணி விற்க வந்தவர் சொன்னார்,''இது சாதாரணமான கல் அல்ல.இது பதினாறாம் லூயி மன்னர் அணிந்திருந்ததாக்கும்.,''உடனே மகாராஜா வைரக்கல் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.காரணம் கேட்ட போது காரியதரிசி விளக்கினார்,''பதினாறாம் லூயி பிரெஞ்சுப் புரட்சியின் போது சிரச் சேதம் செய்யப்பட்டு இறந்தவர்.அதனால் இது ராசியில்லாத கல்.''
தேவைக்கு அதிகம் பேசினாலும் சிக்கல் தான்.

திருட்டு

1

Posted on : Sunday, February 28, 2010 | By : ஜெயராஜன் | In :

வாரச் சந்தையில் மலிவான விலையில் கழுதை விற்பது முல்லாவின் வழக்கம்.அந்த ஊர்ப் பணக்காரருக்கு முல்லா எப்படி குறைவான விலையில் விற்கிறார் என்பது புரியவில்லை.எனவே அவரிடம் கேட்டார்,''எனக்கோ கழுதை வளர்க்க செலவேதுமில்லை.கழுதைகளைக் கவனிக்க அடிமைகள் இருக்கிறார்கள்.என் விவசாயிகள் கழுதைகளுக்கு உணவைக் கொடுத்து விடுகிறார்கள்.இருந்தும் என்னால் உன் அளவிற்கு என்னால் குறைந்த விலையில் கொடுக்க முடியவில்லையே,''முல்லா சொன்னார்,'நீங்கள் உங்கள் கழுதைகளை வளர்ப்பதற்கான உணவையும் உழைப்பையும் திருடுகிறீர்கள்.நானோ கழுதை களையே திருடி விடுகிறேன்.அவ்வளவுதான்.'

இரு கோடுகள்

0

Posted on : Saturday, February 27, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு கோட்டை அழிக்காமலே அதை சிறிதாக்க முடியுமா என்று கேட்டார் ஆசிரியர்.அறிவு மிக்க மாணவன் ஒருவன் அச்சிறு கோட்டின் அருகே ஒரு பெரிய கோட்டை வரைந்தான்.ஆசிரியர் மாணவர்களிடம் சொன்னார்,''இதோ பாருங்கள்,இந்தப் பெரிய கோடு நமக்கு என்ன அறிவிக்கிறது?வாழ்க்கையில் ஒருவன் பெரியவனாக விரும்பினால் அவன் மற்றவரை வதைக்கவோ அழிக்கவோ தேவையில்லை என்பதைத்தான்.பெரியவன் ஆக விரும்புகிறவன் பெரிய காரியங்களைச்செய்தே மேல் நிலையை அடைய வேண்டும்,''

ஆட்டுக்கு இருபது கால்

0

Posted on : Saturday, February 27, 2010 | By : ஜெயராஜன் | In :

''கொம்பிலிருக்கும் குரங்குக்கோர் வாலிரண்டு;
கம்ப மத யானைக்குக் கால்கள் எட்டு-செம்பமலைக்
காட்டில் திரியும் கரடிக்கோர் வாயைந்து
ஆட்டுக்கு இருபது கால்.''
தப்பும் தவறுமாய் இருக்கும் இது ஒரு பாட்டா எனக் கேட்கிறீர்களா? சரியான பதில் தெரிய பதம் பிரித்து குறியீடு போட்டு கீழே உள்ளது போல் எழுத வேண்டும்.
''கொம்பிலிருக்கும் குரங்குக்கு ஓர் வால்;
இரண்டு கம்ப மத யானைக்குக் கால்கள் எட்டு;
செம்பமலைக் காட்டில் திரியும் கரடிக்கோர் வாய்;
ஐந்து ஆட்டுக்கு இருபது கால்.''

பொன்மொழிகள் -4

0

Posted on : Friday, February 26, 2010 | By : ஜெயராஜன் | In :

தனக்குத் தெரிந்த விசயங்களை மட்டும் மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில் பூரண அமைதி ஏற்படும்.
                                                     *********
உண்மை கனமானது.எனவே தான் அதை சுமப்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள்.
                                                   *********
குழந்தையைத் தூக்கிக் கொண்டே இருந்தால் கை நோகிறது.
இறக்கி விட்டாலோ மனம் நோகிறது.
                                                  **********
மகத்தான மனிதர்கள் கருத்துக்களைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
சாதாரண மனிதர்கள் நிகழ்ச்சிகளைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
மட்டமான மனிதர்கள்  தான் நபர்களைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
                                                 *********
உன் பையனுக்கு நடக்கக் கற்றுக் கொடு.
ஓடுவதற்கு அவன் தானே கற்றுக் கொள்வான்.
                                                *********
நல்ல யோசனை எது ,கேட்ட யோசனை எது என்ற வித்தியாசம் உங்களுக்குத் தெரியுமானால்.........
உங்களுக்கு எந்த யோசனையுமே தேவையில்லை.
                                                ********
கஷ்ட காலம் வந்து விட்டால்,ஒட்டகத்தின் மீது இருந்தாலும் நாய் கடிக்கத்தான் செய்யும்.
                                                ********
உங்கள் பிள்ளைகள் நல்லவர்களாக இருந்தால் உங்கள் சொத்து அவர்களுக்குத் தேவையில்லை.
உங்கள் பிள்ளைகள் கெட்டவர்களாக இருந்தால் உங்கள் சொத்து அவர்களுக்குப் பயன்படாது.
                                              **********
உங்களுக்கு எல்லாம் புரிந்து விட்டது என்றால்
தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.
                                               *********
உங்களுக்கு எதை சாப்பிடப் பிடிக்குமோ,அதைசாப்பிடாமல்,
உங்களுக்கு எது நல்லதோ அதை நீங்கள் சாப்பிட ஆரம்பித்தால்
உங்களுக்கு வயதாகி விட்டது என்று அர்த்தம்.
                                              **********

சகிப்புத்தன்மை

1

Posted on : Thursday, February 25, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவர்:வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.
மற்றவர்: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?
ஒருவர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.
மற்றவர்: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.
ஒருவர்: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!
மற்றவர்: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.
ஒருவர்: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி  ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.
மற்றவர்: எப்படிச் சொல்றீங்க?
ஒருவர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.
மற்றவர்: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.
ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!
மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பாவும் வித்தியாசம் தெரியாது.!
                                                 -----தென்கச்சி சுவாமிநாதன்.

யாரை மாற்றுவது?

0

Posted on : Wednesday, February 24, 2010 | By : ஜெயராஜன் | In :

எனது இளம் வயதில் நான் ஒரு புரட்சியாளனாக இருந்தேன்.அந்த சமயத்தில்,''இறைவனே,இந்த உலகத்தை மாற்றுவதற்கு எனக்கு சக்தியைக் கொடு,''என்பதைத் தவிர வேறு எதையும் நான் பிரார்த்தனை செய்ததில்லை.
ஒரே ஒருவரைக்  கூட மாற்ற முடியாமல் எனது வாழ்க்கையின் பாதி காலம் முடிந்து விட்டதை எனது நடு வயதை எட்டிய சமயத்தில் உணர்ந்தேன்.அதனால் எனது பிரார்த்தனையை மாற்றிக் கொண்டேன்.
''இறைவா,என்னிடம் தொடர்பு கொள்பவர்களை எல்லாம் நான் மாற்றுவதற்கு  எனக்கு அருள் புரி.''
இப்போதோ எனக்கு வயதாகி விட்டது.என் நாட்கள் எண்ணப்படுகின்றன.என்னால் யாரையும் மாற்ற முடியவில்லை.இப்போதெல்லாம்,''இறைவா,என்னை நானே மாற்றி கொள்வதற்கு அருள்வாயாக!''என்றுதான் பிரார்த்தனை செய்கிறேன்.ஆரம்பத்திலிருந்தே நான் இப்படிப் பிரார்த்தனை செய்திருந்தால் என் வாழ்க்கையை வீணடித்திருக்க மாட்டேன்.
நான் மாறும்போது உலகம் மாறுகிறது.
                                            ---------சூபி ஞானி பயாஜித்

தவறுகள்

0

Posted on : Wednesday, February 24, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு பெரியவர் வீட்டில் ஒரு உண்டியல் வைத்திருந்தார்.வீட்டில் யார் தவறு செய்தாலும் அதில் அபராதமாக ஒரு ரூபாய் போட வேண்டும்.பிறகு சேர்ந்த பணத்தை அவ்வப்போது பக்கத்தில் உள்ள கோவிலுக்குக் கொடுத்து விடுவார்.ஒரு சமயம் அவர் இரண்டு மாதம் வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.திரும்ப வந்து உண்டியலைப் பார்த்ததில் ஒரு ரூபாய் தான் இருந்தது.அவருக்கு மகிழ்ச்சி.''தேவலையே,இந்த இரண்டு மாதங்களில் ஒரே ஒரு தவறு தான் செய்திருக்கிறீர்கள் போலிருக்கே ,''என்றார்.
மகன்  சொன்னான்,'' இல்லையப்பா,அதில் இருநூறு ரூபாய் சேர்ந்திருந்தது.அதை நான் செலவுக்கு எடுத்துக் கொண்டேன்.''என்றான்.
''அது தவறு இல்லையா?''என்று கேட்டார் அப்பா.
'அந்தத் தவறுக்குத்தான்அதில்  ஒரு ரூபாய் போட்டேன்.அதில் இருப்பது நான் போட்ட ஒரு ரூபாய் தான்.'என்றான் பையன்.

பாவ காரியம்

0

Posted on : Tuesday, February 23, 2010 | By : ஜெயராஜன் | In :

பாவ காரியத்தில் ஈடுபடுவது என்பது, அப்படி ஈடுபட ஆசைப்படுவதையும் அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதையும் விட மோசமானது அல்ல.ஒரு  கண நேர சந்தோசத்திற்காக உடல் அதில் ஈடுபடுவது என்பது வேறு.ஆனால்,அதைப் பற்றி இடைவிடாது மனதாலும் இதயத்தாலும் அசை போட்டுக் கொண்டிருப்பது என்பது முற்றிலும் வேறான விஷயம்.
மற்றவர்களின் பாவங்களை நான் அசை போடும் போதெல்லாம்,அந்தப் பாவிக்கு அந்தப் பாவத்தினால்கிடைக்கும்  சந்தோசத்தை விட  அதை அசை போடும் எனக்கு அதிக சந்தோசம் கிடைக்கிறதோ என்று நான் சந்தேகிக்கிறேன்.
                                                  -----அரேபிய சித்தர் அபு ஹசன் புஷன்ஜா

சரியான உதாரணம்

0

Posted on : Tuesday, February 23, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் தினசரி காட்டுக்குச் சென்று கடுமையாக  உழைத்து  விறகு வெட்டி வாழ்ந்து வந்தான்.ஒரு நாள் அவன் ஒரு மரத்தடியில் கால்கள் இரண்டையும் இழந்த ஒரு நரியைக் கண்டான்.இது இந்த நிலையில் எப்படி உயிர் வாழ்கிறது என ஆச்சரியப்பட்டான்.அப்போது ஒரு புலி ஒரு மானை அடித்து அந்த மரத்தடிக்குக் கொண்டு வந்தது.விறகுவெட்டி பயந்து மரத்திலேறி நடந்ததைக் கவனித்தான்.புலி மானை உண்டு சென்ற பின் அது விட்டுச் சென்ற மிச்சத்தை நரி தவழ்ந்து சென்று உண்டது.''இரண்டு கால் இல்லாத நரிக்கே இறைவன் உணவு வழங்கும் போதுநமக்கு உணவு கொடுக்க மாட்டாரா?''என்று எண்ணிய அவன் மறுநாள் முதல் விறகு  வெட்டச் செல்லாது வீட்டிலேயே சோம்பிக் கிடந்தான்.ஆனால் அவன் எதிர் பார்த்தது போல் உணவு கிடைக்க வில்லை.காரணம் கேட்டு இறைவனை வணங்கி வேண்டினான்.இறைவன் கூறினான்,'நீ நரியை உதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது.புலியை உதாரணமாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.'

இப்படித்தான் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நமக்கு சாதகமான விசயங்களை மட்டும் தவறாக எடுத்துக் கொள்கிறோம்.

சிரிப்பது நல்லது

0

Posted on : Monday, February 22, 2010 | By : ஜெயராஜன் | In :

''புல்லைத்தின்றால் கண் நன்றாகத் தெரியும்.''
'எப்படிச் சொல்கிறாய்?'
''பாரேன்,எந்த மாடாவது கண்ணாடி போட்டுக் கொண்டிருக்கா?''
                                      ********
ஒரு நேர்முக சோதனையில்:
தேர்வர்:இரண்டும் இரண்டும்எவளவு?
முதல்வர்:நான்கு,சார்.
தேர்வர்:சரி நீங்கள் போகலாம் .(அடுத்தவரிடம்)இரண்டும் இரண்டும் எவ்வளவு?
இரண்டாமவர்:நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது தான்.
இரண்டாமவருக்கு வேலை கிடைத்தது.
                                    **********

''என்ன பிரமாதமான பாடகர்!அவர் குரல் அரங்கை நிரப்பி விட்டதே!''
'ஆமாம்,அந்த குரலுக்கு  இடம் கொடுப்பதற்காக  நம்மில் பலர் அரங்கிலிருந்து வெளியில் வரும்படி ஆகி விட்டதே!'
                                       ***********
ஒருவன் தனது கழுதையின் மீது நிறைய சுமை ஏற்றிச் சென்று கொண்டிருந்தான்.கழுதை அங்கங்கே நின்று கொண்டது.அவன் அதை நன்கு அடித்தான்.அதைப் பார்த்த ஒருவர் ,''கழுதையை ஏனப்பா இப்படி அடிக்கிறாய்?என்று கேட்டார்.அவன் பதில் சொல்ல வில்லை.அவன் ஒவ்வொருமுறை அடிக்கும் போதும் ஒவ்வொருவராக அடிக்க வேண்டாம் என்றனர்.அவன் அவர்கள் முன்னாலேயே திடீரென மண்டியிட்டு,'என்னை நீ மன்னிக்க வேண்டும்.உனக்கு சிபாரிசு செய்ய உன் உறவினர் இத்தனை பேர் வருவார்கள் என்று எனக்குத் தெரியாது.'என்று கழுதையிடம் சொன்னான்.
                                    *************
ஒரு விமானத்தில் பைத்தியங்கள் பயணம் செய்தனர்.அவர்களின் பலத்த கூச்சலில் பைலட்டினால் விமானத்தை செலுத்தக்  கடினமாக இருந்தது. இருக்கிறதிலேயே கொஞ்சம் பரவாயில்லாமல் தெரிந்த ஒரு பைத்தியத்தைக் கூப்பிட்டு ஒரு பத்து ரூபாயை அவரிடம் கொடுத்து,மற்ற பைத்தியங்கள் சப்தம் போடாமல் பார்த்துக் கொள்ள சொன்னார்.சற்று நேரத்திற்கெல்லாம் ஒரே அமைதி.பைலட்டால்  நம்ப முடியவில்லை.அந்த பைத்தியத்தை வரச்சொல்லி அவர் கையாண்ட வழியை சொல்லச்  சொன்னார்.அந்த பைத்தியம் சொன்னார்,''இந்தப் பயலுகள் எல்லாம் உள்ளேயிருந்து சப்தம் போட்டங்களா?நான் அவர்களிடம் கொஞ்ச நேரம் வெளியே போய் ஜாலியாக விளையாடிட்டு வாங்கன்னு சொல்லி வெளியே அனுப்பிட்டேன்.அவ்வளவுதான்.''
                                             ************
ஒரு தந்தை தன ஐந்து பிள்ளைகளுக்கும் பஞ்ச பாண்டவர்களின் பெயரை வைத்தார்.அவர்கள் போல் இவர்களும் சிறப்பாக வாழ வேண்டும் என்பது அவர் ஆசை.ஆண்டுகள் பல கழிந்தபின்,நண்பர் ஒருவர்,தந்தையின் ஆசை நிறைவேறியதா எனக்   கேட்டார். தந்தை சொன்னார்,''பேருக்குத் தகுந்த மாதிரியே நடந்து கொண்டனர்.'''அப்படியா,மகிழ்ச்சி'என்றார் நண்பர்.
தந்தை சொன்னார்,'ஆமாம் சொத்து பூராத்தையும் சூதாட்டத்திலேயே விட்டுட்டாங்க.'
                                       ************
ஒரு பெண்:என்னய்யா,போன தடவை நீ எடுத்த போட்டோவெல்லாம் அழகாய் இருந்தது.இப்போது என்ன ஆயிற்று உனக்கு?இப்போ எடுத்த போட்டோ சகிக்கலையே?
புகைப்படக்காரர்:உண்மை தான் அம்மா.போன தடவை நான் புகைப்படம் எடுத்த போதுஎனக்கு பதினைந்து வருடம் குறைவாக இருந்தது.இன்று எனக்கு வயதாகி விட்டது பாருங்கள்!அது தான் காரணம்.
                                       ***********
சேகரும் சோமுவும் காட்டிற்கு வேட்டையாடப் போனார்கள்.திடீரென பத்தடி தூரத்தில் ஒரு புலி!சேகர் ஓடுவதற்குத் தயாரானான்.''புலியை விட உன்னால் வேகமாக ஓட முடியும் என்று நம்புகிறாயா?என்று கேட்டான் சோமு.'அது அவசியமில்லை.உன்னைவிட வேகமாக ஓடினால் போதுமே!'என்றான்.
                                      *********
மனைவி:உங்க அம்மா அதைக் கொடுத்தேன்,இதைக் கொடுத்தேன் என்று குத்திக் காண்பித்துக் கொண்டேயிருந்தார்கள்,இல்லையா?இன்று அவர்கள் கொடுத்த பொருட்களையெல்லாம் அவர் மூஞ்சியிலே விட்டெறிந்து விட்டேன்.
கணவன்:பேஷ்,பேஷ்!
மனைவி:அதில் அம்மிக் குழவியும் ஒன்னு.
                                     ********
மாமியார்:ஏண்டி,மருமகளே!நீ வாங்கி வந்த கற்பூரத்தில் வாசனையே இல்லையே?
மருமகள்:கழுதைக்கு எப்படி மாமி கற்பூர வாசனை தெரியும்?
                                  *********

புதிதாக அமைச்சர் பதவி ஏற்றார் ஒருவர்.அவர் பயன்படுத்த ஒரு கார் அளிக்கப் பட்டிருந்தது.அவர் அந்தக் காரின் டிரைவரிடம்,''நீங்கள் சிறிது நேரம் ஓய்வுஎடுங்கள்.நான் சிறிது நேரம் காரை ஓட்டுகிறேன்.''என்றார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த டிரைவர்,'நீங்கள் ஓட்டுவதாக இருந்தால் நான் கீழே இறங்கிக் கொள்கிறேன்.ஏனெனில் இது கார்.நீங்கள் ஓட்ட நினைப்பதற்கு இது ஒன்றும் சர்க்கார் அல்ல.கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விடுவதற்கு.'என்றார்.

சித்தாந்தம்

0

Posted on : Monday, February 22, 2010 | By : ஜெயராஜன் | In :

மனிதர்கள் இயல்பாலே கொடுமையானவர்கள் அல்லர்.மகிழ்ச்சியிலே இருக்கும் போதோ,ஒரு சித்தாந்தத்தின் பிடியில் சிக்கியிருக்கும் போதோ தான் அவர்கள் கொடூரமானவர்களாக மாறி விடுகிறார்கள்.
ஒரு சித்தாந்தத்திற்கு எதிராக இன்னொரு சித்தாந்தம் கிளம்புகிறது.ஒரு மதத்திற்கு எதிராக இன்னொரு  மதம் போர் முரசு கொட்டுகிறது. இரு தரப்பினருக்கும் இடையே அழிந்து போவது மக்கள் தான்.
இயேசுநாதரை சிலுவையில் அறைந்தவர்கள் பிரியமான கணவராகவும்,அன்பான அப்பாக்களாகவும் தான் இருந்திருப்பார்கள்.ஒரு மதத்தை அல்லது ஒரு சித்தாந்தத்தை காப்பாற்றுவதற்காகத்தான் இவர்கள் கொடூரமாக நடந்து கொண்டார்கள்.
தத்தம் மதங்களின் தர்க்க நியாயங்கள் சொல்வதைவிட தங்கள் இதயம் சொல்வதை சமயவாதிகள் பின்பற்றி இருந்தால்,மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை உயிரோடு கொல்லும் கொடூரக் காட்சிகளைப் பார்க்க நேரிட்டிருக்காது.பெண்கள் உடன்கட்டை ஏறி எரிந்து சாம்பலானதையும்,கடவுளின் பெயரால் நடத்தப்பட்ட யுத்தங்களில் அப்பாவி மக்கள் கொலை செயப்பட்டதையும் நாம் பார்த்திருக்க மாட்டோம்.
பரிவு காட்டுவதற்கு எந்த சித்தாந்தமும் தேவையில்லை.
                                                     --------அந்தோணி  டி மெல்லோ.

கடவுளின் கேள்வி

0

Posted on : Monday, February 22, 2010 | By : ஜெயராஜன் | In :

கடவுள்நம்மிடம் கேட்கிறார்:
''நான் இங்கே உன்னுடன் இருக்கிறேன்.ஆனால் நீயோ உன் தலைக்குள் என்னைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கிறாய்.உன் நாக்கால் என்னைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறாய்.உன்னுடைய புத்தகங்களில் என்னைத் தேடிக் கொண்டே இருக்கிறாய்.இவை எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு என்னை எப்போது நீ காணப் போகிறாய்?
                                            -----------அந்தோணி டி மெல்லோ எழுதிய பறவையின் கீதம் என்ற புத்தகத்திலிருந்து 

பொறுக்கி

0

Posted on : Thursday, February 18, 2010 | By : ஜெயராஜன் | In :

பாரதிதாசன் விழா ஒன்றில் அமைச்சர் ஒருவருடன் பங்கு கொண்டார்.அவர் பேசும் பொது,''இங்குள்ள அமைச்சர்கள் எல்லாம் சரியான பொறுக்கி...''என்று தொடங்கி,அப்படியே நிறுத்திவிட்டு சோடா பருக ஆரம்பித்தார்.மேடையில் இருந்த அமைச்சருக்கோ தர்ம சங்கடம்.அசடு வழிய நெளிந்தார்.கூட்டத்திலோ மெல்லிய சலசலப்பு. கவிஞர் சோடா பருகி முடித்ததும் தொடர்ந்தார்,''..............
எடுத்த ரத்தினங்கள்.''கைதட்டல் அடங்க வெகு நேரமாயிற்று.

இது ரசிக்க

0

Posted on : Thursday, February 18, 2010 | By : ஜெயராஜன் | In :

புலவர் ஒருவர் அரசனுடன் விருந்துண்டார்.அப்போது அங்கு அரசி வந்தார்.புலவர்,''தங்கச்சி வந்தியா?''என்று கேட்டார்.புலவர் அரசியை உறவு முறை கொண்டாடுவது அரசனுக்குப் பிடிக்காதலால் புலவரை முறைத்தான்.அதைப் புரிந்து கொண்ட புலவர் உடனே,''உங்கள் தலையில் இருப்பது தங்கச் சிவந்தியா?என்று கேட்டேன்''என்றார் சமயோசிதமாக.
***********
ஒரு புலவர் தன நண்பனைக் காண அவரது இரும்புப் பட்டறைக்குச் சென்றார்.நண்பர் அவரைப் பார்த்து,''வாரும்,இரும்படியும்,''என்றார்.புலவரோ திடீரென இரும்படிக்கச் சொல்கிறாரே எனத் திகைத்தார்.நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார்,''நான் சொன்னது விளங்கவில்லையா?நீர் புலவர் அல்லவா?அதனால் வாரும்,இரும்,படியும் என்றேன்,''என்றார்.
***********
அரசர், புலவர் ஒருவருக்கு பணத்தைத் தங்கத் தட்டில் வைத்துக் கொடுத்தார்.புலவர் பணத்தை எடுத்துக் கொண்டு கேட்டார்,''பணத்தட்டு யாருக்கு?''பணத்தட்டு என்றால் பணம் இருந்த தட்டு என்றும் பண முடை என்றும் அர்த்தம் கொள்ளலாம்.தமக்கே பணமுடை என்று யாரும் எண்ணி விடக் கூடாது என்ற எண்ணத்திலரசன் ,'உமக்கே,'என்றாராம்.தட்டை உடனே எடுத்துக் கொண்ட புலவரின் சாமர்த்தியம் எப்படி?
************
புலவர்கள் கூட்டத்திற்கு கடைசியாகத் தாமதமாகக் கடைமடை என்ற ஊரிலிருந்து ஒரு புலவர் வந்தார்.மடாதிபதி அவரை,''வாரும்,கடைமடையரே!''என்று வரவேற்றார்.புலவர் உடனே,'வணக்கம்,மடத்தலைவரே!'என்று பதிலுரைத்தார்.
************
முந்தைய தினம் சுட்ட உளுந்த வடையை கணவனிடம் மனைவி கொடுத்தாள்.கணவன் அதைக் கையில் எடுத்தான்,புட்டான்,இழுத்தான்,திரும்ப ஒட்டினான்,மனைவியிடம் கொடுத்தான்.மனைவி,''என்னங்க,வடை ஊசி இருக்கா?''என்று கேட்டாள்.கணவன்,'ஊசி மட்டும் இல்லை,நூலும் இருக்கு தையலுக்கு உதவுமே என்று தான் திரும்பக் கொடுத்தேன்,'என்றான்.ஊசியும் நூலும் தையலுக்கு உதவும் தானே.தையல் என்றால் பெண் என்ற பொருளும் உண்டு.
************
ஒரு புலவர் சாகக் கிடந்தார்.வைத்தியர்,'இனி அவர் பிழைக்க மாட்டார். பாலைத்துணியில் நனைத்து துளித் துளியாக வாயில் விடுங்கள்,'என்றார்.
அதேபோல் புலவரின் பெண்ணும் கொடுத்தார்.புலவர் முகத்தைச் சுளித்தார்.
''அப்பா,பால் கசக்கிறதா?''என்று மகள் கேட்டார்.புலவர் சிரித்துக்கொண்டே சொன்னார்,'மகளே,பாலும் கசக்கவில்லை,துணியும் கசக்கவில்லை.'துணி கசக்காதலால் (துவைக்காதலால்)அவ்வளவு அழுக்கு!
*************
ஒருவன் நண்பனிடம்,'ஏனப்பா,நானூறு ரூபாய் தருகிறேன் என்றாய்.பின் முன்னூறு தருகிறேன் என்றாய்.அதன் பின் இருநூறு தருகிறேன் என்றாய்.ஆனால் இப்போதோ,வெறும் நூறு ரூபாய் தருகிறாயே,'என்றான்.
நண்பன் சொன்னான்,''நான் எப்போதுமே நூறு ரூபாய் தான் தருவதாகச் சொன்னேன்.நீ தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.
நான் நூறு(நான்+நூறு=நானூறு)ரூபாய் தருகிறேன் என்றேன். பின்னர்
முன் நூறு (முன்+நூறு=முன்னூறு)ரூபாய் தருவதாகச் சொன்னபடி கொடுக்கிறேன் என்றேன்.பின்னர் நீ வந்த பொது,இரு,நூறு (இரு+நூறு=இருநூறு)ரூபாய் தருகிறேன் என்றேன்.சொன்னபடி நூறு ரூபாய் தந்தேன்.''
***********

மனதின் தந்திரம்

0

Posted on : Wednesday, February 17, 2010 | By : ஜெயராஜன் | In :

அறிவுக் கனியை உண்ணக் கூடாது என்பது ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இடப்பட்ட உத்தரவு.ஆனால் அதை சுவைக்க அவர்களுக்கு ஆசை.அது இயல்பு தானே.எது கூடாது என்று தடுக்கப் பட்டாலும் அதன் மீது ஆசை எழுவது இயல்பு.மனம் அப்படித்தான் செயல் படும்.மனதிடம் இன்னொரு தந்திரமும் உண்டு.அது உங்களைத் தூண்டிவிடும்.பொறுப்பை யார் தலையிலாவது சுமத்தத் தான் அது தந்திரம் செய்யும்.
எப்போது எது தடுக்கப் பட்டாலும் அதன் மீது மனதிற்கு ஆர்வம் வந்து விடும்.அது ஒரு அழைப்பு போல.
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இயல்பாகவே கனியை சுவைக்க ஆசை ஏற்பட்டு விட்டது.அங்கே வேறு யாரும் இல்லை.ஆனால் கதை என்ன சொல்கிறது?சாத்தான் தூண்டி விட்டான் என்கிறது.இது தான் யார் மீதாவது பொறுப்பைத் தள்ளி விடும் மனதின் தந்திரம்.
சாத்தான் ஒரு பலிகடா தான்.அந்த சாத்தான் மனதின் கண்டுபிடிப்பு.சாத்தான் தூண்டினான்;மயக்கி ஏமாற்றி விட்டான் என்று சொல்லி விட்டால்,நீங்கள் பாவியல்ல என்று தப்பி விடலாமல்லவா?ஆனால் கவர்ச்சி ஏற்பட்டதென்னவோ,தடுக்கப் பட்டதனால்தான்.மனம் செய்த தந்திரம் கதையை மாற்றி விட்டது.ஆனால் கதை அழகானது.
மனமே சாத்தான்.தந்திரத்திற்கான பழைய குறியீடு தான் பாம்பு.மனமே பாம்பு.

பொன் மொழிகள் (3)

0

Posted on : Wednesday, February 17, 2010 | By : ஜெயராஜன் | In :

உங்களைப் பற்றி நீங்கள் மட்டமாகப் பேசாதீர்கள்.
அதைப் பேசத்தான் நண்பர்கள் இருக்கிறார்களே?
********
தவறான அபிப்பிராயங்கள் பொய்யை விடப் பெரிய எதிரிகள்.
********
பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று
நினைக்கத் தொடங்கினால் அவர்கள் உங்களைப் பற்றி
நினைக்காததைஎல்லாம் நினைப்பதாக நீங்கள்
நினைத்துக் கொள்வீர்கள்.
********
மூடனுடன் விவாதம் செய்வது அறிவுடைமை அல்ல.
அதனால் விவாதத்தின்பின் யார் மூடன் என்பது
விளங்காமல் போய் விடும்.
********
மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால்
உன் செவியை அடைத்துக்கொள்.
********
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை.
ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்.
*********
ஒருவரின் அவல நிலையைப் பார்த்து சிரிக்கும் போது
நம் அறியாமையை உறுதிப் படுத்துகிறோம்.
*********
இருளடைந்து கிடக்கிறதே என்று முணுமுணுப்பதை விட
சிறு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது மேல்.
********
வீணான எண்ணங்கள் நச்சக் கிருமிகள்.
உள்ளே அனுமதித்து விட்டால் அழிப்பது சிரமம்.
*********
துயரங்களை எதிர் பார்ப்பவன்,
இரு முறை துயரம் அடைகிறான்.
*********

நரம்புக் கோளாறு

0

Posted on : Tuesday, February 16, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு சின்னக் குழந்தை கடற்கரை மணலில் விளையாட ஆசைப்பட்டது.''வேண்டாம்,மணல் ஒரே ஈரம்.ஆடைகள் அழுக்காகிவிடும்.''என்றாள் தாய்.சரியென்று சொல்லி குழந்தை தண்ணீருக்கு அருகில் சென்றது. தாய்,''ஐயோ,வேண்டாம்.நீ உள்ளே விழுந்து விடுவாய்.''என்று கத்தினாள்.சரி,ஓடி விளையாடிக் குதிக்கலாம் என்று ஆரம்பித்தது குழந்தை.''வேண்டாம்,கூட்டத்தில் காணாமல் போய் விடுவாய்,''என்று தடுத்தாள் தாய்.அப்போது ஐஸ் க்ரீம் விற்பவன் வந்தான்.குழந்தை ஐஸ் க்ரீம் கேட்டது.''வேண்டாம்,தொண்டை கெட்டுவிடும்.உடம்புக்கும் கெடுதல் என்று மறுத்தாள் தாய்.குழந்தை அழுதாள்.தாய் அருகில் இருந்தவரிடம்,''இப்படி ஒரு நரம்புக் கோளாறு உள்ள குழந்தையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?''என்று கேட்டாள்
யாருக்கு நரம்புக் கோளாறு?.

இந்தியர்கள்

0

Posted on : Tuesday, February 16, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் ஒரு பள்ளியைப் பார்வையிட ஆய்வாளர் வந்தார்.ஒரு சிறுவனைப் பார்த்து,''பூமியின் முதல் ஆண்மகன்,முதல் பெண்மணி யார்?''என்று கேட்டார்.
'ஆதாமும் ஏவாளும் என்றான் பையன்.
ஆய்வாளருக்கு மகிழ்ச்சி.''அவர்கள் இருவரும் எந்த நாட்டுக்காரர்கள்?''என்று மீண்டும் அவனையே கேட்டார்.
'இந்தியர்கள்'என்றான் பையன்.
ஆய்வாளர் சற்றே குழப்பத்துடன்,''எவ்வாறு அவர்கள் இந்தியர்கள் ஆனார்கள்?''என்று கேட்டார்.
'அது எளிது.தலைக்கு மேல் ஒரு கூரை இல்லை.உடுப்பதற்கு உடைகளும் இல்லை.உண்பதற்கோ இருவருக்கும் சேர்ந்து ஒரே ஒரு ஆப்பிள்.அப்படி இருந்து அதை சொர்க்கம் என்று நம்பினார்களே!அதனால் அவர்கள் இந்தியர்களாகத்தான் இருக்க வேண்டும்.'என்றான் பையன்.

அவசரமா?

0

Posted on : Tuesday, February 16, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் மது குடித்துக் கொண்டிருந்தான்.அந்த வழியாகப் போன நண்பன் அவனிடம் வந்து,''என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய்?இது மெல்லக் கொல்லும் நஞ்சு,''என்றான்.
'பரவாயில்லை,எனக்கொன்றும் அவசரமில்லை,'என்றான் குடிகாரன்.

சமயோசிதமான பதில்

0

Posted on : Tuesday, February 16, 2010 | By : ஜெயராஜன் | In :

கிராமத்தில் ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.வெளியில் கடும் வெயில்.வேர்த்துக் கொட்டியது.பொறுக்க மாட்டாமல் சட்டையை கழற்றி பக்கத்தில் வைத்து விட்டு பாடம் சொல்ல ஆரம்பித்தார்.ஒரு பையன் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவனை என்ன பார்க்கிறாய் எனக் கேட்டார்.அவனோ பள்ளிக்கூட ஆய்வாளர் வந்து கொண்டிருப்பதாக சொன்னான்.சட்டையை எடுத்து போடலாம் என்று நினைக்கும் போதே அவர் கதவை திறந்து உள்ளே வந்து விட்டார்.
ஆசிரியர்,''ஆகவே மாணவர்களே.நமது உடலில் இதயம் இங்கே இருக்கிறது.இரைப்பை கீழே இந்த இடத்தில் இருக்கிறது,''என்று தன உடம்பில் சுட்டி காட்ட ஆரம்பித்தார்.ஆய்வாளர் கேட்டார்,'இதையெல்லாம் சொல்லித்தர சார்ட் இல்லையா?'ஆசிரியர் சொன்னார்,''நானும் பல முறை கேட்டு எழுதி விட்டேன்.ஆனால் கிடைக்கவில்லை,சார்,''
ஆய்வாளர் ஒன்றும் சொல்லாமல் வெளியே போய் விட்டார். ஆசிரியருக்கு பயம் வந்து விட்டது. சில தினங்களில் சார்ட்டுகள் வந்தன.கூடவே ஒரு கடிதமும் வந்தது.அதில் ஆசிரியர் சிறப்பாக சொல்லிக் கொடுப்பதாகப் பாராட்டப் பட்டிருந்தார்.கூடவே சம்பள உயர்வுக்கான ஆணையும் இருந்தது.

நாய் பிஸ்கட்

0

Posted on : Monday, February 15, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் இரவில் முல்லாவின் மனைவிக்கு பசியெடுத்தது.ஏதாவது தின்னக் கிடைக்குமா என்று பார்த்த போது ஒரு நாய் பிஸ்கட் தான் கிடைத்தது.அதை சாப்பிட்டதில் அது நன்றாகத் தான் இருந்தது.மறு நாள் அதை நிறைய வாங்கி வரச்சொல்லி முல்லாவிடம் சொன்னாள்.முல்லா கடையில் நிறைய நாய் பிஸ்கட் வாங்கினார்.கடைக்காரன்,''உங்கள் நாய் சிறியது தானே?இவ்வளவு எதற்கு?''என்று வினவினான்.
'நாய்க்கு அல்ல.என் மனைவிக்கு,'என்றார் முல்லா.
''ஐயோ,இது நாய்களுக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டும்.இதில் மெல்லக் கொல்லும் விஷம் இருக்கிறது.உங்கள் மனைவி இதை சாப்பிட்டால் செத்துப் போவார்.''என்றார் கடைக்காரர்.
ஆறு மாதங்களுக்குப் பின் முல்லாவின் மனைவி இறந்து போனார்.''நான் அப்போதே சொன்னேன்,நீங்கள் கேட்கவில்லை,''என்றான் கடைக்காரன்.
'இல்லை அந்த பிஸ்கட் அவளைக் கொல்லவில்லை.கார்களுக்குப் பின்னால் துரத்திக்கொண்டு ஓடியதால் காரில் அடிபட்டு இறந்து விட்டாள்,'என்றார் முல்லா.
சூழ்நிலை எப்படியிருந்தாலும் உங்கள் முடிவிலேயே நீங்கள் நிலைத்து நின்று விடுகிறீர்கள்.அது உங்கள் ஆணவத்திற்கு தளம் அமைத்துக் கொடுத்து விடுகிறது.அதன் மேல் உங்கள் மனம் நின்று கொள்கிறது.

நல்லவர்

0

Posted on : Monday, February 15, 2010 | By : ஜெயராஜன் | In :

மனதின் அடியாழத்தில் எல்லோரும் நல்லவராகவே இருக்க விரும்புகிறார்கள்.நல்லவராக இருப்பதற்கு இரண்டு வழிகளுள்ளன.ஒன்று நல்லவராக இருப்பது.அது மிகவும் கடினம்.மற்றொரு வழி அடுத்தவர் தவறு என்று நிரூபித்து விடுவது.நீங்கள் நல்லவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.மற்றவனைத் திருடன்,கொலைகாரன்,கெட்டவன் என்று நிரூபித்து விடும் போது நான் நல்லவன் என்ற உணர்வு சட்டென்று வந்து விடுகிறது.இது மிகவும் எளிமையானது.பெரிது படுத்தப்பட்ட பிறர் தீமைக்கு முன்னால் நீங்கள் அப்பாவி போல் காணப் படுகிறீர்கள்.அதனால் தான்,யாராவது ஒருவர் இன்னொருவரைப் பற்றி,''அந்த ஆள் கெட்டவன்,''என்று சொல்லும் போது,நீங்கள் ஒன்றுமே சொல்லுவதில்லை.அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறீர்கள்.அதோடு,'நானும் கூட அப்படித்தான் நினைத்தேன் ,'என்று சொல்லிவிடுகிறீர்கள்.
ஆனால்,யாராவது இன்னொருவரைப் பற்றி நல்லதாக ஏதாவது சொல்லி விட்டால்,நீங்கள் எதிர் வாதம் செய்கிறீர்கள்.அவர் கூற்றுக்கு ஆதாரம் கேட்கிறீர்கள்.கடவுளை நம்புவதற்கு ஆதாரம்கேட்பவர்கள் கூட சாத்தானை நம்புவதற்கு ஆதாரங்கள் கேட்பதில்லை.

சந்தேகம்

0

Posted on : Monday, February 15, 2010 | By : ஜெயராஜன் | In :

சந்தேகம் லாபம் தருவதாக இருப்பதால் உங்களுக்குள் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.கணக்குப் பார்த்து காரியம் செய்யும் ஆற்றல் அதனால் கிடைக்கிறது.அதிகப் பாதுகாப்பு கிடைக்கிறது.உங்களை எளிதில் யாரும் ஏமாற்றி விட முடியாது.ஆனால் சந்தேகம் கவலையைக் கொண்டு வந்து விடுகிறது.அடி மனதில் நிம்மதியின்மை இருப்பதால் தான் அந்தக் கவலை.இதை செய்வதா அதை செய்வதா என்று முடிவெடுக்க முடியாமல் திணறுவதே சந்தேகம்.சந்தேகம் இருந்தால் மனப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது.மனதில் ஒரு சிறுபான்மை அம்சம் இருக்கவே செய்யும்.அது சிறிதாக இருக்காது.அதற்கு எதிராக முடிவெடுத்தால் நீ எடுத்த முடிவு தவறு என்று சொல்வதற்கான சந்தர்ப்பத்தை அது எதிர் பார்த்துக் கொண்டேயிருக்கும்.அந்த சிறுபான்மை,கலகம் செய்யக் காத்திருப்பது.இடைவிடாமல் அது உங்களுக்குள் குழப்பம் செய்து கொண்டே இருக்கும்.
சந்தேகம் ஒரு மன நோய்.அது மேலும் மேலும் கூடிக் கொண்டே போகும்.சந்தேகம் உள்ளவர் தந்திரசாலியாக இருப்பார்.அவரை ஏமாற்ற முடியாது.புத்திசாலியாக இருப்பார்.என்றாலும் அவர் மன நோயாளிதான்.
அவரை ஏமாற்ற முடியாது என்பது ஒரு லாபம் தான்.ஆனால்அதற்கு அவர் கொடுக்கும் விலை மிகவும் அதிகம்.அவருக்கு நிம்மதியில்லை.எப்போதும் ஒரு ஊசலாட்டம்.அவர் பிளவு பட்ட மனிதர்.அதனால் உள் முரண்பாடு இருந்து கொண்டே இருக்கும்.

ரசத்தின் ரசம்

0

Posted on : Sunday, February 14, 2010 | By : ஜெயராஜன் | In :

முல்லா வீட்டுக்கு வந்த நண்பர் ஒருவர் வாத்து ஒன்றை பரிசாகக் கொடுத்தார்.அதை சமைத்து சாப்பிட்டார்கள்.அதன் பின் வரிசையாக முல்லா வீட்டுக்கு விருந்தினர் வர ஆரம்பித்தனர்.சிலர் வாத்துக் கொடுத்தவரின் நண்பர் என்றனர்.இன்னும் சிலர் வாத்துக் கொடுத்தவரின் நண்பருக்கு நண்பர் என்று சொல்லிக் கொண்டனர்.எல்லோருமே அந்த வாத்தை தங்களுக்கும் சமைத்துப் போட வேண்டும் என்று கூறினர்.முல்லா இவர்களை எல்லாம் ஓரளவு சமாளித்தார் ஆனால் ஒரு நிலையில் பொறுமை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.ஒரு நாள் ஒரு புது ஆள் வந்தார்.''உங்களுக்கு வாத்து கொடுத்தவரின் நண்பருக்கு நண்பருக்கு நண்பன் நான்.''என்று சொல்லி விட்டு சாப்பாட்டுக்கு தயாராக உட்கார்ந்து விட்டார்.ஆவி பறக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து அந்தப் புது ஆளின் முகத்திற்கு முன் முல்லா நீட்டினார்.''என்ன இது?''என்று அவர் கோபத்துடன் கேட்டார்.'அதுவா?உங்கள் நண்பர் கொடுத்த வாத்தின் ரசத்தோட ரசத்தோட ரசம்,'என்றார் முல்லா.

அதனால் என்ன ?

0

Posted on : Sunday, February 14, 2010 | By : ஜெயராஜன் | In :

முல்லாவுக்கு அறிமுகமான ஒருவர்,ஒரு நல்ல செய்தியை அவரிடம் சொல்லி,நண்பராகிவிடலாம் என்று எண்ணி,அவர் வீட்டுக்கு சென்று அவரிடம் சொன்னார்,''என் பக்கத்து வீட்டுக்காரர்கள் இன்று கேக் செய்கிறார்கள்.''
உடனடியாக முல்லா,'அதனால் எனக்கு என்ன வந்தது?'என்று கேட்டார்.
வந்தவர்,''அவர்கள் அதில் கொஞ்சம் உங்களுக்குக் கொடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன்.''என்றார்.'அதனால் உனக்கு என்ன வந்தது?'என்று முல்லா கேட்க வந்தவர் அசடு வழிய நின்றார்.

சண்டை

0

Posted on : Sunday, February 14, 2010 | By : ஜெயராஜன் | In :

முல்லா ஒரு நாள் அவர் மனைவியுடன் சண்டை போட்டார்.அவர் வாய்க்கு வந்தபடி பேசவே,பொறுக்க மாட்டாத அவர் மனைவி பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டார்.பின்னாலேயே முல்லாவும் அங்கு சென்றார்.பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களை சமாதானப்படுத்தி,இனிப்பு ,காரம்,டீ கொடுத்து அனுப்பினர்.
வீட்டிற்கு வந்த முல்லா மறுபடியும் அதிகமாக சண்டை போட ஆரம்பித்தார்.
மனைவி வெளியே செல்ல கதவைத் திறந்தார்.அப்போது முல்லா சொன்னார்,
''இப்போது பேக்கரிக்காரர்கள் வீட்டிற்குப் போ.அவர்கள் நல்ல கேக்குகள் செய்கிறார்கள்.''

பொன்மொழிகள் (2)

0

Posted on : Sunday, February 14, 2010 | By : ஜெயராஜன் | In :

மனிதர்களை நீ எடை போட்டுக் கொண்டே இருந்தால்
அவர்களை நேசிக்க உனக்கு நேரமே கிடைக்காது.
**********
வயதாவதைக் கண்டு பயப்படாதீர்கள்.
பலருக்கு அந்த வாய்ப்பே கிடைப்பதில்லை.
**********
உணர்ச்சி வேகத்தில் அறிவாளியும் மடையனாகிறான்.
***********
சட்டென்று பதில் உரைப்பவனுக்கு அறிவு மட்டம்.
***********
ஏளனம் என்பது குறுகிய உள்ளத்திலிருந்து வரும் நச்சுப் புகை.
**********
அகங்காரம் வரும் போது அவமானமும் கூடவே வரும்.
*********
திடீரென்று நீ வெற்றி பெற்று விட்டால்,நீ வெற்றி
பெறுவதற்காகவே பிறந்தவன் என்று எண்ணி விடாதே.
********
சோம்பேறித்தனம் தற்கொலைக்கு சமம்.
**********
நம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசுபவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும்
சரியான பதில் என்ன தெரியுமா? மௌனம் .
***********
கடலில் எவ்வளவு புயல்களைச் சந்தித்தீர்கள் என்பதைப் பற்றி
உலகிற்கு அக்கறையில்லை.
கப்பலைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தீர்களா
என்பதில் தான் அக்கறை.
***********

காரணம் என்ன?

0

Posted on : Saturday, February 13, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு சந்நியாசி காலை நேரத்தில் மலை உச்சி மீது நின்று கொண்டிருந்தார்,தன்னந்தனியாக,அசையாமல்.காலை உலா வந்த மூன்று பேர் அவரைப் பார்த்தார்கள்.ஒருவர் சொன்னார்,''காணாமல் போன பசுவை அவர் தேடிக் கொண்டிருக்கிறார் ,''அடுத்தவர் சொன்னார்,'இல்லை,அவர் நிற்கிற விதத்தைப் பார்த்தால் அவர் எதையும் தேடுவதாகத் தெரியவில்லை.அவர் தன் நண்பர்களின் வரவுக்காகக் காத்திருக்கிறார்,'மூன்றாமவர் சொன்னார்,''நண்பர்களுக்காகக் காத்திருந்தால் அவர் சுற்றிலும் திரும்பிப் பார்க்க வேண்டும்.அவர் அசையவே இல்லை.அவர் தியானம் செய்கிறார்.''
கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்,அவரிடமே விவரம் கேட்க,சிரமப்பட்டு மலை உச்சிக்குச் சென்றனர்.
முதலாமவர் கேட்டார்,''காணாமல் போன உங்கள் பசுவைத் தானே தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?''
சந்நியாசி கண்களைத் திறந்தார்.''எனக்கு சொந்தம் என்று எதுவும் இல்லை.அதனால் எதுவும் காணாமல் போகவில்லை.எதையும் நான் தேடவும் இல்லை.''
'அப்படியானால், நண்பர்களுக்காகத் தானே காத்திருக்கிறீர்கள்?'என்று இரண்டாமவர் கேட்டார்.
''நான் தனியன்.எனக்கு நண்பர்களும் இல்லை.பகைவர்களும் இல்லை.அப்படியிருக்க நான் யாருக்காகக் காத்திருக்க வேண்டும்?''என்றார் சந்நியாசி.
''அப்படியானால், நான் நினைத்தது தான் சரி.நீங்கள் தியானம் தானே செய்கிறீர்கள்?''என்று கேட்டார் மூன்றாமவர்.
சந்நியாசி சிரித்தார்.''நீங்கள் மடத்தனமாகப் பேசுகிறீர்கள்.எனக்கு சாதிக்க வேண்டியது எதுவுமில்லை.எதற்காக நான் தியானம் செய்ய வேண்டும்?''என்று கேட்டார்.
அப்புறம் மூவரும்,''பிறகு நீங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?''என்று கேட்டனர்.
''நான் எதையுமே செய்யவில்லை.நான் சும்மா நின்று கொண்டிருக்கிறேன்.''என்று சொல்லி சிரித்தார் சந்நியாசி.
தியானம் என்பது அது தான்.

காலில் விழுந்த நீர்

0

Posted on : Saturday, February 13, 2010 | By : ஜெயராஜன் | In :

கம்பரும்,சோழ மன்னரும் மாலை நேரத்தில் சோலையில் உலாவிக் கொண்டிருந்தனர்.அருகே ஓடிக் கொண்டிருந்த ஆற்று நீர் காலில் படும்படி இருவரும் நடந்து கொண்டிருந்தனர்.நீர் வேட்கை கொண்ட கம்பர்,அந்த ஆற்றின் தெள்ளிய நீரைக் கையில் அள்ளிக் குடித்தார்.இதைக் கண்ட மன்னர்,கம்பரை மட்டம் தட்ட எண்ணி,''கம்பரே,என் காலில் விழுந்த நீரைத் தானே நீர் குடித்தீர்?''என்று கிண்டலாகக் கேட்டார்.அதற்கு கம்பர்,'நீரே காலில் விழுந்தால் நான் என்ன செய்வது?'என்று பதிலுரைத்தார்.

பேரீச்சம்பழம்

0

Posted on : Friday, February 12, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் நபிகள் நண்பர்களுடன் விருந்து உண்டு கொண்டிருந்தார்.அவருடைய மருமகனும் அங்கிருந்தார்.நபிகள் தாம் தின்ற பேரீச்சைக் கொட்டைகளை மருமகன் முன்னால் போட்டு விட்டு,''இதோ பாருங்கள்!இங்கு சில பேர் இரண்டு பங்கு பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டிருக்கிறார்கள்!''என்றார்.மருமகன் சொன்னார்,'இங்கே வேறு சிலர் பேரீச்சம் பழங்களைக் கொட்டையோடு சாப்பிட்டிருக்கிறார்கள்.

விருந்து

0

Posted on : Friday, February 12, 2010 | By : ஜெயராஜன் | In :

புலவர்:அரசர் வீட்டுத் திருமணத்தில் சுவையான விருந்து உண்டீரோ?
அவவை :உண்டேன்.உண்டேன்,உண்டேன்.
புலவர்:அவ்வளவு சிறப்பான விருந்தா?
அவ்வை:விருந்துக்கு வந்த கூட்டத்தில் சிக்குண்டேன்.
வெளியே தள்ளுண்டேன்.
பசியினால் வயிறு சுருக்குண்டேன்.

தாமதம்

0

Posted on : Friday, February 12, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் ஏழை.அதனால் கழுதையில் ஏறித்தான் வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தான்.ஆனால் எப்போதும் தாமதமாகவேவீடு திரும்புவது வழக்கம்.அவன் மனைவிக்கு அதனால் ஏகப்பட்ட கோபம்.
அவன் தன மனைவியிடம்,''என் பிரச்சினையைப் புரிந்து கொள்.தொழிற்சாலையில் கடைசிச்சங்கு ஊதியவுடன் என் கழுதை அங்கிருந்து உடனே புறப்பட்டு விடும்.இரண்டு மூன்று வினாடிகளுக்குக் கூட அது காத்திருக்காது.நான் அதன் மேல் ஏறினேனா இல்லையா என்றெல்லாம் பார்க்காது.அது பாட்டுக்குப் புறப்பட்டு விடும்.அப்படிப் பழகி விட்டது அது.தொழிற்சாலை விடும் வேளையில் ஏகப்பட்ட நெரிசல்.எல்லோரும் அடித்துப் பிடித்து வெளியேறிக் கொண்டிருப்பார்கள்.அந்தக் கூட்ட நெரிசலில் நான் வெளியே வரப் பல தடவை தாமதமாகி விடுகிறது.வந்து பார்த்தால் கழுதை இருக்காது.நான் என்ன செய்ய?நடந்தே வீடு வர வேண்டி இருக்கிறது.இது தான் என் பிரச்சினை.\,''என்று சொன்னான்.
அவள் இதில் சமாதானம் அடைந்திருப்பாள் என்று அவனுக்குத் தோன்றியது.அதனால்,''இதனால் நீ அறியும் நீதி என்ன?''என்று கேட்டான்.
'வீடு திரும்புவதற்கு சரியான நேரம் என்ன என்பது ஒரு கழுதைக்குக் கூடத் தெரிந்திருக்கிறது என்பது தான் நான் அறியும் நீதி,'என்றாள் அவள்.

புலவரின் புதிர்

0

Posted on : Thursday, February 11, 2010 | By : ஜெயராஜன் | In :

பல தூண்கள் உள்ள ஒரு மண்டபத்தில் ஒரு புலவர் அமர்ந்திருந்தார்.அப்போது ஒருவன் ஓடி வந்து,''இந்தப் பக்கம் ஒருவன் ஓடி வந்தானே?அவன் எங்கே?''என்று புலவரைக் கேட்டான். திருடன் மறைந்திருக்கும் இடம் புலவருக்குத் தெரியும்.அவனைக் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை.அதே சமயத்தில் பொய் சொல்லவும் விரும்பவில்லை.அதனால் நேரிடையாகக் கூறாமல் ஒரு புதிர் மூலம் பதில் அளித்தார்.
முருகனது கடைசி முகம் எது? (ஆறு)
வீட்டைத் தாங்குவது எது? (தூண்)
வேதத்தின் வேறு பெயர் என்ன? (மறை)
வேடன் வைத்திருப்பது என்ன? (வில்)
விடை:ஆறாவது தூண் மறைவில்.

காதலியின் தாமதம்

0

Posted on : Thursday, February 11, 2010 | By : ஜெயராஜன் | In :

காதலியைச் சந்திக்க காத்திருக்கிறான் காதலன்.தாமதமாக வந்த அவள் சொன்னாள்:
''வெட்டியதால் சாகவில்லை.
வெட்டாதிருந்தால் செத்திருப்பேன்.
செத்ததால் சாகவில்லை.
சாகாதிருந்தால் செத்திருப்பேன்.''
காதலனுக்கு ஒன்றும் புரியவில்லை.அவள் விளக்கம் சொன்னாள்:
வரும் வழியில் இருட்டில் பாழும்கிணறு ஒன்று இருந்தது தெரியவில்லை.
அப்போது மின்னல் வெட்டியதால் நான் விழாமல் தப்பித்தேன்.சாகவில்லை.மின்னல் வெட்டாதிருந்தால் நான் செத்திருப்பேன்.
சிறிது தூரம் வந்தபின் ஒரு பாம்பை மிதித்து விட்டேன்.நல்ல வேளை.அது ஒரு செத்த பாம்பு.அதனால் நான் சாகவில்லை.அது சாகாதிருந்தால் நான் செத்திருப்பேன்.

நாட்டுப்புறப்பாடல்

0

Posted on : Thursday, February 11, 2010 | By : ஜெயராஜன் | In :

முக்காலைக் கைப்பிடித்து,மூவிரண்டு போகையிலே
அக்காலை ஐந்து தலை நாகம் அழுந்தக் கடித்தால் பதூரதன்
புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் கால் வாங்கத் தேய்.

இதன் பொருள்:
முக்காலைக் கைப்பிடித்து =இரண்டு கால்கள் பற்றாமல் மூன்றாவது காலாகக்
கைத்தடி ஊன்றி
மூவிரண்டு போகையிலே =(மூவிரண்டு=ஆறு) வழிநடக்கும் போது
அக்காலை
ஐந்து தலை நாகம்=நெருஞ்சி முள்
அழுந்தக் கடித்தால்=காலில் தைத்தால்
பதூரதன் புத்திரன்=தசரதனின் மகன் ராமன்
மித்திரன்=நண்பன் (ராமனின் நண்பன் சுக்ரீவன்)
சத்துருவின்=எதிரியின்(சுக்ரீவனின் எதிரி வாலி)
பத்தினியின்=மனைவியின்(வாலியின் மனைவி தாரை)
கால் வாங்கத் தேய்=(தாரை என்ற வார்த்தையில் காலைஎடுத்தால்,தரை)
தரையில் தேய்.
அதாவது காலில் நெருஞ்சி முள் குத்தினால் ,காலைத் தரையில் தேய்க்க வேண்டும்.

ராஜாளி

0

Posted on : Wednesday, February 10, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு குரங்கு ஒரு ராஜாளிப் பறவையின் கூட்டிலிருந்த ஒரு முட்டையை எடுத்து ஒரு கோழி இட்டிருந்த முட்டைகளுடன் சேர்த்து வைத்து விட்டது.வித்தியாசம் காணத் தெரியாத கோழியும் தன முட்டைகளுடன் சேர்த்து அதையும் அடை காத்து குஞ்சு பொரித்தது.ராஜாளிக் குஞ்சும் கோழிக் குஞ்சிகளுடன் அக் கோழியின் அரவணைப்பில் இருந்து வந்தது.அதனுடைய செயல்,நடவடிக்கை அனைத்தும் கோழிக் குஞ்சிகளுடையதைப் போலவே இருந்தது.சிறிது வளர்ந்த நிலையில் அது ஒரு நாள் வானத்தை அண்ணாந்து பார்த்த போது,ராஜாளிப் பறவைகள் கூட்டாகப் பறந்து செல்வதைக் கவனித்தது.அப்போது அது வருத்தத்துடன்,''இறைவா,என்னையும் இது போல் ராஜாளியாகப் படைத்திருக்கக் கூடாதா?நானும் அவை போல ஆனந்தமாகப் பறப்பேனே!''என்று வருத்தப்பட்டது.
என்ன விசித்திரம்!ராஜாளிக் குஞ்சுக்குத் தான் ஒரு ராஜாளி என்பதே தெரியவில்லை.இது போல் தான் நம்மில் பலரும் தன்னைப் பற்றி,தன சக்தியைப் பற்றி அறிவதில்லை.தன்னுள் தேவையான சக்தி இருந்தும் அது இல்லையே என்று அடுத்தவரைப் பார்த்து புலம்புபவர் பலர்.நாம் ஒரு ராஜாளி தான் என்பதை உணர வேண்டும்.

அழகும் பலனும்

0

Posted on : Wednesday, February 10, 2010 | By : ஜெயராஜன் | In :

புல் வெளி.
அண்ணாந்து ஆகாயம் நோக்கிய சின்னப்புல் சொன்னது,
''இந்த அந்தி நேர மேகம் தான் எத்தனை அழகு!தகதகவென தங்க நிறத்தோடு.அந்த அழுக்கு மேகத்தைத்தான் பிடிக்கவில்ல.கன்னங்க ரேல்என்று.''
அம்மாப்புல் அமைதி காத்தது.
தகித்தது புல்வெளி.
சின்னஞ்சிறு புல் ஒரு துளி நீருக்காக ஏங்கியது.நா உலர்ந்தது.
உயிர் மெல்ல மெல்ல வறண்டது.
அதே நேரத்தில்,
அழுக்கு மேகம் இடியோசையோடு மழையாய்ப் பொழியத் துவங்கியது.
புல்வெளி எங்கும் பூரிப்பு.
அருகில் இருந்த அம்மாப்புல் சொன்னது:
''அழுக்கு மேகம் தன்னையே அழித்துக் கொண்டது,பார்த்தாயா?
அழகாய் இருப்பவை எல்லாமே பயனுள்ளவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.பயனுள்ளவை எல்லாம் அழகாக இருக்க வேண்டும் என்பதில்லை.''

உத்தரவு

1

Posted on : Tuesday, February 09, 2010 | By : ஜெயராஜன் | In :

தளபதி ஒருவர்உறங்கும் பொது பெரிதாகக் குறட்டை விட்டதால் அவர் மனைவி தூங்க மிகவும் சிரமப்பட்டாள்.அவர் இடப்பக்கம் திரும்பிப் படுக்கும் போது தான் குறட்டை வந்ததாம். குறட்டை என்றால் அது சாதாரண குறட்டை அல்ல.உறுமல்.
அவள் உளவியல் மருத்துவரிடம் சென்றாள்.''இதென்ன பெரிய விஷயம்?குறட்டை விடும் போது அவரை வலப்பக்கம் திரும்பிப் படுக்கும்படி தள்ளி விடுங்கள்''என்றார் அவர்.
'ஐயோ,அது சிரமம்.அவர் ரொம்பத் தடியான ஆள்.தள்ள முடிவதில்லை .அப்படியே தள்ளினாலும் அவருக்கு கோபம் வருகிறது.எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டேன்.ஒன்றும் முடியவில்லை.'என்றாள் அவள்.
அது கேட்ட மருத்துவர் ,''கவலைப்படாதீர்கள்,அவர் காதருகே சென்று,'ரைட் டேர்ன்'என்று சொல்லி விடுங்கள்,அது போதும்,''என்றார்.
அந்த முறை வெற்றி பெற்று விட்டது.உத்தரவு என்றால் உத்தரவு தானே?அது அவர் மனதின் அடி ஆழத்தில் பதிந்திருந்ததால் அந்தக் கட்டளைக்குக் கீழ் படிந்தார்.

மிச்சம் எவ்வளவு?

1

Posted on : Tuesday, February 09, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆசிரியர் ஒருவர் மாணவனிடம் ஒரு கணக்குச் சொல்லி விடை கேட்டார்.பையன் ஒரு ஆட்டிடையனின் பிள்ளை.
''பத்து ஆடுகள் இருக்கின்றன.ஒன்று மட்டும் வேலியைத்தாண்டி வெளியே குதித்து விட்டது.மிச்சம் எவ்வளவு ஆடுகள் இருக்கும்?''
'ஒன்றும் மிச்சம் இருக்காது,'என்றான் பையன்.
''அது எப்படி?என்ன கணக்கு அது?இருப்பது பத்து ஆடு.ஒன்று வெளியே குதித்து விட்டால் மிச்சம் எவ்வளவு?''என்று மீண்டும் கேட்டார் ஆசிரியர்.
'உங்களுக்குக் கணக்கு தெரிந்திருக்கலாம்.ஆனால் எனக்கு ஆடுகளைப் பற்றித் தெரியும்.விடை,ஒன்றுமில்லை என்பது தான்.'என்றான் பையன்.

பொன் மொழிகள் (1)

0

Posted on : Monday, February 08, 2010 | By : ஜெயராஜன் | In :

இது எனது இருநூறாவது இடுகை
***********************************
பேசாத வார்த்தைக்கு நீ எஜமான்.
பேசிய வார்த்தை உனக்கு எஜமான்.
*******
வாக்குறுதி என்பது ஒரு வகையில் கடனே.
*******
பகிர்ந்த துன்பம் பாதியாகிறது.
பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது.
********
செய்யத்தெரிந்தவன் சாதிக்கிறான்.
செய்யத் தெரியாதவன் போதிக்கிறான்.
********
கோபம் என்பது ஒரு குட்டிப் பைத்தியம்.
********
வணங்க ஆரம்பிக்கும் போது வளர ஆரம்பிக்கிறோம்.
********
தவறு கூடு தலாய் இருந்தால் பிடிவாதமும் கூடுதலாய் இருக்கும்.
*********
உங்களைப் பற்றி நீங்கள் எவ்வளவு அதிகம் பேசுகிறீர்களோ
அவ்வளவு அதிகம் பொய் சொல்ல நேரிடும்.
*********
நண்பன் என்பவன் உங்கள் குறைகளை எல்லாம் அறிந்தும்
உங்களை விரும்புபவன்.
********
ஒரு காரியம் சிரமமானது என்று பயப்படுகிறோம்.
உண்மையில் நாம் பயப்படுவதால் தான் அது சிரமமாகிறது.
*********

பலகாரம்

0

Posted on : Sunday, February 07, 2010 | By : ஜெயராஜன் | In :

பாரதியார் ஒரு விழாவில் கலந்து கொண்டார்.விழா முடிந்தவுடன் அவர் என்ன சாப்பிட விரும்புகிறார் என்று கேட்டனர்.''வீரப் பலகாரமாக ஏதாவது வாங்கி வாருங்கள்''என்றார் பாரதியார்.நிர்வாகி இதைக் கேட்டு திகைப்படைந்து நின்றார்.பாரதியார் சொன்னார்,''பலகாரங்களில் வீரப் பலகாரம்,கோழைப்பலகாரம் என்றிருப்பது உமக்குத் தெரியாதா?கடபுடா என்று கடிக்கும் பொது ஓசை எழுப்பும் முறுக்கு போன்றவை வீரப் பலகாரங்கள்.ஓசையே இல்லாமல் உள்ளே போகும் வடை போன்றவை கோழைப் பலகாரங்கள்.''

புகழ்ச்சி

0

Posted on : Sunday, February 07, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு யூத குரு புதிதாக ஒரு ஊருக்கு வந்தார்.ஊர் மக்கள் கூடி அவருக்கு ஒரு வரவேற்பு விழா நடத்த அனுமதி கேட்டனர்.சம்மதம் தெரிவித்த குரு வரவேற்பு விழாவுக்கு முன்னர் ஒரு அறையில் தனியாகச் சென்று தாளிட்டுக் கொண்டார்.வெளியிளிருந்தவர்களுக்கு அவர் ஏதேதோ பேசுவது கேட்டது.சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அவரிடம் விளக்கம் கேட்டனர்.''இன்றைய கூட்டத்தில் என்னை அளவுக்கு மீறி புகழ்வீர்கள்.அது என்னுள் அகந்தையை வளர்க்கும்.கூட்டத்தில் நீங்கள் எப்படியெல்லாம் புகழ் வீர்களோ அதை எனக்கு நானே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டேன்.இப்போது அந்த சொற்கள் எனக்கு மிகவும் பழகி விட்டன.நீங்கள் அவற்றை உபயோகிக்கும் போது என்னுள் எந்த பாதிப்பும் ஏற்படாது.''என்றார் அவர்.

தெரியுமா?

0

Posted on : Sunday, February 07, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு புகழ் பெற்ற சமய நூல் அறிஞர் டாக்டர்.சார்ல்பார்த் என்பவரை நேரில் பார்த்தறியாத ஒரு முதியவர் அவரிடம் கேட்டார்,''ஐயா,உங்கள் பேர் என்ன?''
'என் பெயர் டாக்டர்.சார்ல்பார்த்.'
''இதே பெயரில் ஒரு சமய நூல் அறிஞர் இருக்கிறாரே,அவரை உங்களுக்குத் தெரியுமா?''
'தெரியுமாவா?அவருக்கு தினம் தினம் ஷேவ் செய்து தலை வாரி விடுகிறேன்,ஐயா.'

எளிமை

0

Posted on : Saturday, February 06, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஞானி ஒரு அரசனிடம் அகந்தை பற்றியும் எளிமை பற்றியும் விளக்கிச் சென்றார்..உடனே அரசன் அரச உடைகளை விட்டு சாதாரண உடை உடுத்தினான்.அரண்மனையைவிட்டு ஒரு குடிசையில் குடியிருந்தான்.சிறிது நாளில்,தன்னைப் போல் ஒரு எளிமையான அரசன் எங்கும் இருக்க மாட்டான் என எண்ணினான்.ஆனால் சிறிது யோசிக்கையில் இந்த எண்ணமே ஒரு அகந்தை தானே என்று நினைத்து ஞானியிடம் சென்று விளக்கம் கேட்டான்.ஞானி சொன்னார்,''நீ அரச உடையிலேயே இரு;அரண்மனையிலேயே வாழ்;ஆனால் மனதளவிலே எளிமையாக வாழ்ந்து வா.''

கருத்து வேறுபாடு

0

Posted on : Saturday, February 06, 2010 | By : ஜெயராஜன் | In :

முஹம்மது நபி அவர்களின் மகள் பாத்துமா.பாத்துமாவின் குழந்தைகள் ஹசன்,ஹுசைன் .சிறுவர்களாயிருக்கும் போது ஒரு சிறு மன வருத்தம் காரணமாக ஒருவருக்கொருவர் பேசாதிருந்தனர்.கேள்விப்பட்ட தாய் அவர்களை அழைத்து நபிநாயகம் சொன்ன பொன் மொழிகளைச் சொன்னார்,''ஒரு முஸ்லீம் மற்றொரு முஸ்லிமுடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாதிருந்தால் அது அவனைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும்.''இளையவர் ஹுசைன் சொன்னார்,'அம்மா,இப்படிப் பேசாமல் இருக்கிற இரண்டு பேரில் எவர் முதலில் சலாம் சொல்கிறாரோ,அவருக்கே அதிக பலன் உண்டு என்று அண்ணல்நபிகள் சொல்லியிருப்பது எனக்குத் தெரியும்.அதனாலே அந்த பலன் அண்ணனுக்குக் கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில் தான் நான் முதலில் பேசாதிருக்கிறேன்.'இதைக் கேட்டதும் மூத்தவர் ஹுசேன் ஆனந்தக் கண்ணீருடன் தம்பியை அணைத்துக் கொண்டு சலாம் சொன்னார்.தம் பிள்ளைகளின் அறிவையும் அரிய பண்பையும் கண்டு தாய் மெய் மறந்து நின்றார்.
கருத்து வேறுபாடுகளை எப்போதும் நீடிக்க விடக் கூடாது.

எது நரகம்?

0

Posted on : Thursday, February 04, 2010 | By : ஜெயராஜன் | In :

முல்லா இறந்து விட்டார்.அவரது இரண்டு சீடர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.மூவரும் மறு உலகின் அழகிய வாயிலைத் தட்டினர்.''இது தான் நான் உங்களுக்கு வாக்களித்தது.நாம் சொர்க்கத்திற்கு வந்து விட்டோம்.''என்றார் முல்லா.
வழிகாட்டி .அவர்களை அழகிய அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.''இனி முடிவே இல்லாமல் இங்கே இருக்கப் போகிறீர்கள்.உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்.உடனே நிறைவேற்றுகிறேன்.''என்றான் வழிகாட்டி.
கேட்டதெல்லாம் உடனே கிடைத்தது.ஆசைப் பட்டதெல்லாம் நிறைவேறியது.
ஆனால் ஏழு நாட்களில் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டது.கேட்பதற்கும் கிடைப்பதற்கும் இடைவெளி இல்லையென்றால் சலிப்புதான் ஏற்படும்.
வழிகாட்டியிடம் முல்லா,''நாங்கள் எங்கள் பூமியைப் பார்க்க விரும்புகிறோம்.கொஞ்சம் ஜன்னலைத் திறக்க முடியுமா?''என்று கேட்டார்.
'எதற்கு?'என்று கேட்டான் அவன்.
''எங்கள் ஆவலை மேலும் கிளறி விட.''என்றார் முல்லா.
அவன் கதவைத் திறந்தான்.கீழே பூமியில் மக்கள் போராடிக் கொண்டிருப்பது தெரிந்தது.இந்த முரண்பாட்டில் அவர்களது ஆர்வம் மேலும் கிளர்ந்தது.
அடுத்த ஏழு நாட்களில் அவர்களுக்கு மீண்டும் சலிப்பு ஏற்பட்டது.பூமியைப் பார்ப்பதில் இனி பயன் இல்லை.அதனால் முல்லா,''கொஞ்சம் நரக வாசலைத் திறந்து காண்பியப்பா,அதைப் பார்த்தால் எங்கள் ஆசைகள் புத்துணர்வு பெரும்.''என்றார்.
அதற்கு அவன் சிரித்தபடி சொன்னான்,''நீங்கள் எங்கே இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?இது தான் நரகம்.''
ஆம்,அவர்கள் இதுவரை இருந்தது நரகம்!
உங்களது எல்லா ஆசைகளும் நிறைவேறிவிடுவது தான் நரகம்!

என்ன நோய்?

0

Posted on : Thursday, February 04, 2010 | By : ஜெயராஜன் | In :

மிகவும் நோய் வாய்ப்பட்டிருந்த பெண்மணி ஒருவரை மருத்துவர் பார்க்க வந்தார்.அவளுடைய அறைக்குள் நுழைந்து ஐந்து நிமிடத்தில் அவர் வெளியே வந்தார்.வெளியே காத்திருந்த அவளுடைய கணவனிடம்,''ஒரு கார்க் ஸ்க்ரு வேண்டும்''என்று கேட்டார்.
சீசாவின் கார்க்கை எடுக்கும் ஸ்க்ரு எதற்கு என்று குழம்பியபடி அதை தேடி எடுத்துக் கொடுத்தான்.மருத்துவர் மீண்டும் உள்ளே போய் விட்டு ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து,''இப்போது ஸ்க்ரு டிரைவர் வேண்டும்,''எனக் கேட்டார்.
கணவனுக்கு ஒரே வியப்பு.எதற்கு என்று கேட்கவில்லை.டாக்டருக்குத் தெரியாதா என்று மௌனமாக எடுத்துக் கொடுத்தார்.
டாக்டர் உள்ளே போய் விட்டு,ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து,''ஒரு அரமும் சுத்தியும் வேண்டும்,''எனக் கேட்டார்.
அதற்கு மேல் பொறுக்க முடியாத கணவன் 'என் மனைவிக்கு என்னதான் ஆச்சு?'என்று கேட்டான்.
''அது இன்னும் தெரியவில்லை.என் பையைத் தான் திறக்க முடியவில்லை.''என்றார் டாக்டர்.

மன பலவீனம்

0

Posted on : Wednesday, February 03, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் குற்றவாளிகளைத் தண்டித்துக் கொண்டே தான் வந்திருக்கிறோம்.ஆனால் நமது தண்டனைகளால் அவர்கள் திருந்தினார்களா,மாறிவிட்டார்களா என்பது பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.
குற்றவாளிகளோ பெருகிக் கொண்டே இருக்கிறார்கள்.சிறைச்சாலைகள் அதிகரிக்கின்றன.வழக்கு மன்றங்கள் பெருகி வருகின்றன.தவறுகளும் கூடிக் கொண்டே இருக்கின்றன.விளைவு?அதிகக் குற்றங்கள்!
பிரச்சினை என்ன?தவறு செய்ததற்குத்தான் தண்டிக்கப் பட்டோம் என்று குற்றவாளிகளும் உணரலாம்.ஆனால் மாட்டிக் கொண்டால் தான் தண்டிக்கப் படுகிறார்கள்.அதனால் அவனும் நியாயப் படுத்த ஆரம்பித்து விடுகிறான்.அடுத்த முறை இன்னும் தந்திரத்தோடு,புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்து விடுகிறான்.
இம்முறை அவன் சிக்கிக் கொண்டது தவறு செய்ததால் அல்ல.எச்சரிக்கையாக இல்லாததால்.சமுதாயம் அவனை விட புத்திசாலி என்று நிரூபித்து விட்டது.அடுத்த முறை அவன் அதை விடப் புத்திசாலி என்று நிரூபிப்பதற்காக பிடிபடப்போவதில்லை.ஆகவே தண்டனை மூலம் அவன் கற்றுக் கொண்ட பாடம்,அடுத்த முறை மாட்டிக் கொள்ளக் கூடாது என்பது தான்.
மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தால் திருடாதிருப்பவர்,யாருமே இல்லாத போது வாய்ப்பு அமைந்தால் திருடத்தான் செய்வார்.பயம் தான் உங்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறது.நீங்கள் நல்லவராக இருப்பதெல்லாம் மன பலவீனத்தால் தான்.

தண்டிப்பு

0

Posted on : Wednesday, February 03, 2010 | By : ஜெயராஜன் | In :

உங்கள் குழந்தை நீங்கள் ஒப்புக்கொள்ளாத ஒன்றைச் செய்து விடுகிறது.இப்போது குழந்தை செய்தது சரியா தவறா ?எது சரி,எது தவறு என்று யாருக்குத் தெரியும்?ஆனால் அது அல்ல சிக்கல்.ஒருதந்தையாகவோ தாயாகவோ இருந்து சிலவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.நீங்கள் எதை ஒப்புக் கொள்ளவில்லையோ,அவை தவறுகளாகிவிடுகின்றன.அது தவறாகவும் இருக்கலாம்,இல்லாமலும் இருக்கலாம்.ஆனால் நீங்கள் ஒப்புக் கொள்வது தான் சரியாகி விடும்.அதனால் எல்லாமே உங்கள் ஒப்புதல்,நிராகரிப்புக்குள் அடங்கி விடுகிறது.
உங்கள் பார்வையில் ஒரு குழந்தை வழி தவறிப் போவதாகக் கருதினால்,நீங்கள் அதைத் தண்டிப்பீர்கள்.ஆழமான காரணம்,அது எதோ தவறு செய்து விட்டதால் அன்று,உங்களுக்கு கீழ்ப் படிய மறுத்ததுதான்.உங்களது அகங்காரம் காயப்பட்டு விடுவது தான் உண்மையான காரணம்.
குழந்தை உங்களிடம் முரண் படுகிறது.தன சுயத்தை நிலை நிறுத்திக் கொள்கிறது.உங்களிடம் முடியாது என்று சொல்லி விட்டதால்,அதிகாரம் கொண்ட தந்தை அதைக் கண்டிக்கிறார்.உங்கள் கர்வம் காயப்பட்டு விடுவதால்,தண்டித்தல் என்பது ஒரு வகையான பழி வாங்கல்தான்.
குழந்தை தவறு செய்தால் திருத்த வேண்டாமா? அதனால் தான் தண்டனை.தவறான வழியில் போனால் தண்டனை:உங்களைப் பின் பற்றினால் பரிசு!சரியான வாழ்வு என்பது இப்படித்தான் தரப்படுத்தப்பட்டுள்ளது.குழந்தையின் உரிமையாளர் நீங்கள் தான்.அது உங்களுக்கு அடிபணிய மறுத்தால்,சிரமப் பட வேண்டியது தான்!இப்படித்தான் நீங்கள் நியாயப் படுத்துவீர்கள்.
நியாயத்துக்கும் நியாயப்படுத்துவதற்கும் வேறுபாடு உண்டு.நியாயப் படுத்துவது என்பது ஒரு தந்திரமான உத்தி.உண்மையான காரணத்தை இது மறைத்து விடுகிறது.பொய்யானதை வெளிப் படுத்துகிறது.ஆனால் எல்லாமே நியாயமாக நடப்பது போல் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

சிரித்து வாழ்வோம்

0

Posted on : Tuesday, February 02, 2010 | By : ஜெயராஜன் | In :

********
''இந்த எலுமிச்சைக் கலர்ப் புடவையை எப்படி எடுத்த?''
'என் கணவரைப் பிழிஞ்சு தான் .'
********
அப்பா:யாரையும் டீ போட்டுப் பேசக்கூடாது.
மகன்:சரி டா (டி)
********
ஹோட்டலில் சாப்பிட்டவர் பணம் இல்லாதலால் மாவாட்டிக் கொண்டிருந்தார்.அங்கே வந்த முதலாளி அவரைப் பார்த்து விட்டு,''நீங்கள் ஒரு எழுத்தாளரா?''எனக் கேட்டதும் அவருக்கு ஆச்சரியம்.'எப்படி சரியாய்க் கண்டு பிடித்தீர்கள்?'என்று கேட்டார்.
முதலாளி சொன்னார்,''நீங்க தான் அரைச்ச மாவையே அரைச்சுக் கிட்டு இருக்கீங்களே!''
*********
ஒரு மகளிர் அழகு நிலையம் முன் எழுதி வைக்கப் பட்டிருந்த வாசகம்:
இங்கிருந்து வெளியே செல்லும் பெண்களைப் பார்த்து விசில் அடிக்காதீர்கள்.அவர்கள் ஒரு வேளை உங்கள் பாட்டியாக இருக்கலாம்.
***********
''அம்மா தாயே,பிச்சை போடுங்கம்மா.''
'ஒண்ணுமில்லை,பக்கத்து வீட்டுக்குப் போப்பா.'
''பக்கத்து வீட்டுக்காரன் தாம்மா,நான்.''
***********
''சர்வர்,உங்கள் ஹோட்டல் மெது வடை நன்றாக இருக்கிறது.இந்த வடையைப் போட்டவரை பாராட்ட வேண்டும்.அவரை கூப்பிட முடியுமா?''
'அவர் சென்ற ஒரு வாரமாக லீவில் இருக்கிறார்,சார்.'
***********
''நடக்கக் கூடாதது நடந்து போச்சுங்க,''என்று ஒருவர் தன நண்பரிடம் சலித்துக் கொண்டார்.'அப்படி என்ன நடந்து விட்டது?'என்று நண்பர் கேட்க,''நான் ரேசில் பணம் கட்டிய குதிரை,''என்றார் அவர்.
************
''எப்போதும் சந்தோசம் தரும் செயல்களையே செய்து பழக வேண்டும்.உதாரணமாக வேலை செய்கிற இடத்திலேயே பாட்டுப் பாட முயற்சி செய்யுங்கள்.''
'அது முடியாது,டாக்டர்,'
''ஏன்?''
'நான் ஒரு நாதஸ்வர வித்வான்.'
**********
''உங்க மாமியார் கீழே விழுந்தப்போ நீ தூக்கி விடலையாமே?''
'நான் என்ன செய்வது?டாக்டர் தான் கனமான பொருள்களைத் தூக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறாரே!'
*************
ஒரு பாடகர் சொன்னார்,''புன்னகவராளி ராகம் பாடினா ,பாம்பு வரும்.நீலாம்பரி பாடினா தூக்கம் வரும்.மோகனம் பாடினா மகிழ்ச்சி வரும்.....''
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவன் கேட்டான்,''எந்த ராகம் பாடும் போது கல் வரும்?''

முல்லா

0

Posted on : Monday, February 01, 2010 | By : ஜெயராஜன் | In :

முல்லா உளவியல் மருத்துவரிடம் சென்றார்.''எனக்கு ஒரே குழப்பம்.ஏதாவது செய்யுங்கள்.சகிக்க முடியவில்லை.இரவு முழுவதும் ஒரே கனவு வந்து என்னை வாட்டி வதைக்கிறது.நான் ஒரு மூடிய கதவருகே நிற்கிறேன்.தள்ளுகிறேன்,தள்ளுகிறேன்,தள்ளிக்கொண்டே இருக்கிறேன்.கதவைத் திறக்க முடிய வில்லை.பிறகு விழித்துக் கொள்கிறேன்.வேர்த்து விறுவிறுத்து விடுகிறது.''என்றார்.
உளவியல் மருத்துவர் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார்.அரை மணி நேரம் விசாரித்து விட்டு,'முல்லா,அந்தக் கதவின் மீது என்ன எழுதி இருந்தது?'என்று கேட்டார்.
''இழு,என எழுதியிருந்தது,''என்று சாதாரணமாகச் சொன்னார் முல்லா.
*************
ஒரு நாள் இரவு முல்லா வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார்.கதவைத் தட்டினார்.அவர் மனைவிக்கு ஒரே எரிச்சல்.மனைவியின் கோபத்தைக் கண்ட முல்லா,''பொறு,பொறு.ஒரு நிமிடம்.விளக்கிச்சொல்லி விடுகிறேன்.அப்புறம் ஆரம்பித்துக்கொள்.நான் நோய் வாய்ப்பட்ட ஒரு நண்பனுடன் இருக்க வேண்டியதாயிற்று.''என்றார்.
'நல்ல கதை.சரி,அவர் பேர் என்ன?'என்றாள் மனைவி.
முல்லா தடுமாறிப் போனார்.யோசித்து யோசித்துப் பார்க்கிறார்.ஒன்றும் சொல்ல முடியவில்லை.கடைசியில் உற்சாகத்தோடு,''தன பேரைச் சொல்ல முடியாத அளவுக்கு அவனுக்கு வேதனை,''என்றார்.

சாதாரணக் கணக்கு

0

Posted on : Monday, February 01, 2010 | By : ஜெயராஜன் | In :

முதல் சோவியத் விண்வெளிப் பயணிகள் நிலாவில் இறங்கினார்கள்.அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி.ஆனால் அங்கு மூன்று சீனர்கள் நடந்து சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார்கள்.அதிர்ச்சி அடைந்தார்கள்.
''எங்களுக்கு முன்னால் எப்படி வந்தீர்கள்?அந்த அளவுக்கு உங்களிடம் தொழில் நுட்பம் கிடையாதே?''என ரஷ்யர்கள் கேட்டார்கள்.
அதற்கு சீனர்கள்,'இதிலென்ன அதிசயம்.இது ஒரு சாதாரண கணக்குதான்.நாங்கள் ஒருவர் தோளில்ஒருவர் ஏறி நின்றோம்.வந்து சேர்ந்து விட்டோம்.'என்றார்கள்.

தளபதி

0

Posted on : Monday, February 01, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு ராணுவ கேப்டன் எப்போதும் குடி போதையில் இருப்பதை தளபதி தெரிந்து கொண்டார்.கேப்டன் நல்ல மனிதன் தான்.குடிகாரர்கள் நல்லவர்கள் தான்.ஆனால் குறுக்கு வழியில் போகிறவர்கள்.அவ்வளவுதான்.
''நீ நல்லவன் உன்னை நான் பாராட்டுகிறேன்.ஆனால் உன்னை நீ பாழாக்கிக் கொண்டிருக்கிறாய்.நீ மட்டும் குடிக்காமல் தெளிவாக இருந்தால் விரைவில் ஒரு கர்னல் ஆகி விடுவாய்.''என்றார் தளபதி.
அது கேட்டு அவன் சிரித்தான்.'அது தேவையேயில்லை.குடியை விட்டால் வெறும் கர்னல் தானே ஆக முடியும்.நான் குடித்தால் தளபதி ஆகி விடுகிறேனே.'