உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தோல்வி

0

Posted on : Sunday, February 27, 2011 | By : ஜெயராஜன் | In :

தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல:நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள்.
தோல்வி என்றால்,நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல: சில பாடங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.
தோல்வி என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாகப் பொருள் இல்லை:முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் உள்ளது என்று பொருள்.
தோல்வி என்றால் உங்களிடம் சரக்கு இல்லை என்று பொருள் அல்ல:வேறு உத்திகளைக் கையாள வேண்டிய அவசியத்தை உணர்ந்து விட்டீர்கள் என்று பொருள்.
தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் இல்லை:மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பொருள்.
தோல்வி என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல:இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும் என்று பொருள்.
தோல்வி என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல: அடையக் கொஞ்சம் தாமதமாகலாம் என்று பொருள்.
தோல்வி என்றால் கடவுள் உங்களைக் கை விட்டு விட்டார் என்று பொருள் இல்லை:உங்களுக்கு வேறு நல்ல எதிர் காலத்தை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார் என்று பொருள்.

எப்போது வரும்?

0

Posted on : Sunday, February 27, 2011 | By : ஜெயராஜன் | In :

ராஜாஜியிடம் ஒரு செய்தித்தாள் நிருபர் கேட்டார்,''குத்தலான கேள்விகள் கேட்டால் கூட நீங்கள் கோபிப்பது இல்லையே?அதுஎப்படி?''
ராஜாஜி சொன்னார்,''நான் தவறு செய்தால் எனக்கு கோபப்பட உரிமை இல்லை.நான் சரியானபடி தான் நடந்து கொண்டிருக்கிறேன் என்றால் கோபப்படக் காரணம் இல்லை.தவறு செய்து விட்டு அதை நியாயப் படுத்த முயன்று தர்க்கத்தில் தோற்கும்போது தான் கோபம் வரும்.''

கைத்தடி

0

Posted on : Saturday, February 26, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு கண் பார்வையற்றவரும் அவர் நண்பனும் ஒரு பாலைவனத்தில்  இரவில்  தங்கி காலை எழுந்தபோது கண் பார்வையற்றவர் தன கைத்தடி என்று நினைத்து குளிரில் விறைத்துப்போய் அங்கு இருந்த பாம்பை புதிய அழகான கைத்தடி கிடைத்தது என்று மகிழ்ந்தார்.நண்பன் எழுந்து பாம்பைக் கண்டு அலறி அதைத் தூக்கி எறியச்சொல்ல,கண் பார்வையற்றவர் நண்பன் பொறாமையினால் அப்படி சொல்வதாகக் கூறி அதைத் தூக்கி எறிய மறுத்து விட்டார்.அப்புறம் என்ன ஆயிற்று?பாம்பு கடிபட்டு இறந்து விட்டார்.
நாமும் இதுபோல அறியாமை என்ற குருட்டுத்தனத்தால்,பலவித துன்பங்களை,வழவழப்பானஅழகிய தடி என்று பற்றிக்கொண்டு,அது வேண்டாம்,விஷம் என்று ஞானிகள் வற்புறுத்தினாலும் ஏற்க மறுத்து பிடிவாதமாக இருந்து நம் அழிவைத் தேடிக் கொள்கிறோம்.

தன்னுறுதி

0

Posted on : Friday, February 25, 2011 | By : ஜெயராஜன் | In :

நம்மில் பலருக்கு பயந்த சுபாவம் இருக்கிறது.நமக்கு என்று சில உரிமைகள்,உணர்வுகள்,விருப்பங்கள்,தேவைகள் இருக்கும்.ஆனால் அவற்றை வெளிப்படுத்தத் தயங்குகிறோம்.அப்படியே சொன்னாலும் குற்ற உணர்வுடன் சொல்கிறோம்.இவ்வாறு நாம் நமது உணர்வுகளை மறைத்து அனுசரித்தே போகிறோம்.நமக்குப்  பிடிக்காதவற்றை நாம் பிறருக்காக,அவர்களுடைய வற்புறுத்தலுக்காக செய்து கொண்டிருக்கிறோம். இதில் கௌரவம் இல்லை.இது ஒரு துயரமான நிலை.பிறர் முகத்தாட்சணியம் பார்த்தே நாம் துயரப்படுகிறோம்.நம் கருத்தை வெளியிட்டால் மற்றவர்கள் வருத்தப்படுவார்களோ என்று நாம் அஞ்சுகிறோம்.பல சமயங்களில் இது உண்மைதான்.அதற்காக நாம்  நமது நியாய உணர்வுகளை விட்டுவிட முடியுமா?அவற்றை நாம் மூடி மறைக்க வேண்டுமா?நம்மை நாமே காட்டிக் கொள்ள அஞ்சத் தேவையில்லை. ஆனால் ஒன்று,நம்மை நாம் வெளிப்படுத்தும்போது மூர்க்கத்தனம் தேவையில்லை.அன்பாகவும் அமைதியாகவும் நாம் அதைச் செய்ய முடியும். அதே நேரத்தில் நாம் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.தன்னுறுதி இல்லாதவர்களால் தெளிவாகச் சிந்தித்து செயல் பட முடியாது.

பூதம்

0

Posted on : Friday, February 25, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் யசோதை தயிர் கடைந்து கொண்டிருந்தாள்.அதைக் கண்ணன் பார்த்துக் கொண்டு இருந்தான்.அப்போது வெண்ணை திரள்கிறது.அதைச் சாப்பிட கண்ணனுக்கு ஆசை.அம்மாவிடம் தெரியாதது போலக் கேட்கிறான் கண்ணன்,''அது என்ன அம்மா?''யசோதையும் விட்டுக் கொடுக்காமல்,''அது ஒரு பூதம்,''என்கிறாள்.'பூதம் என்ன செய்யும் அம்மா?''-இது கண்ணனின் அடுத்த கேள்வி.''அது நம்மைக் கடித்துத் தின்று  விடும்,''என்று பயமுறுத்துகிறாள் தாய். கண்ணன்,''அம்மா,அது உன்னைக் கடித்துத் தின்று விட்டால்,நான் அம்மாவுக்கு  எங்கே போவேன்?அப்பூதத்தை  என்னிடம் கொடு.நான் அதைக் கடித்துத் தின்று விடுகிறேன்,''என்று சொல்லியவாறே வெண்ணையை எடுத்து விழுங்கினான் கண்ணன்.

பெருந்தன்மை

0

Posted on : Thursday, February 24, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் தெரிந்தே செய்யும் தவறை சுட்டிக்காட்ட வேண்டாம்.அப்படி செய்வதால் அவரது நெஞ்சம் மேலும்மேலும் குறுகுறுக்கும்.உடனே அவர் தன்னிலை விளக்கம் தருவார்.அல்லது சீற்றம் அடைவார்.இருவருக்கும் இடைவெளிதான் அதிகரிக்கும்.பெரும்பாலும் மக்கள் தாம் செய்த தவறுகளை  அறிந்தேயிருப்பர்.ஆனால் பிறர் அதை சுட்டிக்காட்டுவதை விரும்புவதில்லை. ஒருவரின் தவறுகளை சுட்டிக்காட்டும் முன் உங்கள் கருத்துரைகள் எந்த வழியிலாவது நிலைமையை சீராக்குமா,அன்பை வளர்க்குமா என்பதை எண்ணிப் பாருங்கள்.பெருந்தன்மையாக இருப்பவர்கள்,பிறர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களைக் குற்றவாளியாக்க மாட்டார். அதே சமயம் பரிவோடும் ஆதரவோடும் வார்த்தைகளால் அல்ல,நடத்தைகளால் அவர்களைத் திருத்துவார்கள்.
**********
முக்கியமானவைகளும் முக்கியமற்றவையும் காலத்தாலும் இடத்தாலும்  மாறுபடுகின்றன.பசியாக இருக்கும்போது உணவு முக்கியம்.வயிறு நிறைந்திருக்கும்போது உணவு முக்கியமில்லை.
**********
திரும்பத்திரும்ப செயல்படும் ஒரு செயல் தன புனிதத்தை இழந்து  விடுகிறது.காசியில் வசிப்பவர்கள்,அது ஒரு புனிதமான இடம் என்று கருதுவதில்லை.
**********
சமமானவர்களிடம் தான் சண்டை நடக்க முடியும்.நீங்கள் ஒருவருடன் சண்டை போடும்போது அவரை உங்களுக்கு சமமாக ஆக்கி விடுகிறீர்கள். மற்றவர்களை உங்களுக்கு மேலோ,கீழோ வைத்துக் கொண்டால் சண்டை  இருக்காது.மேலோர் என்றால் மதிப்பு காட்டுவீர்கள்.கீழோர் என்றால் அன்பும் பரிவும் காட்டுவீர்கள்.புலன்களுக்கு இடையே மனம் சிக்கிக் கொள்ளும்போது சண்டை இருக்கும்.புலன்களை விட மனம் பெரிது என்று உணர்ந்து கொண்டால் சச்சரவு இருக்காது.
**********
                    ----ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் எழுதிய 'ஞானம் தேடுபவருக்கு'என்ற நூலிலிருந்து.

பிணைப்பு

0

Posted on : Wednesday, February 23, 2011 | By : ஜெயராஜன் | In :

ஞானி ஒருவர் தெருவில் வந்து கொண்டிருந்தார்.எதிரே ஒரு விவசாயி தனபசுவைக் கையிற்றால் கட்டி அழைத்து வந்தான்.சிரித்துக்கொண்டே ஞானி விவசாயியிடம் கேட்டார்,''நீ பசுவுடன் வருகிறாயா?பசு உன்னுடன் வருகிறதா?''குழம்பிப்போன விவசாயி,''இது என்ன பைத்தியக்காரத்தனமான  கேள்வி?பசுதான் என்னோடு வருகிறது,''என்றான்.உடனே ஞானி,''அப்படியானால் கயிறு எதற்கு?விட்டுவிடு!''என்றார்.''கயிற்றை விட்டால் பசு ஓடி விடுமே?''என்றான் விவசாயி.''அப்படியானால் அதுதான்  உன்னைப் பிணைத்துள்ளது.நீ அதைப் பிணைக்கவில்லை,''என்றார்ஞானி. விவசாயிக்கு அவர் சொன்னது புரியவில்லை.ஞானி விளக்கினார்,''பசு உன்னுடன் வருவதாயிருந்தால் நீ கட்டை அவிழ்த்து விட்டாலும் அது உன்னுடன் வர வேண்டும்.ஆனால் நிலைமை அப்படி இல்லை.கட்டை அவிழ்த்தால் அது ஓடிவிடும்.அது ஓடினால் அதைத் துரத்திக் கொண்டு நீ ஓடுவாய்.நீ ஓடினால் அது உன்னை விரட்டிக் கொண்டு வராது.உண்மையில் அதனுடன் நீதான் கட்டப்பட்டுள்ளாய்.''
எவற்றையெல்லாம் 'இது என்னுடையது'என்று பிணைக்கிறோமோ,உண்மையில் அவற்றுடன் நாம் தான் பிணைக்கப்பட்டுள்ளோம்.எவை வேண்டுமோ,அவற்றை நாம் தான் பாதுகாக்கிறோம்.

வேண்டியவர்

1

Posted on : Tuesday, February 22, 2011 | By : ஜெயராஜன் | In :

எகிப்தின் பாலைவனப்பகுதியில் ஒரு ஞானி வசித்து வந்தார்.அவர் புலன்களை வென்றவர்.நாடோடியாகத் திரிந்து கொண்டிருப்பார்.அவரைக்காண மக்கள் நீண்ட தூரத்திலிருந்து எல்லாம் வந்தனர்.தீராத வியாதிகள் அவரால் குணம்,ஆனதாகச் சொல்லப்பட்டது.புற்று நோய் வந்து பல சிகிச்சைகளாலும் குணமடையாத ஒரு பெண் அவரைப்பற்றி கேள்விப்பட்டு அவரைத் தேடி அலைந்தாள்.ஒருநாள் ஒரு கடற்கரை ஓரமாக சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்த அந்த ஞானியை அவர் இன்னார் என்று அறியாது,அவரிடமே அவர் இருப்பிடம் பற்றி விசாரித்தாள்.அவர் சொன்னார்,''போயும் போயும் அவனை எதற்காகத் தேடுகிறாய்?அவனைப் பற்றிய கதைகளை நம்பாதே!அவன் எந்த இறைவனிடம் மன்றாடுவானோ,அந்த இறைவன் உனக்கும் வேண்டியவர்தான்.அவர் மீது நம்பிக்கை வைத்துப் புறப்படு.கடவுள் விரைவில் உனக்கு குணம் அளிப்பார்.''முழு நம்பிக்கையுடன் சென்ற அப்பெண் குணமடைந்தாள்.

எங்கே கடவுள்?

0

Posted on : Monday, February 21, 2011 | By : ஜெயராஜன் | In :

சூபி ஞானி பாசித் பிசுடமியிடம் பேசிய பலரும் இறைவனை இடைவிடாது தொழுவதன் சிறப்புப் பற்றி கேட்டார்கள்.அப்போது அவர் கூறினார்,''நான்  முதல் முறை மெக்காவுக்கு சென்றேன்.அங்குள்ள புனித மசூதி கட்டிடத்தைப் பார்த்தேன்.இரண்டாவது முறை போனபோது என் கண்களுக்கு கட்டிடம் தென்படவில்லை;அந்த இடத்தில் இறைவனை நான் கண்டேன்.மூன்றாவது முறை நான் சென்றபோது நான் புனித கட்டிடத்தையும் காணவில்லை;கடவுளையும் காணவில்லை.''
இறைவன் வேறு,நாம் வேறு என்ற உணர்வு உள்ளவரைதான் நாம் பல்வேறு இடங்களில் அவரைத் தேடுகிறோம். இது புனிதமான இடம்,இது அசுத்தமான இடம் என்றெல்லாம் மனம் அப்போது கற்பிதம் செய்யும்.எல்லாம்  இறைவனே என்று உள்மனம் உணர்ந்தபின் தனியான இடமோ,தனியான தோற்றமோ நம்மால் உணரப்படுவதில்லை.
வரம்புகள் அற்ற ஒன்றை வரம்புக்குள் கட்டுப்படுத்த நினைப்பதே அறியாமைதான்.இந்த முறையில் வணங்கு,இத்தனை முறை ஜெபி போன்ற வரைமுறைகளை செயல்படுத்துவதில்தான் ஈடுபாடு காட்டுமே தவிர இயற்கையில் ஒன்றாது.''எது இயல்போ,அதுவாகவே இரு''என்கின்றனர் சூபி ஞானிகள்.
===''சூட்சுமத்தை உணர்த்தும் சூபி கதைகள்'' என்ற நூலிலிருந்து.

கால் மேல் கால்

0

Posted on : Sunday, February 20, 2011 | By : ஜெயராஜன் | In :

''அதோ,கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிரரே அவர் தான் உன் ஆசிரியரா?''
'ஆமாம்,ஒழுங்காய்ப் படிக்கலைன்னா அறை மேல் அறை கொடுப்பார்.'
**********
''பாபு,உன்னை பல  தடவை கூப்பிட்டேன்.உனக்குக் காது கேட்கவில்லையா?'
'நாலாவது தடவை கூப்பிடும்போது தான் கேட்டது.'
**********
ஆசிரியை: 'நான் அழகாய் இருக்கிறேன்.'இது என்ன காலம்?
மாணவி: அது இறந்த காலம்,டீச்சர்!
**********
ஆசிரியர்: புலி ஆட்டைப் பார்த்தது.இது என்ன காலம்?
மாணவன்: ஆட்டிற்குப் போதாத காலம்,சார்.
**********
''எந்த வேலையாக இருந்தாலும்,உற்சாகமாகப் பாடிக்கொண்டே செய்பவர்களைப் பார்த்தால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.''
'அப்ப,உங்களுக்கு கொசுவை ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லுங்கள்!'
**********

எங்கும் பெண்கள்

0

Posted on : Saturday, February 19, 2011 | By : ஜெயராஜன் | In :

இப்போது
பூக்களுக்கு
இறக்கை முளைத்து விட்டது.
அதற்காக வண்டுகள் ஏன் வருத்தப்படுகின்றன.?
**********
பெற்றோரே!
பிள்ளைகளுக்கு

ஏணியாய் அல்ல....
இறக்கைகளாக இருங்கள்.
**********
வான் கோழிகளே  இங்கு
மயிலுக்கு சமமாய்
 மதிக்கப் படவில்லையே!
பின் ஏன்
பிராய்லர் கோழிகள்
பிரசிடென்ட் அவார்டு கேட்டுப் பிராண்டுகின்றன?
**********
மனைவியிடம்
மன்றாடுகிறான்
இப்படி....
அடுக்குமாடி தந்தும்,
கொடுக்கு மாதிரி கொட்டுகிறாயே!
அடுக்குமாடி இது உனக்கு?
**********
கட்டுக் கதை விட்டான்
காதலன்!
காதலிக்குத் தாஜ்மகால்
கட்டுவதாக.
''தாஜ்மகால்''பிறகு கட்டலாம்.
தாலியை உடனே கட்டு''
**********
நாலு பேர் சேர்ந்து
நடுத்தெருவில் சுமக்கும் நாள்
எல்லோருக்கும் வரும்.--அது
ஒரு முறைதான்!ஒரு முறைதான்!
குடித்தழியும்நான் கொண்ட
குடும்பமே நடுத்தெருவில்
எனைச்சுமந்து அழுவதுவோ
தினமும் தான்!தினமும்தான்!
**********
''நிரந்தரம் நோக்கி''என்ற கவிஞர் சட்டநாதன் மோகன்ராஜ் நூலிலிருந்து.

அம்மா இருக்காங்களா?

0

Posted on : Friday, February 18, 2011 | By : ஜெயராஜன் | In :

பொருட்களைஎடுத்து சென்று வீட்டுக்கு வீடு விற்பனை செய்வதில் சிறந்து விளங்கிய ஒருவரைப் பார்த்து அவர் நண்பர் கேட்டார்,''உங்களின் இந்த வெற்றிக்கு கரணம் என்ன?''அவர் சொன்னார்,''எந்தப் பெண் வந்து கதவைத் திறந்தாலும் நான் கேட்கும் முதல் கேள்வி,'உங்க அம்மா உள்ளே இருக்காங்களா?'என்பதுதான்,''
**********
சிறுவன் ஒருவன் சாலையோரம் சிறுநீர்கழித்துக் கொண்டிருந்தான்.அப்போது அங்கே வந்த ஒரு பெரியவர்,''தம்பி,இங்கு சிறுநீர் கழிக்கக்கூடாது.போலீசார் வந்தால் பிடித்துக் கொள்வார்கள்,''என்றார்.சிறுவன் சொன்னான்,''பிடித்தால் பிடித்துக் கொள்ளட்டும்,கீழே வீணாய்த்தானே போகிறது.''
**********
பேருந்தில் நல்ல கூட்டம்.பெண்கள் நின்று கொண்டிருந்தனர்.இளைஞர்கள்  அமர்ந்திருந்தனர்.அவர்கள் யாரும் பெண்களுக்கு உட்கார இடம் தரவில்லை.நின்று கொண்டிருந்த ஒரு பெண் கேலியாக,''பாவம்,எல்லோரும் வயதான கிழவர்கள்.அதனால்தான் எழுந்து நின்று நமக்கு இடம் தர முடியவில்லை.''என்று பக்கத்தில் இருந்தவளிடம் சொன்னாள்.உட்கார்ந்திருந்த இளைஞன் ஒருவன் சொன்னான்,''பேத்தி!இந்தத் தாத்தாவின் மடியில் வேண்டுமானால் உட்கார்ந்து கொள் அம்மா.''
***********
கடன் கேட்க வந்தவனிடம் பணக்காரன் சொன்னான்,''என் காலில் நீ விழுந்தால் கடன் தருகிறேன்,''அவனும் காலில் விழுந்து கடன் வாங்கி சென்றான்.அவன் நண்பன் ஒருவன் இதைப் பார்த்துக் கேட்டான்,''இப்படி மரியாதை இழந்து கடன் வாங்க வேண்டுமா?''கடன் வாங்கினவன் சொன்னான்,''இதென்ன பெரிய அவமானம்?இந்த கடனைத் திரும்ப வாங்குவதற்குள் அவன் எத்தனை தரம் என் காலில் விழப் போகிறானோ!''
**********

அசையும் கொடி

0

Posted on : Friday, February 18, 2011 | By : ஜெயராஜன் | In :

இரண்டு துறவிகள் ஒரு கொடியைப்பற்றி விவாதம் புரிந்தனர்.ஒருவர் கூறினார்,''கொடி அசைந்து கொண்டிருக்கிறது..''அடுத்த துறவி சொன்னார்,''காற்று அசைந்து கொண்டிருக்கிறது.''அப்போது அந்தப்பக்கம் ஒரு ஞான குரு வந்து கொண்டிருந்தார்.அவர் கூறினார்,''கொடியுமல்ல,காற்றுமல்ல,மனம் அசைந்து கொண்டிருக்கிறது.''

அப்படியா சொன்னீங்க?

2

Posted on : Friday, February 11, 2011 | By : ஜெயராஜன் | In :

நாம் ஒன்றை நினைத்துக் கொண்டு சொல்ல,அதைக் கேட்கிறவர்கள் வேறு விதமாகப் புரிந்து கொண்டு விடுவது சாதாரணமாக நடக்கிறது.ஆனால் இந்த சாதாரண செயலின் விளைவு சிலசமயம் மிகவும் விபரீதமாக முடிந்து விடுவதுண்டு.சொல்லுபவர்கள் எவ்வளவு சரியாகச் சொன்னாலும் புரிந்து கொள்பவர்கள் தவறாகப் புரிந்து கொள்வது ஒரு வகைக் கொடுமை.சொல்பவன் தன மன நிலைக்கேற்ப சொல்வான்.கேட்பவன் தன மன நிலைக்கேற்ப புரிந்து கொள்வான்.இருவரின் மன நிலைகளுக்கும் இருக்கும் இடைவெளியில் ஏற்படும் விபரீதம் தான் தவறான புரிதல்.
குடும்பத்தில் கணவன் மனைவி இடையே  ஏற்படும் பெரும்பாலான  சர்ச்சைகள்,சொல்வதில் தெளிவின்மை,புரிந்து கொள்வதில் தவறு ஆகியவற்றால் உண்டாகின்றன.கணவனோ,மனைவியோ,சரியான காரண காரியங்களோடு எடுக்கிற ஒரு முடிவை அடுத்தவரிடம் சொல்லும்போது , அந்த முடிவுக்கு வந்த முறையை சொல்லாமல் முடிவை மட்டும் சொல்வதால் குழப்பம் விளைவதுண்டு.எப்போதும் சொல்வதைத் தெளிவாக சொல்லி விட்டால்,''அப்படியா சொன்னீங்க !''என்ற ஆராய்ச்சிக்கே இடமிருக்காது.

மேய்ப்பது யாரை?

0

Posted on : Thursday, February 10, 2011 | By : ஜெயராஜன் | In :

ஆசிரியர்:உங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும் மாடு மேய்க்கப் போகலாம்.
மாணவன்:அப்படிப் போவதானால் சொல்லுங்கள் சார்,எங்கள் வீட்டில் மேய்ப்பதற்கு இரண்டு மாடுகள் இருக்கின்றன.
**********
கொட்டுகின்ற அருவியை ஒருவர் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.அருகில் இருந்த ஒருவர் கேட்டார்,''நீங்கள் ஒரு ஓவியரா?'' அவர் சொன்னார்,''இல்லீங்க,நான் ஒரு பால் வியாபாரி.''
**********
''உங்கள் பூனை என் கார் ஏறி செத்து விட்டது.நான் அதற்காக வருந்துகிறேன்.நான் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் சொல்லுங்கள்.நான் கண்டிப்பாக செய்கிறேன்.''
'உங்களால் எலி பிடிக்க முடியுமா?'
**********
நீதிபதி:ஒரு நல்ல மனிதனை இப்படி ஏமாற்றித் திருடி இருக்கிறாயே,உனக்கு வெட்கமாக இல்லை?
குற்றவாளி:அய்யா,ஏமாற்றுக்காரன்,அயோக்கியன்,எவனையாவது என்னால் ஏமாற்ற முடியுமா?
**********
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.நின்று கொண்டிருந்த ஒரு இளம் பெண் தன தோழியிடம் சப்தமாக சொன்னாள்,''அந்த அழகான ஆள் மட்டும் இடம் கொடுத்தால் உட்காரலாம்.''உடனே பேருந்தில் இருந்த ஆண்கள் அனைவரும் தங்கள் இடத்தை விட்டு எழுந்து நின்றனர்.
**********
அரசியல் ஊர்வலம் ஒன்று பெரிதாக சென்று கொண்டிருந்தது.கூட்டத்தில் ஒரு தொண்டனின் பணப்பை திருடு போய் விட்டது.உடனே அவன் தன தலைவரிடம் சென்று புகார் சொன்னான்.தலைவர் கேட்டார்,''உனக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?''அவனும் தன பக்கத்தில் ஊர்வலத்தில் வந்த ஒருவனைக் காட்டினான்.''நீ இங்கேயே இரு''என்று தொண்டனை அமைதிப் படுத்திவிட்டு கூட்டத்திற்குள் சென்ற தலைவர் சிறிது நேரத்தில் பணப்பையுடன் வந்தார்.தொண்டன் மிகுந்த மகிழ்ச்சியில்,''இது தான் எனது பணப்பை.நீங்கள் கேட்ட உடன் கொடுத்து விட்டானா?''என்று கேட்டான்.தலைவர் சொன்னார்,''சப்தம் போட்டுப் பேசாதே!நான் இந்தப் பணப்பையை  எடுத்தது அவனுக்குத் தெரியாது.''
**********

சிங்கங்கள்

0

Posted on : Wednesday, February 09, 2011 | By : ஜெயராஜன் | In :

நாங்கள் சிங்கங்கள்  தாம்
ஆனால்,
கொடியில் பொறிக்கப்பட்ட
சிங்கங்கள்.
கணத்துக்குக் கணம்
பாய்ந்து கொண்டே இருப்போம்.
எல்லாம்
காற்றின் தயவில் தான்.
       பெர்சியக் கவிஞர் ஜலாலுதீன்  லூமி.

எங்கே தேடுவது?

0

Posted on : Wednesday, February 09, 2011 | By : ஜெயராஜன் | In :

மரண பயமில்லை.
அதனால் எனக்கு மதத்தின் மீது பயம் இல்லை.
தேவைகள் இல்லை.
அதனால் இறைவனிடம் வேண்டுதல் இல்லை.
முக்தி தேவையில்லை.
அதனால் இறைவனை நான் தேடவில்லை.
நான் தேடுமிடமேல்லாம் காற்றாக இருக்கிறது.
பார்க்குமிடமெல்லாம் ஒளியாக இருக்கிறது.
பார்ப்பது இறைவனை.
சுவாசிப்பது இறைவனை.
சஞ்சரிப்பது அவனுடன்.
பின்னர்
அவனை நான் எங்கே தேடுவது?

கண்டுபிடி

0

Posted on : Monday, February 07, 2011 | By : ஜெயராஜன் | In :

அவர்கள் சமீபத்தில் திருமணமானவர்கள்.அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது அதில் புதிய திரைப்படம் ஒன்றிற்கு ஊரின் சிறந்த திரை அரங்கில் உயர்ந்த வகுப்புக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன.மேலும் ,''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள்,பார்க்கலாம்,''என்றொரு குறிப்பும் இருந்தது.இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.இருந்தாலும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர்.வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.வீட்டில் ஒரு கடிதமும் கிடந்தது.அதில்,''இப்போது உங்களுக்கு டிக்கெட் யார் அனுப்பியிருப்பார்கள் என்று கண்டு பிடித்திருப்பீர்களே!''என்று எழுதியிருந்தது.
**********
கணவன் சொன்னார்,''நம்ம பையன் என் சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்திருக்கிறான் போலத் தெரிகிறதே!''
மனைவி கேட்டாள்,'' அதெப்படி சொல்கிறீர்கள்?நான் எடுத்திருக்கக் கூடாதா?
கணவன் சொன்னான்,''பையில் கொஞ்சம் மீதிப் பணம் இருக்கிறது.அதனால் அவன் தான் எடுத்திருப்பான்.''
**********
கணவன்:(கோபத்துடன்) உன்னைத் திருமணம் செய்தபோது நான் முட்டாளாக இருந்திருக்கிறேன்.
மனைவி:(அமைதியாக) நானும் கூடக் காதல் வேகத்தில் அப்போது இதைக் கவனிக்கவில்லை.
**********
மனைவி:நீங்கள் எனக்கு அழகிய பட்டுப் புடவை எடுத்துக் கொடுப்பதாகக் கனவு கண்டேன்.
கணவன்:அப்படியா?அடுத்த முறை கனவு காணும்போது அதை உடுத்தி மகிழ்ச்சியாக இரு.
**********

அஞ்ஞானம்

0

Posted on : Friday, February 04, 2011 | By : ஜெயராஜன் | In :

யாராவது யாரையாவது குறை கூறினாலே போதும்,உங்கள் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது.யாராவது யாரையாவது புகழ்ந்து பேசினால்,உங்களுக்கு துக்கம் மேலிடுகிறது.இது எதனால்?மற்றவர்களின் குறைபாட்டைக் கேட்கும்போதெல்லாம் உன் உள்ளத்திலே ஒரு அகங்காரம் தோன்றுகிறது.''நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல:நாம் அவனை விட மேலானவர்தான்'' என்ற எண்ணம் ஏற்படுகிறது.யாராவது பாராட்டப்படும்போது உங்களுக்குத் தோன்றுகிறது,''நம்மை விட அவனை மேலானவனாக இருக்கிறானே!''எனவே உங்களுக்கு வேதனை ஏற்படுகிறது.நம்மைவிட சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாதல்லவா!
ஆகவே நீங்கள் பிறர் மீதுள்ள நிந்தனையை  எவ்வித தடையுமின்றி உடனே ஏற்றுக் கொள்கிறீர்கள்.ஆனால் பாராட்டப்படும்போது விவாதம் புரிகிறீர்கள்.'இவன் ஒரு பாவி,' என்று யாரையாவது சொன்னால் நீங்கள் ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று காரணம் எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதில்லை.உடனே அந்த செய்தியை இயன்றவரை அடுத்த காதுகளுக்கு தெரியப் படுத்தி விடுகிறீர்கள்.அதில் கொஞ்சம் சொந்த சரக்கை சேர்த்துக் கொள்ளவும் தயங்குவதில்லை.நீங்கள் அறிந்ததைவிட அதிகமாகவே வெளிப்படுத்தி விடுகிறீர்கள்.யாரும் அதனை ஆட்சேபிப்பதில்லை.
இவர் ஒரு நல்லவர் என்று யாராவது குறிப்பிடப்பட்டால்,நீங்கள் பலவிதக் கேள்விகளால் துளைத்து விடுகிறீர்கள்.செய்தி உண்மையானது என்றாலும்,ஏதோ எங்கோ தவறு நிகழ்ந்துள்ளது என்று சந்தேகம் கொள்கிறீர்கள்.உங்கள் கண்களுக்கு உங்களைத்தவிர  எல்லோரும் பாவிகள்தான்.யாராவது மகானாகத் தென்பட்டாலும் உங்கள் கண்களுக்கு  அவரும் பின்னணியிலே ஒரு பாவியாகத்தான் தென்படுவார்.அவர் முகமூடி அணிந்திருப்பதாகவும்,என்றாவது ஒரு நாள் அந்த முகமூடி கிழியப் போகிறது என்றும் சொல்வீர்கள்.இத்தகைய உபாயத்தால் தான் உங்களுடைய அகங்காரம் நிலை பெற்றிருக்கும்.எல்லோரையும் சிறுமைப் படுத்துவீர்கள்:எல்லோரையும் நிந்திப்பீர்கள்.உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லோருமே நல்லவர்கள் எனும்போது உங்களுக்கு துன்பம் ஏற்படுகிறது.

உயர்ந்தவை

0

Posted on : Wednesday, February 02, 2011 | By : ஜெயராஜன் | In :

பொறுமையிலும் உயர்ந்த தவம் இல்லை.
திருப்தியிலும் உயர்ந்த இன்பம் இல்லை.
அவாவிலும் பெரிய தீமையில்லை.
கருணையிலும் பெரிய அறமில்லை.
மன்னித்தலிலும் ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை.
**********
சிறிது காலம் வாழக் கூடிய
ஒரு கொடுங்கோல் ஆட்சி -அழகு.
**********
நல்லவற்றைக் கூட்டிக்கொள்.
தீயவற்றைக் கழித்துக்கொள்.
அன்பைப் பெருக்கிக்கொள்.
வாழ்வை வகுத்துக்கொள்.
**********
நன்மையை செய்யுங்கள்.
யாருக்கென்று மட்டும் கேட்காதீர்கள்.
**********
அதிர்ஷ்டம் எதிர்ப்பட்டால் அதன் முன் தலையைப் பிடித்து வசப்படுத்து.
ஏனெனில் அதன் பின்புறம் வழுக்கை.
**********
அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்ற எண்ணம் தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்.
**********
செய்த தவறை மறைப்பது,இரண்டு முறை தவறு செய்ததற்கு ஒப்பாகும்.
**********
சமாதானம் என்பது இரண்டு சண்டைகளுக்கு இடையில் உள்ள இடைவெளி.
**********
இறைவனைத் தேடிச்சென்று  வணங்கக்கூட நேரம் இல்லாமலேயே உழைத்துக் கொண்டிருக்கிறீர்களா?கவலைப்படாதீர்கள்.உழைப்புத்தான் சிறந்த வழிபாடு.
**********
பணம் உள்ளவனுக்கு கருமித்தனம் அவசியமில்லை.
கருமித்தனம் உள்ளவனுக்கு பணம் அவசியமில்லை.
**********
எவ்வளவு சொன்னாலும் அதனால் எந்த ஒரு பயனும் விளையாது என்று தெரிய வருமேயானால் அந்த ஒரு சொல்லைக்கூட விரயம் செய்யாதே.
**********

கோள்

0

Posted on : Wednesday, February 02, 2011 | By : ஜெயராஜன் | In :

கோள் சொல்லும் பேர்வழிகளின் அயோக்கியத்தனத்தை விட அதை நம்பும் முட்டாள்தனமே ஆபத்தானது.கோள் சொல்பவர்கள் கேட்பவர்களின் மனப் பலவீனத்தை முதலாகக் கொண்டவர்கள்.இவர்களிடம் எச்சரிக்கையாக இல்லாதவர்கள் பெரும்பாலும் கோள் சொல்பவர்களின் புகழ் மொழியில் மயங்குபவர்களாகவே இருப்பார்கள்.கேட்பவர்களின் சில தவறுகளை நியாயப்படுத்துவதே கோள் சொல்பவர்களின் முதல் அம்பு.அவர்கள் நியாயப்படுத்த சொல்லும் வாதங்கள் கேட்பவர்களுக்கே தெரியாதவையாக இருக்கும்.கோள் சொல்பவர்கள் தமக்கு எந்தப் பயன் இல்லாவிட்டாலும் அடுத்தவரை துன்புறச் செய்கிற சேடிஸ்ட்கள்..இவர்களிடம் சிக்காமலிருப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அன்றாடக் கடமை.

வாடா

0

Posted on : Tuesday, February 01, 2011 | By : ஜெயராஜன் | In :

சாகும் தருவாயிலிருந்த புலவரைக் காண அரசர் மருதப்பன் வந்தார்.புலவர்,''வாடா மருதப்பா...''என்றார்.உடனே அரசருடன் வந்தவர்கள்  கோபம் கொண்டனர்.''....நான் மட்டும் வாடி விட்டேன் பார்த்தீர்களா,அரசே!''என்று சொற்றொடரை முடித்தார் புலவர்.

நீண்ட நாள் வாழ

0

Posted on : Tuesday, February 01, 2011 | By : ஜெயராஜன் | In :

நீண்ட நாள் வாழ சர்.எம்.விஸ் வேஸ்வரையா சொல்லும் ரகசியங்கள்:
*எப்போதும்  சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாய் இருங்கள்.
*மனசாட்சிக்கு மாறான செயல்களை செய்யாதீர்கள்.
*அளவாக உண்ணுங்கள்.
*நன்றாகத் தூங்குங்கள்.
*சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்துங்கள்.
*சம்பாதிக்கும் காலத்திலேயே சேர்த்து வையுங்கள்.
*வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ளுங்கள்.
*மனைவியை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
*குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுங்கள்.
*உழைப்பதற்குத் தயங்காதீர்கள்.

டென்ஷன்

0

Posted on : Tuesday, February 01, 2011 | By : ஜெயராஜன் | In :

''கயிற்றின் நுனிக்கே வந்து விட்டீர்கள்.நுனியின் பிடியை விட்டு விழுந்தால் எலும்பு கூடக் கிடைப்பது கடினம்.அந்த நொடியில் நீங்கள் என்ன செய்வீர்கள்?'' என்று ஒருவர் கேட்க,''அடுத்த கயிற்றை முடிச்சுப் போடப் பார்ப்பேன்,''என்று நிதானமாகக் கூறினாராம்,ஆப்ரஹாம் லிங்கன்.எந்த சூழ் நிலையிலும் டென்ஷன் வசப்படாத அந்த நிதானம் தான் அவரை அமெரிக்க நாட்டின் தலைவராக்கியது.டென்ஷனைக் குறைக்கக் கடைப் பிடிக்க வேண்டியவை:
*கோப உணர்வுகளைத் திசை திருப்புங்கள்.
*எதையும் என்னால் சமாளிக்க முடியும் என்று துணிவு கொள்ளுங்கள்.
*அடுத்தடுத்து பிரச்சினைகள் உள்ளபோது அப்போதைக்கு எது  முக்கியமோ  அதைத் தேர்ந்தெடுங்கள்.
*தனிமையை உடைத்தெறிய முயற்சி செய்யுங்கள்.
*உங்களுக்குப் பிடித்த விளையாட்டினை அரை மணி நேரம் விளையாடுங்கள்.
*இசையில் விருப்பம் இருந்தால் இசையைக் கேளுங்கள்.சில நிமிடங்களில் மனது பஞ்சுபோல இலேசாகிவிடும்.

அறிவீரா?

0

Posted on : Tuesday, February 01, 2011 | By : ஜெயராஜன் | In :

*நத்தை ஒரு மைல் தூரம் செல்ல மூன்று வாரம் ஆகும்.
*மீன்கள்,முதலைகள் சாகும் வரை வளர்ச்சி அடைகின்றன.
*யானையின் துதிக்கையில் எலும்பே கிடையாது.வெறும் தசையே
*வண்ணத்துப் பூச்சிகள் கால்களினால் ருசியை அறிகின்றன.
*உணவு கிடைக்காதபோது தேள்கள் ஒன்றையொன்று கொன்று தின்று விடும்.
*காண்டா மிருகம் தன எதிரிகளை பற்களினால் தாக்கும்.கொம்பினால் அல்ல.
*நாலு கால் பிராணிகளில் ஒட்டகம் தவிர எல்லாப் பிராணிகளும் நீரினில் நீந்தும்.
*ஒரு புறாவின் எலும்புகளின் எடையை விட இறக்கைகளின் எடை அதிகம்.
*வெட்டுக்கிளிகள் நாட்கணக்கில் பறக்கும் தன்மை உடையன.