உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கண்டுபிடி

0

Posted on : Monday, February 07, 2011 | By : ஜெயராஜன் | In :

அவர்கள் சமீபத்தில் திருமணமானவர்கள்.அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது அதில் புதிய திரைப்படம் ஒன்றிற்கு ஊரின் சிறந்த திரை அரங்கில் உயர்ந்த வகுப்புக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன.மேலும் ,''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள்,பார்க்கலாம்,''என்றொரு குறிப்பும் இருந்தது.இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.இருந்தாலும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர்.வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.வீட்டில் ஒரு கடிதமும் கிடந்தது.அதில்,''இப்போது உங்களுக்கு டிக்கெட் யார் அனுப்பியிருப்பார்கள் என்று கண்டு பிடித்திருப்பீர்களே!''என்று எழுதியிருந்தது.
**********
கணவன் சொன்னார்,''நம்ம பையன் என் சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்திருக்கிறான் போலத் தெரிகிறதே!''
மனைவி கேட்டாள்,'' அதெப்படி சொல்கிறீர்கள்?நான் எடுத்திருக்கக் கூடாதா?
கணவன் சொன்னான்,''பையில் கொஞ்சம் மீதிப் பணம் இருக்கிறது.அதனால் அவன் தான் எடுத்திருப்பான்.''
**********
கணவன்:(கோபத்துடன்) உன்னைத் திருமணம் செய்தபோது நான் முட்டாளாக இருந்திருக்கிறேன்.
மனைவி:(அமைதியாக) நானும் கூடக் காதல் வேகத்தில் அப்போது இதைக் கவனிக்கவில்லை.
**********
மனைவி:நீங்கள் எனக்கு அழகிய பட்டுப் புடவை எடுத்துக் கொடுப்பதாகக் கனவு கண்டேன்.
கணவன்:அப்படியா?அடுத்த முறை கனவு காணும்போது அதை உடுத்தி மகிழ்ச்சியாக இரு.
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment