உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள்-40

1

Posted on : Thursday, January 31, 2013 | By : ஜெயராஜன் | In :

ஆரோக்கியம் வரி கட்டத் தேவையில்லாத செல்வம்.
******
நாம் பேசுவது விதைப்பதற்குச் சமம்.
கேட்பதோ அறுவடைக்கு சமம்.
******
உண்மையை மிதித்தால் அது உடனே வாளாக மாறிவிடும்.
******
சிரிப்பதற்காக செலவிடப்பட்ட நேரம்
கடவுளுடன் செலவிடப்பட்ட நேரமாகும்.
******
பத்து முறை வெற்றி பெறுவதைக் காட்டிலும்
ஒரு முறை சமாதானம் காண்பது மேல்.
******
புத்தகங்களும்,நண்பர்களும் குறைவாக இருந்தாலும்
நல்லவைகளாக இருக்கட்டும்.
******
எப்போதும் தோல்வியை தனியே பிரித்துப் பார்க்காதீர்கள்.
அது வெற்றியின் ஒரு அம்சம் என்பதை உணருங்கள்.
******
சிறிய மீன்களுக்குப் பேசக் கற்றுக் கொடுத்தால் அவை தங்களைத் திமிங்கலங்கள் என்று நினைத்துக் கொண்டு பேசத் துவங்கும்.
******
வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன்
தன பற்களாலேயே தனக்கு சவக்குழி தோண்டுபவன்.
******
கடைக்காரனிடம்  தவணைக்குப் பதில் சொல்லி அவமானப்படுவதை விட
உன் வயிற்றுக்குத் தவணை சொல்லி உணவைக் குறைத்துக் கொள்.
வாசலில் நல்ல வரவேற்பு இல்லாத விருந்துக்கு செல்வதை விட
பட்டினியாக இரு.
கசாப்புக் கடைக்காரனிடம் பல் இளிப்பதை விட
மாமிசம் உண்பதைவிட்டுவிடு.
******
பிச்சை கேட்பது குற்றமல்ல.அது அறிவுப் பிச்சையாக இருக்கட்டும்.
தேடுவது குற்றமல்ல.அது புதிய கண்டு பிடிப்பாக இருக்கட்டும்.
மடிவது குற்றமல்ல.அது போர்க்களமாக இருக்கட்டும்.
******

அதிக வேகம்

1

Posted on : Wednesday, January 30, 2013 | By : ஜெயராஜன் | In :

மூன்று பேர் நன்றாகக் குடித்துவிட்டு தம் நினைவின்றி ,ஒரு ஆட்டோவில் ஏறினர்.ஆட்டோ டிரைவர் எங்கு போக வேண்டும் என்று கேட்டபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தை சொல்லினர்.இவர்களிடம் பேசிப் பயனில்லை என்று புரிந்து கொண்ட டிரைவர்,கொஞ்ச நேரம்  ஆட்டோ என்ஜினை ஓட விட்டு,வண்டியை நகர்த்தாமல் அதே இடத்தில் இருந்தார்.பின் என்ஜினை அமர்த்திவிட்டு அவர்களைப் பார்த்து,''நீங்கள் கேட்ட இடம் வந்துவிட்டது,இறங்குங்கள்,''என்றார்.முதலில் இறங்கியவன்,அவரிடம் பணம் கொடுத்தான்.இரண்டாவது இறங்கியவன் நன்றி சொன்னான்.மூன்றாவது இறங்கியவன் டிரைவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.டிரைவரும் தமது குட்டு வெளிப்பட்டு விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது அந்தக் குடிகாரன் சொன்னான்,''ஏண்டாஇப்படிக் காட்டுத்தனமான வேகத்தில் ஆட்டோவை ஓட்டுகிறாய்?அடுத்த தடவை வரும்போது நிதானமாக ஓட்ட வேண்டும்.என்ன புரிந்ததா?''

பரிசு

1

Posted on : Wednesday, January 30, 2013 | By : ஜெயராஜன் | In :

சுல்தான் ஒருவர் ,ஒரு ஞானியிடம் கவரப்பட்டு அடிக்கடி அவரைப் போய்ப் பார்த்து தரிசித்து வந்தார்.ஞானியின் போதனைகள் அவருக்கு மிகவும் பிடித்தது.எனவே அலுவல் பல இருந்தும் ஞானியிடம் அதிக நேரம் செலவழிப்பதை விரும்பினார்.அவரிடம் திரண்ட சொத்துக்கள் இருந்தன. எனவே அவர் ஞானியிடம்,''நீங்கள் எது செய்யச் சொன்னாலும் நான் செய்யக் காத்திருக்கிறேன்.உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள், ''என்றார். ஞானி,''ஆம்,உன்னிடம் எனக்கு ஆக வேண்டியது ஒன்றிருக்கிறது. அதை மறுக்காமல் செய்வாயா?''என்று கேட்டார்.சுல்தானும் ஆவலுடன் என்னவென்று கேட்க,''நீ மீண்டும் இங்கு வராதிருக்க வேண்டும்,''என்று ஞானி சொன்னார்.சுல்தானுக்கு அதிர்ச்சி,திகைப்பு,ஏமாற்றம்,வருத்தம் எல்லாம் ஒரு சேர ஏற்பட்டது.சுல்தான் மிகுத்த பணிவுடன்,''தங்களுக்கு மனம் வருந்தும்படி நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா?அப்படி ஏதாவது செய்தாலும் அதற்கு இது பெருந்தண்டனை அல்லவா?நீங்கள் என்னை மன்னிக்கக் கூடாதா?''என்று புலம்பினான்.ஞானி சொன்னார்,''அப்பா,இதில் உன் தவறு ஏதும் இல்லை.தவறு என் சீடர்களிடம்தான்.இதுவரை அவர்கள் கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்தார்கள்,பாடினார்கள்,ஆடினார்கள்.அவர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதிருந்தது.இப்போது நீ எதுவேண்டுமானாலும் தருவதாகச் சொன்னவுடன் அவர்கள் மனம் ,உன்னை எப்படிப் பாராட்டி,கவர்ந்து உன்னிடம் பரிசுகள் வாங்கலாம் என்று அலை மோத ஆரம்பித்து விட்டது.உன்னை எதிர்கொள்ளும் அளவுக்கு என் சீடர்களிடம் ஆன்மீக பலம் இல்லை.''

அன்பு மகனுக்கு/மகளுக்கு

1

Posted on : Tuesday, January 29, 2013 | By : ஜெயராஜன் | In :

அன்பு மகனுக்கு,
அன்பு மகளுக்கு,
*ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.
*மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.
*'நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.
*உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.
*உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.
*ரகசியங்களைக் காப்பாற்று.
*புதிய நண்பர்களைத் தேடிக்கொள்:பழைய நண்பர்களை மறந்துவிடாதே.
*தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.
*உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.
*தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி
*ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே.
*கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.
*கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.
*உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.
*மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.
*ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.
*வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.
*போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.
*ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.
*வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.
*பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.
'எனக்குத் தெரியாது',மன்னிக்கவும்',என்பதை சொல்லத் தயங்காதே.




நண்பன் எப்படி...?

0

Posted on : Monday, January 28, 2013 | By : ஜெயராஜன் | In :

முட்டாளை நண்பனாக்கிக் கொள்ளாதே,அவன்
உனக்கு நல்லது செய்வதாக நினைத்து கெடுதல் செய்வான்.
கஞ்சனை நண்பனாக்கிக் கொள்ளாதே,
உனக்குக் கடுமையான பண நெருக்கடியின் போது ஓடிவிடுவான்.
போக்கிரியை நண்பனாக்கிக் கொள்ளாதே,
உன்னையும்,உன் நட்பையும் மலிவுச்சரக்காக விற்று விடுவான்.
பொய்யனை நண்பனாக்கிக் கொள்ளாதே,
தொலைவில் இருப்பதைப் பக்கத்தில் இருப்பது போலவும்,
பக்கத்தில் இருப்பதைத் தொலைவில் இருப்பது போலவும்
தோற்றமளிக்கும்படி, கானல் நீர் பிரமையை ஏற்படுத்தி விடுவான்.

சுகாதாரம்

2

Posted on : Monday, January 28, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு முறை இங்கிலாந்தின் பிரதமராக இருந்த சர்ச்சிலும்,இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனும் ஒரு விருந்தில் கலந்து கொண்டார்கள்.ராதாகிருஷ்ணன் கையை சுத்தமாகக் கழுவி விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தார்.சர்ச்சில் கரண்டி,முள் கரண்டி ஆகியவற்றை உபயோகித்து சாப்பிட ஆரம்பித்தார்.ராதாகிருஷ்ணன் கையினால் சாப்பிடுவதைப் பார்த்த சர்ச்சில் ''என்ன இது,கரண்டியை உபயோகித்து சாப்பிடுங்க.அதுதான் சுகாதாரமானது.''என்றார்.உடனே ராதாகிருஷ்ணன், ''இல்லை அய்யா,கைதான் ரொம்ப சுகாதாரமானது.''என்றார்.உடனே சர்ச்சில்,'அது எப்படி?''என்று கேட்க,நமது ஜனாதிபதி சொன்னார்,''கைதான் சுகாதாரமானது.ஏனென்றால்,அதை வேறு யாரும் உபயோகப் படுத்த முடியாது.மேலும் எனது கை சுத்தமாக இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும்.உங்களால் உங்கள்  கரண்டி சுத்தமாக இருக்கிறது என்று  உறுதியாகச் சொல்ல முடியுமா?''சர்ச்சில் பதில் சொல்ல முடியாது திகைத்து நின்றார்.

விபரமான ஆள்

1

Posted on : Sunday, January 27, 2013 | By : ஜெயராஜன் | In :

நமக்கு ஏற்கனவேதெரிந்த ஒரு விஷயத்தை ஒருவர் விளக்கப் போகிறார் என்றால் கொஞ்சம் பொறுமை காட்டுங்கள்.அவரைப் பேச விடுங்கள்.புதிதாகக் கேட்பது போலக் கேட்டுக் கொள்ளுங்கள்.இதில் இரு வசதிகள் உண்டு. முதலாவது, ஒரு விசயத்துக்கு எப்படியெல்லாம்,எங்கெங்கெல்லாம் கண், காது  ஓட்டலாம் என்பது தெரியவரும்.அடுத்து நமக்குத் தெரியாத பல புது கிளைச்  செய்திகளும் சேர்ந்தே வரும்.
ஒருவர் ஒரு விஷயத்தை ஆர்வமாகச் சொல்ல முன் வரும்போது எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்வது நாகரீகம் அல்ல.அப்படியா என்று ஆர்வமாகக் கேட்டுக் கொள்வதுதான் மனிதாபிமானம்.மெல்ல அதில் சில சந்தேகங்களைக் கேட்டு அந்த ஆள் வெத்து வெட்டு என்று அவரையே உணர வைக்க நம்மால் முடியும் என்றாலும் அது வேண்டாம்.காரணம்,அவர்கள் அதன்பின் நம்மை வெறுக்கத் தொடங்குவர்.
ஒரு விவாதத்தில் இறங்கியிருக்கும் இருவர்,ஒருவரை ஒருவர் மட்டம் தட்டவே பார்க்கிறார்கள்.தங்கள் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கிறார்கள்.இந்த விவாதம் மனக் கசப்பில்தான் முடியும்.எதிரியின் வாதம் அபத்தமாக இருந்தால் கூட எள்ளி நகையாட வேண்டாம்.'உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை'என்று பக்குவமாக சொல்லலாம் .அல்லது அவர்கள் வாதங்களிலுள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்டு இறுதியாக நம் கருத்துக்கு அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும்.'மடக்கி விட்டேன் பார்த்தாயா?'என்று காலரை தூக்கி விட்டுக் கொல்லும் தற்காலிகப் பெருமை நமக்குத் தேவையில்லை.
நாம் நம்மை விபரமான ஆளாகக் காட்டிக் கொள்ளும் சுபாவம் நம்மை இரு  விதத்தில் பாதிக்கிறது.ஒன்று,எதிராளி நம்மை அவமானப் படுத்த,பழி வாங்க சந்தர்ப்பம் தேட ஆரம்பித்து விடுவான்.இரண்டு,இது மற்றவர்களின் நல்லெண்ணத்தையும்,நன் மதிப்பையும் பெறத் தடையாயிருக்கிறது.குரலை உயர்த்திப் பேசுவதும்,மிக அதிகமாகப் பேசுவதும்,முகத்தில் ஏகமாகப் பிரகாசம் காண்பித்துப் பேசுவதும் தவிர்க்கப் பட வேண்டும்.
நம்மை அப்பாவி என்று மற்றவர்கள் எண்ணுவதுதான் நமக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கித்தரும்.மற்றவர்களும் நம்மை விரோதப் பார்வை பார்க்க மாட்டார்கள்.
காரியத்தில் கண்ணாயிருந்து இறுதியில் புத்திசாலித்தனத்தைக் காண்பித்து வெற்றி கொள்வதை விட்டுவிட்டு 'நாம் புத்திசாலி'என ஒவ்வொரு கட்டத்திலும் காண்பித்துக் கொள்வது எல்லாவற்றையும் குட்டிச் சுவராக்கி விடும்.
                                                          --லேனா தமிழ்வாணன்.

தெரிய வேண்டாமா?

1

Posted on : Saturday, January 26, 2013 | By : ஜெயராஜன் | In :

ஆப்பிரிக்கா என்றால் வெயில் நாடுஎன்று பொருள்'
******
பத்து வயதுப் பையனுக்குஒரு காயம் குணமாக ஆறு நாள் ஆனால் அதே அளவு காயம் ஆற இருபது வயது இளைஞனுக்கு பத்து நாட்களும்,முப்பது வயதுக்காரருக்கு பதிமூன்று நாட்களும்,நாற்பது வயதுக்காரருக்கு பதினெட்டு நாட்களும்,அறுபது வயதுக்காரருக்கு முப்பத்திரண்டு நாட்களும் ஆகும்.
******
வாயில் சுரக்கும் உமிழ் நீரில் ptylin என்ற என்சைம் உள்ளது.இது ஜீரணத்திற்குத் தேவையானது.இது carbohydrate ஐ சர்க்கரை ஆக மாற்றுவதற்குச் சிறிது நேரம் பிடிக்கும்.எனவே உமிழ்  நீருடன் உணவை நன்றாகக் கலக்கச் செய்யவும், சிறிது நேரம் ptlyin ஐ ஆக்கத்திற்கு உட்படுத்தவும் உதவும் வகையில் பற்களால் உணவை சிறிது நேரம் நன்றாய் அரைத்து மென்று கொண்டிருப்பது நல்லது.எனவே உணவை அவசரம் அவசரமாக விழுங்கக் கூடாது.
******
செண்டுகளின் நறுமணத்திற்குக் காரணம் அவற்றில் ஆம்பர் கிரீஸ் எண்ணும் பொருள் இருப்பதுதான்.இந்த ஆம்பர் கிரீஸ் ஒரு வகை திமிங்கலங்களின் குடலில் மட்டுமே உற்பத்தி ஆகிறது.
******
சிவப்பு நிறத்தை நீண்ட நேரம் உற்றுப் பார்த்து விட்டு வெள்ளை நிறத்தைப் பார்த்தால் பச்சையாகத் தோன்றும்.நீல நிறத்தை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துவிட்டு வெள்ளை நிறத்தைப் பார்த்தால் மஞ்சளாகத் தெரியும்.
******
ஒட்டகச்சிவிங்கிக்குக் குரல் கிடையாது.
******
நிழல் உருவத்தை ஆங்கிலத்தில் சிலூட் (silhoutte)என்பார்கள்.இது ஒரு கொடியவனின் பெயர்.பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டின் நிதி அமைச்சராக இருந்த இவன் கடும் வரிகளைப் போட்டு மக்களின் வெறுப்புக்கு ஆளானவன்.'எங்கள் நிழலைத்தவிர வேறு எதையும் விட்டு வைக்காமல் இப்படி வரி போடுகிறானே!'என்று மக்கள் நொந்து கொண்டனர்.அதிலிருந்து நிழலை இகழ்ச்சியாக குறிப்பிடும் சொல்லாக சிலூட் நிலை பெற்று விட்டது.
******

இருந்தாலும்....

0

Posted on : Friday, January 25, 2013 | By : ஜெயராஜன்

மக்கள் நியாயம் தெரியாதவர்கள்.சுயநலவாதிகள்.
இருந்தாலும் அவர்களை நேசியுங்கள்.
நன்மை செய்தாலும் ஏதாவது  உள்நோக்கம் கற்பிப்பார்கள்.
இருந்தாலும் அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
நீங்கள் வெற்றி அடைந்தால்,உண்மையான எதிரிகளும் தவறான நண்பர்களும் கிடைப்பார்கள் .
இருந்தாலும் வெற்றிக்குப் பாடுபடுங்கள்..
நீங்கள் இன்று செய்யும்  நன்மை நாளை மறக்கப்படும்.
இருந்தாலும் நல்லதே செய்யுங்கள்.
நேர்மை உங்களுக்குத் துன்பம்தான் கொடுக்கும்.
இருந்தாலும் நேர்மையாய் இருங்கள்.
பல ஆண்டின் உழைப்பு ஒரே நாள் அழிக்கப்படக் கூடும்.
இருந்தாலும் தொடர்ந்து உழையுங்கள்.
மக்களுக்கு உண்மையிலேயே உதவி தேவை.
ஆனால்நீங்கள்உதவிசெய்தால்உதைப்பார்கள்.
இருந்தாலும் உதவி செய்யுங்கள்.






வெற்றிப்படிகள்

0

Posted on : Thursday, January 24, 2013 | By : ஜெயராஜன் | In :

நம்மால் இயன்ற அனைத்தையும் செய்தோம் என்பது ஒரு வெற்றியே.முடிவு எப்படியிருப்பினும் கடைசி வரை முயற்சிப்பது வெற்றியே.சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகக் கவனம் செலுத்துவது ஒரு வகை வெற்றியே. எதிர் பார்த்த வாய்த்த வாய்ப்புகள் வராதபோதும் கிடைத்த வாய்ப்புகளில்
இ ருந்து  கூடிய அளவு அனுபவம் பெற்றுவிடுவதும் வெற்றியே. மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டி வந்தாலும் தொடர்ந்து முயல்வதும்  அதற்கான உறுதியும் ஒரு வெற்றியே.
'இன்று சிலர் செய்யும் தவறுகள் நாமும் நேற்றுத் தெரியாமல் செய்த தவறுகளே'என்பதை உணர்ந்து அவர்களை மன்னிப்பதும் வெற்றியே.'சிறு செயல்களை செய்தாலும் பலருக்கும் பயன்படும் விதமாக செம்மையாக செய்தோம்'என்ற உள்ளக் களிப்பும் வெற்றியே.பெருந்தோல்வி ஒன்று முழுமையாக வீழ்த்தி விட்ட போதிலும் மாபெரும் கடமைகளால் உந்தப்பட்டு மீண்டும் எழும் உள்ளம்வெற்றிக்கு ஒரு வித்து.
'நல்லதை விழையும் முயற்சியில் நமக்குத் தற்போது அவப்பெயர் வந்தாலும் பிறகு புரிந்து கொள்வார்கள்,'என்று பொறுத்துக் காத்திருப்பதும் வெற்றியே. திட்டங்கள் செயல் முறைக்கு வரும்போது நடைமுறை உண்மைகளை கண்டுணர்ந்து தன்  தவறுகளை ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மையும் ஒரு வெற்றியே.
வெற்றிக்குத் தடையாக இருக்கும் நினைப்புகளை அகற்றுங்கள்.யாரோ வேண்டுமென்று உங்கள் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கிறார்கள் என்று நினைக்கிறீர்களே,அந்த நினைவை அகற்றுங்கள்.நீங்கள் குறுக்கே வந்து விட்டதாக மற்றவர்களும்,அவர்கள் குறுக்கே வந்து விட்டதாக நீங்களும் நினைத்துக் கொண்டால் எப்படி?
உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளத் தயங்கும்போதுதான் யாரையேனும் குறை சொல்லி உங்கள் முயற்சியிலிருந்து தப்பித்துக் கொள்ள நினைக்கும்போத்தான் குறுக்கு சுவர்கள் எழுகின்றன.நாம் எழுப்பிய சுவர்களை நாம்தான் உடைக்க வேண்டும்.
எல்லாம் தெரியும் என்ற நினைப்பைக் கைவிடுவதும், தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக் கொள்வதும்,தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும்  தீமைகளைக் கலைவதும் வெற்றிகளே.
வேண்டா வெறுப்பை விடுத்து கவனத்தோடு செயலாற்றுவது,பிறருடைய இயல்புகளை அறிந்து நளினமாகச் செயல்படுவது,வேண்டாத பின் விளைவுகள் வராத வண்ணம் சிந்தித்துச் செயல் படுவது,இடையில் வரும் அலுப்பை பொருட் படுத்தாது தொடர்ந்து முயல்வது,முதலில் செய்ய வேண்டிய வேலையை முதலில் செய்யும் கட்டுப்பாடு,எடுத்த வேலையைக் கடைசி வரை செய்து முடித்து விடும் ஈடுபாடு யாவும் நல்ல பண்பின் வெற்றிப்படிகள்.

தொப்பி

1

Posted on : Tuesday, January 22, 2013 | By : ஜெயராஜன் | In :

இங்கிலாந்து நாட்டில் பெண்களைக் கண்டால் ஆண்கள் தங்கள் தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்துவது உண்டு.ஒரு வயதான பெண்ணைக் கண்டு ஒரு இளைஞன் தொப்பியைக் கழற்றவில்லை.தனக்கு மரியாதை செய்யவில்லையே என்ற ஆதங்கத்துடன் அப்பெண்மணி,''பெண்களைக் கண்டால் தொப்பியைக் கழற்றும் மரியாதை உங்களுக்குத் தெரியாதா?''என்று கேட்டார்.அதற்கு அந்த இளைஞன்,''வயதான பெண்களுக்கு மட்டுமே நான் தொப்பியைக் கழற்றுவது வழக்கம்.''என்றான்.அந்த வயதான பெண்ணுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை சொல்லவும்வேண்டுமோ!
******
ஒரு சிறுவன் தனது நண்பனைக் கூப்பிட்டு தன்  நாய் செய்யும் அதிசய செயல்களைக் காண்பித்தான்.அதிசயத்த நண்பன் ,''இது எப்படியடா சாத்தியம்?என் நாய் இதுமாதிரி எதுவுமே செய்வதில்லையே!'' என்றான்.சிறுவன் சொன்னான்,''அது ஒன்றும் பிரமாதமில்லை.இந்த நாய்க்குத் தெரிந்ததைக் காட்டிலும் உனக்குக் கொஞ்சம் கூடுதலாக விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.''
******

கடைசி வாய்ப்பு

0

Posted on : Tuesday, January 22, 2013 | By : ஜெயராஜன் | In :

முதலாளி தனது உதவியாளரைக் கூப்பிட்டு தலைமைக் கணக்கரை வரச் சொன்னார்.அப்போது மணி மாலை மூன்று.உதவியாளர் சொன்னார்,''அவர் வெளியே போயிருக்கிறார்,சார்,''''இந்நேரம் எங்கே போய்த் தொலைந்தார்?''என்று திட்டிக் கொண்டே தனது வேலையைத் தொடர்ந்தார் முதலாளி.அடுத்த நாள் மாலை மூன்று மணிக்கு அவரைக் கூப்பிட்டு வரச்சொல்ல அப்போதும் கணக்கர் வெளியே போயிருப்பதாக உதவியாளர் சொன்னான்.முதலாளிக்கு பயங்கரக் கோபம்.இருந்தாலும் அடக்கிக் கொண்டார்.மறுநாளும் மாலை நேரத்தில் கணக்கரை அழைத்து வரச்சொன்னார்.உதவியாளர் ,''இன்றும் வெளியேதான் போயிருக்கிறார்,'' என்றதும் முதலாளிக்கு  வெறியே வந்துவிட்டது.''எங்கேயா தினசரி  போகிறான் ,அவன்?தினமும் மாலை பொறுப்பில்லாமல் வெளியே சுற்றுகிறான்.வருடக் கணக்கை வேறு முடிக்கவேண்டும்,''என்று இரைந்தார்.உதவியாளர் சொன்னான்,''இன்று வருடத்தின் கடைசிநாள் அல்லவா?கணக்கை சரி செய்ய அவருக்குக் கடைசி வாய்ப்பினைப் பார்க்க வழக்கம் போல குதிரை ரேசுக்குப்  போயிருக்கிறார்.''

டாக்சி!

2

Posted on : Monday, January 21, 2013 | By : ஜெயராஜன் | In :

டாக்டர் நோயாளியைப் பரிசோதித்துவிட்டு சொன்னார்,''உங்கள் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.கொடிய நோயினை நீங்கள் நீண்ட காலம் கவனிக்காமல் விட்டு விட்டீர்கள்.இப்போது செய்வதற்கு ஒன்றும் இல்லை.உங்கள் வாழ்க்கை விரைவில் முடியப் போகிறது,'' நோயாளி, ''இன்னும் ஒரு வருடம் வாழ்வேனா,டாக்டர்?''என்று கேட்க, டாக்டர், ''அவ்வளவு காலம் எல்லாம் தாங்காது,''என்றார்.நோயாளி ஆறு மாதம் தாங்குமா என்று கேட்க, வாய்ப்பில்லை என்றார் டாக்டர்.''ஒரு மாதமாவது உயிரோடிருப்பேனா?''என்றதும் டாக்டர் உதட்டைப் பிதுக்கினார்.உடனே நோயாளி,''எனக்கு நன்றாகப் புரிந்து விட்டது டாக்டர்,நன்றி''என்று கூறியவாறு எழுந்து வெளியே சென்று விட்டார். அவர் என்ன செய்யப் போகிறார் என்று ஜன்னல் வழியே டாக்டர் பார்த்துக் கொண்டிருந்தார்.   அப்போது ஒரு வண்டியில் ஒருவன் சவப்பெட்டி ஒன்றினை எடுத்து சென்று கொண்டிருந்தான்.உடனே நோயாளி,அந்த வண்டிக்காரனைப் பார்த்து, ''டாக்சி,டாக்சி,''என்று கத்திக் கொண்டே ஓடினான்.

செல்ல நாய்.

1

Posted on : Sunday, January 20, 2013 | By : ஜெயராஜன் | In :

சிறுவன் ஒருவன் ஒரு குட்டி நாயை ஆசையாய் வளர்த்து வந்தான்.ஒருநாள் திடீரென நாய் கீழே மயங்கி விழுந்தது.உடனே அவன் அழுதான். அவன் தந்தை அங்கு ஓடி வந்து நாயைப் பார்த்தார்.நாய் இறந்து விட்டது என்று அவர் எண்ணி,அதை எப்படி பையனிடம் சொல்லி சமாதானம் செய்வது என்று யோசித்தார்.பின் ஒரு முடிவு செய்து மகனிடம்,''இதோ பார்,உன் செல்ல நாய் இறந்து விட்டது.நாம் என்ன செய்ய முடியும்?இப்போது அதை நல்ல படியாக நமது தோட்டத்தில் புதைத்துவிடுவோம்.பின்னர் அப்பா உன்னை கடற்கரைக் குக் கூட்டி செல்லுகிறேன்.அங்கு குதிரை சவாரி செய்துவிட்டு பின் ஹோட்டலுக்கு செல்வோம்.அங்கு உனக்குப் பிடித்ததையெல்லாம் வாங்கித் தருகிறேன்.நிறைய ஐஸ் க்ரீமும் வாங்கித் தருகிறேன்,''என்றார்.பையனின் முகத்தில் இப்போது ஒரு மலர்ச்சி!அப்போது திடீரென நாய் சற்று புரண்டது.பின் உடலை சிலிர்த்தவாறு எழுந்து நடந்து  சென்றது. தந்தை,''அட,உன் நாய் பிழைத்துக் கொண்டது!''என்று கூவினார்.பையன் சிறிது நேரம் யோசித்தான்.பின் சொன்னான்,''அப்பா,அதைக் கொன்று விடுவோம்.''

நாய் எங்கே?

0

Posted on : Sunday, January 20, 2013 | By : ஜெயராஜன் | In :

தந்தை தனது சிறுஎட்டு வயது மகனைக் கூப்பிட்டு,பணத்தைக் கையில் கொடுத்து,''கடைக்கு சென்று ஒரு கிலோ வெண்ணெய் வாங்கி,வா'' என்றார்.பையனும் உடனே தனது குட்டி நாயை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்றான்.கடையில் சாக்லேட்டுகளைப் பார்த்தவுடன் அவனுக்கு ஆசை வந்துவிட்டது.எனவே தந்தை கொடுத்த அவ்வளவு பணத்துக்கும் சாக்லேட்டுகள் வாங்கிக் கொண்டான்.பின் வீட்டிற்கு வந்தவுடன் சாக்லேட்டுகளை பத்திரமாக ஒரு இடத்தில் ஒளித்து வைத்துவிட்டு,முகத்தை மிகவும் கவலைப் படுகிறார்போலத் தொங்கப்போட்டுக்கொண்டு தகப்பன் முன் நின்றான்.தந்தை கேட்டார்,''எங்கேடா வெண்ணெய்?''பையன் சோகமாக,''வெண்ணெய் வாங்கி வந்தேன்.வழியில் இந்த குட்டி நாய் என்னிடமிருந்து பறித்து வெண்ணெய் முழுவதையும் சாப்பிட்டு விட்டது'' என்றான்.உடனே தந்தை அந்த நாயைத் தூக்கி வீட்டில் இருந்த ஒரு தராசில் வைத்து நிறுத்தான் .அது ஒரு கிலோ இருந்தது.இப்போது பையனைப் பார்த்து அவர் கேட்டார்,''இதோ ஒரு கிலோ வெண்ணெய் இருக்கிறது.நாய் எங்கே?''

பொன்மொழிகள்-39

1

Posted on : Saturday, January 19, 2013 | By : ஜெயராஜன் | In :

ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும்.
பாடம் பண்ணி பத்திரப் படுத்தக் கூடாது.
******
எதுவும் நேராதது போல நடந்து கொள்ளுங்கள்,
என்ன நேர்ந்திருந்தாலும் சரி.
******
அறிவாளி கண்களால் பேசுகிறான்:
முட்டாள் காதுகளால் விழுங்குகிறான்.
******
நன்மைகள் செய்பவன் என் உணர்ச்சியைத் துன்புறுத்துகிறான்.
புகழைத் தருபவன் என் வாழ்வைப் புண்படுத்துகிறான்.
******
உன்னதமான காரியத்தை செய்ய யாருக்கு நிர்ப்பந்தம் தேவைப்படுகிறதோ,அவன் அதை என்றும் முடிக்க மாட்டான்.
******
சொந்த விஷயம் என்றால் சுயநல வாதிகளாகி விடுகிறோம்.
அடுத்தவர் விஷயம் என்றால் லட்சிய வாதிகளாகி விடுகிறோம்.
******
ஓய்வு என்பது மட்டமான சொல்,
அது எந்த மொழியிலாயினும் சரி.
******
சோம்பல் உன்னை ஏமாற்றாமல் பார்த்துக்கொள்.
ஏனெனில் அதற்கு ஒரு நாளைக் கொடுத்தால்,அது அடுத்த நாளையும் திருடிக் கொண்டுவிடும்.
******
அனுபவம் என்பது இரண்டாவது முறை தவறு செய்யும்போது சுரீர் என உணர்த்துவது.
******
தோல்வி என்பது முனைப்பில்லாத முயற்சிக்குக் கிடைக்கும் பரிசு.
******
வயது விஷயத்தை பெரிதாய் நினைக்காதீர்கள்.உங்களுக்கு ஒரு வயது ஏறி விட்டதென்றால் எல்லோருக்கும்தான் ஒரு வயது ஏறுகிறது.
******
இவன் ஒரு முட்டாளோ என்று நாலு பேர் சந்தேகப்பட்டாலும் பரவாயில்லை.வாயைத் திறவாமல் இருப்பதே மேல்.--வாயைத் திறந்து அந்த சந்தேகத்தை உறுதிப் படுத்துவதைக் காட்டிலும்.
******

கூச்சத்தை விரட்ட

1

Posted on : Saturday, January 19, 2013 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் பிறருடன் பழகக் கூச்சப்படுபவரா?இதோ,கூச்சத்தை விரட்ட உங்களுக்கு ஒன்பது வழிகள்.
1.நம்மைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பைக் கை விடுங்கள்.
2.எப்போதும் யாரோ ஒருவர் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று நீங்களாகவே நினைத்து வேதனைப் படாதீர்கள்.அவரவர்களுக்கு அவரவர் வேலைகள்.உங்களைத்தானா கவனித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
3.எப்போதும் பிறர் உங்களுக்கு ராஜ மரியாதை தர வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள்.
4.தர்ம சங்கடமான நிலைமைகளை தைரியமாக எதிர் கொள்ளுங்கள்.
5.மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கலாம்.அதனால் மற்றவர்களின் நட்பில் உங்களது கூச்சத்தை மறக்க முயற்சி செய்யுங்கள்.
6.உண்மையில் ஒரு நண்பனுக்கு நீங்கள் ஏங்கும் போது ,'நமக்கு நாமே நண்பன்' என்று உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.
7.ஏதாவது தவறு செய்து விட்டால்,இன்று மிகப் பிரபலமாக இருக்கும் பலரும் தவறு செய்தவர்கள்தான் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
8.உங்களைப் போல பலரும் கூச்ச சுபாவம் உள்ளவர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
9.மற்றவர்களிடம் அதிகமாகப் பழக சந்தர்ப்பம் வரும்போது,தாழ்வு மனப்பான்மை கொள்ளாதீர்கள்.

யாருக்கு சொர்க்கம்?

0

Posted on : Friday, January 18, 2013 | By : ஜெயராஜன் | In :

தான் ஏழையாக இருந்தாலும்
தன்னிடம் இருப்பதை இல்லாதவருக்குத் தானம் தருபவனும்,
ஆற்றல் படைத்திருந்தும்,
தனக்குத் தீங்கு இழைத்தவனை மன்னிப்பவனும்,
இளம் வயதுடையவனாயிருந்தும்,பொறிகளைக் கட்டியும்,உடலை வாட்டியும்,தவம் புரிபவனும்,
எல்லாம் அறிந்திருந்தும்,
வாயைத் திறவாது மௌனமாய் இருப்பவனும்,
இன்ப துன்பங்களை அனுபவிக்கத் தகுதி இருந்தும்,
அவற்றைத் துறந்து விடுபவனும்,
எல்லா உயிர்களிடத்தும் அன்பும் அருளும் பொழிபவனும் ,
சொர்க்கம் சேருவார்கள்.

கவலை ஏன்?

0

Posted on : Friday, January 18, 2013 | By : ஜெயராஜன் | In :

கவலைப்பட இரண்டு விஷயங்கள் தான் இருக்கின்றன,
ஒன்று,நீங்கள்,ஆரோக்யமாய் இருக்கிறீர்கள்,அல்லது நோயுடன் இருக்கிறீர்கள்.
ஆரோக்யமாய் இருந்தால் கவலை இல்லை.
நோயுடன் இருந்தால்,கவலைப்பட இரண்டு விசயங்கள்தான் உள்ளன.
ஒன்று நீங்கள் குணமடைவீர்கள்,அல்லது மரணம் அடைவீர்கள்.
குணமடைந்தால் கவலைப்பட ஒன்றும் இல்லை.
இறந்தால் கவலைப்பட இரண்டு விசயங்கள்தான் இருக்கின்றன.
ஒன்று நீங்கள் சொர்க்கம்போவீர்கள்,அல்லது நரகம் போவீர்கள்.
சொர்க்கம் போனால் கவலைப்பட ஒன்றும் இல்லை.
நரகம் போனால், அங்கு உங்கள் பழைய நண்பர்களைப் பார்த்து கைகுலுக்கவே நேரம் போதாது.அப்போது கவலைப்படுவதற்கு நேரம் இருக்காது.
எனவே எப்படிப் பார்த்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

பிரச்சினை ஏன்?

0

Posted on : Thursday, January 17, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒருவருக்கு ஏன் பிரச்சினை வருகிறது என்று சிந்தித்துப் பாருங்கள்.நிகழ்வுகளையும் சம்பவங்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு  இருப்பதால்தான் ஒருவருக்குப் பிரச்சினைகள் வருகின்றன.வாழ்க்கையில் சிக்கல்,தெளிவு இரண்டுமே சம அளவில் இருக்கின்றன.இவை இரண்டையும் எப்படி சமன் செய்கிறோம் என்பதில்தான் வாழ்வின் சூட்சுமம் இருக்கிறது.சிக்கலான தருணங்கள் வரும்போது,டென்சன் உச்சத்தை அடையும்போது, சிக்கலான விசயங்களை ஒதுக்கி வைத்து விட்டு, உங்கள் முன் தெளிவாக இருக்கும் எளிமையான விசயத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.தானாக அமைதி பிறக்கும்.மனதில் அமைதி தவழும் தருணங்களில், அதிக கவனம் தேவைப்படும் சிக்கலான விசயங்களுக்கு தீர்வு காணுங்கள்.வாழ்க்கை எளிய விஷயங்கள் மட்டும் கொண்டதாயிருந்தால் விரைவில் ஒருவர் சோம்பேறியாகக் கூடும்.அதேபோல வாழ்க்கை சிக்கலானதாக மட்டும் இருந்தால் ஒவ்வொரு நாளும் டென்சன் தான்.இரண்டையும் சாமர்த்தியமாக சமாளித்தால்  வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்.
                                                         --ரவிசங்கர்ஜி.

நம்பிக்கை நட்சத்திரம்

0

Posted on : Tuesday, January 15, 2013 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் ஒரு நம்பிக்கை நட்சத்திரமா?
1.திடீரென்று பல்வேறு சந்தர்ப்ப மாற்றங்களால் உங்கள் திட்டங்கள் தவிடு பொடி   ஆகின்றன என்று வைத்துக் கொள்வோம்.அப்போது மாறுபட்ட சூழ்நிலையில் மறைந்துள்ள நன்மைகளைக் கண்டறியுங்கள்.
2.ஒரு புதிய மனிதர் உங்களை உற்றுப் பார்த்தால் அவர் உங்களால் கவரப்பட்டுத்தான் அப்படிப் பார்க்கிறார் என்று எண்ணுங்கள்.
3.இந்த ஆண்டு சென்ற ஆண்டைவிட சிறப்பாய் இருக்கும் என்று எண்ணுங்கள்.
4.அழகான பொருட்கள்,காட்சிகளை வியந்து பாராட்டுங்கள்.
5.உங்கள் செயலில் ஒருவர் குற்றம் கண்டு பிடித்தால் அது ஆக்க பூர்வமான விமரிசனமா அல்லது வீண் குற்றச்சாட்டா என்பதை இனம் கண்டு கொள்ளுங்கள்.
6.உங்களது வாழ்க்கைத் துணையை,நெருங்கிய நண்பரை ,விமரிசிப்பதை விட அதிகம் பாராட்டுங்கள்.
7.உங்களைப் பற்றி நீங்களே ஜோக்கடித்துக் கொள்ளுங்கள்.
8.உடல் நலத்தில் மன நலத்துக்குப் பங்கு உண்டு என்று நம்புங்கள்.
9.கடந்த காலத்தில் நீங்கள் அடைந்த சிறு சிறு வெற்றிகளை நினைவில் கொள்ளுங்கள்.

புத்தி

1

Posted on : Saturday, January 12, 2013 | By : ஜெயராஜன் | In :

நமது புத்தி எட்டு அங்கங்கள் கொண்டது .  இதை அஷ்டாங்க புத்தி என்று சொல்வர்.
1.கேட்டலாகிய ஆற்றல்.இதை கிரஹணம்  என்பர் .
2.கேட்டதைத் தன்னுள் நிறுத்துதல்.-தாரணம்.
3.அதை வேண்டும்போது நினைவு கூறல்-ஸ்மரணம்
4.அதை எடுத்து விளக்குதல்-பிரவசனம்
5.ஒன்றைக் கொண்டு மற்றொன்றை அறிதல்-யூகம்.
6.வேண்டாத இடத்தில் சிலவற்றை மறைத்தல்.-அபோஹணம்
7.ஒன்றைப் பற்றி முழுமையாக அறிதல்-அர்த்த விஞ்ஞானம்.
8.மெய்யறிவு பெறுதல்-தத்துவ ஞானம்.

வெறுப்பை வெல்வது எப்படி?

0

Posted on : Saturday, January 12, 2013 | By : ஜெயராஜன் | In :

கடந்த காலத்தில் நிகழ்ந்து விட்ட மகிழ்ச்சி அளிக்காத விசயங்களில் இருந்து உணர்ச்சிபூர்வமாக விடுபட முயலும் உபாயமே வெறுத்து ஒதுக்குதல் ஆகும்.கடந்தகால மகிழ்ச்சியற்ற விசயங்களை அலட்சியப்படுத்துகின்ற  மனோபாவத்தை  நீங்கள் ஏற்படுத்திக் கொண்டால் தேவையற்ற மனத் துன்பம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.கடந்த கால நிகழ்ச்சிகளை எத்தனை முறை நினைவு படுத்திக் கொண்டாலும் அதை நீங்கள் மறக்கப் போவதில்லை எனவே எதற்காகக் கடந்த கால துன்ப நினைவுகளுக்கு இப்போது ஏன் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும்?மாற்ற முடியாததை  அலட்சியப் படுத்துங்கள்:மறந்து விடுங்கள்.
உங்கள் உணர்ச்சிகள் எளிதில் புண்படுகின்றனவா?மற்றவர்கள் சொல்லும் விஷயங்கள் உங்களை மிகப் பாதிக்கின்றனவா?சில யோசனைகள்:சில விசயங்களில் உங்கள் உணர்ச்சிகள் மரத்துப் போகட்டும்.மற்றவர்கள் என்ன சொன்னாலும் துடைத்து எறிந்து விடுங்கள்.ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருக்கும்.பயிற்சி செய்தால் சரியாகிவிடும்.நம் உணர்வுகள் அனைத்தும் பயிற்சிக்குக் கட்டுப் பட்டவை.
ஒரு மனிதன் நிகழ்ந்து விட்ட சம்பவத்தால் புண் படுவதைவிட சம்பவத்தைப் பற்றி தான் கொள்கின்ற அபிப்பிராயத்தாலேயே புண் படுகிறான்.மடுவை மலை ஆக்காதீர்கள்.மற்றவர்கள் உங்களை அவமானப் படுத்தினால் அவர் நோக்கம் நிறைவேற நீங்கள் ஏன் ஒத்துழைக்க வேண்டும்?உணர்ச்சிகள் மரத்துப் போகும்போது பாதிப்புகளும் குறைந்து விடுகின்றன.
நீங்கள்   ஒருவரை வெறுத்து ஒதுக்கும்போது அவர் எந்த பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.நீங்கள் மட்டும் உணர்ச்சி வசப்பட்டு உங்கள் ஆரோக்கியத்தை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்?எதிரிகளை நேசிக்க முடியாவிட்டாலும் உங்களை நீங்களே நேசிக்கலாம் அல்லவா?உங்கள் மகிழ்ச்சி உங்கள் எதிரியின் கட்டுப்பாட்டில் ஏன் இருக்க வேண்டும்?எனவே வெறுத்து ஒதுக்கும் சூழ்நிலையை அலட்சியப் படுத்துங்கள்.மறந்து விடுங்கள் அந்த சந்தர்ப்பங்களில் வேறு விசயங்களைப் பற்றி நினையுங்கள். வேலை களில் ஈடுபடுங்கள்.விரும்பாதவரைப் பற்றி சிந்தித்து ஒரு நிமிடம் கூட வீணாக்காதீர்கள்.
வெறுத்தது ஆழமாக வேரூன்றி விட்டால் என்ன செய்வது?வெறுத்து ஒதுக்குபவரை அனுதாபத்துடன் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.உங்களிடம் அவர்கள் வெறுப்பை ஏற்படுத்த நியாயமான காரணங்களும் இருக்கக் கூடும்.நீங்கள் நிதானமாக ஆராய ஆரம்பித்தால், உங்கள் குறைகள் என்ன என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

'இல்லை'என்று சொல்.

0

Posted on : Friday, January 11, 2013 | By : ஜெயராஜன் | In :

சோம்பேறி கையேந்தினால்,'இல்லை'என்று சொல்.
பெரியவர்களை அவமதிப்பவன்,கல்வி கேட்டால் ,'இல்லை'என்று சொல்.
காரணம் அந்தக் கல்வி அவனை மேலும் அகங்காரனாக்கும்.
அழகான பெண் வழிய வந்து காதல் கேட்டால் ,'இல்லை என்று சொல்.
அது பல ஆபத்துக்களை தவிர்க்கும்.
பணக்காரன் அறிவுரை கேட்டால் ,'இல்லை'என்று சொல்.
அவன் உன்னை அவமதிப்பதற்கே கேட்பான்.
ஏழை இலவச உதவி கேட்டாளல் ,'இல்லை'என்று சொல்.
அவன் தொடர்ந்து உதவி கிடைத்தால் பிச்சைக்காரன் ஆவான்.
கடவுள் உன்னிடம் பக்தியைக் கேட்டால் ,'இல்லை'என்று சொல்.
அப்படிக் கேட்பவர் கடவுளாக இருக்க மாட்டார்.
                                       --ஒரு சீனக் கவிதையின் கருத்து.

பொன்மொழிகள்-38

0

Posted on : Friday, January 11, 2013 | By : ஜெயராஜன் | In :

பசி ருசி அறியாது.
வறுமை வட்டி அறியாது.
******
பல பெரிய செயல்கள் வல்லமையினால் நிறைவேறுவதில்லை.
விடா முயற்சியினாலேயே நிறைவேறுகின்றன.
******
பிறரை விடத்தான் புத்திசாலி என்று ஜம்பம் பேசுபவன்
எளிதில் பிறரிடம் ஏமாந்து போவான்.
******
மற்றவர்களுக்கு நன்மை என்று நினைப்பவன்
தனக்கான நன்மையை ஏற்கனவே சம்பாதித்து விட்டான்.
******
எல்லா மக்களும் தாங்கள் ஒருவரைப் பற்றிஒருவர் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டால்,உலகில் நான்கு நண்பர்கள் கூட சேர்ந்திருக்க மாட்டார்கள்.
******
ஏராளமான வாய்ப்புகள் வரும்போதுதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கடைசியில் மோசமான ஒன்று கிடைத்துவிடும்.
******
கொடுக்கும்போது தயங்காதே.
இழக்கும்போது வருந்தாதே.
சம்பாதிக்கும்போது பேராசைப் படாதே.
******
முழுவதும் பொய்யான பொய்யோடு முழு பலத்தோடு போர் புரிய முடியும். ஆனால் மெய் கலந்த பொய்யோடு போர் புரிதல் மிகவும் கடினமான செயல்.
******
ஒருவன் பொய் சொல்லும்போது அவனைப் பற்றிய மதிப்பு பத்து சதம் உயரலாம்.ஆனால் உண்மை வெளிப்படும்போது ஐம்பது சதம் மதிப்பு குறைந்து விடும்.
******
ஓயாது சொட்டும் நீர்
ஓட்டையாக்கிவிடும் கல்லை.
******

முள்ளில் ரோஜா

0

Posted on : Thursday, January 10, 2013 | By : ஜெயராஜன் | In :

உங்களுக்கென்று ஒரு திறமை,அந்தத் திறமையை வெளிக் கொணர கடும் உழைப்பு,இவை உங்களிடம் இருந்து முன்னுக்கு வர விரும்புகிறீர்களா? உங்களுக்கு ஒரு சிறு யோசனை:சின்னச் சின்ன விஷயங்கள் உங்களை சிறைப்படுத்தாமல்,பாதிப்பிற்கு ஆளாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
காலில் முள் தைத்தால் காலையா வெட்டி விடுகிறோம்?முள்ளைத் தூக்கி
எறிந்து விட்டு நடப்பதில்லையா?அதுபோல மற்றவர்கள்.வார்த்தைகள் மூலமாகவோ,செயல்கள் மூலமாகவோ உங்கள் இதயத்தில் முள் தைத்திருந்தால் அந்த நிமிடமே அதை எடுத்து வீசிவிட்டு வாழ்க்கையில் வெற்றி நடை போடுங்கள்.கண்ணில் தூசி விழுந்தால் உறுத்தட்டும் என்று விட்டு விடுவோமா?அந்த நிமிடமே எடுத்துவிட்டு பார்ப்பதில்லையா? அதுபோல தூசுக்கு சமமான சின்ன சின்ன விஷயங்கள் உங்களை உறுத்த விடாமல் ஊதித் தள்ளிவிட்டு அறிவுக் கண்ணால் உலகை நோக்குங்கள்.
சாதனை புரிய விரும்புபவர்கள், தங்களைப் பாதிக்கக் கூடிய சின்ன விசயங்களை முதலில் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
*மூட் அவுட் ஆவது.கரண்ட் கட்டா,நமக்குப் பிடிக்காததை யாராவது சொல்லி விட்டார்களா,சகுனம் சரியில்லையா,உடனே மூட் அவுட் ஆவது முன்னேற்றத்தை மட்டுமல்ல,உடல் நலத்தையும் பாதிக்கும்.
*சின்ன சின்ன ஏமாற்றங்களுக்கும் சோர்ந்து போவது.எதி பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டால் ஏமாற்றம் குறையும்.எதெற்கெடுத்தாலும் உங்களை பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள்.பாராட்ட மறந்தால் ஏமாற்றமடைந்து எரிச்சல் அடையாதீர்கள்.
*மற்றவர்கள் கூறும் குறைகளால் பாதிக்கப்படுவது.குறை கூறுபவர்களின் தகுதியைத் தீர்மானியுங்கள்.தகுதியானவர் என்றால் குறையை ஆராய்ந்து சரி செய்யுங்கள்.தகுதியற்றவர் என்றால் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுச் செல்லுங்கள்.
நீங்கள் செய்யப் போகும் செயல்களையோ,சாதனைகளையோ முன் கூட்டி சொல்லாதீர்கள்.செய்ய முடியாமல் போனால் வரும் பாதிப்பைவிட அடுத்தவர்களின் கேலி உங்களை வெகுவாகப் பாதிக்கும்.
உங்களை நீங்களே நேசியுங்கள்.உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.உங்கள் குறைகளை நீங்களே யோசித்து தீர்த்துக் கொள்ளுங்கள்.
வாழ்க்கைப் பயணத்தில் சாதனை சிகரத்தை அடைய,பல வார்த்தை முட்களையும்,கேலிக் கற்களையும்,தோல்விப் பள்ளங்களையும் சந்திக்க வேண்டி வரும்.உங்கள் வாழ்க்கைப் பூந்தோட்டத்தில் ரோஜாக்களுக்கிடையே கிடக்கும் முட்களுக்காக வருந்தாதீர்கள்.முட்களுக்கிடையே பூத்திருக்கும் ரோஜாக்களுக்காக மகிழ்ச்சி அடையுங்கள்.

வியாபாரி

0

Posted on : Thursday, January 10, 2013 | By : ஜெயராஜன் | In :

முல்லா ஒரு தடவை தனது வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்தார். ஆனால் அவர் நினைத்தபடி வீட்டை விற்பது அவ்வளவு சுலபமாக இல்லை. யாரும் அவரை விலை கேட்டு அணுகவில்லை.என்ன செய்வது என்று யோசித்தார்.திடீரென ஒரு நாள் வீட்டுச் சுவரை  இடித்து ஒரு செங்கல்லை எடுத்தார்.அவருடைய செயல் அவர் மனைவிக்குப் புரியவில்லை.''என்ன இப்படி சுவற்றை இடித்து விட்டீர்கள்?''என்று கேட்க, முல்லா சொன்னார், ''அட,முட்டாள் பெண்ணே,உனக்கு என்ன தெரியும்?எந்தப் பொருளை விற்பதானாலும் அதன் மாதிரி ஒன்றைக் காண்பித்தால்தானே வாங்குபவர்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்?அப்போதுதானே நான்கு பேர் அதைப் பற்றி விசாரிப்பார்கள்?அதனால் தான் நமது வீட்டை விற்பதற்கு மாதிரியாக இந்த செங்கல்லைக் காட்டப் போகிறேன்.''

வாடிக்கை

1

Posted on : Wednesday, January 09, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு டாக்டர் தனது  மனைவியோடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் ஒரு அழகான பெண் வந்தார்.அவர் டாக்டரைப் பார்த்து புன்  முறுவல் பூத்து சென்றார்.இதை கவனித்த டாக்டரின் மனைவி சந்தேகத்தோடு புருவத்தைதூக்கினார்.டாக்டர் உடனே,''அவர் வாடிக்கையாளர்,'' என்றார். மனைவி கேட்டார்,''அவர் உங்களுக்கு வாடிக்கையாளரா,நீங்கள் அவருக்கு வாடிக்கையாளரா?''
******
''அன்பே,நாளை நமது இருபத்தைந்தாவது ஆண்டு திருமண நிறைவு நாள்.அதைக் கொண்டாட இதோ,நாம் வளர்க்கும் கோழிகளில் இரண்டை அடித்து சமைத்து கொண்டாடுவோமா?''
'பாவம் அவற்றை விட்டுவிடு.இதில் அவற்றின் குற்றம் ஏதுமில்லை.'
******
விண்வெளி வீரர் ஒருவர் தன நீண்ட பயணத்தை முடித்து வந்திருந்தார்.ஒரு நாத்திகவாதி,''விண்ணில் கடவுளைக் கண்டீர்களா?''என்று கேட்டார்.அவரும் ஆம் என்று சொல்ல,''தயவு செய்து இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்,''என்று கேட்டுக் கொண்டார்.அடுத்து ஒரு சமயவாதி இதே கேள்வியை அவரிடம் கேட்டார்.ஏற்கனவே நாத்திகவாதியிடம்,இந்த விஷயம் பற்றி வேறு யாரிடமும் பேசுவதில்லை என்று உறுதி அளித்திருந்ததால் அவர் மௌனமாயிருந்தார்.உடனே சமயவாதி,''சரி,சரி,நீங்கள் பார்க்கவில்லை போலிருக்கிறது.இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்.''என்றார்.
******

நான் நல்லவன்

0

Posted on : Wednesday, January 09, 2013 | By : ஜெயராஜன் | In :

நான் என்னை மிக நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றேனே, ,உள்ளே எவ்வளவு கசடுகள்,எத்தனை திருட்டுத் தனங்கள் என்று மற்றவர் எவரின் உதவியுமின்றி,இடையூறுமின்றி நம்மை நாமே அனுமானிக்கின்ற நிலை மௌனத்தில் ஏற்படுகிறது.
******
செய்த குற்றத்தை விட,''ஐயோ,செய்து விட்டோமே,''என்ற மனப் புழுக்கம் தான் பெரிய வேதனை.
******
வெளி உலகத்தை நாம் பார்ப்பதில்,கவனிப்பதில் மிகப் பெரிய தவறு இருக்கிறது.ஒன்று,பாதி சிந்தனையோடு பார்த்தபடி இருப்போம்,அல்லது நமது அபிப்பிராயங்களை அதில் ஏற்றி பார்த்தபடி இருப்போம்.எதிரே என்ன இருக்கிறதோ,அந்த விஷயத்தை அதன் குணங்களோடு நாம் பார்ப்பதில்லை.
******
எவருடைய வார்த்தைகளாவது சுருக்கென்று தைத்தால்,எவருடைய இடைஞ்சலாவது காலை உருட்டினால்,கலவரப்பட்டு விடக் கூடாது.நின்று நிதானித்து வலையைத் தாங்கிக் கொண்டு மெல்ல முன்னேற வேண்டும்.நாம் சறுக்குவதற்கு இது மாதிரி விஷயங்கள் நமக்கு முன் வந்து தோன்றும்.
******
--பாலகுமாரன்.

உல்லாசப் பயணம்

0

Posted on : Tuesday, January 08, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு பையன் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்த ஒரு உல்லாசப் பயணத்துக்குப் புறப்பட்டான்.அவனது தாய் அவனிடம்,''பயணத்தின் போதுஒழுங்காக நடந்து கொள்.பயணத்தைஉல்லாசமாக அனுபவி,''என்றார்.பையன் கேட்டான், ''இரண்டும் எப்படியம்மா முடியும்?ஏதாவது ஒன்றுதானே இயலும்!''
********
பையன் பள்ளியிலிருந்து மாலை வீட்டுக்கு வரும்போது மிகுந்த உற்சாகத்துடன் வந்தான்.தாய் அவனிடம் கேட்டாள்,''பள்ளிக்கு செல்லும் போது அழுது  கொண்டே சென்றாயே,இப்போது மகிழ்வுடன் இருக்கிறாய். பள்ளிக்கூடம் மிகப் பிடித்து விட்டதா?''பையன் சொன்னான்,''திரும்ப வர மிகப் பிடித்திருக்கிறது அம்மா.''
********
குடிகாரன் ஒருவன் மதுபானக் கடைக்கு வந்து ஐந்து கிளாஸ் குடித்தான். அவனுக்கு திருப்திஏற்படவில்லை.திரும்ப நான்கு கிளாஸ் குடித்தான். அப்போதும் அவனுக்கு சரியாக இல்லை.அடுத்து மூன்று கிளாஸ்  குடித்தான். எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.இன்னும் இரண்டு கிளாஸ் கேட்டு குடித்தான். ஊ ..ஹூம்,கடைசியாக ஒரு கிளாஸ் வாங்கிக் குடித்தான்.இப்போது போதை நன்றாக ஏறி விட்டது.அவன் அங்கலாய்த்தான்,''என்ன கொடுமைடா சாமி,ஐந்து கிளாஸ் குடித்தபோது போதை வரவில்லை. நான்குக்கும், மூன்றுக்கும் இரண்டுக்கும் வரவில்லை.இப்போது ஒரே கிளாசில் போதை வந்துவிட்டதே!என்ன சரக்கோ!''
********

சரியான பாதை

0

Posted on : Tuesday, January 08, 2013 | By : ஜெயராஜன் | In :

புத்திசாலி ஒருவனின் அறிவை சோதிக்க எண்ணிய மன்னன் அவனை சிறையில் அடைத்து அவன் தப்பிக்க சில நிபந்தனைகளை விதித்தான்.
*சிறையிலிருந்து வெளியேற இரு வாசல்கள் உள்ளன.ஒவ்வொரு வாசலிலும் ஒரு காவல்காரன் உண்டு.அவர்களுள் ஒருவன் உண்மையே பேசுவான்.மற்றவன் பொய்யே பேசுவான்.
*ஒரு கதவின் வழியே வெளியேறினால் கடலில் விழுந்து இறந்து போக நேரிடும்.மற்றதின் வழியே வெளியேறினால் தப்பிக்கலாம்.
*காவலாளிகள் இருவருக்கும் சரியான வாசல் எது என்பது தெரியும். அதேபோல யார் உண்மை பேசுபவர் ,யார் பொய் பேசுபவர் என்பதும் ஒருவருக்கொருவர் தெரியும்.ஆனால் புத்திசாலிக்கு இந்த விபரங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.
*புத்திசாலி அவ்விரு காவலாளிகளில் ஒருவரிடம் மட்டும் ஒரே ஒரு கேள்வி கேட்கலாம்.
இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு புத்திசாலி தப்பி வெளியே வந்து விட மன்னன் அவனை மிகவும் பாராட்டி பரிசளித்தான்.அவன் யாரிடம் என்ன கேள்வி கேட்டு தப்பினான்?

விடை: புத்திசாலி  ஒரு காவலாளியிடம்,''நான் தப்பிச்செல்ல சரியான வாசல் எது என்று உன் உடன் உள்ள அந்தக் காவலாளியிடம் கேட்டால்  அவன் எந்த வாசலைக் காட்டுவான்?''என்று கேட்டான்.அவன் காட்டிய வாசலைத் தவிர்த்து அடுத்த வாசல் வழியாக சென்று தப்பினான்.புரியவில்லையா?      கேள்வி கேட்கப்பட்ட காவலாளி உண்மை பேசுபவன் என்று வைத்துக் கொள்வோம்.அவன்,''அந்தக் காவலாளி,கடலுக்கு செல்லும் வழியைக் காட்டுவான்,''என்று உண்மையை சொல்லுவான்.எனவே அதைத் தவிர்த்து விட்டான்.
கேள்வி கேட்கப்பட்ட காவலாளி பொய் பேசுபவன் என்று வைத்துக் கொள்வோம்.அவன்,அடுத்த காவலாளி சரியான வழியைக் காட்டுவான் என்று தெரிந்திருந்தும் பொய்யாகத் தவறான வழியைக் காட்டுவான்.எனவே அதைத் தவிர்த்து விட்டான்.

முடிவெடுக்கும் தருணம்

1

Posted on : Monday, January 07, 2013 | By : ஜெயராஜன் | In :

எப்பேர்ப்பட்ட கெட்டிக்காரர்கள் கூட உணர்ச்சி வசப்படும்போதும், சூழ் நிலைகளின் கைதிகளாக ஆகின்றபோதும், தவறான முடிவுகளையே எடுக்கிறார்கள்.மித மிஞ்சிய மகிழ்ச்சியான கணங்களிலும்,மூட் அவுட் ஆகிற நேரங்களிலும்.பரபரப்பான நேரத்திலும் எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் கோளாறில் தான் முடிகின்றன.எனவே முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது மட்டும் கீழ்க்கண்ட கேள்விகளை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
*இந்த முடிவை உடனே எடுத்தாக வேண்டுமா?
*இந்த முடிவை எடுக்க போதுமான நேரம் சிந்திக்கச் செலவழித்தோமா?
*நம் விருப்பத்தை மட்டும் மனதில் கொள்ளாது,இது நமக்கு நன்மை செய்யுமா என்று சிந்தித்தோமா?
*யாருடைய வற்புறுத்தலின் பேரிலாவது இந்த முடிவை எடுத்தோமா?
*நமக்கு இந்த முடிவில் முழு உடன்பாடு உண்டா?
*உணர்ச்சி பூர்வமாய் இல்லாது அறிவு பூர்வமாய் எடுக்கப்பட்ட முடிவா இது?
*இந்த முடிவில் கெட்ட நோக்கம் உள்ளதா?
*இந்த முடிவில் உள் நோக்கம் உள்ளதா?
               இந்தக் கேள்விகளுக்கு சாதகமான பதில் அமைந்தால் முடிவு பெரும்பாலும் சரியாகத்தான் இருக்கும்.

டென்சன் இல்லாமல் இருக்க...

0

Posted on : Monday, January 07, 2013 | By : ஜெயராஜன் | In :

டென்சன் இல்லாமல் நீங்கள் இருக்க வேண்டுமா?
*உங்களை நீங்களே பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.
*உங்களைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருங்கள்.
*நீங்கள் நினைப்பதை விட நீங்கள் பெருமையுள்ளவர் என்பதே உண்மை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
*ஏதாவது குறைபாடு இருந்தாலும் அது கவலைக்குரியது அல்ல.நிவர்த்திக்க முடியும் என்பதை நம்புங்கள்.
*கவலைப் படுவதால் மன நிலையும் உடல் நிலையும் பாதிக்கப்படும் என்பதை உணருங்கள்.
*எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
*உணவு தவிர வாழ்விற்கு,இயற்கை அழகு,இசை,கலைகள் எல்லாம் தேவை என உணருங்கள்.
*நல்ல நண்பர்களைக் கொண்டிருங்கள்.
*நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும்.
*மகிழ்ச்சியாக இருப்பதே உங்கள் பிரதான விருப்பமாக இருக்க வேண்டும்.
*வாழ்க்கை வாழ்வதற்கே:வாழ்வதை நேசியுங்கள்.
*மகிழ்ச்சியாய் இருப்பதற்கு ஏற்றார்போல வாழ்வைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.

அலப்பறை

1

Posted on : Sunday, January 06, 2013 | By : ஜெயராஜன் | In :

இரண்டு குடிகாரர்கள் ஒரு மதுபானக் கடைக்கு வந்தனர்.நன்றாகக் குடித்து விட்டு இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.பேச்சு முடிவில் ஒருவன் சொன்னான்,''என் பெயர் ராமு.''அடுத்தவன்,''அட,என் பெயர் கூட சோமு,''என்றான்.
ராமு:நான் அடுத்த தெருவில்தான் வசிக்கிறேன்.
சோமு:அட,நானும் கூட அடுத்த தெருவில்தான் வசிக்கிறேன்.
ராமு:நான் அங்குள்ள அடுக்கு மாடி வீட்டில் மூன்றாவது தளத்தில் இருக்கிறேன்.
சோமு:அடடா,நாம் நெருங்கி வந்து விட்டோம்.நானும் மூன்றாவது தளத்தில்தான் வாழ்கிறேன்.
ராமு அப்படியா,என் வீட்டின் கதவிலக்கம் 303.
சோமு:என்ன ஆச்சரியம்!என் வீட்டில் எண்ணும் அதுதான்!
மூன்றாவது ஒரு நபர்:இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்?ஒன்றுமே புரியவில்லையே!
கடைப் பணியாள் :ஒவ்வொரு வாரமும் விடுமுறை நாளில் இவர்களோடு பெரிய ரோதனையாய்ப் போச்சு.இவர்கள் இருவரும் தகப்பனும்,மகனும்!.

சோகம்

0

Posted on : Sunday, January 06, 2013 | By : ஜெயராஜன் | In :

எந்த சம்பவமும் நம்மை சோகப் படுத்துவதில்லை.ஆனால் உண்மைகளை ஏற்க மறுத்து விட்டு நம் எதிர்கால விளைவுகளைப் பற்றி கற்பனையில் மூழ்கும்போது தான் சோகம் படிப் படியாக நம்மை கௌவிக் கொள்கிறது. குறிப்பிட்ட ஒரு சம்பவம் நம் சிந்தையைக் கிளப்பிவிட, சோகம் ஏற்படுகிறது. நிறைவேறாத விருப்பு வெறுப்புகள் ஏராளமாக இருப்பதால் ஏதோ ஒரு வகையில்  ஒவ்வொருவரும் கோபப் படுகிறார்கள்.ஒரு காரியம் நிறைவேறாது என்று தெரிந்தவுடன் முயற்சியைக் கைவிடுகிறோம்.அது நமக்குள்ளேயே புதைந்துபோய் சோகத்திற்கும் துயரத்திற்கும் வித்திட்டு விடுகிறது.உண்மைகளை ஏற்க மறுப்பதே பல பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது.கசப்பான முடிவுகளைத் தள்ளி போடுவதற்கு என்ன காரணம்?இனிமையான சூழ் நிலைகளை  மட்டுமே மனம் விரும்புகிறது. இது குழந்தைத் தனமானது.பக்குவமற்ற பார்வை.
நம்மைப் பற்றிய அப்பிப்பிராயத்தை இழப்பதுதான் வாழ்க்கையில் மிகப் பெரிய சோகம்.அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தேவையில்லாமல் கவலைப் பட்டு போலி வாழ்க்கை வாழ்வது அதைவிட பெரிய சோகம்.நாம் எதிர் பார்த்த முடிவு கிடைத்து விட்டால் அதை இரு கரம் நீட்டி வரவேற்கிறோம். எதிர்பார்ப்புக்குக் குறைவாகவோ,மாறுபட்டோ இருந்தால் நாம் ஒடுங்கி உடைந்து போகிறோம்.முடிவு எப்படி இருந்தாலும் ஒரே மன நிலையில் இருப்பதுதான் கர்ம யோகிக்கு அடையாளம்.

பட்டியல்

1

Posted on : Saturday, January 05, 2013 | By : ஜெயராஜன் | In :

இடி அமீன் என்ற ஒரு கொடூரமான சர்வாதிகாரி பற்றி அனைவருக்கும் தெரியும்.அவரைக் கண்டால் அந்த நாட்டு மக்கள் மட்டும் அல்ல.உலகமே நடுங்கியது.அவரைப் பற்றிய மிக மோசமான செய்தி என்னவென்றால் அவர்  மனித மாமிசம் சாப்பிடுபவர் என்பதுதான்.எப்போது அவர் தனி விமானத்தில் தான் சுற்றுவார்.ஒரு முறை அவர் பயணிகள் விமானத்தில் பயணிக்க நேர்ந்தது.பயணத்தின்போது உணவு வேளை வந்தது.விமானப் பணிப்பெண் பணிவுடன் அவர் அருகில் வந்து,''சாப்பிட என்ன வேண்டும்?''என்று கேட்டாள்.அவர் கோபமாக,''முதலில் பட்டியலைக் கொண்டு வா,''என்று ஆணையிட்டார்.அந்தப் பெண்ணும் விரைந்து சென்று உணவுப் பட்டியலை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தாள்.அதைப் பார்த்தவுடன் முகமெல்லாம் சிவந்து,அதைக் கிழித்து தூர எறிந்து விட்டு,''பயணிகளின் பட்டியலைக் கொண்டுவா,''என்றார்.சில பயணிகள் உடனே மயக்கம் அடைந்து விட்டனர்.

ஒரே ஒரு முறை

2

Posted on : Saturday, January 05, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஆராய்ச்சிக்கு விபரங்கள் தேடி கிராமத்திற்கு வந்தார்,ஒருவர்.ஊருக்குப் புதியவர் என்பதால் அவர் அந்த ஊரின் தலைவரிடம் அழைத்து செல்லப்பட்டார். பெரியவரும் அவரை வரவேற்று,அவருக்குத் தேவையான விபரங்கள் பற்றி விபரம் கேட்டார்.பேசி முடிந்தவுடன் பெரியவர் அவரிடம்,''நீங்கள் எங்களுக்குவிருந்தினராக வந்திருக்கிறீர்கள்.உங்களை உபசரிப்பது என் கடமை.சிறிது மது அருந்துகிறீர்களா?''என்று கேட்டார். புதியவர் உடனே,''ஒரே ஒரு முறை நான் மது அருந்தினேன்.உடனே மயக்கம் அடைந்து பெரும் பாடு பட்டேன்.அதிலிருந்து மதுவைத் தொடுவதில்லை,'' என்றார்.பெரியவரும்,''சரி சாப்பிடலாம் வாருங்கள்.அருமையான பிரியாணி இருக்கிறது.''என்று சொல்ல ,புதியவர்,''ஒரே ஒரு முறை நான் பிரியாணி சாப்பிட்டதும் வாந்தி எடுத்து விட்டேன்.அதிலிருந்து பிரியாணி என்றாலே எனக்கு ஒரு வெறுப்பு.''என்றார்.பின் ஏதோ இருந்ததை  சாப்பிட்டபின் ''வெற்றிலைபோடுகிறீர்களா?''என்றுகேட்க,''ஒரேஒருமுறைநான்வெற்றிலை
போட்டபோது தலை கிறுகிறுத்து விட்டது.எனவே வேண்டாம்,'' என்றார். வெறுத்தப்போன பெரியவர்,''சரி,சிறிது நேரம் பொழுது போக்காக சீட்டு விளையாடலாம்,''என்று சொல்ல.வந்தவரோ,''ஒரே ஒரு முறை நான் சீட்டு விளையாடினேன்.அப்போது கையிலிருந்த பணம் முழுவதும் போய் விட்டது. அதனால் அந்த விளையாட்டு எனக்கு பிடிக்காது,''என்றார். அப்போது ஒரு இளைஞன் வந்து புதியவர் அருகில் அமர்ந்தான்.வந்தவரும் பெரியவரிடம், ''இவன் என் மகன்,''என்று அறிமுகப் படுத்தினார்.பெரியவர் இப்போது பையனிடம் கேட்டார்,''நீங்கள் அவருக்கு ஒரே ஒரு பையன் என்று நினைக்கிறேன்,''பையனும் தலை அசைத்தான்.

சாதுரிய மனிதர்கள்.

0

Posted on : Friday, January 04, 2013 | By : ஜெயராஜன் | In :

சாதுரியமாக நடக்கக் கற்றுக் கொண்டவர்கள் தங்களைத் தலைவர்களாகவும் செல்வந்தர்களாகவும் உயர்த்திக்கொண்டு வளமான வாழ்க்கை வாழ்வார்கள். யாரும், தங்கள் மீது கருத்தைத் திணிப்பதை விரும்புவதில்லை.ஒருவன் தான் விரும்புவதை மற்றவர்களின் கருத்தாக அவர்களிடம் இருந்தே வெளிவரும்படி சாமர்த்தியமாகப் பேசுவதுதான்  சாதுரியம்.சரியான நேரத்தில் சரியானதைப் பேசுவதும், செய்வதும் சாமர்த்தியமே.மற்றவர்கள் கோபம் கொள்ளாதபடி தன கருத்துக்களை அமைதியாக மென்மையாக எடுத்து சொல்லும் கலையே சாதுரியம்.
சாதுரியக்காரர்கள் தங்கள் பேச்சினாலும்  செய்கையாலும் தாங்கள் சந்திக்கும் அனைவரையும் தங்களுக்கு உதவி செய்யும் நண்பர்களாக மாற்றிக் கொண்டு விடுவார்கள்.இவர்கள் யாருடைய மனமும் புண்படும்படி ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டார்கள்.யாருடைய சுய கௌரவத்தையும் பாதிக்கும்படியாக ஒரு சிறு செய்கை கூட செய்ய மாட்டார்கள்.மற்றவர்களின் உணர்வுகளையும் அபிப்பிராயங்களையும் மதித்து நடப்பார்கள்.இப்படிப்பட்டவர்களுடன் பேசி மகிழும் சந்தர்ப்பத்தை மற்றவர்கள் ஆவலுடன் எதிர் பார்ப்பார்கள். இவர்களுடைய முயற்சிகளுக்கு ஒத்துழைக்க அனைவரும் ஓடி வருவார்கள்.
சாதுரியமாக நடந்து கொள்வது என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைக்கும் வரப்பிரசாதம் அல்ல.கடுமையான பயிற்சி கொண்டு அனைவரும் அடைய முடியும்.தன வாயிலிருந்து ஒரு வார்த்தை வருமுன் ,ஒரு செய்கை செய்யுமுன்,அவற்றின் எதிர் விளைவுகள் எப்படி இருக்கும் என்று சிந்தித்து கெடுதல் தரும் வார்த்தைகளையும் செயல்களையும் தவிர்ப்பவர்கள் அனைவரும் சாதுரிய மனிதர்களே!

மனிதனும் விலங்கும்

0

Posted on : Friday, January 04, 2013 | By : ஜெயராஜன் | In :

மாறுபட்ட கருத்துடையவர்களும் ஒருங்கிணைந்து வாழ முடியும் என்பதனை விளக்குவதற்காக ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒரே  கூட்டில் ஒரு புலியும் முயலும் சேர்த்து வைக்கப் பட்டிருந்தன.இந்த அதிசயக்  காட்சியைக் காண தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.புலி படுத்திருக்கும்.அதன் வயிற்றில் சாய்ந்தவண்ணம் முயல் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும்.ஒரு பெண்மணி இதை வியப்புடன் பார்த்து விட்டு நிர்வாகியிடம் சென்று, ''இது எப்படி சாத்தியம்? எப்படி இவ்வாறு பயிற்சி கொடுத்தீர்கள்?''என்று ஆர்வமுடன் கேட்டார்.அன்று அந்த நிர்வாகி பணியிலிருந்து ஓய்வு பெரும் நாள் எனவே அவர் அந்தப் பெண்ணிடம் மெதுவாக,''இதில் பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை.தினசரி நாங்கள் ஒரு ஆட்டை மாற்றிவிடுவோம்,இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்,''என்றார்.
புலி விலங்குகளை அடித்துக் கொல்லும் கொடிய மிருகம்தான்.ஆனால் அது பசித்தால் மட்டுமே தேவைக்கேற்ப விலங்குகளைக் கொல்லும்.பசி தீர்ந்தால் அது சாதுவாகிவிடும்.மனித இனம் மட்டும் தான் காரணம் ஏதுமின்றி பிற மனிதர்களைக் கொல்லும் குணமுடையது..ஒரு அணுகுண்டைப் போட்டு பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொல்லுவான்.ஹிட்லர் போன்ற மனிதர்கள் தான் இனத்தின் பேரால் பல லட்சம் மனிதரைத் தீர்த்துக் கட்ட இயலும்.
ஒரு உணவு விடுதிக்கு திடீரென ஒரு சிங்கமும் முயலும் சேர்ந்து வந்தன.அனைவரும் அரண்டு போய் நின்றபோது விடுதி மேலாளர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முயலிடம் சென்று,''நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?உங்கள் நண்பர் என்ன சாப்பிட விரும்புகிறார்?''என்று கேட்க முயல் சிரித்துக் கொண்டே சொன்னது,''இங்கு நான் மட்டும் தான் சாப்பிட வந்தேன்.என் நண்பர் பசியுடன் இருந்தால் நான் உடன் வந்திருக்க முடியுமா?நானே உணவாகியிருப்பேனே!''என்று சொன்னதாம்.

பொன்மொழிகள் 37

1

Posted on : Thursday, January 03, 2013 | By : ஜெயராஜன் | In :

அவரவர் அருகதைக்கேற்ப அனைவரையும் நடத்தினால்,கசையடியிலிருந்து தப்புவோர் எவரும் இருக்க முடியாது .
******
புகழும்போது வெட்கப்பட்டும்,அவமானப்படுத்தப் படும்போது அமைதியாகவும் இருந்து பழக்கப் பட்டவன் எவனோ அவனே  மேம்பட்டவன்.
******
பணம் தலை குனிந்து பணியாற்றும்:அல்லது
தலை குப்புறத் தள்ளிவிடும்.
******
நம்பிக்கைவாதி  ரோஜாவைப் பார்க்கிறான்,முட்களை அல்ல.
அவ நம்பிக்கையாளன் முட்களைப் பார்க்கிறான்,ரோஜாவை அல்ல.
******
சொற்கள் வெறும் நீர்க்குமிழிகள்.
செயல்கள் தங்கத் துளிகள்.
******
செல்வத்தை மதிப்பு மிக்க பொருளாய் இறைவன்  நினைத்திருந்தால், திருத்தவே முடியாதபடி  வாழ்ந்து வரும் தரங்கெட்ட கயவர்களிடம் அச்செல்வத்தை சேர்த்திருப்பாரா?
******
நீதியானது அரக்கனைக்கூட தவறாகத் தண்டித்து விடக்கூடாது.
******
மனிதன் குறையுடையவன் மட்டும் அல்ல,குறை காண்பவனும் ஆவான்.பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன்.தன்  குறையைக் காண்பவன் முழு மனிதன்.
******
உலகில் அடக்க முடியாத  அசுரன் அலட்சியம்.
******
பண்போடு பொருந்தாத அனுதாபம் எல்லாம் மறைமுகமான சுயநலமே ஆகும்.
******
காரணம் இல்லாமல் யாரும் கோபப் படுவதில்லை.ஆனால் அது சரியான காரணமா என்பதுதான் கேள்வி
******