உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஒரே ஒரு முறை

2

Posted on : Saturday, January 05, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஆராய்ச்சிக்கு விபரங்கள் தேடி கிராமத்திற்கு வந்தார்,ஒருவர்.ஊருக்குப் புதியவர் என்பதால் அவர் அந்த ஊரின் தலைவரிடம் அழைத்து செல்லப்பட்டார். பெரியவரும் அவரை வரவேற்று,அவருக்குத் தேவையான விபரங்கள் பற்றி விபரம் கேட்டார்.பேசி முடிந்தவுடன் பெரியவர் அவரிடம்,''நீங்கள் எங்களுக்குவிருந்தினராக வந்திருக்கிறீர்கள்.உங்களை உபசரிப்பது என் கடமை.சிறிது மது அருந்துகிறீர்களா?''என்று கேட்டார். புதியவர் உடனே,''ஒரே ஒரு முறை நான் மது அருந்தினேன்.உடனே மயக்கம் அடைந்து பெரும் பாடு பட்டேன்.அதிலிருந்து மதுவைத் தொடுவதில்லை,'' என்றார்.பெரியவரும்,''சரி சாப்பிடலாம் வாருங்கள்.அருமையான பிரியாணி இருக்கிறது.''என்று சொல்ல ,புதியவர்,''ஒரே ஒரு முறை நான் பிரியாணி சாப்பிட்டதும் வாந்தி எடுத்து விட்டேன்.அதிலிருந்து பிரியாணி என்றாலே எனக்கு ஒரு வெறுப்பு.''என்றார்.பின் ஏதோ இருந்ததை  சாப்பிட்டபின் ''வெற்றிலைபோடுகிறீர்களா?''என்றுகேட்க,''ஒரேஒருமுறைநான்வெற்றிலை
போட்டபோது தலை கிறுகிறுத்து விட்டது.எனவே வேண்டாம்,'' என்றார். வெறுத்தப்போன பெரியவர்,''சரி,சிறிது நேரம் பொழுது போக்காக சீட்டு விளையாடலாம்,''என்று சொல்ல.வந்தவரோ,''ஒரே ஒரு முறை நான் சீட்டு விளையாடினேன்.அப்போது கையிலிருந்த பணம் முழுவதும் போய் விட்டது. அதனால் அந்த விளையாட்டு எனக்கு பிடிக்காது,''என்றார். அப்போது ஒரு இளைஞன் வந்து புதியவர் அருகில் அமர்ந்தான்.வந்தவரும் பெரியவரிடம், ''இவன் என் மகன்,''என்று அறிமுகப் படுத்தினார்.பெரியவர் இப்போது பையனிடம் கேட்டார்,''நீங்கள் அவருக்கு ஒரே ஒரு பையன் என்று நினைக்கிறேன்,''பையனும் தலை அசைத்தான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

ஹா!ஹா!ஹா! நல்ல காமெடி!

புரிந்து கொண்டதற்குப் பாராட்டுக்கள்!

Post a Comment