உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

முள்ளில் ரோஜா

0

Posted on : Thursday, January 10, 2013 | By : ஜெயராஜன் | In :

உங்களுக்கென்று ஒரு திறமை,அந்தத் திறமையை வெளிக் கொணர கடும் உழைப்பு,இவை உங்களிடம் இருந்து முன்னுக்கு வர விரும்புகிறீர்களா? உங்களுக்கு ஒரு சிறு யோசனை:சின்னச் சின்ன விஷயங்கள் உங்களை சிறைப்படுத்தாமல்,பாதிப்பிற்கு ஆளாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
காலில் முள் தைத்தால் காலையா வெட்டி விடுகிறோம்?முள்ளைத் தூக்கி
எறிந்து விட்டு நடப்பதில்லையா?அதுபோல மற்றவர்கள்.வார்த்தைகள் மூலமாகவோ,செயல்கள் மூலமாகவோ உங்கள் இதயத்தில் முள் தைத்திருந்தால் அந்த நிமிடமே அதை எடுத்து வீசிவிட்டு வாழ்க்கையில் வெற்றி நடை போடுங்கள்.கண்ணில் தூசி விழுந்தால் உறுத்தட்டும் என்று விட்டு விடுவோமா?அந்த நிமிடமே எடுத்துவிட்டு பார்ப்பதில்லையா? அதுபோல தூசுக்கு சமமான சின்ன சின்ன விஷயங்கள் உங்களை உறுத்த விடாமல் ஊதித் தள்ளிவிட்டு அறிவுக் கண்ணால் உலகை நோக்குங்கள்.
சாதனை புரிய விரும்புபவர்கள், தங்களைப் பாதிக்கக் கூடிய சின்ன விசயங்களை முதலில் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
*மூட் அவுட் ஆவது.கரண்ட் கட்டா,நமக்குப் பிடிக்காததை யாராவது சொல்லி விட்டார்களா,சகுனம் சரியில்லையா,உடனே மூட் அவுட் ஆவது முன்னேற்றத்தை மட்டுமல்ல,உடல் நலத்தையும் பாதிக்கும்.
*சின்ன சின்ன ஏமாற்றங்களுக்கும் சோர்ந்து போவது.எதி பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டால் ஏமாற்றம் குறையும்.எதெற்கெடுத்தாலும் உங்களை பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள்.பாராட்ட மறந்தால் ஏமாற்றமடைந்து எரிச்சல் அடையாதீர்கள்.
*மற்றவர்கள் கூறும் குறைகளால் பாதிக்கப்படுவது.குறை கூறுபவர்களின் தகுதியைத் தீர்மானியுங்கள்.தகுதியானவர் என்றால் குறையை ஆராய்ந்து சரி செய்யுங்கள்.தகுதியற்றவர் என்றால் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுச் செல்லுங்கள்.
நீங்கள் செய்யப் போகும் செயல்களையோ,சாதனைகளையோ முன் கூட்டி சொல்லாதீர்கள்.செய்ய முடியாமல் போனால் வரும் பாதிப்பைவிட அடுத்தவர்களின் கேலி உங்களை வெகுவாகப் பாதிக்கும்.
உங்களை நீங்களே நேசியுங்கள்.உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.உங்கள் குறைகளை நீங்களே யோசித்து தீர்த்துக் கொள்ளுங்கள்.
வாழ்க்கைப் பயணத்தில் சாதனை சிகரத்தை அடைய,பல வார்த்தை முட்களையும்,கேலிக் கற்களையும்,தோல்விப் பள்ளங்களையும் சந்திக்க வேண்டி வரும்.உங்கள் வாழ்க்கைப் பூந்தோட்டத்தில் ரோஜாக்களுக்கிடையே கிடக்கும் முட்களுக்காக வருந்தாதீர்கள்.முட்களுக்கிடையே பூத்திருக்கும் ரோஜாக்களுக்காக மகிழ்ச்சி அடையுங்கள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment