உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சோகம்

0

Posted on : Sunday, January 06, 2013 | By : ஜெயராஜன் | In :

எந்த சம்பவமும் நம்மை சோகப் படுத்துவதில்லை.ஆனால் உண்மைகளை ஏற்க மறுத்து விட்டு நம் எதிர்கால விளைவுகளைப் பற்றி கற்பனையில் மூழ்கும்போது தான் சோகம் படிப் படியாக நம்மை கௌவிக் கொள்கிறது. குறிப்பிட்ட ஒரு சம்பவம் நம் சிந்தையைக் கிளப்பிவிட, சோகம் ஏற்படுகிறது. நிறைவேறாத விருப்பு வெறுப்புகள் ஏராளமாக இருப்பதால் ஏதோ ஒரு வகையில்  ஒவ்வொருவரும் கோபப் படுகிறார்கள்.ஒரு காரியம் நிறைவேறாது என்று தெரிந்தவுடன் முயற்சியைக் கைவிடுகிறோம்.அது நமக்குள்ளேயே புதைந்துபோய் சோகத்திற்கும் துயரத்திற்கும் வித்திட்டு விடுகிறது.உண்மைகளை ஏற்க மறுப்பதே பல பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது.கசப்பான முடிவுகளைத் தள்ளி போடுவதற்கு என்ன காரணம்?இனிமையான சூழ் நிலைகளை  மட்டுமே மனம் விரும்புகிறது. இது குழந்தைத் தனமானது.பக்குவமற்ற பார்வை.
நம்மைப் பற்றிய அப்பிப்பிராயத்தை இழப்பதுதான் வாழ்க்கையில் மிகப் பெரிய சோகம்.அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தேவையில்லாமல் கவலைப் பட்டு போலி வாழ்க்கை வாழ்வது அதைவிட பெரிய சோகம்.நாம் எதிர் பார்த்த முடிவு கிடைத்து விட்டால் அதை இரு கரம் நீட்டி வரவேற்கிறோம். எதிர்பார்ப்புக்குக் குறைவாகவோ,மாறுபட்டோ இருந்தால் நாம் ஒடுங்கி உடைந்து போகிறோம்.முடிவு எப்படி இருந்தாலும் ஒரே மன நிலையில் இருப்பதுதான் கர்ம யோகிக்கு அடையாளம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment