உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

உல்லாசப் பயணம்

0

Posted on : Tuesday, January 08, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு பையன் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்த ஒரு உல்லாசப் பயணத்துக்குப் புறப்பட்டான்.அவனது தாய் அவனிடம்,''பயணத்தின் போதுஒழுங்காக நடந்து கொள்.பயணத்தைஉல்லாசமாக அனுபவி,''என்றார்.பையன் கேட்டான், ''இரண்டும் எப்படியம்மா முடியும்?ஏதாவது ஒன்றுதானே இயலும்!''
********
பையன் பள்ளியிலிருந்து மாலை வீட்டுக்கு வரும்போது மிகுந்த உற்சாகத்துடன் வந்தான்.தாய் அவனிடம் கேட்டாள்,''பள்ளிக்கு செல்லும் போது அழுது  கொண்டே சென்றாயே,இப்போது மகிழ்வுடன் இருக்கிறாய். பள்ளிக்கூடம் மிகப் பிடித்து விட்டதா?''பையன் சொன்னான்,''திரும்ப வர மிகப் பிடித்திருக்கிறது அம்மா.''
********
குடிகாரன் ஒருவன் மதுபானக் கடைக்கு வந்து ஐந்து கிளாஸ் குடித்தான். அவனுக்கு திருப்திஏற்படவில்லை.திரும்ப நான்கு கிளாஸ் குடித்தான். அப்போதும் அவனுக்கு சரியாக இல்லை.அடுத்து மூன்று கிளாஸ்  குடித்தான். எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.இன்னும் இரண்டு கிளாஸ் கேட்டு குடித்தான். ஊ ..ஹூம்,கடைசியாக ஒரு கிளாஸ் வாங்கிக் குடித்தான்.இப்போது போதை நன்றாக ஏறி விட்டது.அவன் அங்கலாய்த்தான்,''என்ன கொடுமைடா சாமி,ஐந்து கிளாஸ் குடித்தபோது போதை வரவில்லை. நான்குக்கும், மூன்றுக்கும் இரண்டுக்கும் வரவில்லை.இப்போது ஒரே கிளாசில் போதை வந்துவிட்டதே!என்ன சரக்கோ!''
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment