உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சரியான பாதை

0

Posted on : Tuesday, January 08, 2013 | By : ஜெயராஜன் | In :

புத்திசாலி ஒருவனின் அறிவை சோதிக்க எண்ணிய மன்னன் அவனை சிறையில் அடைத்து அவன் தப்பிக்க சில நிபந்தனைகளை விதித்தான்.
*சிறையிலிருந்து வெளியேற இரு வாசல்கள் உள்ளன.ஒவ்வொரு வாசலிலும் ஒரு காவல்காரன் உண்டு.அவர்களுள் ஒருவன் உண்மையே பேசுவான்.மற்றவன் பொய்யே பேசுவான்.
*ஒரு கதவின் வழியே வெளியேறினால் கடலில் விழுந்து இறந்து போக நேரிடும்.மற்றதின் வழியே வெளியேறினால் தப்பிக்கலாம்.
*காவலாளிகள் இருவருக்கும் சரியான வாசல் எது என்பது தெரியும். அதேபோல யார் உண்மை பேசுபவர் ,யார் பொய் பேசுபவர் என்பதும் ஒருவருக்கொருவர் தெரியும்.ஆனால் புத்திசாலிக்கு இந்த விபரங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.
*புத்திசாலி அவ்விரு காவலாளிகளில் ஒருவரிடம் மட்டும் ஒரே ஒரு கேள்வி கேட்கலாம்.
இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு புத்திசாலி தப்பி வெளியே வந்து விட மன்னன் அவனை மிகவும் பாராட்டி பரிசளித்தான்.அவன் யாரிடம் என்ன கேள்வி கேட்டு தப்பினான்?

விடை: புத்திசாலி  ஒரு காவலாளியிடம்,''நான் தப்பிச்செல்ல சரியான வாசல் எது என்று உன் உடன் உள்ள அந்தக் காவலாளியிடம் கேட்டால்  அவன் எந்த வாசலைக் காட்டுவான்?''என்று கேட்டான்.அவன் காட்டிய வாசலைத் தவிர்த்து அடுத்த வாசல் வழியாக சென்று தப்பினான்.புரியவில்லையா?      கேள்வி கேட்கப்பட்ட காவலாளி உண்மை பேசுபவன் என்று வைத்துக் கொள்வோம்.அவன்,''அந்தக் காவலாளி,கடலுக்கு செல்லும் வழியைக் காட்டுவான்,''என்று உண்மையை சொல்லுவான்.எனவே அதைத் தவிர்த்து விட்டான்.
கேள்வி கேட்கப்பட்ட காவலாளி பொய் பேசுபவன் என்று வைத்துக் கொள்வோம்.அவன்,அடுத்த காவலாளி சரியான வழியைக் காட்டுவான் என்று தெரிந்திருந்தும் பொய்யாகத் தவறான வழியைக் காட்டுவான்.எனவே அதைத் தவிர்த்து விட்டான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment