உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

புரிந்துகொள்ள வேண்டும்.

0

Posted on : Friday, April 22, 2011 | By : ஜெயராஜன் | In :

பிறர் வாயிலிருந்து வரும் சொற்களைக் காதால் கேட்டால் மட்டும் போதாது.உள் பொருளையும் உணர்ச்சிகளையும் உற்று நோக்க வேண்டும்.புத்தி கூர்மையோடு புரிந்து கொள்ள வேண்டும்.பல்வேறு காரணங்களுக்காக,உண்மையை  மறைக்கும் போர்வையாக வெளிச் சொற்கள் இருக்கின்றன.இந்தச் சொற்களுக்கு அப்படியே பொருள் கொண்டால் வீண் கோபமும் வேண்டாத மன வருத்தமுமே மிஞ்சும்.சொற்கள் என்னும் முகமூடி பல வகையில் உள்ளது.
**வழக்கமாகக் கோபப்படாத ஒரு சாதாரண விசயத்திற்காக ஒருவர் திடீரெனக் கோபப்பட்டால் வேறு ஒரு கோபம் திசை திரும்பியிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
**நம்மிடம் சொல்லப்பட அவசியம் இல்லாத ஒரு விஷயத்தை ஒருவர் நம்மிடம் சற்று உரக்கப் பேசினால் அவர் அந்தத் தகவலை பக்கத்திலே உள்ள ஒருவரிடம் நேரிடையாய்ச் சொல்லாது நம் மூலம் சாடையாய்ச் சொல்கிறார் என்று பொருள்.
**சிலர் தம் ஆற்றாமையைக் கொட்டித் தீர்ப்பதற்காக பொரிந்து தள்ளுவார்கள்.அது நம்மைத்  தாக்குவதாக நினைத்துப் பதில் சொல்லவோ அவருக்கு சமாதானமான ஒரு காரணத்தை சொல்லவோ அவசியம் இல்லை.பேசியவர் தன சுமை இறங்கியதும் சாதாரணமாகிவிடுவார்.
**ஒரு சிலருக்கு எதையும்,ஏன்,பாராட்டையும் கூடக் கோபத்தின் வாயிலாகத்தான் வெளிப்படுத்தத் தெரியும்.அவர்களின் கடுமைக்குப்பின் ஆழமான பாராட்டுதலும் அன்பும் ஒளிந்திருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
**நாம் ஒரு சில அனுபவங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது  சிலர் குறுக்கிட்டு அதே போன்ற தன அனுபவத்தை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.இதை அவருடைய அகங்கார மாகக் கருதாது தனக்கும் அதே மாதிரி அனுபவம் இருக்கிறது என்பதைத் தெரிவித்து நம் நட்பைப் பலப்படுத்த விரும்புகிறார்  என்று கருத வேண்டும்..ஆனால் இதற்கு  பொறுமை வேண்டும்.
சொற்களைக் கேளுங்கள்.
பொருள்களைப் புரிந்து கொள்ளுங்கள்.
நமக்கு அனைவரிடமும் மரியாதை கிடைக்கும்.

உண்டு

0

Posted on : Wednesday, April 20, 2011 | By : ஜெயராஜன் | In :

விளையாடி விளையாடி இறந்து போனவர்கள் உண்டு:
சாப்பிட்டு சாப்பிட்டு இறந்து போனவர்கள் உண்டு:
குடித்துக் குடித்து இறந்து போனவர்கள் உண்டு.ஆனால்
சிந்தித்து சிந்தித்து இறந்து போனவர்கள் யாருமில்லை.
**********
குறுகலாகப் பார்த்தால் குறுகலாகத் தெரியும்.
மட்டமாகப் பார்த்தால் மட்டமாகத் தெரியும்.
சுயநலத்தோடு பார்த்தால் சுயநலமாகத் தெரியும்.
பரந்த,தாராளமான சிநேகிதமான மனத்தோடு
பாருங்கள்.அற்புதமான மனிதர்கள் உங்கள்
கண்ணில் படுவார்கள்.
**********
துரதிருஷ்டம் இரண்டு வகை:
ஒன்று நமக்கு வரும் துரதிருஷ்டம்.
மற்றது பிறருக்கு வரும் அதிருஷ்டம்.
**********
உயர்ந்த மனிதன் மூன்று நெறி அம்சம் உடையவன்.
அவன் ஒழுக்கமானவன்.
ஆகவே அவன் கவலைகளிலிருந்து விடுபட்டிருக்கிறான்.
அவன் அறிவாளி:
ஆகவே குழப்பங்களிலிருந்து விடுபட்டிருக்கிறான்.
அவன் தைரியசாலி.
ஆகவே அச்சத்தினின்றும் விடுபட்டிருக்கிறான் .
**********
ஒரு மனிதனுக்கு என்ன நடந்ததோ
அது அனுபவமாகி விடாது.
தனக்கு நடந்ததை வைத்து அவன் என்ன
செய்கிறான் என்பதுதான் அனுபவம்.
**********
அவனுடைய வேலையை நான் இன்னும் நன்றாகச் செய்வேனே,இவனுடைய வேலையை இன்னும் பிரமாத மாகச்  செய்வேனே என்று எண்ணி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காமல் உங்கள் கையிலுள்ள வேலையை இன்னும் நன்றாகச் செய்யுங்கள்.
**********

ஹஹஹா

0

Posted on : Wednesday, April 20, 2011 | By : ஜெயராஜன் | In :

செய்தித்தாள் வாசிக்கும் ஒருவர்: கோவையில் முக்கிய நபர் கைது.
அருகில் இருப்பவர்: அது ஏன்,மதுரையில் முக்கினா கைது செய்ய மாட்டாங்களா?
**********
''அந்த டாக்டர் கால் ஆணி எடுப்பதில் கெட்டிக்காரர்.''
'அப்படீன்னா மீதி முக்கால் ஆணியை யார் எடுப்பார்கள்?'
**********
''ஆஹா,இதைவிட சிறந்த ஓவியத்தை என்னாலேயே படைக்க முடியாது,''என்று பெருமை பொங்கச் சொன்னான் ஒரு ஓவியன் தன நண்பனிடம்.'தன்னம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடாதே!'என்று அவன் தோளில் தட்டி ஆறுதல் படுத்தினான் நண்பன்.
**********
''ஜலதோசத்திற்கு ஜன்னல் அருகே படுக்கச் சொன்னேனே,செய்தாயா?''
'நேற்று ஜன்னல் அருகே தான் தூங்கினேன்.'
''ஜலதோஷம் போயிடுச்சா?''
'ஜலதோஷம் அப்படியே இருக்கு ஆனால் என் வாச்சும் பர்சும் தான் போயிடுச்சி.'
**********
ஒருவன் தன டாக்டர் நண்பருடன் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.அப்போது அவன்,''ஏன் டாக்டர்,வருத்தமாய்  இருப்பதுபோலத் தெரிகிறதே?என்று கேட்டான்.டாக்டர் சொன்னார்,''இன்று ஓரு தவறு செய்து விட்டேன்.ஒரு நோயாளிக்கு தவறான மாத்திரையை எழுதி  விட்டேன்.''நண்பன்,''அது என்ன ஆபத்தானதா?''என்று கேட்டான்.டாக்டரும் கவலையுடன் சொன்னார்,''இல்லை,அவன் ஒரு பெரிய பணக்காரன் இந்த மாத்திரை சாப்பிட்டால் இரண்டு நாளில் குணமாகிவிடுவானே?''
**********
ஒருவன் தன நண்பனிடம் சொன்னான்,''மச்சி,எனக்கு நேர் எதிரிடையான ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்.'' நண்பன் சொன்னான்,''அது ஒன்றும் சிரமமில்லை.எனக்குத் தெரிந்தவரின் பெண் ஒருத்தி இருக்கிறாள்.அவள் நல்ல அழகி,சுறுசுறுப் பானவள் ,புத்திசாலி.நாகரீகம் தெரிந்தவள்.அவளைப் பார்க்கலாம்.''
**********

உடைந்தது

0

Posted on : Tuesday, April 19, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு புதுக் கவிதை:

கண்ணாடி  டம்ளரை
குழந்தை   அழ அழ
அதன்  கையிலிருந்து  பிடுங்கி
உயரே வைத்தாள்   அம்மா.
உடைந்து போயிற்று
குழந்தையின் மனது!

அபிப்பிராயம்

0

Posted on : Tuesday, April 19, 2011 | By : ஜெயராஜன் | In :

பிறர் அபிப்பிராயத்திற்காக உங்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டே இருக்காதீர்கள்.பிறர் நம் அபிப்பிராயங்களை ஏற்கவில்லை என்பதற்காக இடிந்து போகாதீர்கள்.பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக ஒரு காரியம் செய்துவிட்டு பின்னால் அவர்கள் நம்மை இப்படி செய்ய வைத்து விட்டார்களே என்று வருத்தப்படாதீர்கள்.முதலிலேயே  இயலாது என்றால் முடியாது எனத் தைரியமாய்க் கூறிவிடுங்கள்.எதற்கும் மன்னிப்புக் கேட்கும் மனோபாவம் கொள்ளாதீர்கள்.எதற்கும் உங்களையே நொந்து கொண்டு,தன நிலைக்குப் பரிதாபப்பட்டு சித்திரவதை செய்து கொள்ளாதீர்கள்.பிறர் உங்களைக் குழந்தையாய்ப் பாவித்து உச்சி மோந்து,சீராட்டி,பாராட்டி,தாலாட்டும் நிலையில் உங்களைப் பிறரிடம் பறிகொடுக்காதீர்கள்.

தெரிந்துகொள்ள

0

Posted on : Monday, April 18, 2011 | By : ஜெயராஜன் | In :

பீஹாரின் பழைய பெயர் மகத நாடு.பௌத்த மதம் பரவிய பிறகு மகத நாடெங்கும் பௌத்த  விஹாரங்கள் தோன்றின.விகாரங்கள்  நிறைந்தது விகார் ஆயிற்று.அதுவே பின்னர் பீஹார் எனத் திரிந்து விட்டது.
**********
VOTE என்பது இலத்தீன் மொழியின் VOTUM என்ற சொல்லிலிருந்து வந்தது.இதற்கு VOW,PROMISEஎன்று பொருள்.நமக்கு நல்லது செய்வதாக உறுதி அளிப்பவர்களுக்கு நாமும் வாக்கு அளிப்பதாகக் கூறுகிறோம்.
**********
தாய்லாந்து என்பதற்கு சுதந்திர பூமி என்று பொருள்.
**********
கேரளம் என்ற பெயர் கேரா என்ற சொல்லிலிருந்து வந்தது.கேரா என்ற சொல்லுக்கு தேங்காய் என்று பொருள்.
**********
பைஜாமா  என்பது பாரசீகச் சொல்.பை என்றால் கால்.ஜாமக் என்றால் துணி.
**********
மிசோரம் என்ற பெயர் எப்படி வந்தது  தெரியுமா?மி என்றால் மனிதன்.ஜோ என்றால் மலை.மலையில் வாசம் செய்யும் மனிதன் என்று பொருள்.
**********
சோவியத் என்ற ரஷ்யச் சொல்லுக்கு அறிவுரை என்று பொருள்.
**********
சயிண்டியா என்ற லத்தீன் சொல்லுக்கு மிகப் பரந்த அறிவு என்று பொருள்.இதிலிருந்துதான் அறிவியலுக்கு SCIENCE என்ற ஆங்கில வார்த்தை வந்தது.
**********
மொசைக் என்ற ஆங்கில சொல்லுக்கு சிறு கற்களால் உருவாக்கப்பட்ட ஓவியம் என்று பொருள்.
**********
நவநீதம் என்றால் புதிதாக எடுக்கப்பட்டது என்று பொருள்.
**********
கிரேக்க மொழியில் DEMOS என்றால் மக்கள் என்றும் ,KRATOS என்றால் ஆட்சி என்றும் பொருள்.இந்த இரு வார்த்தைகளிலிருந்து வந்ததுதான் DEMOCRACY.
**********
PARADISE என்பது ஒரு பெர்சியச்சொல்.இதற்கு இன்பத்தோட்டம் அல்லது மான் பூங்கா என்று பொருள்.
**********

சுலபமான வேலை

0

Posted on : Monday, April 18, 2011 | By : ஜெயராஜன் | In :

குழந்தை வளர்ப்புதானே! அது ரொம்ப சுலபமான வேலை!குழந்தை நம்முடையது அல்ல:பிறருடையது என்று பாவித்துக் கொள்ள வேண்டும்.அவ்வளவுதான்!பிறருடைய குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பது தெரியாதவன் எவனுமே இவ்வுலகில் இல்லை!
**********
பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று நினைக்கத் தொடங்கினால் அவர்கள் உங்களைப் பற்றி நினைக்காததை  எல்லாம் நினைப்பதாக நீங்களே நினைத்துக் கொள்வீர்கள்.
**********
அன்பு டெலஸ்கோப  வழியாக எதையும் பெரிதாகப் பார்க்கிறது.பொறாமை மைக்ராஸ்கோப  வழியாகச் சின்னதாகப் பார்க்கிறது.
**********
இரண்டு பொருட்களை நாம் இழந்த பிறகுதான் அதன் மதிப்பை உணர்கிறோம்.ஒன்று ஆரோக்கியம்,மற்றொன்று  இளமை.
**********
வீரம் உள்ளவன் என்று பாராட்டப்படுபவன் சாதாரண மனிதனைக் காட்டிலும் தைரியசாலி அல்ல.சாதாரண மனிதனைக் காட்டிலும் பத்து நிமிடம் கூடுதலாகத் தாக்குப் பிடிக்கிறான்.அவ்வளவுதான்.
**********
அனுபவம் என்பது ஒரு புது விதமான ஆசிரியர்.அது பாடங்களைக் கற்றுத் தந்தபின் தேர்வு வைப்பதில்லை.தேர்வின் மூலம் தான் பாடங்களைக் கற்றுத் தருகிறது.
**********
வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற அளவுக்கு இன்பங்களும் மடிந்தே ஆக வேண்டும் என்ற அளவுக்குத் துன்பங்களும் சம விகிதத்தில் கலந்ததே இவ்வுலகம்.
**********

துன்பம்

0

Posted on : Sunday, April 17, 2011 | By : ஜெயராஜன் | In :

துன்பத்தை மகிழ்ச்சியாக அனுபவிப்பது எப்படி?முதலில் நீங்கள் துன்பத்திலிருந்து தப்பிச்செல்ல எண்ணாமல்,அது உங்களிடம் இருப்பதற்கு அனுமதித்தால்,அதை சந்திக்கத் தயாராக இருந்தால்,அதை எப்படியாவது மறந்து விட வேண்டும் என்று முயற்சி செய்யாமல் இருந்தால் அப்போது நீங்கள் மாறுபட்டவர் ஆகிறீர்கள்.துன்பம் இருக்கும்.ஆனால் அது உங்கள் வெளியே இருக்கும்.அது உங்கள் துன்பமாயிராது.யாருக்கோ நடப்பது போலத் தோன்றும்.ஒரு மெல்லிய இன்பம் உங்களுக்குள் பரவ ஆரம்பிக்கும்.ஏனெனில் நீங்கள் உண்மையில் இன்பமயமானவர்கள்.துன்பத்தை நடு நிலையுடன் பாருங்கள்.என்ன துன்பம்,அது ஏன் வந்தது என்று உணர்ச்சி வசப்படாமல்  பாருங்கள்.அதிலிருந்து தப்பி ஓட நினைக்காதீர்கள்.மனமானது,''துன்பத்தைப் பாராதே,தப்பி ஓடிவிடு ''என்றுதான் கூறும்.ஆனால் தப்பி ஓடி விட்டால் ஒருபோதும் மகிழ்வுடன் இருக்க முடியாது.

கடவுள் இருக்கிறாரா?

0

Posted on : Sunday, April 17, 2011 | By : ஜெயராஜன் | In :

ராமகிருஷ்ண  பரமஹம்சர் அன்பு மயமானவர். அவருக்கு எழுதப் படிக்க தெரியாது.அவருக்கு மிகுந்த புகழ் இருந்தது.கேசவசந்திரசென் என்பவர்  அப்போது இந்தியாவிலே சிறந்த ஒரு அறிவாளியாக இருந்தார்.அவர் படிக்காத ராமகிரிஷ்ணருக்கு இருந்த புகழ் கண்டு பொறாமை கொண்டு அவரிடம் வாதம் செய்து அவருக்கு ஒன்றும் தெரியாது என்று நிரூபிக்கக் கருதி அவர் இருக்கும் இடம் தேடி சென்றார்.எல்லோருமே  ராமகிருஷ்ணர் தோல்வி அடைவது உறுதி என்று கருதினர்.பரமஹம்சரின் சீடர்களுக்கு பயம் வந்துவிட்டது.ஆனால் குருவோ சிரித்துக் கொண்டிருந்தார்.சென்,''கடவுள் இல்லை''என்பதற்கான வாதங்களை எடுத்துக் கூற ஆரம்பித்தார்.பின் அவர் ராமகிருஷ்ணரிடம்,''கடவுள் இருக்கிறாரா?''என்று கேட்டார்.அவரோ சென் சொல்ல விரும்புவதை எல்லாம் மொத்தமாக சொல்ல சொன்னார்.சென் வாதங்களை சொல்லிக் கொண்டே போக பரமஹம்சரோ வெகுவாக அதை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார்.அவ்வப்போது 'பிரமாதம்,பிரமாதம்!சரியாகச் சொன்னீர்கள்!'என்று பாராட்டிக் கொண்டிருந்தார்.சென்னுக்கோ ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் ஒன்றும் புரியவில்லை.நீண்ட நேர உரைக்குப் பின் அவர் பரமஹம்சரிடம்,''இப்போது சொல்லுங்கள் கடவுள் இருக்கிறாரா,இல்லையா?''என்று கேட்டார்.எல்லோரும் பரமஹம்சர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்..அவர் சொன்னார்,''நண்பரே!இதுவரை எனக்குக் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இருந்து வந்தது.இன்று உங்கள் பேச்சைக் கேட்டவுடன் எனக்கு அந்த சந்தேகம் முழுமையாகத் தீர்ந்து விட்டது. கடவுள் உறுதியாக இருக்கிறார்.என்று இப்போது நம்புகிறேன்.''எல்லோரும் புரியாமல் விழிக்க  அவர் தொடர்ந்தார்,''கடவுள் இல்லாமல் ஒருவருக்கு எப்படி இவ்வளவு ஞானம் வரும்?எவ்வளவு தெளிவான பேச்சு!நான் ஒரு படிக்காத தற்குறி. ஏழை.என்னை மாதிரி சாதாரணமான ஆளைப் படைக்க கடவுள் தேவையில்லை.ஆனால் உங்களைப்போல ஞானம் படைத்தவர் கடவுள் இல்லாமல் எப்படி வர முடியும்?சாத்தியமே இல்லை.''கேசவர் உடனே தலை குனிந்து பரமஹம்சரின் பாதத்தில் விழுந்தார்.அவரின் எஞ்சிய காலத்தை ராமகிருஷ்ணரின் சீடராக கழித்தார்.

உன்னைப்பற்றி

1

Posted on : Saturday, April 16, 2011 | By : ஜெயராஜன் | In :

உன்னைப்பற்றி நீயே உயர்வாகவோ
       குறைவாகவோ பேச வேண்டாம்.
உயர்வாய்ப் பேசினால் மக்கள்
        உன்னை நம்ப மாட்டார்கள்.
தாழ்வாய் பேசினால் நீ சொல்வதை விட
       அதிகத் தாழ்வாக எண்ணுவார்கள்.
**********
புயலில் உயரமாகிற அலைகள் மாதிரி விளம்பரம்.
அலை ஓய்ந்த ஆழ்கடல் போல மௌனமானது புகழ்.
மனிதன் கூட்டுறவால் விளம்பரம் பெறுகிறான்.
தனிச் செயல்களால் புகழ் பெறுகிறான்.
விளம்பரம் சாராயம் போல.
புகழ் தாய்ப்பால் போல.
             --கவிஞர் வைரமுத்து.
**********
ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர் கேட்டார்,''அன்று ஒரு இரண்யனை அழிக்க கடவுள் நரசிம்மாவதாரம் எடுத்தார்.இன்று இரண்யனை விடக் கொடியவர் பலர் நாட்டில் உள்ளனரே?கடவுள் ஏன் அவதாரம் எடுக்கவில்லை?''பரமஹம்சர் சொன்னார்,''அன்று ஒரு பிரகலாதன் இருந்தான்.இன்று ஒருவர் கூட பிரகலாதன் போல இல்லையே.''
**********
பிரச்சினைகளை வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி என்று ஏற்றுக் கொள்ளுங்கள்.பிரச்சினை வரும்போது,உங்கள் தலையை நிமிர்த்தி அதனை நேருக்கு நேர் பார்த்து சொல்லுங்கள்,''நான் உன்னை விடப் பெரியவன் உன்னால் என்னை வெற்றி கொள்ள முடியாது.''
**********

சோதிடம்

0

Posted on : Friday, April 15, 2011 | By : ஜெயராஜன் | In :

சோதிடன் ஒருவன் தன மகன் சோதிடத்தில் சிறந்து விளங்குவானா என்பதை சோதிக்க விரும்பினான்.ஒரு நாள் இரவு மழையும் கொடுங்காற்றும் அடிக்கையில் அவர்கள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.சோதிடனும் மகனை விசாரிக்க சொன்னான்.பின் அவன் எப்படிக் கையாளுகிறான் என்பதைக் கவனமாகக் கேட்டான்.
கதவைத்திறந்த பையன்,வந்த ஆளிடம்,''நீங்கள் வடமேற்குத் திசையிலிருந்து வருகிறீர்கள்.உங்கள் பெயர் கருப்பன்:உங்கள் மனைவி அனுப்பி நீங்கள் வந்திருக்கிறீர்கள்.என்ன நான் சொல்வதெல்லாம் சரிதானே?''என்று கேட்க அந்த ஆள் உணர்ச்சி மேலிட,''அய்யா,நீங்கள் சொன்னது முழுவதும் சரி,''என்று சொல்லிவிட்டுத் தன பிரச்சினையை சொல்ல மகனும் சில வழிமுறைகளைக்  கூறிவிட்டுப் பின் பணம் பெற்றுக்கொடு வந்தவரை அனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்தான்.
ஆச்சரியத்தில் இருந்து  மீள முடியாத தந்தை கேட்டார்,''அவன் வந்த திசை,அவன் பெயர்,அவன் யார் சொல்லி வந்தான் என்பதையெல்லாம் எப்படி அவ்வளவு சரியாகச் சொன்னாய்?''மகன் சொன்னான்,''கடுமையான காற்று வடமேற்கு  திசையிலிருந்து அடிக்கிறது.அவன் முடி பின் பக்கம் கலைந்து,முன் பக்கம் விழுந்திருந்தது.எனவே அவன் வடமேற்கு திசையிலிருந்துதான் வந்திருக்க வேண்டும்.விளக்கு வெளிச்சத்தில் அவன் வைத்திருந்த குடையில் அவன் பெயர் எழுதியிருந்தது.மூன்றாவதாக,இந்த இடி மழையிலும்,காற்றிலும்,இருளிலும் ஒருவன் உயிரை துச்சமாக மதித்து வருகிறான் என்றால் அவன் மனைவி நச்சரித்திருக்க வேண்டும்.எனவே தான் அவன் மனைவி சொல்லி வந்தான் என்றேன்,'' தந்தைக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி.மகன் தன்னை விட சிறப்புடன் வாழ்வான் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

பொன்மொழிகள்-16

0

Posted on : Friday, April 15, 2011 | By : ஜெயராஜன் | In :

சொர்க்கம் தாயின் காலடியில் இருக்கிறது.
வணக்கங்களின் தாய் பாவங்களை விடுதல்.
பேராதரவின் தாய் பொறுமையாய் இருத்தல்.
மருந்துகளின் தாய் குறைவாகச் சாப்பிடுதல்.
ஒழுக்கங்களின் தாய் குறைவாகப் பேசுதல்.
**********
ஒரு மனிதன் தினம்,
கொஞ்சம் சங்கீதம் கேட்க வேண்டும்.
ஒரு நல்ல கவிதையைப் படிக்க வேண்டும்.
சிறந்த ஓவியத்தைப் பார்க்க வேண்டும்.
முடிந்தால் அர்த்தத்தோடு சில வார்த்தைகள் பேச வேண்டும்.
**********
இளமை ஒரு குழப்பம்:
வாலிபம் ஒரு போராட்டம்:
முதுமை ஒரு மனமிரக்கம்.
**********
சுடத் தெரியாதவன் கையில் துப்பாக்கி இருந்தாலும் சுடத்தெரிந்தவன் அவனிடம் சரணடைகிறான்.ஆட்சி ஒரு முட்டாளிடம் இருந்தால் கூட அறிவுள்ளவனும் அவனுக்கு அடி பணிகிறான்.
**********
கிடைக்காதவரை எது பெரிதாகத் தோன்றுகிறதோ
கிடைத்ததும் எது அற்பமாகத் தோன்றுகிறதோ,
மேலும் கிடைக்காதா என்று எது ஏங்கச் செய்கிறதோ,
அது ஆசை எனப்படும்.
**********
அதிகமாகக் கடன் வாங்கும் தந்தை மகனுக்கு எதிரி:
வாயாடியான தாயார் பெண்ணுக்கு எதிரி.
மிகவும் அழகான பெண் கணவனுக்கு எதிரி:
ஆமாம் போடும் அமைச்சன் அரசனுக்கு எதிரி.
**********
தாய் நாட்டை நேசிப்பது இயல்பு.
மனித குலம்முழுவதையும் நேசிப்பதே சிறப்பு.,
**********
நல்லவனாக இருப்பது எளிது:
நேர்மையானவனாக இருப்பது கடினம்.
**********
நம் மனச்சான்று தவறு செய்யாத நீதிபதி.
---நாம் இன்னும் அதைக் கொல்லாமல் இருந்தால்.
**********
சிறு புண்களையும்,ஏழை உறவினர்களையும்
ஒருபோதும் அலட்சியப் படுத்தி விடக்கூடாது.
**********
எந்தச்செய்தியையும் எப்படிச்சொன்னாலும் நம்பாத மக்களை நம்ப வைப்பதற்கு சிறந்த வழி,கிசுகிசுவெனப் பேசுவதுதான்.
**********

அன்பு எது?

0

Posted on : Thursday, April 14, 2011 | By : ஜெயராஜன் | In :

அன்புக்கு எந்த அடிக்குறிப்பும் தேவையில்லை.அதுதான் அன்பின் அழகு சுதந்திரம்.வெறுப்பு ஒரு பந்தம்,சிறை.உங்கள் மீது திணிக்கப்படுவது.உலகமே  வெறுப்பிலும்,அழிவிலும்,வன்முறையிலும் போட்டியிலும்,பொறாமையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.செயலாலோ,மனதாலோ ஒருவர் மற்றவரைக்  கொன்று கொண்டிருக்கிறார்கள்.அதனால்தான் சொர்க்கமாக இருக்க வேண்டிய இந்த உலகம் நரகமாக இருக்கிறது.அன்பு செய்யுங்கள்.இந்த உலகம் மீண்டும் சொர்க்கமாகும்.
நேற்றுயாராவதுஉங்களிடம்இனிமையாகநடந்துகொண்டிருப்பார்கள்.அல்லது நாளை யாராவது இனிமையாகப் பேச உங்களை அழைத்திருக்கலாம்.இது  அன்பே அன்று.இது வெறுப்பின் மறுபக்கம்.இத்தகைய அன்பு எந்த நேரத்திலும் வெறுப்பாக மாறலாம்.ஒருவரை லேசாக சுரண்டிப் பாருங்கள். அன்பு மறைந்து வெறுப்பு வெளிப்பட்டுவிடும்.அதற்குத் தோலின் ஆழம் கூடக் கிடையாது.உண்மையான் அன்பிற்குப் பின்னணி கிடையாது. நேற்றோ,நாளையோ கிடையாது.அதைப் பகிர்ந்து கொள்ளக் காரணம் தேவையில்லை.காலை வேளையில் பறவைகள் பாடுகின்றன.ஒரு குயில் அழைக்கிறது.காரணம் இல்லாமல் தான்.இதயத்தில் நிறைந்த மகிழ்ச்சி ஒரு பாடலாக வெடித்துப் பீரிடுகிறது.அப்படிப்பட்ட அன்பின் பரிமாணத்திற்குள் நீங்கள் நுழைய முடியுமானால் அதுவே சொர்க்கம்.வெறுப்பு வெறுப்பையே உருவாக்கும்.அன்பு அன்பையே உருவாக்கும்.

எப்படித்தெரியும்?

0

Posted on : Thursday, April 14, 2011 | By : ஜெயராஜன் | In :

இராணுவ வீரர்களுக்கு மலையேறும் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. இரண்டு பேர் ஹெட் போனில் பேசியபடி மேலே ஏறிக் கொண்டிருந்தனர்.திடீரென ஒருவர் பிடி நழுவி மேலேயிருந்து கீழே  விழுந்தார்.அவர்,''அச்சச்சோ,நான் கீழே விழுந்திட்டேன்.''எனக் கத்தினார்.நண்பன் கேட்டார்,''ரொம்ப அடி பட்டிடுச்சா?''உடனே பதில் வந்தது,''மடையா,நான் இன்னும் கீழே போய்க்கொண்டுதான் இருக்கேன்.அதுக்குள்ளே எப்படித் தெரியும்?''
**********
''என்ன டாக்டர்,நீண்ட நேரமா என் உடம்பை டெஸ்ட் பண்றீங்களே?''
'என்னப்பா செய்றது?பணம் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க முடியலையே!'
**********
''ச்சே என்ன புத்தகம் இது?ஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்கு.ஆனால் கதையே இல்லையே!''
'நல்லாப் பாருங்க,டெலிபோன் டேரக்டரியா இருக்கப் போகுது!'
**********
''தலையிலே என்ன கட்டு?''
'இனிமே அடிக்க மாட்டேன்னு என் மனைவி என் தலையில் அடிச்சு சத்தியம் செஞ்சா....'
**********
''அட,கோழிக்கு ஏன் குடிக்க வெந்நீரை கொடுக்கிறாய்?''
'அப்பத்தான் அது அவிச்ச முட்டையிடும்.'
**********
''காந்தி,இயேசு,அம்பேத்கார்,இவர்களுக்குள் ஏதாவது ஒரு ஒற்றுமையான் விஷயம் சொல்லு,''
'அவர்கள் எல்லாம் விடுமுறை நாட்களில் பிறந்தார்கள்.'
**********
பாட்டி சொன்னார்,''என் துணிகளெல்லாம் நீண்ட நாள் உழைக்க வேண்டும் என்பதற்காக நானே துணிகளைத் துவைத்துக் கொள்கிறேன்.''பேத்தி சொன்னாள்,''நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதற்காக துணிகளை வாசிங் மெசினில் போடுகிறேன்.''
**********

ஓடாதீங்க!

0

Posted on : Wednesday, April 13, 2011 | By : ஜெயராஜன் | In :

''டாக்டர்,எங்கேயாவது போனா,போன இடத்திலேயே தூங்கி விடுகிறேன்.''
'அதனால தப்பு ஒண்ணும் இல்லையே.அவனவன் தூக்கமே வர மாட்டேங்குது என்கிறான்.'
''அட புரியாம பேசாதீங்க.நான் ஒரு திருடன்.திருடப்போன இடத்திலேயே தூங்கினால் என் கதி என்னாகும்?''
**********
''என் பையன் பர்ஸ்ட் க்ளாசில பாஸ் பண்ணிட்டான்.''
'அப்படியா சந்தோசம்.அடுத்து என்ன படிக்க வைக்கப் போறீங்க?'
''செகண்ட் க்ளாஸ்தான்.''
**********
''சட்ட சபையை எப்போது கூட்டுவாங்க?''
'குப்பை சேர்ந்தவுடன்.'
**********
''உங்களைக் கல்யாணம் செய்துக்கிட்டதுக்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செய்திருக்கலாம்.''
'உண்மை.அதுவாவது உன்னை நல்ல உதைச்சிருக்கும்.'
**********
''இவ்வளவு அவசரமா ஆபீசுக்கு ஓடுகிறாயே!அங்க போய் என்னத்தக் கிழிக்கப் போகிற?''
'தேதி காலண்டரைத்தான்.'
**********
''உனக்கு ஒரு உதை நான் கொடுத்தா சென்னையில போய் விழுவ தெரியுமா?''
'கொஞ்சம் மெதுவாய் உதை.எனக்கு விழுப்புரம் தான் போக வேண்டியிருக்குது.'
**********
''என்ன சார்,பாக்கெட்டிலே கரப்பான் பூச்சியை வச்சிருக்கீங்க!''
'பாக்கெட்டில இருக்கிற பணத்தைக் காப்பாத்த அதை விட வேறு வழி
தெரியலை.என் மனைவி அதைப் பார்த்து மட்டும் தான் பயப்படுவாள்.'
**********
''எங்க மேனேஜர் வரும்போது மரம் மாதிரி நின்று கொண்டிருந்தது தப்பாய்ப் போச்சு.''
'ஏன்,என்ன ஆயிற்று?'
''கூப்பிட்டு அறு அறு என்று அறுத்துவிட்டார்.''
**********

கடிக்காதே!

0

Posted on : Tuesday, April 12, 2011 | By : ஜெயராஜன் | In :

''என் மனைவி தன கையாலேயே எனக்குசாப்பாடு  பரிமாறுவாள்.''
'பரவாயில்லை,நீ கொடுத்து வைத்தவன்.'
''ஆனால் சமையல் செய்வது நான்தான்.''
**********
''என்னங்க,என் பல் ரொம்ப வலிக்குது.''
'பல் வலிக்கிற அளவுக்கு என்னத்த கடிச்ச?'
''உங்க அம்மாவைத்தான்.''
**********
''டாக்டர்,எவ்வளவு கடினமான ஆப்பரேசனை நல்லபடியா முடிச்சுட்டீங்களே,என் வாழ்த்துக்கள்.''
';எல்லாம் ஆண்டவன் செயல்.'
''அப்ப ஆப்பரேசனுக்கு உரிய பீசை உண்டியலில் போட்டு விடட்டுமா?''
**********
''அம்மா,ஏதாவது பழைய பொருள் விக்கிற மாதிரி இருக்கா என்று வாசலில் ஒரு ஆள் கேட்கிறார்.''
'இப்ப,அப்பா இல்லை என்று சொல்.'
**********
திருடனின் மனைவி:இப்பெல்லாம் எங்க வீட்டுக்காரர் சரியாகவே தொழில் செய்வதில்லை.அடிக்கடி வெளியூர் போய்விடுகிறார்.இந்த மாதம் மட்டும் மூணு தடவை வேலூருக்குப் போயிட்டாருன்னா பாத்துக்கங்க.''
**********
தலைவர்:என்னப்பா,தொகுதியில கெட்டது தான் நடக்குதுன்னு மக்கள் பேசிக் கொள்கிறார்களாமே?
தொண்டன்:நீங்க தொகுதியில நடந்து போனதை சொல்லியிருப்பாங்க
**********
''டாக்டர்,மூணு மாதமா எனக்குக் கடுமையான இருமல்.''
'அப்படியா,மூணு மாதமும்  சும்மாவா இருந்தீங்க?'
''இல்லை டாக்டர்,நான் இருமிக்கிட்டே தான் இருந்தேன்.''
**********
''உங்களுக்கு அல்சராமே?''
'அந்த வயித்தெரிச்சலை ஏன் கேட்குறீங்க?'
**********

தரித்திரம்.

0

Posted on : Sunday, April 10, 2011 | By : ஜெயராஜன் | In :

நீண்ட நாட்களாக ஒருவர் மருத்துவமனையில் உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்தார்.அவருடைய மனைவி அவர் அருகிலேயே இருந்து கவனித்து வந்தார்.ஒரு நாள் கூட அந்தப்பெண்மணி  ஓய்வு எடுத்தது இல்லை.ஒரு நாள் அவர் தன மனைவியை அருகில் அழைத்தார்,பின் அவர் சொன்னார்,''உனக்கு ஒன்று தெரியுமா?என்னுடைய கெட்ட நேரத்திலெல்லாம் நீ என் கூடவே இருந்திருக்கிறாய்.என் வேலை போயிற்று.நீ ஆறுதல் கூறினாய்.வியாபாரம் செய்து நொடித்துப் போனேன்.அப்போதும் நீ எனக்கு பக்க பலமாக இருந்தாய்.வீட்டை விற்க வேண்டி வந்தது.அப்போதும் என்னை நீ மனம் தளர விடவில்லை.இப்போது நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாத போதும்  என் பக்கத்திலேயே இருக்கிறாய்.''மனைவிக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி.மெதுவாக,''இது என் கடமைதானே.''என்றார்.அவர் சொன்னார்,''இதுக்கெல்லாம் காரணம் நீ ஒரு தரித்திரம் பிடித்தவள்.நீ அருகில் இருப்பதால்தான் எனக்கு இவ்வளவு  இன்னல்களும்.''
**********
ஒரு குடிகாரன் குடிப் பழக்கத்திலிருந்து மீள ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தான்.சில மாதங்களுக்குப் பின் நண்பன் ஒருவன் கேட்டான்,''இப்போதும்  நீ குடிக்கிறாயா?''அவன் சொன்னான்,''எங்கே நான் குடிக்கிறது இந்த டாக்டருக்கு வைத்தியத்திற்குப் பணம் செலுத்திய பின் குடிக்க எங்கே காசு மிஞ்சுகிறது?''
**********
விபத்தில் காயமடைந்த ஒருவன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டான்.அவனுக்கு இரண்டு கால்களையும் எடுக்க வேண்டி வந்து டாக்டர் அறுவை சிகிச்சை மூலம் எடுத்துவிட்டார்.நொந்துபோய் படுத்திருந்த அவனிடம் டாக்டர் வந்து சொன்னார்,''உனக்கு ஒரு நல்ல செய்தி,''காலை எடுத்தபின் என்ன நல்ல செய்தி இருக்க முடியுமென்று எண்ணியவாறே விபரம் கேட்டான்.டாக்டர் சொன்னார்,''உன்னுடைய செருப்புக்கள் புதிதாக இருப்பதால் அவற்றை பக்கத்துப் படுக்கையில் இருப்பவன் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் என்கிறான்.''
**********

ஓய்வு பெற்ற அதிகாரி

0

Posted on : Saturday, April 09, 2011 | By : ஜெயராஜன் | In :

கோப்புகளுடன் குடித்தனம் முடித்தார்.
கோடிக் காகிதங்களில் கோடுகள் கிழித்தார்.
இன்று....
வீட்டு விலாசம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்.
உறவின் முகங்களை உற்றுப் பார்க்கிறார்.
பதவிப் போதையின் பைத்தியம் தெளிந்தது.
எத்தனை முறை மணி அடித்தாலும்
எதிரொலியும் எழுந்து வராது.
வழிய வந்த அமைதி வலிக்கிறது.
இன்று....
விரும்பி உடனிருப்பவை, வியாதிகள் மட்டுமே.
**********
தந்தை 
என்னைத் தூக்கி சுமக்கையில் மகிழ்ந்தவனே,
உன்னைத் தூக்கிடும்போது அழுதிருந்தேன்.
**********
தாய் 
சுமந்து வளர்த்த புள்ள சுகமாச்சி.
சோத்த போட்ட தாயே இன்று சுமையாச்சு.
**********
காணிக்கை 
கோவில் வாசலில்  பிச்சைக்காரர்கள்!
சரி........
கோவிலுக்குள்ளே மட்டும் யாராம்?
**********
பிள்ளைகளே....
புத்தகங்களே
பிள்ளைகளைக்
கிழிக்காதீர்!
**********
                  கவிஞர் சட்டநாதன் மோகன்ராஜ் எழுதிய 'விடிந்து விட்டது' எனும்   நூலிலிருந்து சில மேற்கோள்கள்.

அறுவை ஜோக்ஸ்

0

Posted on : Thursday, April 07, 2011 | By : ஜெயராஜன் | In :

மனைவி: பால் எல்லாத்தையும் பூனை குடிக்கும் வரை என்ன பண்ணிக் கொண்டிருந்தீர்கள்?
கணவன்:இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
********
''டேபிள் எப்போது வெட்கப்படும்?''
'அதன் டிராயரை இழுக்கும்போது.'
********
''கப்பலே கவிழ்ந்தாலும்,கன்னத்தில் கை வைக்கக்கூடாது என்கிறார்களே,அது ஏன்?''
'கன்னத்தில் கை வைத்துக் கொண்டிருந்தால் எப்படி நீச்சல் அடிக்க முடியும்?''
********
''இந்தியாவில் எங்கெல்லாம் பெட்ரோல் கிடைக்கிறது?"'
'எல்லா பெட்ரோல் பங்க்குகளிலும்.'
********
''கப்பல் போவது பெற்றோலிலா ,,டீசலிலா?'
'கடலில்.'
********
''உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் உங்க கல்யாணத்துக்கு அப்புறம் நீங்கிடிச்சாமே?''
'ஆமாம்,கடைசியாக இருந்தது சந்தோசம்.கல்யாணத்துக்கு அப்புறம் அது நீங்கிடுச்சு.'
********
மாணவன்:சார்,நான் யூரின் பாஸ் பண்ணிட்டு வரேன்.
ஆசிரியர்:அதையாவது பாஸ் பண்ணித் தொலைடா.
********
;;என்ன தரகரே,பொண்ணைப் பார்க்கணும்னு சொன்னா சுடுகாட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கீங்க?
'நீங்கதானே அடக்கமான பொண்ணு வேணுமின்னு சொன்னீங்க?''
********

அரசியல்

0

Posted on : Thursday, April 07, 2011 | By : ஜெயராஜன் | In :

அரசியல் ஒரு சூனியக் கலை.ஆளும் வர்க்கத்தினரால் அந்த மந்திரவித்தை செய்யப்படுகிறது.ஆளப்படுபவர்களும் தூங்குபவர்களும் விழித்துக் கொள்ளும்போது அதிகாரம் செய்யும் அந்த மந்திரவாதிகள் மீண்டும் அவர்களை அறியாமை என்னும் உறக்கத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள்.ஆனால் நசுக்கப்படுபவர்கள் என்றுமே தூங்குவதில்லை.வண்ணமும் நறுமணமும் இருப்பதாகத் தோன்றும் மாயத் தோற்றம் தான்  அரசியல் ஆனால் இது செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தைப் பெருக்கப் பயன்படுத்தும் ஆயுதம்.
********
உறுதி மிக்க வைரத்தையும் மெல்லிய மலரின் இதழால் அறுத்து விடலாம்.ஆனால் அறியாமையில் உழலும் மனிதனிடம் எந்த வித உபதேசமும் பலனளிக்காமல் போய்விடுகிறது.
********
தனிப்பட்ட மனிதனின் திறமை ஒரு கூட்டத்தினால் நிறைவு பெறுகிறது.அகண்டத்தைத் தேடித் திரியும் நீர்த்துளி கடலாக மாறி விடுவதைப்போல சமூகத்துடன் சேரும் மனிதன் பூர்ணமானவனாகி விடுகிறான்.
********
கீழ் நாட்டவருக்கு மேல் நாட்டு வெள்ளையனே கடவுள்:ஆனால் அந்த மேல் நாட்டவனுக்கோ பொன்னும் பொருளும்தான் கடவுள்.
********
உழவனின் உணவுக்கு உதவாத கழனிஎங்கிருந்தாலும்,அங்கே ஒரு தானிய மணி கூட இல்லாமல் நெருப்பிட்டுக் கொளுத்துங்கள்.
********
உன் அன்பு சந்தேகங்களை எரிக்கட்டும்.
********
                     ----  புகழ் பெற்ற கவிஞர் முஹம்மது இக்பால்

தீவுகள்

0

Posted on : Monday, April 04, 2011 | By : ஜெயராஜன் | In :

மனிதர்கள் தீவுகளாகிக் கொண்டிருக்கிறார்கள்.நான் தனி,அவன் தனி என்பது அவர்கள் எண்ணமாக இருக்கிறது.நாம்,மனிதகுலம் என்ற அகண்டத்தின் ஒரு அங்கமே என்கிற எண்ணம் நமக்கில்லை.நம் இன்பமும் துன்பமும்,வாழ்வும்,வளமும்,முன்னேற்றமும் ஒட்டு மொத்த மனித குலத்தின் பேறுகளின் அடிப்படையில் தான் அமைந்திருக்கிறது என்பதை நாம் அறியவில்லை.மூடிய நம் அறைக்குள்ளேயே  நம் உலகம் அடங்கி விட்டது என்று நம் அறியாமை காரணமாக நினைக்கிறோம்.
**********
நகரம் என்பது எதுவென்றால்,எங்கு மக்கள் கூடி வாழ்கிறார்களோ,எங்கு மக்கள் இணைந்து வாழவில்லையோ,எங்கு தந்தையும் மகனும் பிணங்குகிறார்களோ,எங்கு கணவனும் மனைவியும் முரண்படுகிறார்களோ, எங்கு மனிதன் அடுத்த மனிதனுக்கு எதிரியோ,எங்கு பறவைகள் அடைய பழ மரங்கள் இல்லையோ,அந்த இடமே நகரம் என்று அறிவாயாக.
**********
மனிதர்கள்,தங்களை நடுவில் வைத்து,சுற்றிலும் ஒரு கோட்டை கட்டிக் கொண்டு,வாழ்வில் அதி சமர்த்தர்களாக இருக்கிறார்கள்.அந்தக் கோட்டைக்கு ஒரு ஜன்னல் உண்டு.அந்த ஜன்னலை எப்போதாவது அவர்கள் திறப்பார்கள்.மீண்டும் உட்புறமாக மூடிக் கொள்வார்கள்.ஏன் இப்படி சுருங்கிப் போகிறார்கள் மனிதர்கள்?மனித இயல்பு அது இல்லை.அன்பு செய்வதும் பின்னர் அந்த நட்பை நீடிப்பதும் அவர்கள் சுபாவம்.அந்த சுபாவத்தை அவர்கள் மறந்து விட்டிருக்கிறார்கள்.அதை நினைவு படுத்தவேண்டியது  அவர்களை விரும்புகிறவர்களின் கடமையாக இருக்கிறது.
**********
பெண்கள் மட்டுமல்ல,இங்கு ஆண்களும் தெளிவில்லாமல் தான் இருக்கிறார்கள்.உண்மையில் காதல் இல்லை.இது ஒரு வகையான பலப்  பரீட்சை.தன ஈர்ப்பு ஒரு ஆணின் மேல் எத்தனை சதவிகிதம் பாய்கிறது  என்று தெரிந்து கொள்ள பெண் விரும்புகிறாள்.அதேபோல்,பெண்களின் மேல்,தான் எந்த அளவுக்கு ஆளுமை செலுத்த முடியும் என்பதை ஆண் பரீட்சை செய்கிறான்.இந்தப் பரீட்சை செய்கிற ஈகோத்தனத்துக்குதான்  இங்கு காதல் என்ற பெயர் ஏற்படுகிறது.காதலில்,பொய்,ஏமாற்று,ஈகோ பலப்பரீட்சை எதுவும் இருக்க முடியாது.
*********
        பிரபஞ்சன் எழுதிய 'தீவுகள்'என்ற நூலிலிருந்து