நீண்ட நாட்களாக ஒருவர் மருத்துவமனையில் உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்தார்.அவருடைய மனைவி அவர் அருகிலேயே இருந்து கவனித்து வந்தார்.ஒரு நாள் கூட அந்தப்பெண்மணி ஓய்வு எடுத்தது இல்லை.ஒரு நாள் அவர் தன மனைவியை அருகில் அழைத்தார்,பின் அவர் சொன்னார்,''உனக்கு ஒன்று தெரியுமா?என்னுடைய கெட்ட நேரத்திலெல்லாம் நீ என் கூடவே இருந்திருக்கிறாய்.என் வேலை போயிற்று.நீ ஆறுதல் கூறினாய்.வியாபாரம் செய்து நொடித்துப் போனேன்.அப்போதும் நீ எனக்கு பக்க பலமாக இருந்தாய்.வீட்டை விற்க வேண்டி வந்தது.அப்போதும் என்னை நீ மனம் தளர விடவில்லை.இப்போது நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாத போதும் என் பக்கத்திலேயே இருக்கிறாய்.''மனைவிக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி.மெதுவாக,''இது என் கடமைதானே.''என்றார்.அவர் சொன்னார்,''இதுக்கெல்லாம் காரணம் நீ ஒரு தரித்திரம் பிடித்தவள்.நீ அருகில் இருப்பதால்தான் எனக்கு இவ்வளவு இன்னல்களும்.''
**********
ஒரு குடிகாரன் குடிப் பழக்கத்திலிருந்து மீள ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தான்.சில மாதங்களுக்குப் பின் நண்பன் ஒருவன் கேட்டான்,''இப்போதும் நீ குடிக்கிறாயா?''அவன் சொன்னான்,''எங்கே நான் குடிக்கிறது இந்த டாக்டருக்கு வைத்தியத்திற்குப் பணம் செலுத்திய பின் குடிக்க எங்கே காசு மிஞ்சுகிறது?''
**********
விபத்தில் காயமடைந்த ஒருவன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டான்.அவனுக்கு இரண்டு கால்களையும் எடுக்க வேண்டி வந்து டாக்டர் அறுவை சிகிச்சை மூலம் எடுத்துவிட்டார்.நொந்துபோய் படுத்திருந்த அவனிடம் டாக்டர் வந்து சொன்னார்,''உனக்கு ஒரு நல்ல செய்தி,''காலை எடுத்தபின் என்ன நல்ல செய்தி இருக்க முடியுமென்று எண்ணியவாறே விபரம் கேட்டான்.டாக்டர் சொன்னார்,''உன்னுடைய செருப்புக்கள் புதிதாக இருப்பதால் அவற்றை பக்கத்துப் படுக்கையில் இருப்பவன் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் என்கிறான்.''
**********
|
|
Post a Comment