உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஹஹஹா

0

Posted on : Wednesday, April 20, 2011 | By : ஜெயராஜன் | In :

செய்தித்தாள் வாசிக்கும் ஒருவர்: கோவையில் முக்கிய நபர் கைது.
அருகில் இருப்பவர்: அது ஏன்,மதுரையில் முக்கினா கைது செய்ய மாட்டாங்களா?
**********
''அந்த டாக்டர் கால் ஆணி எடுப்பதில் கெட்டிக்காரர்.''
'அப்படீன்னா மீதி முக்கால் ஆணியை யார் எடுப்பார்கள்?'
**********
''ஆஹா,இதைவிட சிறந்த ஓவியத்தை என்னாலேயே படைக்க முடியாது,''என்று பெருமை பொங்கச் சொன்னான் ஒரு ஓவியன் தன நண்பனிடம்.'தன்னம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடாதே!'என்று அவன் தோளில் தட்டி ஆறுதல் படுத்தினான் நண்பன்.
**********
''ஜலதோசத்திற்கு ஜன்னல் அருகே படுக்கச் சொன்னேனே,செய்தாயா?''
'நேற்று ஜன்னல் அருகே தான் தூங்கினேன்.'
''ஜலதோஷம் போயிடுச்சா?''
'ஜலதோஷம் அப்படியே இருக்கு ஆனால் என் வாச்சும் பர்சும் தான் போயிடுச்சி.'
**********
ஒருவன் தன டாக்டர் நண்பருடன் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.அப்போது அவன்,''ஏன் டாக்டர்,வருத்தமாய்  இருப்பதுபோலத் தெரிகிறதே?என்று கேட்டான்.டாக்டர் சொன்னார்,''இன்று ஓரு தவறு செய்து விட்டேன்.ஒரு நோயாளிக்கு தவறான மாத்திரையை எழுதி  விட்டேன்.''நண்பன்,''அது என்ன ஆபத்தானதா?''என்று கேட்டான்.டாக்டரும் கவலையுடன் சொன்னார்,''இல்லை,அவன் ஒரு பெரிய பணக்காரன் இந்த மாத்திரை சாப்பிட்டால் இரண்டு நாளில் குணமாகிவிடுவானே?''
**********
ஒருவன் தன நண்பனிடம் சொன்னான்,''மச்சி,எனக்கு நேர் எதிரிடையான ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்.'' நண்பன் சொன்னான்,''அது ஒன்றும் சிரமமில்லை.எனக்குத் தெரிந்தவரின் பெண் ஒருத்தி இருக்கிறாள்.அவள் நல்ல அழகி,சுறுசுறுப் பானவள் ,புத்திசாலி.நாகரீகம் தெரிந்தவள்.அவளைப் பார்க்கலாம்.''
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment