உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தீவுகள்

0

Posted on : Monday, April 04, 2011 | By : ஜெயராஜன் | In :

மனிதர்கள் தீவுகளாகிக் கொண்டிருக்கிறார்கள்.நான் தனி,அவன் தனி என்பது அவர்கள் எண்ணமாக இருக்கிறது.நாம்,மனிதகுலம் என்ற அகண்டத்தின் ஒரு அங்கமே என்கிற எண்ணம் நமக்கில்லை.நம் இன்பமும் துன்பமும்,வாழ்வும்,வளமும்,முன்னேற்றமும் ஒட்டு மொத்த மனித குலத்தின் பேறுகளின் அடிப்படையில் தான் அமைந்திருக்கிறது என்பதை நாம் அறியவில்லை.மூடிய நம் அறைக்குள்ளேயே  நம் உலகம் அடங்கி விட்டது என்று நம் அறியாமை காரணமாக நினைக்கிறோம்.
**********
நகரம் என்பது எதுவென்றால்,எங்கு மக்கள் கூடி வாழ்கிறார்களோ,எங்கு மக்கள் இணைந்து வாழவில்லையோ,எங்கு தந்தையும் மகனும் பிணங்குகிறார்களோ,எங்கு கணவனும் மனைவியும் முரண்படுகிறார்களோ, எங்கு மனிதன் அடுத்த மனிதனுக்கு எதிரியோ,எங்கு பறவைகள் அடைய பழ மரங்கள் இல்லையோ,அந்த இடமே நகரம் என்று அறிவாயாக.
**********
மனிதர்கள்,தங்களை நடுவில் வைத்து,சுற்றிலும் ஒரு கோட்டை கட்டிக் கொண்டு,வாழ்வில் அதி சமர்த்தர்களாக இருக்கிறார்கள்.அந்தக் கோட்டைக்கு ஒரு ஜன்னல் உண்டு.அந்த ஜன்னலை எப்போதாவது அவர்கள் திறப்பார்கள்.மீண்டும் உட்புறமாக மூடிக் கொள்வார்கள்.ஏன் இப்படி சுருங்கிப் போகிறார்கள் மனிதர்கள்?மனித இயல்பு அது இல்லை.அன்பு செய்வதும் பின்னர் அந்த நட்பை நீடிப்பதும் அவர்கள் சுபாவம்.அந்த சுபாவத்தை அவர்கள் மறந்து விட்டிருக்கிறார்கள்.அதை நினைவு படுத்தவேண்டியது  அவர்களை விரும்புகிறவர்களின் கடமையாக இருக்கிறது.
**********
பெண்கள் மட்டுமல்ல,இங்கு ஆண்களும் தெளிவில்லாமல் தான் இருக்கிறார்கள்.உண்மையில் காதல் இல்லை.இது ஒரு வகையான பலப்  பரீட்சை.தன ஈர்ப்பு ஒரு ஆணின் மேல் எத்தனை சதவிகிதம் பாய்கிறது  என்று தெரிந்து கொள்ள பெண் விரும்புகிறாள்.அதேபோல்,பெண்களின் மேல்,தான் எந்த அளவுக்கு ஆளுமை செலுத்த முடியும் என்பதை ஆண் பரீட்சை செய்கிறான்.இந்தப் பரீட்சை செய்கிற ஈகோத்தனத்துக்குதான்  இங்கு காதல் என்ற பெயர் ஏற்படுகிறது.காதலில்,பொய்,ஏமாற்று,ஈகோ பலப்பரீட்சை எதுவும் இருக்க முடியாது.
*********
        பிரபஞ்சன் எழுதிய 'தீவுகள்'என்ற நூலிலிருந்து

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment