உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

குதிரைக்காரன்

0

Posted on : Monday, December 14, 2009 | By : ஜெயராஜன் | In :

ஒரு குரு இருந்தார்.முற்றும் துறந்தவர்.எல்லாம் கற்றவர்.அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள்.கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள்.குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார்.அன்று நல்ல மழை.கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள்.குரு வந்த போது யாருமில்லை.பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம்.அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான்.என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார்.
அவன் சொன்னான்,''ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது.அனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும்.நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.புல்லு வைக்கப் போகும் போது ,எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க ,ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும் ,நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்.''
படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டு,அவனுக்கு மட்டும் தன பிரசங்கத்தை ஆரம்பித்தார்.தத்துவம்,மந்திரம்,பாவம்,புண்ணியம்,சொர்க்கம்,நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார்.பிரசங்கம் முடிந்ததும்,எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.
''ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது.ஆனால் ஒன்று மட்டும் தெரியும்.நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால்,அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன்.முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன்,''என்றான் அவன்.
அவ்வளவு தான்!குரு அதிர்ந்து விட்டார்.

குடும்ப வன்முறை

0

Posted on : Monday, December 14, 2009 | By : ஜெயராஜன் | In :

சமூகத்திலுள்ள வன்முறைகளுக்கு எந்த விதத்திலும் குறைவானதாயில்லை,குடும்பத்தில் உள்ள வன்முறைகள்.இரத்தம் சிந்தாத இந்த வன்முறைக்கு ஆயுதம் சொற்கள் தான்.கூர் தீட்டப்பட்ட கத்திகளைப் போல சொற்கள் நம் உடலில் ஆழமாகப் பாய்கின்றன.அதன் வலி மிக அந்தரங்கமானது.ஆறாத ரணமுடையது.
கதவுகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் குடும்ப யுத்தத்தின் கூப்பாடு நம் தெருக்கள்,நகரங்கள் முழுவதும் எதிரொலிக்கக் கூடும்.வீடுகளுக்குக் கதவுகளையும் ஜன்னல்களையும் கண்டு பிடித்தவன் ஒரு குடும்பஸ்தனாகத் தான் இருக்க வேண்டும்.நம் வீட்டுக் கதவுகள் வெளியிலிருந்து எதுவும் நுழையாமல் பார்த்துக் கொள்வதை விடவும் உள்ளிருந்து எதுவும் வெளியே செல்லாமல் இருக்கத்தான் அதிகம் உதவுகின்றன.
--கதா விலாசம் --எஸ்.இராமகிருஷ்ணன்

லஞ்சம்

0

Posted on : Friday, December 11, 2009 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஊரில் எலித்தொல்லை. அதைப் பார்த்த ராஜா,''ஒரு செத்த எலி கொண்டு வந்தால் பத்து ரூபாய் தரப்படும்,''என்று அறிவித்தார்.மக்களும் நிறைய எலிகளைக் கொன்று பையில் போட்டு அரண்மனையில் கொடுத்துப் பணம் பெற்றுச்சென்றனர்.அரண்மனை துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்தது.அரசன் உடனே செத்த எலியின் வாலைக் கொண்டு வந்தால் போதும் என்று அறிவித்தார்.வாலைக் கொண்டு வந்து பரிசு வாங்கும் மக்களின் எண்ணக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது.அனால் எலித்தொல்லை குறையவில்லை.இது பற்றி அரசன் தீவிரமாக விசாரித்ததில்தெரிய வந்தது;
பணம் கிடைக்குமே என்றுமக்களே வீட்டில் எலி வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள்!

வெற்றிகள்

0

Posted on : Friday, December 11, 2009 | By : ஜெயராஜன் | In :

வெற்றிகள் நிச்சயம் உற்சாகப் படுத்துபவை தான்.ஆனால் வெற்றிக்கு மறு நாள் உலகம் நம்மைக் கடந்து சென்ற பின் ஏற்படும் வெறுமை கொடுமையானது.தோல்வி நிறைய பாடம் கற்றுக் கொடுக்கும் என்பது உண்மை.அதற்காகத் தோல்விகளிலேயே தங்கி தேங்கி விடக் கூடாது.பாராட்டுக்களோ திட்டுக்களோ ,எதையும் மனதிற்குள் ஏற்றிக் கொள்ளாமல் ,கண்ணாடி போல் நம் மனதை வைத்துக் கொள்ள வேண்டும்.அந்தப் பக்குவத்தை நமக்கு வெற்றிகளும் தோல்விகளும் ஏற்படுத்தும்.
செஸ் மாஸ்டர் ஆனந்த்

கோபம் தீர

0

Posted on : Friday, December 11, 2009 | By : ஜெயராஜன் | In :

கோபத்தைக் கட்டுப்படுத்த ஒரு வழிசொல்லுங்கள எனஒரு ஞானியிடம் ஒருவர் கேட்டார்.ஞானி சொன்னார்,''ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.உங்களின் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டு நீங்கள் கோபப்படுவதேயில்லை.இக்கோபத்தினால் நான் எதையாவது இழந்து விடுவேனோ,எனக்கு இது சாதகமா,பாதகமா என்று ஆராய்ந்து கொண்டேயிருக்கிறீர்கள்.பாதகம் வரும் என்றால் அந்தச் சூழல் அவமானம் தருவதாய் இருந்தால் கூட சிறு தடுமாற்றத்துடன் அமைதியாகிவிடுகிறீர்கள்.பாதகமில்லை என்றால் அந்தச் சூழலில் யாராவது சாதாரணமாகப் பேசி வைத்தால் கூட கோபம் பொங்குகிறது.எனவே உங்களின் கோபம் தர்க்கம் சம்பந்தப்பட்டது.உங்களின் தர்க்கத்தைச் சரி செய்யுங்கள்.கோபம் தன்னால் சரியாகும்.''
பரமஹம்ச நித்யானந்தர்.

பயிற்சி

0

Posted on : Thursday, December 10, 2009 | By : ஜெயராஜன் | In :

பிரபல ஓவியர் பிக்காசோவைச் சந்தித்த ஒரு பெண் ,''ஐயா,நான் உங்கள் தீவிர ரசிகை.உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.எனக்காக இந்தக் காகிதத்தில் ஒரு படம் வரைந்து கொடுக்க வேண்டும்.,''என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள்.அவரும் சிரித்துக் கொண்டே அவள் கொடுத்த காகிதத்தில் ஒரு படம் வரைந்து அவளிடம் கொடுக்கும் போது,''இதன் விலை என்ன தெரியுமா?ஒரு மில்லியன் டாலர்.''என்றார்.அவள்,'' இதை வரைய நீங்கள் எடுத்துக் கொண்ட நேரம் முப்பது வினாடிகள் தானே?''என்றாள்.அதற்கு அவர் ,''உண்மை.ஆனால் இப்படி ஒரு படத்தை முப்பது வினாடிகளில் வரைய எனக்கு முப்பது ஆண்டு பயிற்சி தேவைப்பட்டது.''என்றார்.

பிரச்சினை என்ன?

0

Posted on : Thursday, December 10, 2009 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் சந்தோசமாக இருக்கும் போதும் ,கருணையோடு இருக்கும் போதும் ,தாராளமாக வழங்கும் மன நிலையில் இருக்கும் போதும் உங்கள் வாழ்க்கை அழகாக அமைகிறது.யாராவது குற்றம் செய்ததாக நீங்கள் கருதும் போது,அந்த அழகு மறைந்து அசிங்கமாகிவிடுகிறது.உண்மையாகச் சொல்லுங்கள்.நீங்கள் செய்தேயிராத ஒரு குற்றத்தையா அவர் செய்து விட்டார்?நம் பிரச்சினை என்ன?நாம் ஒரு குற்றம் செய்தால் அதைப் பொருட்படுத்த மாட்டோம்.வேறு யாரும் பொருட்படுத்தக் கூடாது என்று எதிர் பார்ப்போம்.ஆனால் அதையே வேறொருவர் செய்தால் பெரிது படுத்துவோம்.
மற்றவர் மீது சுமத்துவதாக நாம் நினைக்கும் குற்றச்சாட்டு உண்மையில் நம் மனதில் தான் பாரமாக ஏறி உட்கார்ந்து கொள்கிறது.நம் இயல்பையும் வேகத்தையும் சிதைக்கிறது
----ஞானி ஜாக்கி வாசுதேவ்

தீயவர் நடுவே

0

Posted on : Thursday, December 10, 2009 | By : ஜெயராஜன் | In :

எதிரிக் கூடாரத்திலிருந்து இராமனிடம் தஞ்சம் புகுந்த விபீஷணனிடம் ஜாம்பவான் கேட்டார்,''இவ்வளவு தீயவர்கள் நடுவே நீ மட்டும் எப்படி நல்லவனாக இருக்க முடியும்?''அதற்கு விபீஷணன் சொன்னார்,''32 பற்களுக்கு நடுவே நாக்கு இருந்தாற்போல் ஜாக்கிரதையாக இருந்தேன்.''
32 பற்கள் நடுவே நாக்கு இருப்பது போலத்தான் வாழ்க்கை.அந்தப் பற்கள் நம்மைக் கடிக்காமல் இருப்பது நம் வசம் உள்ளது.பற்களையும் மீறி நாக்கு வெளியே வந்து தேவையான ஐஸ் க்ரீம் சாப்பிடுவது போல நம் சூழலின் நிர்பந்தங்களை மீறி நாம் வெளியே வந்து நமக்குத் தேவையான மகிழ்ச்சிகளை அனுபவிக்கும் சாத்தியம் உண்டு.

மன்னனின் மதிப்பு

0

Posted on : Tuesday, December 08, 2009 | By : ஜெயராஜன் | In :

ஒரு முறை முல்லாவும் மன்னரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
மன்னர்; முல்லா!உண்மையைச் சொல்.என் மதிப்பு என்ன இருக்கும்?''
முல்லா;''பத்துப் பொற்காசுகள்,அரசே!''
மன்னர்; ''என் துண்டின் மேல் உள்ள பெல்டே பத்துப் பொற்காசுகள் பேருமே,உனக்குத் தெரியாதா?''
முல்லா; ''தெரியும் அரசே,அதனால் தான் பத்துப் பொற்காசுகள் என்றேன்!''

நீயாக இரு.

0

Posted on : Tuesday, December 08, 2009 | By : ஜெயராஜன் | In :

இராம கிருஷ்ண பரமஹம்சர் நரேந்திரநாத்தின் தலை மீது கை வைத்து ஆசிர்வதித்ததும் அவர் விவேகானந்தர் ஆனார்,என்பதைப் படித்துத் தெரிந்த ஒருவர் வினோபாஜியிடம் சென்று ,''ஐயா,தாங்கள் என் தலை மீது கை வைத்து ஆசிர்வதித்தால்,நான் சங்கராச்சாரி ஆகி விடுவேன்.''என்று சொன்னார்.
''நான் ஆக்குவதால் நீ ஆகி விட்டால் ,பிறர் அழிப்பதால்,நீ அழிந்தும் போய் விடுவாய்.என்னைக் காட்டிலும் உண்மை மிகுந்தவர்கள் இருக்கிறார்கள்.எனவே நீ நீயாகவே இரு.எவராவது உன்னை ஏதாகிலும் ஆக்கினால்,அப்படி ஆகாதே..''என்று அறிவுறுத்தினார் வினோபாஜி.

என்ன வேண்டும்?

0

Posted on : Tuesday, December 08, 2009 | By : ஜெயராஜன் | In :

ஒரு பஞ்சப் பரதேசி.துறவி.சொத்து சுகம் ஏதுமற்ற ஞானி.குளிர் காலத்தில் வெயில் காய்வதற்காக ஆற்று மணலில் துண்டை விரித்துப் படுத்திருந்தார்.
உலகையே வெல்லப் புறப்பட்ட மகா அலெக்சாண்டர் அவர் அருகிலே வந்தார்.ஞானி அவரைக் கவனிக்க வில்லை.கால் மேல் கால் போட்டபடி சூரிய வெப்பத்தில் குளித்துக் கொண்டிருந்தார்.
''நான் அலெக்சாண்டர் வந்திருக்கிறேன்,''என்றார் அவர்.
அப்படியாவென சாதாரணமாகக் கேட்டார் ஞானி.
''ஏ ஞானியே!உனக்கு என்ன வேண்டும்?கேள்;நான் தருகிறேன்.''என்றார் அலெக்சாண்டர்.
''எனக்கு ஒரே ஒரு உதவி வேண்டும்,''என்றார் ஞானி.
''என்ன வேண்டும்?பொன் வேண்டுமா,பொருள் வேண்டுமா,மாளிகை வேண்டுமா?''என்று கேட்டார் அலெக்சாண்டர்.
''அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.நீகொஞ்சம் தள்ளி விலகி நிற்க வேண்டும்.உன் நிழல் வெயிலை மறைக்கிறது.''என்றார் ஞானி.
அலெக்சாண்டரின் ஆணவத்தை ஞானியின் ஆணவம் தோற்கடித்தது.காரணம்,ஞானிக்குத் தேவை என்று எதுவும் இல்லை.

சவால்

0

Posted on : Sunday, December 06, 2009 | By : ஜெயராஜன் | In :

சந்தைக் கும்பலில் குப்பத்துக்காரன் காலில் ஒருவன் மிதித்து விட்டான்.கூட்ட நெரிசல்.குப்பத்துக்காரனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.''டேய்,சந்தைக்கூட்டம் என்று பார்க்கிறேன்.நான்கு பேர் கூடுற இடத்தில் ஏதாவது செய்தால் நன்றாக இராது என்று உன்னைச் சும்மா விட்டு வைக்கிறேன்.'' என்று கத்தினான்.மிதித்தவன்,''இங்கேயே நீ என்ன செய்ய முடியுமோ அதைச் செய்''என்று பதிலுக்குக் கத்தினான்.
குப்பத்துக்காரன்,''என் ஊருக்கு வாடா,என்ன நடக்கிறது பார்.''என குப்பத்துக்காரன் மிதித்தவன் ஊருக்கே வந்தான்.''உன் ஊருக்கே வந்து விட்டேன்.என்ன செய்யப் போகிறாய்?''என்று சவால் விட்டான்.
''என்னுடைய தெருவிற்கு வாடா,தெரியும்,''என்றான் குப்பத்துக்காரன்.மிதித்தவன் அவனுடைய தெருவிற்கும் வந்து விட்டான்.
''என் வீட்டு வாசற்படியை மிதித்தால் பிறகு தெரியும்.''
மிதித்தவன் குப்பத்துக்காரன் வீட்டு வாசற்படிக்கும் வந்தான்.
''என் வீட்ட்ற்குள் வந்தால் என்ன ஆகும் தெரியுமா?''
அவன் வீட்டிற்குள்ளும் நுழைந்து விட்டான்.குப்பத்துக்காரன் உடனே நெடுஞ்சாண் கிடையாக அவன் காலில் விழுந்தான்.''அண்ணே,வாங்க!நமக்குள் என்ன சண்டை?உட்காருங்க,காபி சாப்பிடுங்கோ!''என்று உபசரித்தான்.
அளவுக்கு மீறி தன்னைப் பற்றிப் பேசி அச்சத்தை உருவாக்குபவர்கள் அருகில் நெருங்கிச் சென்றால் தான் அத்தனையும் வெத்து வெட்டு என்பது தெளிவாகும்.

கழுதை லாயம்

0

Posted on : Sunday, December 06, 2009 | By : ஜெயராஜன் | In :

ஒரு அரசன் சில கவிதைகளைப் புனைந்து தன அமைச்சரிடம் காட்டினான்.அமைச்சர் சொன்னார்,''இவை மோசமான கவிதைகள்.உங்களால் முடியாத காரியத்தில் ஏன்தலையிட வேண்டும்?''இது கேட்டு மன்னன் கடுங்கோபம் அடைந்து அமைச்சரைக் கழுதை லாயத்தில் அடைக்க உத்தரவிட்டான்.
சில தினங்களுக்குப் பிறகு அரசன் மேலும் சில கவிதைகளை எழுதி அமைச்சரைக் கூப்பிட்டனுப்பிக் காட்டினான்.அமைச்சர் கவிதைகளைப் படித்து விட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.''எங்கே போகிறீர்?''என்று அரசன் கேட்டான்.''கழுதை லாயத்திற்கு''என்றார் அமைச்சர்.

முரட்டுத்தனம்

0

Posted on : Saturday, December 05, 2009 | By : ஜெயராஜன் | In :

ஒரு காட்டில் இருந்த சிங்கத்திற்கு தன பலத்தின் மீது கர்வம் ஏற்பட்டது. வரிசையாக கரடி,மான்,முயல் முதலிய பிராணிகளைப் பார்த்து ,''இக்காட்டில் யார் பலசாலி?''என்று கேட்டது.அப்பிராணிகளும் பயத்துடன் ,''சந்தேகமில்லாமல் நீங்கள் தான்,''என்று பதிலளித்தன.சிங்கம் பின்னர் மேலும் கர்வத்துடன் அதே கேள்வியை ஒரு யானையிடம் கேட்டது.யானை ஏதும் பேசாமல் சிங்கத்தைத் ஒரேயடியாக தூக்கி எறிந்து விட்டது.சிங்கம் பயத்துடன் ஓடிக்கொண்டே எதிரே வந்த மிருகங்களிடம் சொன்னது,''முட்டாள்,பதில் தெரியாவிட்டால் அவன் பாட்டிற்குப் போக வேண்டியது தானே?இப்படியா முரட்டுத்தனமாக நடப்பது?''

சாபம்

0

Posted on : Saturday, December 05, 2009 | By : ஜெயராஜன் | In :

ஒரு சாமியாரின் செருப்பு அறுந்து விட்டது.செருப்புத் தைப்பவனிடம் சென்று அதைத் தைத்துக் கொடுக்கச் சொன்னார்.
''இப்போது இருட்டி விட்டது.நாளை காலை வந்தால் தைத்துத் தருகிறேன்.''என்றான் அவன்.
''இப்போதே தைத்துக் கொடுக்க வேண்டும்.இல்லாவிடில் உன் வாய் அடைத்துப் போகும்படி சாபம் கொடுப்பேன்.''என்று பயமுறுத்தினார் சாமியார்.
''உமக்கு அவ்வளவு சக்தி இருந்தால் அறுந்து போன செருப்பை சாபம் போட்டு ஒட்டி வைத்துக் கொள்வது தானே?''என்று சொல்லி விட்டுப் போனான்,செருப்புத் தைப்பவன்.

பொய்சொல்வது

0

Posted on : Friday, December 04, 2009 | By : ஜெயராஜன் | In :

தனித்துச் சொல்லப்படும் பொய் என்பது ஒரு முடவனைப் போன்றது.அதனால் அடுத்த பொய்யின் ஆதரவில்லாமல் நிற்க முடியாது.பொய் சொல்வது என்பது சுலபமான வேலை.ஆனால் ஒரே ஒரு பொய் சொல்வது என்பது உலகிலே மிகக் கடினமான காரியம்.

யாரிடம் குறை?

0

Posted on : Friday, December 04, 2009 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் தன விசிறி நீண்ட காலம் உழைக்கும் என்று கூறி இன்னொருவனிடம் விற்றான்.விசிறி இரண்டே நாளில் சேதமாகி விட்டது.விற்றவனிடம் அவன் சண்டைக்கு வந்தான்.
விற்றவன்; நீ விசிறியை எப்படி உபயோகிப்பது என்று தெரியாமல் உபயோகித்திருப்பாய்.அதனால் தான் சேதமாகி விட்டது.
வாங்கியவன்; எப்படி அதை உபயோகிக்க வேண்டும்?
விற்றவன்; விசிறியை உன் முகத்துக்கு நேரே பிடித்துக் கொண்டு உன் தலையை இப்படியும் அப்படியும் ஆட்ட வேண்டும்.அப்படி உபயோகித்தால் தான் நீண்ட காலம் என் விசிறி உழைக்கும்.என் விசிறியின் மேல் குறை இல்லை.நீ உபயோகித்த முறை தான் தவறு.

சிரமம்

0

Posted on : Friday, December 04, 2009 | By : ஜெயராஜன் | In :

பிரெஞ்சு நாவலாசிரியர் பால்சாக் வசித்த அறைக்குள் ஓரிரவு திருடன் நுழைந்து மேஜையைத் துளாவிக் கொண்டிருந்தான்.தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த பால்சாக் இதைக் கவனித்து விட்டு உரக்க சிரித்தார்.'' திருடன்
''ஏன் சிரிக்கிறாய்?''என்று மிரட்டினான்.''நான் பகலில் காண முடியாத பணத்தை இரவில் கண்டு விடலாமென இவ்வளவு சிரமப்படுகிறாயே!அதை நினைத்தேன்.சிரிப்பு வந்தது.''என்றார் பால்சாக்.

தண்டனை

0

Posted on : Friday, December 04, 2009 | By : ஜெயராஜன் | In :

ரஞ்சித் சிங் என்ற அரசன் பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்த போதுஎங்கிருந்தோ வந்த ஒரு கல் அவன் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது.வீரர்கள் உடனே நாலாபுறமும் சென்று ஒரு கிழவியைப் பிடித்து வந்தார்கள்.கிழவி சொன்னாள்,''அரசே என் மகன் சாப்பிட்டு மூன்று நாள் ஆகிறது.அவனுக்காகப் பழம்பறிக்கக் கல்லை விட்டு எறிந்தேன்.அது தவறி உங்கள் மேல் பட்டு விட்டது.''இதைக் கேட்ட அரசர் மந்திரியிடம் உடனே கிழவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னார்.எல்லோருக்கும் ஆச்சரியம்.காரணம் கேட்க அவர் சொன்னார்,''உணர்ச்சியே இல்லாத மரம் தன மீது கல்லை விட்டு எறிந்ததற்குபுசிக்கப் பழங்களைத் தருகிறது.ஆறறிவு படைத்த-அதுவும் மன்னனான நான் தண்டனையா கொடுப்பது?''

மரணபயம்

0

Posted on : Friday, December 04, 2009 | By : ஜெயராஜன் | In :

வயதான மனிதன் ஒருவன் காலையிலிருந்து மாலை வரை கஷ்டப்பட்டு விறகு வெட்டி அதைக் கட்டித் தூக்க முயலும் போதுமுடியவில்லை.நொந்து போய் ,''இந்த நிலையிலும் நான் உயிரோடிருக்க வேண்டுமா?எமதர்மனே!இப்போதே என் உயிரைக் கொண்டு போகக் கூடாதா?''என்று கத்தினான்.உடனே அவன் முன் எமதர்மன் தோன்றி,''அப்பனே,என்னை அழைக்கக் காரணம் என்ன?''என்று கேட்டான்.திடுக்கிட்ட பெரியவர் ,''ஒன்றுமில்லை,இந்த விறகுக் கட்டை தூக்கி விட இங்கே யாரும் இல்லை.அதனால் தான் உன்னை அழைத்தேன்.''என்றாராம்.

மரணத்தின் மகிமை

0

Posted on : Thursday, December 03, 2009 | By : ஜெயராஜன் | In :

அலெக்சாண்டர் இறக்கும் தருவாயில் போர் வீரர்களிடம் சொன்னார்,''எனக்கு நீங்கள் நான் கேட்கப் போகும் உதவிகளைச் செய்ய வேண்டும்.நான் இறந்த பின் என்னைச் சவப் பெட்டியில் தூக்கிச் செல்லும் பொது என் இரு கைகளையும் வெளியே தொங்கப் போட்டவாறு எடுத்துச் செல்ல வேண்டும்.எனக்கு மருத்துவம் பார்த்த உலகப் புகழ் பெற்ற டாக்டர்கள் சவ ஊர்வலத்தின் முன்னே செல்ல வேண்டும்.நான் சேகரித்த வைரங்களையும் வைடூரியங்களையும் ஊர்வலப் பாதையில் போட்டுக்கொண்டே செல்ல வேண்டும்.''
அங்கிருந்த அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை.இவற்றை ஏன்செய்யவேண்டும் என்று ஆர்வமுடனும் வருத்தத்துடனும் அவரையே கேட்க அவர் சொன்னார்,''நான் எத்தனை நாடுகளை வென்ற போதும் எத்தனை கோடி செல்வத்தை வாரி எடுத்த போதிலும்,இறந்தபின் நான் வெறுங் கையுடன் தான் போகிறேன் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள என் கைகளை வெளியே தொங்க விட வேண்டும்.மிகச்சிறந்த மருத்துவர்கள் இருந்தாலும் சாவை வெல்ல முடியாது என்பதை உணர்த்த மருத்துவர்கள் சவ ஊர்வலத்தில் செல்ல வேண்டும்.வைரங்களும் வைடூரியங்களும் இறந்த பின் மதிப்பில்லாதவை என்பதை அறிவிக்கத்தான் அவற்றை ஊர்வலத்தில் வீசச் சொன்னேன்.''

பயமுறுத்தல்

0

Posted on : Thursday, December 03, 2009 | By : ஜெயராஜன் | In :

ஒரு பிச்சைக்காரன்,''சோறு போட வில்லை என்றால் அடுத்த கிராமத்தில் செய்த மாதிரி செய்து விடுவேன்,''என்று பயமுறுத்தியே காலட்சேபம் செய்து வந்தான்.ஏமாந்த பெண்களும் பயந்து அவனுக்கு அன்னமிட்டு வந்தனர்.ஒரு தைரியமுள்ள பெண்மணி ஒரு நாள் துணிந்து கேட்டாள்,''அடுத்த கிராமத்தில் அப்படி என்ன தான் செய்தாய்?''பிச்சைக்காரன் சொன்னானாம்,''துண்டை உதறித் தோளில்போட்டுக் கொண்டு வேறு ஊர் தேடித் போவேன்.''

மென்மை

0

Posted on : Thursday, December 03, 2009 | By : ஜெயராஜன் | In :

ஒரு மனிதனுக்கு நாக்கு கடைசி வரை இருக்கிறது.ஆனால் பற்கள் சீக்கிரமே விழுந்து விடுகின்றன.ஏன்?ஒரு ஞானி சொல்கிறார்,''நாக்கு மென்மையாக இருப்பதால் நிலை பெற முடிகிறது.பற்கள் கடினமாக இருப்பதால் விழுந்து விடுகின்றன.

வெற்றிக்கு வழி

0

Posted on : Thursday, December 03, 2009 | By : ஜெயராஜன் | In :

நான் இளைஞனாக இருக்கும் போது,பத்துக் காரியங்கள் செய்தால் ஒன்பது காரியங்கள் தோல்வி அடைவதைக் கண்டேன்.என் வாழ்க்கை தோல்வியாவதை நான் விரும்ப வில்லை.ஒன்பது முறை வெற்றியடைய என்ன செய்ய வேண்டுமென்று யோசித்தபோது எனக்கு ஒரு உண்மை பளிச்சென்று தெரிந்தது.90 முறை முயன்றால் ஒன்பது முறை வெற்றி கிடைக்கும் என்பது தான் அது.ஆகவே முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன்.
---பெர்னாட்ஷா

பகைவன்

0

Posted on : Thursday, December 03, 2009 | By : ஜெயராஜன் | In :

ஆப்ரஹாம் லிங்கனின் நண்பர் சொன்னார்,''நீங்கள் ஏன்உங்கள் பகைவர்களிடம் கூட நட்பு பாராட்டுகிறீர்கள்?நீங்கள் நினைத்தால் அவர்களைஒழித்து விடலாமே?''
லிங்கன் சொன்னார்,''நட்பு கொள்ளும் போதே பகைவன் ஒழிந்து விடுகிறானே!''

ஆறுதல்

0

Posted on : Thursday, December 03, 2009 | By : ஜெயராஜன் | In :

வேடன் ஒருவன் காட்டில் ஒரு முயல் பிடித்தான்.குதிரை வீரன் ஒருவன் வந்து விலை கேட்டான்.விலை சொல்லு முன்னே முயலைப் பிடுங்கிக் கொண்டு குதிரையில் பறந்தான்.வேடன் பின்னால் ஓடினான்.பிடிக்க முடிய வில்லை.கடைசியில் சப்தம் போட்டுச் சொன்னான்,''ஏய் குதிரைக்காரா,என்னை ஏய்த்துவிட்டு என் முயலை எடுத்துக் கொண்டதாக நினைத்து விடாதே!நான் அதை உனக்கு பரிசாகக் கொடுத்து விட்டேனாக்கும்!''
குதிரைக்காரன் காதில் அது விழுந்ததோ இல்லையோ,வேடனுக்கு ஆறுதல் கிடைத்தது.

கவலை ஏன்?

0

Posted on : Thursday, December 03, 2009 | By : ஜெயராஜன் | In :

வெற்றியா?அது ஒன்றும் பெரிதில்லை.
நஷ்டமா? புதிய முயற்சி செய்வோம்.
சாவா? நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை.
காட்சியா?கண்டு களிப்போம்.
சங்கீதமா?கேட்டு மகிழ்வோம்.
இப்படி எல்லாவற்றையும் அவற்றிற்குரிய மதிப்பளித்து ஏற்றுக் கொண்டு விட வேண்டும்.வினைகளும் அதன் விளைவுகளும் இயற்கை நியதி என்று ஆகி விட்ட பின் மனதில் தொய்வுக்கும் தாழ்ச்சிக்கும் இடம் கிடையாது.அது போல் கவர்ச்சிக்கும் எக்களிப்புக்கும் அர்த்தம் கிடையாது.மனதினை மாத்திரம் புதிதாக வைத்துக் கொள்வோம்.நாம் செய்த செயல்களையும் அதன் விளைவுகளையும் தொகுத்து வைத்துக் கொண்டு அந்தத் தொகுப்பு தான் நாம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.

குழந்தை வளர்ப்பு

0

Posted on : Thursday, December 03, 2009 | By : ஜெயராஜன் | In :

கடுமையான விமரிசனங்களோடுவளர்க்கப்படும் குழந்தை எதையும் மட்டம் தட்டி ஒதுக்கக் கற்றுக் கொள்கிறான்.
நையாண்டி செய்து வளர்க்கப்படும் குழந்தை எதைக் கண்டும் வெட்கி ஒதுங்க ஆரம்பிக்கிறான்.
அவமான உணர்ச்சியோடு வளர்க்கப்படும் குழந்தை ,குற்ற உணர்வுகளுக்கு அடிமையாகிப் போகிறான்.
பொறுப்போடு வளர்க்கப்படும் குழந்தை ,நிதானத்தோடு இருக்கிறான்.
சரியான தூண்டுதலோடு வளர்க்கப்படும் குழந்தை ,தன்னம்பிக்கையோடு திகழ்கிறான்.
தக்க பாராட்டுதல்களுடன் வளர்க்கப்படும் குழந்தை நல்லவற்றை ரசிக்க கற்றுக் கொள்கிறான்.
நியாய உணர்வோடு வளர்க்கப்படும் குழந்தை நேர்மையைக் கடைப் பிடிக்கிறான்.
பாதுகாப்போடு வளர்க்கப்படும் குழந்தை மற்றவர்களை நம்பப் பழகுகிறான்.
தட்டிக் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தை தன்னையே புரிந்து கொண்டவனாக இருக்கிறான்.
அன்பு,நட்பின் அர்த்தம் புரிந்து வளர்க்கப்படும் குழந்தை நிஜமான அன்பைக் கொடுக்கவும் ,பதிலுக்கு அதைப் பெறவும் தெரிந்து கொள்வதால் ஆயுசு முழுவதும் நிம்மதியாக இருக்கும் வழியைத் தெரிந்து கொள்கிறான்.

ஆண்டவா!

0

Posted on : Wednesday, December 02, 2009 | By : ஜெயராஜன் | In :

என்னால் மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை எனக்குக் கொடு.
மாற்றக்கூடியதை மாற்றும் தைரியத்தை எனக்குத்தா.
மாற்றக்கூடியது எது ,மாற்ற முடியாதது எது என்பதைப் பாகுபடுத்தும்
தெளிவை எனக்குத்தா,ஆண்டவனே!

உண்மையான பாசம்

0

Posted on : Wednesday, December 02, 2009 | By : ஜெயராஜன் | In :

அப்பாவுக்கு வயது 108.மகனுக்கு வயது 90.இருவரும் தினசரி காலை முதல் மாலை வரை வயலில் வேலை செய்வர்.அப்பா முன் கோபி.சிறு தவறுகளுக்கு எல்லாம் மகனை அடிப்பார்.ஆனால் மகன் எதிர்த்துக் கூட பேச மாட்டார்.ஒரு நாள் கோபத்துடன் தந்தை மகனை அடித்த போது மகன் கண்ணீர் விட்டு அழுதார்.
''இத்தனை நாள் இல்லாது இன்று மட்டும் அழுத காரணம் என்ன?''என்று தந்தை கேட்ட போது மகன் சொன்னார்,''அப்பா,இது வரை நீங்கள் அடித்த போதெல்லாம் வலி அதிகமாக இருக்கும்.நானும் பொறுத்துக் கொள்வேன்.இன்று நீங்கள் ஓங்கி அடித்தும் வலிக்கவில்லை.ஐயோ,உங்கள் உடம்பில் வலு குறைந்து விட்டதே என்று எண்ணித்தான் அழுதேன்.''
---சீனக்கதை

விலை மிகுந்த பொருள்

0

Posted on : Wednesday, December 02, 2009 | By : ஜெயராஜன் | In :

பாரசீக மொழியில் அழியாக் காவியங்களை எழுதியவர் மௌலானா ஜாமி.அவர் வீட்டுக்குள் நுழைந்ததும் கதவைத் தாளிட்டுக் கொள்வார்.வெளியே போகும் போது கதவைத் திறந்து வைத்து விட்டுச் செல்வார்.இவ்வாறு செய்வதற்குக் காரணம் கேட்ட போது ,''வீட்டினுள் இருக்கும் போது அதற்குள் விலை மிகுந்த பொருள் நான் தான்.''

பதவி ஆசை

0

Posted on : Wednesday, December 02, 2009 | By : ஜெயராஜன் | In :

மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து ,''மழை வருமா?''எனக் கேட்டான்.''வராது''என்றான் அமைச்சன்.வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் மழை வரும் என எச்சரித்தான்.அதைப் பொருட்படுத்த்தாமல் போன மன்னன் வேட்டை ஆடிக் கொண்டிருந்த போதுகடும் மழை வந்து நன்றாய் நனைந்து போனான்.
திரும்பும் வழியில் குடியானவனைச் சந்தித்து ,''மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?''எனக் கேட்டான்.அவனோ,''மன்னா,எனக்குத் தெரியாது.ஆனால் என் கழுதைக்குத் தெரியும்.மழை வரும் முன் அது தன காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்.''என்றான்.
உடனே மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினான்.
இக்கதையை ஆபிரஹாம் லிங்கன் கூறி விட்டு சொன்னார்,''அதில் தான் மன்னன் ஒரு தவறு செய்து விட்டான்.என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன.''

மகனுக்கு

0

Posted on : Wednesday, December 02, 2009 | By : ஜெயராஜன் | In :

ஆபிரஹாம் லிங்கன் ,தன மகனுக்கு என்ன கற்பிக்கப் படவேண்டும் என்று அவனது ஆசிரியருக்கு விடுத்த வேண்டுகோள் கடிதம்;
எவரும் முற்றிலும் நேர்மையானவர் அல்லர்;உண்மையானவர் அல்லர்--இதை அவனுக்குச் சொல்லுங்கள்.
தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியைக் கொண்டாடவும் கற்றுக் கொடுங்கள்.
பெருமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
மனம் விட்டுச் சிரிக்கும் இரகசியம் அவனுக்குத் தெரியட்டும்.
டம்பப் பேச்சுக்கு அடிமை ஆவது எளிது என்பதை அவன் சிறு வயதிலேயே அறியட்டும்.
புத்தகங்களின் விரோதங்களை அவனுக்கு உணர்த்துங்கள்.
இயற்கை விநோதங்களை அலசி ஆராய அவனுக்கு நேரம் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட ,தோற்பது கண்ணியமானது என்பதனைக் கற்றுக் கொடுங்கள்.
எத்தனை பேர் கூடி 'தவறு'என்றாலும்,சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும்,உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடக்கக் கற்றுக் கொடுங்கள்.
துன்பத்தில் அவன் சிரிக்கட்டும்.அத்துடன் கண்ணீர் விடுவது அவமானம் இல்லை என்பதை உணர்த்துங்கள்.
குற்றங்குறை கூறுபவர்களை அவன் அலட்சியப் படுத்தட்டும்.அத்துடன் அளவுக்கு அதிக இனிமையுடன் பேசுபவரிடம் எச்சரிக்கையாகவும் இருக்கச் சொல்லிக் கொடுங்கள்.
உரக்கக் கத்தும் கூட்டத்திற்கு அவன் செவி சாயாமல் இருக்கட்டும்.தன மனதுக்கு 'சரி' என்று தோன்றுவதை துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
அவனை மென்மையாக நடத்துங்கள்.அதற்காகக் கட்டித் தழுவாதீர்கள்.
எப்போதும் எதிலும் ஆவல் மிக்கவனாக இருக்க அவனுக்குத் தைரியம் ஊட்டுங்கள்.தொடர்ந்து தைரியசாலியாக இருக்க விடாமுயற்சியைக் கற்றுக் கொடுங்கள்.
தன்னம்பிக்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.அப்போது அவன் மனித சமுதாயம்,அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவனாக இருப்பான்.
இவையெல்லாம் மிகப்பெரிய ,கடினமான நடைமுறைகள்தான்.ஆனால் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.ஏனெனில் இனிமையான என் மகன் மிகவும் சிறியவன்.

அறத்தின் உரு

0

Posted on : Wednesday, December 02, 2009 | By : ஜெயராஜன் | In :

மற்றவர்களது இரகசியங்களைத தெரிந்து கொள்வதில் செவிடனாக இரு.
பிறன் மனைவியைப் பார்க்கும் பொது குருடனாக இரு.
கோள் சொல்லும் விசயத்தில் ஊமையாக இரு.
அப்படி இருப்பவனுக்கு நல வழிப் பாடம் போதிக்க வேண்டியதில்லை.
அவனே அறத்தின் உருவமாவான்.
----நாலடியார்.

தைரியம்

0

Posted on : Wednesday, December 02, 2009 | By : ஜெயராஜன் | In :

அலெக்சாண்டர் ஒரு கடல் கொள்ளைக் காரனை பிடித்து விசாரிக்கிறார்.,''எந்த தைரியத்தில் நீ கடலில் கொள்ளை அடித்தாய்?''
கொள்ளையன் சொன்னான்,''நாடு பிடிக்கத் தங்களுக்கு எந்த தைரியம் காரணமோ ,அதே தைரியம் தான்.''

வார்த்தை

0

Posted on : Tuesday, December 01, 2009 | By : ஜெயராஜன் | In :

ஒரு கவனக் குறைவான வார்த்தை ,சர்ச்சையில் முடியும்.
ஒரு கடுமையான வார்த்தை ,வாழ்க்கையை முறிக்கும்.
ஒரு கசப்பான வார்த்தை ,வெறுப்பை வளர்க்கும்.
ஒரு கொடுமையான வார்த்தை,துடித்துச் சாகடிக்கும்.
ஒரு இனிமையான வார்த்தை,நல வாழ்வைக் கொடுக்கும்.
ஒரு சந்தோசமான வார்த்தை,ஒளியைக் கொடுக்கும்.
ஒரு நேரமறிந்து கூறும் வார்த்தை,கடுமையைத் தணிக்கும்.
ஒரு அன்பான வார்த்தை பாசத்தை வளர்க்கும்.

முகஸ்துதி

0

Posted on : Tuesday, December 01, 2009 | By : ஜெயராஜன் | In :

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் டயோனிக்ஸ் ,அரிஸ்டோ பஸ் என்னும் இரண்டு தத்துவ ஞானிகள் வாழ்ந்து வந்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
ஒரு நாள் டயோனிக்ஸ் தன் வீட்டில் குழம்பு வைக்க கீரையை அலசிக் கொண்டிருந்தார்.அரிஸ்டோ பஸ் அப்போது அங்கு வந்தார். ''அரசனை முகஸ்துதி செய்ய நீ தெரிந்து கொண்டால் ,இப்படிக் கீரையை சாப்பிட வேண்டிய அவசியம் வராது.,''எனச் சினந்து சொன்னார் அரிஸ்டோ பஸ் .
''நண்பனே,கீரை போன்ற எளிய உணவை சாப்பிட நீ பழகிக் கொண்டால்,அரசனை முகஸ்துதி செய்ய வேண்டிய அவசியம் வராது.''எனச் சொல்லிச் சிரித்தார் டயோனிக்ஸ்.

இயலாமை

0

Posted on : Tuesday, December 01, 2009 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஆண் சிங்கம் ,ஒரு மானை விரட்டிச் சென்றது.மான் வேகமாக ஓடித் தப்பித்து விட்டது. பெண் சிங்கம் ஆண் சிங்கத்தின் இயலாமை குறித்து கேலி செய்தது.
ஆண் சிங்கம் சொன்னது,''நான் இரைக்காக ஓடினேன்.ஆனால் மான் உயிருக்காக ஓடியது.''

லட்சியம்

0

Posted on : Tuesday, December 01, 2009 | By : ஜெயராஜன் | In :

மழை பெய்து ஓடி வரும் தண்ணீர் பாறையின் மீது மோதி மோதித் தேங்கி நின்று தவிப்பதில்லை.மோதுகிறது. பின் இடுக்குக் கிடைத்த வழியே தன பாதையை வகுத்துக் கொண்டு பேராறாகச்செல்கிறது.லட்சியத்தை அடைய முயல வேண்டுமே ஒழிய பாறைகளை எதிர்த்துக்கொண்டு பாதி வழியில் நிற்பது பரிதாபத்திற்கு உரியது.
-----டாக்டர் உதயமூர்த்தி

சுதந்திரம்

0

Posted on : Tuesday, December 01, 2009 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் தெருவில் நடந்து செல்லும் பொது தன்னுடைய கைத்தடியை அநாயாசமாக சுழற்றிக் கொண்டேயிருந்தான். தெருவில் வந்து கொண்டிருந்த பாதசாரி ஒருவர் அதை ஆட்சேபித்தார். ''என் கைத்தடியை என் இஷ்டம் போல் சுழற்ற எனக்கு சுதந்திரம் இல்லையா?என முதல் ஆள் கேட்டான்.பாதசாரி சொன்னான்,''உனக்கு சுதந்திரம் இல்லை என்று யார் சொன்னது?ஆனால் ஒன்றை மட்டும் நீ மறந்து விடக் கூடாது.என்னுடைய மூக்கு எங்கே ஆரம்பிக்கின்றதோ அந்த இடத்தில் உன் சுதந்திரத்தின் எல்லைக் கோடுமுடிகிறது என்பதை மறந்து விடாதே.''
---தத்துவ விமரிசகர் சி.இ எம் .ஜோட்