உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வெறுப்பை வெல்வது எப்படி?

0

Posted on : Saturday, January 12, 2013 | By : ஜெயராஜன் | In :

கடந்த காலத்தில் நிகழ்ந்து விட்ட மகிழ்ச்சி அளிக்காத விசயங்களில் இருந்து உணர்ச்சிபூர்வமாக விடுபட முயலும் உபாயமே வெறுத்து ஒதுக்குதல் ஆகும்.கடந்தகால மகிழ்ச்சியற்ற விசயங்களை அலட்சியப்படுத்துகின்ற  மனோபாவத்தை  நீங்கள் ஏற்படுத்திக் கொண்டால் தேவையற்ற மனத் துன்பம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.கடந்த கால நிகழ்ச்சிகளை எத்தனை முறை நினைவு படுத்திக் கொண்டாலும் அதை நீங்கள் மறக்கப் போவதில்லை எனவே எதற்காகக் கடந்த கால துன்ப நினைவுகளுக்கு இப்போது ஏன் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும்?மாற்ற முடியாததை  அலட்சியப் படுத்துங்கள்:மறந்து விடுங்கள்.
உங்கள் உணர்ச்சிகள் எளிதில் புண்படுகின்றனவா?மற்றவர்கள் சொல்லும் விஷயங்கள் உங்களை மிகப் பாதிக்கின்றனவா?சில யோசனைகள்:சில விசயங்களில் உங்கள் உணர்ச்சிகள் மரத்துப் போகட்டும்.மற்றவர்கள் என்ன சொன்னாலும் துடைத்து எறிந்து விடுங்கள்.ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருக்கும்.பயிற்சி செய்தால் சரியாகிவிடும்.நம் உணர்வுகள் அனைத்தும் பயிற்சிக்குக் கட்டுப் பட்டவை.
ஒரு மனிதன் நிகழ்ந்து விட்ட சம்பவத்தால் புண் படுவதைவிட சம்பவத்தைப் பற்றி தான் கொள்கின்ற அபிப்பிராயத்தாலேயே புண் படுகிறான்.மடுவை மலை ஆக்காதீர்கள்.மற்றவர்கள் உங்களை அவமானப் படுத்தினால் அவர் நோக்கம் நிறைவேற நீங்கள் ஏன் ஒத்துழைக்க வேண்டும்?உணர்ச்சிகள் மரத்துப் போகும்போது பாதிப்புகளும் குறைந்து விடுகின்றன.
நீங்கள்   ஒருவரை வெறுத்து ஒதுக்கும்போது அவர் எந்த பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.நீங்கள் மட்டும் உணர்ச்சி வசப்பட்டு உங்கள் ஆரோக்கியத்தை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்?எதிரிகளை நேசிக்க முடியாவிட்டாலும் உங்களை நீங்களே நேசிக்கலாம் அல்லவா?உங்கள் மகிழ்ச்சி உங்கள் எதிரியின் கட்டுப்பாட்டில் ஏன் இருக்க வேண்டும்?எனவே வெறுத்து ஒதுக்கும் சூழ்நிலையை அலட்சியப் படுத்துங்கள்.மறந்து விடுங்கள் அந்த சந்தர்ப்பங்களில் வேறு விசயங்களைப் பற்றி நினையுங்கள். வேலை களில் ஈடுபடுங்கள்.விரும்பாதவரைப் பற்றி சிந்தித்து ஒரு நிமிடம் கூட வீணாக்காதீர்கள்.
வெறுத்தது ஆழமாக வேரூன்றி விட்டால் என்ன செய்வது?வெறுத்து ஒதுக்குபவரை அனுதாபத்துடன் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.உங்களிடம் அவர்கள் வெறுப்பை ஏற்படுத்த நியாயமான காரணங்களும் இருக்கக் கூடும்.நீங்கள் நிதானமாக ஆராய ஆரம்பித்தால், உங்கள் குறைகள் என்ன என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment