ஒரு பெரியவர் வீட்டில் ஒரு உண்டியல் வைத்திருந்தார்.வீட்டில் யார் தவறு செய்தாலும் அதில் அபராதமாக ஒரு ரூபாய் போட வேண்டும்.பிறகு சேர்ந்த பணத்தை அவ்வப்போது பக்கத்தில் உள்ள கோவிலுக்குக் கொடுத்து விடுவார்.ஒரு சமயம் அவர் இரண்டு மாதம் வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.திரும்ப வந்து உண்டியலைப் பார்த்ததில் ஒரு ரூபாய் தான் இருந்தது.அவருக்கு மகிழ்ச்சி.''தேவலையே,இந்த இரண்டு மாதங்களில் ஒரே ஒரு தவறு தான் செய்திருக்கிறீர்கள் போலிருக்கே ,''என்றார்.
மகன் சொன்னான்,'' இல்லையப்பா,அதில் இருநூறு ரூபாய் சேர்ந்திருந்தது.அதை நான் செலவுக்கு எடுத்துக் கொண்டேன்.''என்றான்.
''அது தவறு இல்லையா?''என்று கேட்டார் அப்பா.
'அந்தத் தவறுக்குத்தான்அதில் ஒரு ரூபாய் போட்டேன்.அதில் இருப்பது நான் போட்ட ஒரு ரூபாய் தான்.'என்றான் பையன்.
|
|
Post a Comment