உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

என்ன தெரியும்?

0

Posted on : Thursday, April 05, 2012 | By : ஜெயராஜன் | In :

சுபி ஞானிகளைப் பற்றி ஒருவன் தரக் குறைவாக விமரிசித்து வந்தான்.இதைக் கேள்விப்பட்ட ஞானி ஒருவர் அவனை அழைத்து தன் கையிலிருந்த மோதிரத்தை அவனிடம் கொடுத்து ,''இதைக் கடைத்தெருவுக்கு எடுத்துச் சென்று ஆயிரம் ரூபாய்க்கு விற்று வா,''என்றார்.அவனும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடை வீதிக்கு எடுத்து சென்று அதை விற்க முயற்சி செய்தான்.ஒருவரும் ஆயிரம் ரூபாய் கொடுத்து அதை வாங்கத் தயாராக இல்லை.நொந்து போய் அவன் ஞானியிடம் சென்று ,''இந்த மோதிரத்தை நூறு ரூபாய்க்குக் கூட யாரும் வாங்கத் தயாராயில்லை,''என்றான்.உடனே ஞானி,''பரவாயில்லை,இதை தங்க நகைக் கடைத் தெருவுக்கு எடுத்துச் சென்று என்ன விலை கேட்கிறார்கள் என்பதை அறிந்து வா,''என்றார்.அவனும் அவ்வாறே சென்று ஒரு கடையில் அம்மோதிரத்தைக் கொடுத்து எவ்வளவு தர முடியும் என்று கேட்டான்.கடைக்காரன் ஒரு லட்ச ரூபாய் தர முடியும் என்று கூற மகிழ்ச்சியுடன் அவன் வந்து ஞானியிடம் சொன்னான்.ஞானி இப்போது அவனிடம் அமைதியாக சொன்னார்,''இந்த மோதிரத்தின் மதிப்பை எந்த அளவுக்குக் கடை வீதியில் இருப்பவர்கள் அறிந்திருந்தார்களோ அந்த அளவே நீயும் சுபி ஞானிகளைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறாய்.நீ என்று நகை வியாபாரியின் தரத்துக்கு வரப்போகிறாய்?''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment