உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஏலம்

0

Posted on : Saturday, December 11, 2010 | By : ஜெயராஜன் | In :

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தவர் மதன் மோகன் மாளவியா.பல்கலைக் கழகத்தை ஆரம்பிக்க அவர் பொருளாதார ரீதியில்  மிகவும் சிரமப்பட்டார். அவர் மனம் தளராது ஊர் ஊராகச் சென்று,செல்வந்தர்களையும்,பெரிய வணிகர்களையும் நேரில் சந்தித்துநிதி உதவி கோரினார்.இதற்காக அவர் ஹைதராபாத் நவாபையும் பார்த்து நிதி உதவி கோரினார்.நவாப் கோபத்துடன்,''என்ன தைரியம் இருந்தால்,என்னிடம் வந்து,ஒரு இந்துப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்க நிதி கேட்பாய்?''என்று கேட்டவாறே அவர் காலிலிருந்த செருப்பைக் கழட்டி மாளவியாவின் மீது எறிந்தார்.மாளவியா ஏதும் பேசாமல் அந்த செருப்பை எடுத்துக் கொண்டு கடை வீதிக்கு வந்து,''இது நவாப் அவர்களின் செருப்பு.இப்போது இதை நான் ஏலம் விடப் போகிறேன்,''என்று கூவி அழைத்தார்.தகவல் நவாபுக்கு எட்டியது தன செருப்பு குறைந்த விலையில் ஏலத்தில் சென்றால் தனது கௌரவத்திற்கு இழுக்கு  என்று எண்ணிய நவாப் உடனே தன ஆட்களிடம் ஒரு பெரிய தொகையைக் கொடுத்துவிட்டு செருப்பை ஏலத்தில் எடுக்கச் சொன்னார்.மாளவியாவும் தன காரியம் பலித்தது என அந்தத் தொகையை பல்கலைக் கழக நிதியில் சேர்த்துக் கொண்டார்.
ஒருவனை முன்னேற விடாமல் தடுப்பது,அவனது திறமையின்மையோ,தகுதிக் குறைவோ கூட அல்ல.இனி தனக்கு வாய்ப்பே இல்லை,விடிவு காலமே இல்லை என்று ஒரு முடிவுக்கு வருவதுதான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment