அவர் ஒரு புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞர்.ஒருநாள் பகலில் வீதியில் நின்று கொண்டு தன வீட்டிற்கு செல்ல ஒரு டாக்சியை நிறுத்தினார்.அந்த ஓட்டுநரோ தனக்கு வேலை நேரம் முடிந்து விட்டது என்று சொல்லி நிற்காமல் சென்று விட்டான்.அடுத்து சிறிது நேரம்கழித்து வந்த டாக்சியின் ஓட்டுனர்,அவர் செல்ல வேண்டிய இடம் பற்றி விசாரித்து விட்டு அங்கு தன டாக்சி வராது என்று சொல்லி சென்று விட்டான்.இன்னொருவன் தனக்கு சாப்பாட்டு நேரம் அதனால் வராது என்று கூறினான்.இப்படியே அவர் பல டாக்சிகளை நிறுத்திப் பார்த்தும் ஒருவன் கூட வரவில்லை.நீண்ட நேரம் வயலின் வாசித்தபோது கூட வலிக்காத அவர் கை இப்போது வலித்ததுதான் மிச்சம்.நொந்துபோய் அவர் நின்று கொண்டிருந்தபோது ஒரு டாக்சி வந்தது.அது அவர் கை காட்டியும் நிற்காமல் சென்றது.சிறிது தூரம் சென்றதும் நின்றது.பின்புறமாக வந்தது அவர் அருகிலே வந்தவுடன் ,அந்த ஓட்டுனர் கேட்டார்,''நீங்கள் வயலின் மேதைதானே!''அவருக்கு அப்போதுதான் நிம்மதி ஏற்பட்டது.தன்னை அடையாளம் கண்டு ஒருவன் டாக்சியை நிறுத்தியதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி.அவர் வண்டியினுள் ஏறுமுன் அந்த ஓட்டுனர் சொன்னார்,''புகைப்படத்தில் பார்த்ததைக் காட்டிலும் நேரில் பார்க்கும்போது குள்ளமாகத் தெரிகிறீர்கள்,''என்று சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு விரைந்து விட்டான்.
|
|
Post a Comment