தன் காரை சரி செய்ய ஒரு மெக்கானிக்கிடம் ஒப்படைத்தார் ஒருவர்.இரண்டு நாள் கழித்து அவரிடம்,''வண்டியில் என்ன வேலை?''என்று கேட்டார்.மெக்கானிக் சொன்னார்,''உங்கள் பேட்டரிக்கு கார் மாற்ற வேண்டும்.''
**********
தன் நண்பனின்காரைப்பற்றி பெருமையாய் ஒருவன் சொன்னான்,''அந்தக் காரில் ஹாரன் தவிர எல்லா பாகங்களும் சப்தம் போடும்.''
**********
மூன்று நண்பர்கள் ஒரு புகைவண்டியில் பயணம் செய்தார்கள்.இறங்கும் இடம் வந்ததும் ஒருவன்,தன் பொருட்கள் ஏதும் எடுக்காமல் விடுபட்டிருக்கிறதா என்று கூடப் பார்க்காமல் விரைவாக இறங்கினான்.இரண்டாமவனோ,தன் பொருட்கள் எதுவும் விடுபட்டிருக்கிறதா என்பதை ஒரு முறைக்கு இருமுறை பார்த்தான்.மூன்றாமவன் வேறு யாராவது ஏதாவது பொருட்களை விட்டுச் சென்றிருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
**********
கணவனும் மனைவியும் சினிமாவுக்கு செல்ல முடிவெடுத்திருந்தனர். கணவன் உடனே தயாராகிவிட்டான்.ஆனால் மனைவி அலங்காரத்தில் தாமதம் செய்து கொண்டிருந்தாள்.கணவன் பொறுமையிழந்து,''நான் கடைசியாகக் கேட்கிறேன்.நீ வருகிறாயா இல்லையா?''மனைவி சொன்னாள்,''நானும் கடைசியாகச் சொல்கிறேன்,'இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடுவேன்,' ''
**********
பேருந்து நடத்துனர் ஒரு சிறுவனிடம் வயது கேட்க அவன் பதினொன்று என்றான்.நடத்துனர் கேலியாக,''உனக்கு எப்போதுதான் பன்னிரண்டு வயது ஆகும்?''என்று கேட்டார்.பையன் சொன்னான்,''பேருந்தை விட்டு இறங்கியதும்.''
**********
பொது சேவை ஒன்றிற்காக ஒரு கூட்டத்தில் பணம் வசூல் செய்து கொண்டு வந்தார்கள்.எல்லோரும் தங்களால் இயன்றதை கொடுத்தனர்.மூன்று நண்பர்கள் மாத்திரம் எதுவும் கொடுக்க விரும்பவில்லை.ஆனால் எப்படித் தப்பிப்பது என்று யோசித்தார்கள்.வசூல் செய்கிறவர் அருகில் வந்ததும் ஒருவன் மயக்கம் போட்டு விழுந்தான்.அடுத்த இருவரும் அவனைத் தூக்கிக் கொண்டு வெளியேறினர்.
**********
ஒரு பெரிய ஸ்டோரில் ஒருவன் சிகரெட் வாங்கிக்கொண்டு உடனே ஒன்றை எடுத்து பத்த வைத்தான்.அங்கிருந்த மேனேஜர்,''இங்கு புகைக்கக் கூடாது,''என்று வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையைக் காட்டினார்.உடனே அவன்,''நீங்கள் தான் சிகரெட் விற்கிறீர்கள்.நீங்களே புகைக்கக் கூடாது என்று சொன்னால் என்ன அர்த்தம்?''என்று சீறினான்.மேனேஜர் அமைதியாகச் சொன்னார்,''நாங்கள் குளித்தபின் துடைப்பதற்கான துண்டுகளையும் தான் விற்கிறோம்.அதற்காக........''
**********
''தாத்தா,நீங்கள் கடலை சாப்பிடுவீர்களா?'''
'எனக்குப் பல் இல்லையே பேராண்டி,என்னால் சாப்பிட முடியாது.'
''அப்படியானால் இந்தக் கடலையை வைத்திரு.நான் விளையாடி விட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன்.''
**********
நீதிபதி: நீ அந்த ஆள் துப்பாக்கியால் சுட்டதை நேரில் பார்த்தாயா?''
சாட்சி: இல்லை ஆனால் சுடும் சப்தத்தைக் கேட்டேன்.
நீதிபதி:அது போதுமான சாட்சியம் ஆகாது.
சாட்சி கூண்டிலிருந்து வெளியேறி நீதிபதிக்கு முதுகைக் காட்டிய வண்ணம் பலமாக சப்தம் போட்டு சிரித்தான்.நீதிபதி அவனைக் கூப்பிட்டு நீதிமன்றத்தை அவமதித்ததற்காக நடவடிக்கை எடுக்கப் போவதாக சொன்னார்.
சாட்சி:நீங்கள் நான் சிரித்ததைப் பார்த்தீர்களா?
நீதிபதி:இல்லை ஆனால் நீ சிரித்த சப்தம் எல்லோருக்கும் கேட்டதே.
சாட்சி:அது குற்றத்தை நிரூபிக்க போதுமான து இல்லையே.
**********
ஒருவன் தன் நண்பனிடம் கேட்டான்,''உன்னைப் பற்றி நாலு பேர் நாலு விதமாகப் பேசுகிறார்களே,அதற்கு என்ன அர்த்தம்?''
நண்பன் சொன்னான்,''மொத்தத்தில் பதினாறு விதமாகப் பேசுகிறார்கள் என்று அர்த்தம்.''
**********
|
|
Post a Comment