கோபம் கொள்ளும் போதெல்லாம் ஐந்து தடவை ஆழ்ந்து சுவாசியுங்கள்.இந்த எளிய பயிற்சி வெளிப்பார்வைக்கு கோபத்துடன் சம்பந்தம் இல்லாதது போலத்தோன்றும்.உணர்வற்றவராக நீங்கள் இருக்கும்போதே கோபம் வரும்.இப்பயிற்சி உணர்வுள்ள ஒரு முயற்சி.இப்பயிற்சி உங்கள் மனதை உன்னிப்புடையதாக ஆக்கும்.மனம் விழிப்படைகிறது.உடலும் விழிப்படைகிறது.இந்த விழிப்பான கணத்தில் கோபம் மறைந்து விட்டிருக்கும். இரண்டாவதாக,உங்கள் மனது ஒரு பக்கத்தில் மட்டுமே முனைப்பாக இருக்க முடியும்.ஒரே நேரத்தில் இரண்டு விசயங்களை மனத்தால் சிந்திக்க முடியாது. கோபம் இருந்தால் அது மட்டுமே இருக்கிறது.மூச்சுப் பயிற்சியில் மனம் மூச்சு விடுவதோடு மட்டுமே இருக்கிறது.அதாவது மனதின் கவனம் திரும்பி இருக்கிறது.இப்போது அது வேறு பாதையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.மறுபடியும் நீங்கள் கோபிக்கத் திரும்பினாலும் பழைய மாதிரி உங்களால் கோபிக்க முடியாது. தொடர்ந்து கோபம் வரும்போதெல்லாம் இப்பயிற்சியை செய்யுங்கள். அப்போது அது ஒரு பழக்கமாக ஆகி விடுகிறது.இனி நீங்கள் நினைத்துப் பார்க்காமலேயே கோபம் வரும்போதெல்லாம் உடனடியாக உங்கள் உடல் இயந்திரம் தானே வேகமாக ஆழ்ந்து மூச்சு விட தொடங்குகிறது.சில ஆண்டுகளில் கோபம் உங்களிடமிருந்து மறைந்து விடும்.
|
|
Post a Comment