ஒரு விஷயத்தைப்பற்றிய உண்மையை அறிந்து கொள்ள மக்கள் வாதம் செய்வதுண்டு.வாதம் மூன்று வகைப்படும்.
விதண்டாவாதம்: தங்கள் கருத்து என்னவென்று சொல்லாமல் எதிராளியின் கருத்து தவறு என்று நிரூபிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதுதான் விதண்டாவாதம்.எதிராளியைத் தோற்கடித்து அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதுதான் குறி.உண்மையைத் தெரிந்து கொள்வதில் துளிக்கூட ஆர்வம் இருக்காது.
ஜல்பம் : எதிராளியின் கருத்து என்னவென்று அறிய விரும்பாமல் தன கருத்தை மட்டுமே வலியுறுத்திக் கூறுவதே ஜல்பம்.
வாதம் :தன்னைக் கெட்டிக்காரன் ஆகக் காட்டிக் கொள்ளவோ,எதிராளியை மட்டம் தட்ட வேண்டும் என்பதோ நோக்கம் அல்ல.உண்மையை அறிவதுதான் குறிக்கோள்.எதிராளியின் கருத்து சரி என்று நிரூபிக்கப்பட்டால் அதனால் வருத்தம் அடையாது,தான் தோற்றதற்குக் கவலைப்படாமல் உண்மையை அறிந்து கொண்டோமே என்று மன மகிழ்வு ஏற்படும்.
|
|
Post a Comment