நம் வாய்க்குழியில் மூன்று ஜோடி உமிழ் நீர் சுரப்பிகள் உள்ளன.அவைதான் உமிழ் நீரை சுரக்கின்றன.பரோடிட் என்றொரு உமிழ் நீர் சுரப்பி அளவில் பெரியது.இதன் எடை சுமார் இருபத்தைந்து கிராம்.அடுத்து மேல்தாடை அடிசுரப்பி இருக்கிறது.இதன் எடை இருபது கிராம்.மூன்றாவதாக மூன்று கிராம் எடை கொண்ட நாக்கு அடி சுரப்பி உள்ளது.
நம் உமிழ் நீர் சுரப்பிகள் பார்ப்பதற்கு ஒரு சிறிய திராட்சைக் குலை போல இருக்கும்.தொட்டால் மிருதுவாக இருக்கும்.ஒவ்வொரு சுரப்பியிலும் எண்ணற்ற சிறிய சுரப்பி செல்கள் இருக்கும்.இவை உமிழ் நீரை சுரக்கும்.இந்த உமிழ்நீர் உமிழ் நீர் நாளம் வளாக வாய்க்குழிக்குள் சுரக்கும்.
உமிழ் நீர் எப்படி சுரக்கிறது?நம் மூளையில் முகுளம் என்றொரு பகுதி உள்ளது.அதுதான் உமிழ் நீர் சுரப்பிகளுக்கு ஆணை பிறப்பிக்கிறது.நாம் உணவை உண்ணும் நேரத்தில் உணவு உணர்வு நரம்புகள் உந்தப் படுகின்றன. அந்த உணர்வு மத்திய நரம்பு மண்டலம் வழியாக முகுளத்தை அடைகிறது.முகுளம் உடனே உமிழ் நீர் சுரக்க,சுரப்பிகளுக்கு மத்திய நரம்பு மண்டலம் வழியாகவே சமிக்ஞைகளை அனுப்பி விடுகிறது.வாய்க்குழியில் உமிழ் நீரும் சுரக்கிறது.
பொதுவாக இரவில் குறைவாகவும்,பகலில் சாப்பிடும் நேரங்களில் அதிகமாகவும் உமிழ் நீர் சுரக்கும்.ஒரு நாளில் சுமார் ஒன்றரை லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறது.
உமிழ் நீரில் 99%தண்ணீரும் 1%சோடியம்,பொட்டாசியம் பைகார்பனேட் போன்ற பொருட்களும் இருக்கின்றன.இது தவிர ம்யுசின் என்ற களிமண் போன்ற பொருளும் அமிலேஸ் என்ற செரிமான நொதியும் லைசொனசம் எனப்படும் கிருமிக் கொல்லி நொதியும் உள்ளன.உமிழ் நீரை வீணாக்கக்கூடாது.
|
|
Post a Comment