1895 ம் ஆண்டு பெரியாறு அணை கட்டப்பட்டது.இது ஒரு 'உலகின் கட்டுமான பொறியியல் அதிசயம்'.இது இரண்டு குன்றுகளை இணைத்துக் கட்டப்பட்ட 1200 அடி நீளம் கொண்ட பிரதான அணை.1906-08 ல் கலிங்குகளும் மதகுகளும் அமைத்து அதிக பச்ச நீர் மட்டம் 152 அடி ஆனது.136 அடி உயரத்தில் நீர் கலிங்கு வழியாக மேற்கு நோக்கி வழிந்தோடும்.இதன் மேல் அமைக்கப்பட்ட 16 அடி உயரம் கொண்ட இரும்பு ஷட்டர்களினால் நீர் தேங்கும் உயரம் 152 அடி வரை வரும்.கேரளா அரசின் ஆட்சேபனையினால் மொத்தம் உள்ள 13 ஷட்டர்களும் இறக்கப்படாமல் 136 அடிக்கு மேல் வரும் தண்ணீர் வழிந்தோடுகிறது.
அணையின் 110 அடி வரை தேங்கும் நீரை அணையின் எந்தப் பக்கமும் எடுத்துச் செல்ல முடியாது.எனவே அணையில் வருடத்தில் எல்லா நாட்களும் நீர் தேங்கியிருக்கும்.மலைப்பரப்பில் 1,49,00ஏக்கரில் பெய்யும் மழை நீர் தேக்கத்திற்கு வருகிறது.152 அடி உயரம் நீர் தேங்கும்போது நீர்த்தேக்கத்தின் மொத்தப் பரப்பு 6534 ஏக்கராகும்.அதிக பட்ச நீர் தேங்கும் உயரம் 155அடி.(வெள்ள அளவு அதிகரிக்கும்போது)இது சில மணி நேரங்கள் தான் நீடிக்கும்.அப்போது நீர்த் தேக்கப் பரப்பு 8000ஏக்கராகும்.
136 அடி உயரத்தில் நீர் தேங்கும்போது அணையின் கொள்ளளவு 11210 மில்லியன் கன அடி .
142அடி உயரத்தில் நீர் தேங்கும்போது அணையின் கொள்ளளவு 12830 மில்லியன் கன அடி .
152 அடி உயரத்தில் நீர் தேங்கும்போது அணையின் கொள்ளளவு 15562 மில்லியன் கன அடி .
உபயோகிக்க முடியாத 110 அடி உயரத்தில் அணையின் கொள்ளளவு 5700 மில்லியன் கன அடி
ஆக பயனுள்ளது 110 அடிக்கு மேல் உள்ளதே.அதாவது,
136 அடி உயரம் இருக்கும்போது பயனுள்ள நீரின் அளவு=11210-5700=5510 மி .க அடிகள் .
142 அடி உயரம் இருக்கும்போது பயனுள்ள நீரின் அளவு=12830-5700-7130 மி .க அடிகள்
152 அடி உயரம் இருக்கும்போது பயனுள்ள நீரின் அளவு=15562-5700=9862 மி .க .அடிகள் .
தமிழகம் கோருவது 142 அடி.
தற்போது இருப்பது. 136 அடி .
வித்தியாசம்=7130-5510=1620 மி .க அடிகள்
-பொறியாளர் இரா.வெங்கடாசலம் எழுதிய ''முல்லைப் பெரியாறு அணை-வரலாற்று விபரங்களும் இன்றைய விவகாரங்களும் ''என்ற நூலிலிருந்து.
|
|
Post a Comment