உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

காமம்

0

Posted on : Friday, July 29, 2011 | By : ஜெயராஜன் | In :

மனிதனுக்கு இப்போதிருக்கும் காமம் இயல்பானதாக,இயற்கையால் அளிக்கப்பட்டதாக இல்லை.இன்றைய மனிதனுக்கு காமம் பசியைப் போன்றதல்ல.நூற்றாண்டுகளாக மனிதனின் காமம் உடலிலிருந்து உள்ளத்துக்கு மாற்றப்பட்டு விட்டது.மனிதன் அளவுக்கு காமத்தையே எண்ணிக் கொண்டிருக்கும் பிற உயிரினம் எதுவும் இருக்க முடியாது.உள்ளத்துக்கு எல்லை இல்லை.ஆகவே மானுடனின் காமத்துக்கும் எல்லை இல்லை.அது அவனுக்குள் பெருகிச் சென்றபடியே இருக்கும்.உண்மையில் காமத்தைக் கட்டுப்படுத்துதல் என்ற செயலை விட ஒரு சாதாரண மனிதனுக்குள் இருக்கும் காமம் பல மடங்கு செயற்கையானது.
இயற்கையில் கட்டற்றது என்று எதுவும் இல்லை.ஒவ்வொன்றும் பிறிதொன்றால் சரியாகக் கட்டுப்படுத்தப் பட்டிபதே இயற்கையில் நாம் காணும் முரணியக்கத்தை உருவாக்குகிறது.ஒரே ஒரு புல் கூடக் கட்டுப்படுத்தாமல் விடப்பட்டால் பூமியையே மூடிவிடும்.ஒவ்வொரு உயிருக்குள்ளும் விரியவும் பரவவும் ஆக்கிரமிக்கவும் வெல்லவும் நீடிக்கவும் கூடிய ஆற்றல் உள்ளது.புலி இல்லாமல் மான் இருந்தால் காடு அழியும்,மானும் அழியும்.
மானுடக் காமம் மனத்துக்கு செல்லும்போது அதற்குக் கட்டுப்பாடே இல்லை.அது செல்லும் தூரம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.அதைக் கட்டுப்படுத்துவது ஒரே மறுதரப்புதான்,உடல்.அது எல்லையற்ற ஆற்றலை உடையது  அல்ல.காமத்தில் காட்டுப்பாடில்லாமல் இறங்கியவர்கள் உடலைத்தான் முதலில் அழிக்கிறார்கள்.அதன்பின் உள்ளத்தை,ஏன்  என்றால் அத்து மீறும் காமம் வக்கிரமாகவே மாறும்.
                                  ஜெயமோகன் எழுதிய 'இன்றைய காந்தி'என்ற நூலிலிருந்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment