சந்தோசத்தில் மூன்று வகை உண்டு.
களிப்பு: இது உடலைப் பொறுத்தது.நாம் விரும்பிச் சாப்பிடும் உணவு.உடலால் அனுபவிக்கும் சுகங்களெல்லாம் களிப்பு.இவை திகட்டி விடும்.இரண்டாவது இட்லி சாப்பிடும்போது உள்ள சந்தோசம் பத்தாவது இட்லி சாப்பிடும்போது இருக்காது.
மகிழ்வு: இது மனத்தால் ஏற்படுவது.நல்ல சங்கீதத்தை அனுபவிப்பது:நல்ல இலக்கியத்தைப் படிப்பது:நல்ல விசயங்களை ரசிப்பது:நல்ல பேச்சைக் கேட்பது. இவையெல்லாம் மகிழ்ச்சி.அவ்வப்போது ஏற்படும்.
ஆனந்தம்:இது மனதுக்குள் ஊற்றுப்போல் ஊறி வருவது.பிறருக்கு நன்மை செய்வது ,எல்லோருக்கும் சந்தோசமான காரியங்களைச் செய்வது எல்லாம் ஆனந்தம் தருபவை.
|
|
Post a Comment