வாழ்வில் என்ன வேண்டுமோ அதை அடைய மிரட்டல் அல்லது பலாத்காரத்தைக் காட்டிலும் அஹிம்சை முறை விரைவாகவும் எளிதாகவும் வெற்றியைத் தேடித்தரும்.யாரேனும் மிரட்டலிலோ வன்முறையிலோ ஈடுபட்டால் அவர்கள் கிலி அடைந்திருக்கிறார்கள்,அல்லது தங்களைத் தாங்களே மட்டமாக எடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஊகிக்கலாம்.வன்முறை பற்றிய எண்ணமே அவர்களது பலவீனமான மனநிலையைக் காட்டிக் கொடுப்பதாக அமையும்.மிரட்டல் அல்லது வன்முறையில் ஈடுபடுவதன் மூலம் தனது அடிமனதிலுள்ள தாழ்வு உணர்வுகளை ஒருவன் வெளிப்படுத்துகிறான்.மற்றவர்கள் உள்ளபடி மிரண்டு போனால் உடனே அல்லது சிறிது காலம் கழித்து விரட்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள்.மிரட்டலுக்கு பயப்படாதவர்கள் சீற்றமடைந்து பதிலுக்கு தாக்குவார்கள்.எப்படியும் வன்முறை மூலம் வெற்றி கிடைத்த மாதிரி தோன்றினாலும் அது தற்காலிகமான வெற்றியாகத்தான் இருக்கும்.ஏனெனில் பதிலடி கொடுக்கக் காத்திருக்கும் ஒரு எதிரி உருவாகிறான்.இதற்கிடையில்,எப்படியும் பதிலடி கிடைக்கும் என்ற உள்ளுணர்வு காரணமாக மிரட்டியவன் பயந்து கொண்டே இருக்க வேண்டும்.
|
|
Post a Comment