வேட்டையாடச் சென்ற ஒரு அரசன் காலில் முள் குத்தியது.வலி தாங்க முடியவில்லை.உடனே காட்டிலுள்ள மாடுகளை எல்லாம் வெட்டி அவற்றின் தோலை காடு முழுவதும் பரப்பச் சொன்னான்.அருகில் இருந்த துறவி ஒருவர்,''உன் காலில் முள் குத்தியது என்றால்,உனது பாதங்களை மட்டும் காக்க ஒரு மாட்டின் இரு தோல்துண்டுகள் போதுமே?எதற்கு எல்லா மாடுகளையும் கொன்று வீண் செலவு?''என்று கேட்டார்.
அதுபோல உலகை இன்ப மயமாக மாற்ற லட்சியம் கொண்டவர்கள் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று மன்னன் கேட்க துறவி சொன்னார்,''ஒருவன் தன உள்ளத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமே அல்லாது உலகத்தை அல்ல.''
|
|
நல்ல கதை. பாராட்டுகள்.