உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இனி வேண்டாம்

0

Posted on : Saturday, July 09, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு மனிதன் ஒவ்வொரு ஆண்டும் தன பிறந்த நாளன்று அந்த வருடம் பாடுபட்டுத் தேடிய பணம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு குதிரைப் பந்தயத்திற்கு செல்வான்.மீண்டும் மீண்டும் தோற்றபோதும் நம்பிக்கையுடன் ஒவ்வொரு ஆண்டும் இதைத் தொடர்ந்தான்.அவனுக்கு ஐம்பது வயது ஆயிற்று.அவன் நினைத்தான்,''ஒன்று பிச்சைக்காரனாக வேண்டும்,அல்லது பேரரசனாக வேண்டும்.நடுநிலை வேண்டாம்,''எனவே தன சொத்து முழுவதையும் விற்று குதிரைப் பந்தயம் சென்றான்.தோற்றான்.இப்போது அவனிடம் ஒன்றுமில்லை.ஒரு மலை உச்சிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள சென்றான்.அப்போது ஒரு குரல்,''நிறுத்து!அடுத்த முறை உனக்கு நான் வெற்றி தருகிறேன்.''என்றது.நம்பிக்கையுடன் இறங்கி வந்து உழைத்துப் பணம் சேர்த்து குதிரைப் பந்தயம் சென்றான்.குரல் ஒரு குதிரை பெயரைச்  சொல்ல அதன் பேரில் பணம் கட்டினான்.அக்குதிரையும் வெற்றி பெற்று அவன் பெரும் பணம் பெற்றான்.அடுத்த பந்தயம் துவங்க இருக்கும்போது மீண்டும் அக்குரல் ஒரு குதிரையின் பெயரைச்  சொல்ல அவன் அதன் மீது பணம் கட்ட, மீண்டும் வெற்றி.மூன்றாவது பந்தயத்திற்குப் பணம் கட்டக் கிளம்பினான்.குரல் சொன்னது,''இனி வேண்டாம்,''ஆனால் அவன் சொன்னான்,''அமைதியாயிரு.நான் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறேன்.என் நட்சத்திரங்கள்  உச்சத்தில் இருக்கின்றன.யாராலும் என்னைத் தோற்கடிக்க முடியாது.''இப்போது அவனாகத் தேர்ந்தெடுத்த குதிரை கடைசியாக வந்தது.அனைத்தையும் இழந்து பிச்சைக்காரன் ஆனான்.அவன் தனக்குள்ளே முணுமுணுத்தான்,''இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?''குரல் சொன்னது,''இப்போது நீ மலை உச்சிக்கு சென்று குதித்து விடலாம்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment