புத்தரிடம் சீடராயிருந்த சிலர் பொதுத் தொண்டு செய்வதற்காகப் புறப்பட்டனர். அப்போது புத்தர் அவர்கள் அதற்கு ஏற்றவர்கள் தானா என்பதை சோதிக்க விரும்பினார்.அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார்.
புத்தர்: நீங்கள் மக்களிடம் செல்லும்போது அவர்கள் உங்களை வரவேற்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
சீடர்கள்:வரவேற்கவில்லைஎன்றாலும் எங்களை வெறுக்கவில்லையே என்று எண்ணி எங்கள் பணியினைத் தொடருவோம்.
புத்தர்:வெறுத்தால்....?
சீடர்கள்.வெறுத்தாலும் அடிக்கவில்லையே என்று மகிழ்வோம்.
புத்தர்:அவர்கள் உங்களை அடித்தால்....?
சீடர்கள்:அடித்தாலும் கொல்ல நினைக்கவில்லை அல்லவா என்று நினைப்போம்.
புத்தர்:கொன்றால்....?
சீடர்கள்: கொன்றால் விடுதலைதானே?அதனால் மகிழ்ச்சிதானே!
புத்தர்:நீங்கள் பொதுத் தொண்டுக்குப் போகலாம்.
இதுதான் பொதுத் தொண்டுக்கு இலக்கணம்.
|
|
Post a Comment