ஒருமுறை அசுரர்கள் பிரம்மாவிடம் சென்று அவர் தங்களிடம் பாரபட்சமாக நடப்பதாகக் கூறினார்கள்.அவர் அதை மறுத்து தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.விருந்தில் லட்டுகள் மட்டும் பரிமாறப்பட்டது.ஆனால் சாப்பிடப் போகுமுன் ஒவ்வொருவர் கைகளும் முழங்கையை மடக்க முடியாத அளவுக்குக் கட்டப்பட்டன.ஒவ்வொரு அசுரனும் தன எதிரே இருந்த லட்டை எடுத்து முழங்கையை மடக்க முடியாத நிலையில் அதை வாயில் போட முடியாமல் தவித்தனர். அடுத்து வந்த தேவர்கள் ஒவ்வொருவரும் ஒரு லட்டை எடுத்து தன் வாயில் போட்டுக் கொள்ளாமல் எதிரே இருந்தவர்கள் வாயில் ஊட்டி விட்டனர். இப்போது பிரம்மா அசுரர்களைப் பார்த்து சொன்னார்,''பாரபட்சமின்றி இருவருக்கும் நான் விருந்து வைத்தேன்.நீங்கள் சுயநலவாதியாக இருந்ததால் உங்களுக்கு லட்டினை சாப்பிட முடியவில்லை.தேவர்கள் பிறருக்கு உணவு கொடுப்பதில் கவனமாக இருந்ததால் எல்லோருக்கும் லட்டு உண்ண முடிந்தது.வாழ்வில் பிறருக்காக உழைப்பவர்கள் கண்டிப்பாக முன்னுக்கு வருவார்கள்,''
|
|
Post a Comment