தாறுமாறாக ஒருவன் காரை ஓட்டிவருவதைக் கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் காரை நிறுத்தினார்.குடித்துவிட்டு காரை அவன் ஓட்டி வந்திருக்கிறான் என்று சந்தேகப்பட்ட அவர் அவை சோதிப்பதற்கான கருவியின்முன் ஊதச் சொன்னார்.அவன் சொன்னான்,''அதுமட்டும் என்னால் முடியாது.எனக்குக் கடுமையான ஆஸ்த்மா.பலமாக ஊதினால் எனக்கு மூச்சுத் திணறல் வந்துவிடும்.''அதை ஏற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறுநீர் சோதனைக்கு ஒரு பாட்டிலில் சிறுநீர் சேகரித்துத் தரச் சொன்னார்..உடனே அவன் பெருங்குரலில்,''இதுவும் என்னால் முடியாது. நான் நீரழிவு நோய்க்காரன்.நான் திடீரென சிறுநீர் கழித்தால் என் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும்.அதனால் நான் இறக்கக் கூடும்,''அதையும் ஏற்றுக்கொண்ட அதிகாரி அவன் இரத்தத்தை சோதனை செய்ய முடிவெடுத்தார்.உடனே ஓட்டுனர்,''இதுவும் என்னால் முடியாது.எனக்கு ஒருவிதமான நோய் உள்ளது அதனால் என் உடலிலிருந்து இரத்தம் எடுத்தால் அதற்குப்பின் இரத்தம் நிற்காமல் வந்து கொண்டேயிருக்கும்.''சற்று மனம் தளராத அதிகாரி சொன்னார்,''சரி,பரவாயில்லை.எனக்காக இதோ,இங்கு போடப்பட்டிருக்கும் வெள்ளைக் கோட்டில் நடந்து வா.''இப்போது அவன் கத்தினான்,''இதுவும் என்னால் முடியாது.''ஏன் என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். அவன் சொன்னான்,''ஏனென்றால்,நான் குடித்திருக்கிறேன்.''இன்ஸ்பெக்டர் புன்முறுவலுடன் அவனை கைது செய்தார்.
|
|
Post a Comment