உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கேலி செய்யும் உரிமை

0

Posted on : Sunday, July 10, 2011 | By : ஜெயராஜன் | In :

சில பேர் இங்கிதம் தெரியாமல் அறிமுகமாகும் அந்தக் கணத்திலேயே  பிறரைக்  கேலி செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.இதனால் நட்பு மலர வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.மிகப் பலரை வைத்துக்கொண்டு  மிக வேண்டியவர்களே கேலி செய்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் ரொம்பவும் பாதிக்கப் பட்டு விடுகிறார்கள்.காரணம்,ஆட்கள் சேரச்சேர இவர்களெல்லாம் நம்மைப்பற்றி உயர்வாக எண்ண வேண்டும் என்ற எண்ணமே மனிதனுக்கு மேலோங்கி நிற்கிறது.
தாம் மதிக்கும் நபர் ஒரு சிலரே இருந்தாலும் அத்தகைய இடத்திலும் யாரும் கேலி செய்யப்படுவதை விரும்புவதில்லை.வெளியே தெரியக் கூடாத விசயமாக இருந்தால்,கேலி செய்பவர் தவிர ஒருவரும் இல்லாவிடினும் , கேலி செய்யப்படுபவர் அதை விரும்புவதில்லை.யாராக இருந்தாலும் எத்தகைய சூழ்நிலைகளாக இருந்தாலும் உடற்குறையை சுட்டிக்காட்டிக் கேலி  செய்வதை  எவரும் விரும்புவதில்லை.
ஒருவருக்கு மூட் அவுட் ஆன நிலையில்,மிகச்சாதாரண விஷயம் கூடக் கேலியாகப் பேசப்படக் கூடாது.ஒருவரின் மன நிலை அறியாது கேலி செய்தால் அதன் விளைவுகள் பின்னர் நினைத்து நினைத்து வருத்தப் படக் கூடியதாக அமையும்.
நம்மிடத்தில் மிகுந்த மரியாதை கொண்டிருப்பவர்களையும் நாம் கேலி செய்ய உரிமை இல்லை.ஒருவரைக் கேலி செய்கிறோம் என்றால் அவருக்கும் நமக்கும் நல்லுறவு இருக்க வேண்டும்.அவர் எதைக் கேலி செய்தாலும் தவறாகக் கருத மாட்டார் என்பதை நாம் மனப்பூர்வமாக நம்ப இடம் இருக்க வேண்டும்.
கேலியின் நோக்கம் மற்றவர்களை  சிரிக்க வைப்பதுதானே தவிர மற்றவர்களைப் புண்படுத்த அல்ல.இந்த உண்மையை உணராதவர்கள் நட்பையும் உறவையும் இழக்கிறார்கள்.மற்றவர்களிடமிருந்து மிகவும் விலகி விடுகிறார்கள்.அல்லது விலக்கப்படுகிறார்கள்.
                                                            --லேனா தமிழ்வாணன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment