உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஆத்திச்சூடி

0

Posted on : Tuesday, July 26, 2011 | By : ஜெயராஜன் | In :

''அறம் செய விரும்பு'',''ஆறுவது சினம்''என்று ஆத்திச்சூடிப் பாடல்களை ஆரம்பப் பள்ளியில் படித்திருக்கிறோம்.எளிதாகப் புரியும் தன்மையில் ஒரே வரியில் ஒரு பெரும் செய்தியை சொல்லும் ஆத்திச்சூடி ஔவையார்எழுதியது மொத்தம் 108 பாடல்களைக் கொண்டது.எளிமையாய் இருந்தாலும் சில பாடல்களை இள வயதில் புரியாமல் படித்துள்ளோம்.அவற்றில் சிலவற்றை அதன் பொருளுடன் காண்போம்.
*ஒப்புர ஒழுகு.: உலக நடப்பை அறிந்து அதன்படி நடப்பாயாக.
*ஔவியம் பேசேல்.:ஔவியம் என்பது பொறாமைச் சொல்லைக் குறிக்கும்.பிறரிடம் பொறாமைகொண்டு எதுவும் சொல்லாதே.
*கிழமைப்பட வாழ்.:கிழமைப்படுதல் என்றால் உரிமைபபடுதல் என்று பொருள்..உன்னுடைய பொருள் பிறருக்குப் பயன்படும்படி வாழ்வாயாக.
*கைவினை கரவேல்:உனக்குத் தெரிந்த கைத்தொழிலை பிறருக்குக் கற்பிக்காமல்  மறைக்காதே.
*கோதா ட்டொழி: கோது என்றால் குற்றமான: அதாவது குற்றமான விளையாட்டை ஒழி
*சித்திரம் பேசேல்: பொய்யை மெய் போலச் சித்தரித்துப் பேசாதே.
*சையெனத் திரியேல்.:பெரியோர்கள் உன்னைச் சீ என்று இகழும்படி திரியாதே.
*நிலையிற் பிரியேல்: உன்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்து விடாதே.
*நுண்மை நுகரேல்: நோய் தரும் உணவுகளை உண்ணாதே.
*:நொய்ய வுரையேல்: பயனில்லாத அற்ப வார்த்தைகளை நீ உரைக்காதே.
*பையலோடினங்கேல்.:  அறிவில்லாச் சிறுவரோடு நீ கூடாதே.
*வாதுமுற்கூறேல்.: பெரியோர்முன் நின்று வாதாடாதே.
*ஒன்னாரைத்தேறேல்:: நீ பகைவரை எப்போதும் நம்பாதே அல்லது சேராதே.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment