உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அரிச்சந்திரன்

0

Posted on : Wednesday, July 06, 2011 | By : ஜெயராஜன் | In :

அரிச்சந்திரன் சுடலை காத்துக் கொண்டிருந்தபோது அந்த சுடலைக்கு ஏராளமான பிணங்கள் கொண்டு வரப்படுவதைக் கண்டான்.எந்தப் பிணத்தைப் பற்றியும் அவன் விசாரிப்பதில்லை.பணத்தை மட்டும் வசூலித்தான்.ஒரு பிணத்தைப் பார்த்ததும் அதைப்பற்றி விசாரிக்க வேண்டும் போல் தோன்றியது.பிணம் தூக்கி வந்தவர்களிடம் கேட்டான்,''ஐயா,இது யாருடைய  பிணம்?''அவர்கள் சொன்னார்கள்,''இந்த ஊரிலுள்ளு பணக்காரர்களில் இவரும் ஒருவர்.வட்டிக்குப் பணம் கொடுப்பதே இவர் தொழில்.''அரிச்சந்திரன் அமைதியாகத் தலை அசைத்தான்.பிணத்திற்கு நெருப்பூட்டிவிட்டு
அவர்கள் சென்றார்கள்.சிறிது நேரத்தில் நெருப்பின் வேகத்தால் நரம்புகள் இழுக்கப்பட்டு பிணம் எழுந்து உட்கார்ந்தது.  அரிச்சந்திரன் கத்தினான்,''வட்டி வசூலாகி விட்டது.''பிணம் மீண்டும் படுத்துக்  கொண்டது.
**********
''கல்யாணி ராகம் என்றாலே எனக்குப் பிடிக்காது,''என்றார் பாகவதர்.
'ஏன்?'என்று கேட்டான் சிஷ்யன்.
''என் மனைவி பெயர் கல்யாணி.''என்றார் அவர்.
**********
                                                                      --கண்ணதாசன் எழுதிய தோட்டத்துப் பூக்கள் என்ற நூலிலிருந்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment