காந்தி போராட்டத்தை சமரசத்தை நோக்கி செல்ல வேண்டிய ஒரு பயணமாகவே கண்டார்.'கடைசி வெற்றி' வரை செல்லக்கூடிய போராட்டம் என்று ஒன்று இல்லை.எதிரிகளை அல்லது எதிர்த்தரப்பை முழுமையாக அழித்தொழித்துவிட்டு ஒரு வெற்றி என்பது அநேகமாக சாத்தியமில்லை.நம் எதிர்த்தரப்பிற்கும் அதற்கான இருப்பும் நியாயங்களும் உண்டு.அவர்களுக்கும் ஆசைகளும் திட்டங்களும் இருக்கும்.அவற்றுக்கும் இடம் கொடுக்கும் ஒரு முடிவே தீர்வாக இருக்க முடியும்.
ஆகவே போராட்டம் என்பது நமது தரப்பை முழுமையாகத் திரட்டிக் கொண்டு நம் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தி நம் கோரிக்கைகளை முன் வைக்கும் ஒரு செயல்பாடு மட்டுமே.நம் தரப்பைத் தவிர்க்க முடியாது என்று நம் எதிர்த்தரப்பு உணர்ந்ததுமே சமரசத்துக்கான இடம் ஆரம்பமாகிறது.நம் இடத்தை எதிர்த்தரப்பு அங்கீகரிப்பதைப்போலவே எதிர்த்தரப்பை நாமும் அங்கீகரிப்பதே சமரசம்.சமரசம் என்பது இருவரும் சிலவற்றை அடைந்து சிலவற்றை விட்டுக் கொடுத்து அடையும் ஒரு பொது முடிவு.
ஜெயமோகன் எழுதிய இன்றைய காந்தி என்ற நூலிலிருந்து.
|
|
Post a Comment