உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஒப்புக்கொள்ளும் தைரியம்

1

Posted on : Friday, July 22, 2011 | By : ஜெயராஜன் | In :

எந்த ஒரு கட்டத்திலும் செய்த தவறை ஒத்துக்கொண்டால் அது மறக்கப்படவும் மன்னிக்கப் படவும் வாய்ப்பு இருக்கிறது.அடுத்த,'பிராயச்சித்தம்' அல்லது தீர்வு  காணும் கட்டத்திற்கு பிரச்சினை நகர்த்தப்பட்டு விடுகிறது.இல்லாவிடில் செக்கு மாடு மாதிரி பிரச்சினையானது சுற்றிச்சுற்றி வருகிறது.
தவறுகளை மறுப்பதும் மறைப்பதும் மற்றவர்களை எரிச்சல் அடையவே செய்யும்.இது குற்றத்தின் வீரியத்தை அதிகரிக்கும்.நிரூபிக்கும் முயற்சிகளும் அதிகமாகும்.அடுத்த தவறு நடந்தால் அது பூதாகரமாக்கப்படும்.
''நீ செய்தது தவறு,''என்ற குற்றச்சாட்டு நம் மீது விழுந்தால்,மனசாட்சிக்கு  மதிப்புக் கொடுத்து 'சரி,இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்,'என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
தவறு செய்யும்போது இருக்கும் தைரியம்,ஒப்புக் கொள்ள வேண்டியபோது ஓடி  ஒளிந்து கொள்வது ஏன்?
                                                         --லேனா தமிழ்வாணன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

தவறுகள் மறைக்கப்பாட்டால் அதுவும் மிகபெரிய தவறு....

Post a Comment