முல்லாவின் நாய் பலமாகக் குரைத்துக் கொண்டிருந்தது.முல்லாவோ அதைப் பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.பக்கத்து வீட்டுக்காரர் அந்த சப்த்தத்தைக் கேட்க சகிக்காமல் முல்லாவின் வீட்டிற்கு வந்து என்ன பிரச்சினை என்று பார்த்தார்.நாயின் முன்னால் அதற்கு தேவையான ரொட்டி எல்லாம் கிடந்தது.ஆனால் அந்த நாயால் அதை எடுத்து சாப்பிட முடியாத நிலை.அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது,முல்லா,நாயின் வாலில் ஒரு பெரிய கல்லைக் கட்டியிருந்தார்.நாயால் வாலைத் தூக்க முடிய வில்லை. ''என்ன முல்லா,இப்படி செய்திருக்கிறாய்?இந்த நாய் பாவம் இல்லையா?''என்று கேட்க,முல்லா சொன்னார்,''நான் கடையில் புடலங்காய் வாங்கினேன் அது மிகவும் வளைந்திருந்தது.அது ஏன் அப்படி என்று கேட்டதற்கு கடைக்காரர்,முதலிலேயே கல்லைக் கட்டி விட்டிருந்தால் நேராக வளர்ந்திருக்கும்,அதை செய்யாதலால் இப்படி வளைந்திருக்கிறது என்றார். எனக்கு நீண்ட நாட்களாக நாயின் வால் ஏன் வளைந்திருக்கிறது என்ற சந்தேகம் இருந்தது கடைக்காரர் அந்த சந்தேகத்தைத் தீர்த்துவிட்டார்.அதனால்தான் நாயின் வாலில் கல் கட்டினேன்.''
|
|
Post a Comment