தாய் மாடு புல் மேயப் போயிருந்தது.அதன் குட்டி கயிற்றை அவிழ்த்துக் கொண்டு தாயைப் பார்க்க ஓடிற்று.மாட்டின் உரிமையாளர் வேகமாக ஓடிச்சென்று குட்டியைப் பிடிக்க முயன்றார்.ஆனால் குட்டி திமிறிக்கொண்டு ஓடியது நீண்ட நேர முயற்சிக்குப்பின்னும் அவரால் குட்டியைப் பிடிக்க முடியவில்லை.அப்போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பத்து வயது சிறுமி,''அய்யா,நீங்கள் கொஞ்சம் பொறுங்கள்.நான் குட்டியைப் பிடித்துத் தருகிறேன்,''என்றாள்.அவருக்கோ,தன்னாலேயே பிடிக்க முடியாத கன்றை இந்த சிறுமி எப்படிப் பிடிக்கிறாள் என்று பார்த்தார்.அந்த சிறுமி நேரே கன்றின் அருகில் சென்றாள்.மெதுவாக தன விரல் இரண்டினை கன்றின் வாயில் மெதுவாக திணித்தாள்.தாய்ப்பால் குடிக்க ஏங்கிக் கொண்டிருந்த அந்தக் கன்று அச்சிறுமியின் விரல்களை தன தாயின் மடிக் காம்பு என்று எண்ணி அதை சுவைத்துக் கொண்டே அவள் பின்னே அமைதியாக வந்தது.மாட்டின் சொந்தக்காரர் அக்கன்றின் நிலையறிந்து அதைப் பிடித்த அச்சிறுமியிடமிருந்து ஒரு பாடம் கற்றார்.
|
|
Post a Comment