ராமபிரான் வனவாசத்தின் போது காட்டில் சென்று கொண்டிருக்கையில் தனது அம்பையும் வில்லையும் தரையில் நட்டுவிட்டு அருகிலிருந்தகுளத்தில் நீர் அருந்துவதற்காக இறங்கினார்.மீண்டும் அவர் கரை ஏறி வந்த போது தனது வில் ஒரு தவளையை ஊடுருவிச்சென்றுதுளைத்திருந்ததைப் பார்த்தார்.தவளையின் உடல் முழுவதும் ரத்தத்தால் நனைந்திருந்தது.இதைக் கண்ட ராமபிரான் மிகவும்வருந்தினார்.அவர் தவளையிடம்,''நீ ஏதாவது சப்தம் செய்திருக்கக் கூடாதா?அப்போது நீ இங்கிருப்பது எனக்குத் தெரிந்திருக்கும்.உனக்கு இந்தக் கதி வந்திருக்காதே,''என்று கேட்டார்.அதற்குத் தவளை பதில் சொன்னது,'ராமா,எனக்கு ஏதாவது ஆபத்து நேரும் போது,ராமா,என்னைக் காப்பாற்று!என்று சொல்லி உன்னைச் சரணடைவேன்.ஆனால் நீயே இப்போது என்னைக் கொல்லும் போது நான் யாரிடம் சொல்லி முறையிடுவேன்?'
பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன கதை.
|
|
Post a Comment