ஒரு ஞானியைத் தேடி வந்த இளைஞன் அவரிடம்,''நான் உங்களுக்கு சீடனாக விரும்புகிறேன்.அதற்கான தகுதி என்னிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.''
ஞானி ;உள்ளே வா,இப்போது உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது.
இளைஞன் ;சொல்லுங்கள்,செய்யக் காத்திருக்கிறேன்.
ஞானி ;கொஞ்ச நேரம் என் உடம்பில் ஏறி மிதிக்க வேண்டும்.
இளைஞன் ;நீங்கள் பெரிய ஞானி.உங்கள் கால் தூசுக்கும் நான் ஈடாக மாட்டேன்.உங்கள் மேல் என் கால் படுவதா?
ஞானி ;இப்போது எனக்கு உடல் வலி....
இளைஞன் ;அதற்காக என் உயிரை வேண்டுமானாலும் தருகிறேன்.ஆனால் உங்கள் புனிதமான உடலை நான் மிதிக்க மாட்டேன்.
ஞானி ;என் உடலை மிதிக்க நீ மறுக்கிறாய்.ஆனால் என் வார்த்தைகளை மிதிக்கிறாய்.குருவை மதிப்பவனாக நீ எப்படி ஆக முடியும்?
இளைஞன் குழம்பினான்.
குரு தெளிவுபடுத்தினார்;மரியாதைக் குறைவாகத் தோன்றும் செயல்கள் எல்லாம் மரியாதைக் குறைவான செயல்கள் அல்ல.
|
|
Post a Comment