1965 பாகிஸ்தான் யுத்தத்தில் பூபிந்தர் சிங் என்ற ராணுவ அதிகாரி அடிபட்டு மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவரைப் பார்க்க வந்தார்.படுக்கையில் நகர முடியாமல் கிடந்த பூபிந்தரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.''தீரத்துக்கும் துணிச்சலுக்கும் பெயர் பெற்ற பஞ்சாபியர் எதற்கும் கலங்க மாட்டார்களே?அப்படிப்பட்ட உங்கள் கண்களில் நீரா!''என்று ஆச்சரியத்துடன் வினவினார் பிரதமர்.அப்போது பூபிந்தர் சிங் சொன்னார்,''நான் சாவுக்காகக் கலங்கவில்லை.நாட்டின் பிரதமர் வந்துள்ளாரே,அவரைப் பார்த்தவுடன் எழுந்து விறைத்து நின்று கம்பீரமாக ஒரு சல்யூட் செய்ய இயலவில்லையே என்று தான் எனக்கு வேதனையாக உள்ளது.''
இப்போது கலங்கியது எதற்கும் அஞ்சாத சாஸ்திரியின் கண்கள்!
|
|
Post a Comment